Friday, 9 December 2016




மை  ஏந்தும்  விழியாட 
மலரேந்தும்  குழல் ஆட   
கையேந்தும்  வளையாட  நான்  ஆடுவேன் 

குழல்    தந்த  இசையாக 
இசை  தந்த  குயிலாக 
குயில்  தந்த  குரலாக  நான்  பாடுவேன் 

கண் மை  ஏந்தும்  விழியாட 
மலரேந்தும்  குழல் ஆட   
கையேந்தும்  வளையாட  நான்  ஆடுவேன்

: உறவென்னும்  விளக்காக 
உயிர்  என்னும்  சுடராக 
ஒளி  வீசும்  விளக்காக  நான்  வாழுவேன் 




  

விரல்  கொஞ்சும்   யாழாக 
யாழ்  கொஞ்சும்    இசையாக 
இசை  கொஞ்சும்    மனமாக  நான்  மாறுவேன் 

கை  விரல்  கொஞ்சும்   யாழாக 
யாழ்  கொஞ்சும்    இசையாக 
இசை  கொஞ்சும்    மனமாக  நான்  மாறுவேன் 


 இளம்  காதல்  வயதாலே  தனியாகினேன் 
அந்த  இளவேனில்  நிலவாலே  பனியாகினேன்







 இமை  மூடி  தூங்காமல்  போராடினேன் 
உந்தன்  இதழோடு    இதழ்  வைத்து  சீராடினேன் 

கண் மை  ஏந்தும்  விழியாட 
மலரேந்தும்  குழல் ஆட   
கையேந்தும்  வளையாட  நான்  ஆடுவேன்

 கொடி  போன்ற  இடையாட  களைப்பாகினேன் 
உன்  மடி  மீது  தலை  சாய்த்து  இளைப்பாறினேன் 

 அழகென்ற  விருந்தொன்று  பரிமாறினேன் 
அதை  பரிமாறும்  நேரத்தில்  பசியாறினேன் 











கண் மை  ஏந்தும்  விழியாட 
மலரேந்தும்  குழல் ஆட   
கையேந்தும்  வளையாட  நான்  ஆடுவேன்

No comments:

Post a Comment