Wednesday 7 December 2016

P.S.GOVINDAN பி.எஸ்.கோவிந்தன் -பழம்பெரும் தமிழ் நடிகர்


P.S.GOVINDAN பி.எஸ்.கோவிந்தன்
-பழம்பெரும் தமிழ் நடிகர்


தொழில் முறை நாடகக் குழுக்களும், பயின் முறை நாடகக்குழுக்களும் நடிப்புச் சீர்திருத்தம் செய்வதில் முனைந்து செயல்பட்டன. தொழில் முறை நாடகக் குழுக்கள் பால பாடம் என்னும் பயிற்சி முறையை அறிமுகம் செய்தன. அடிப்படைப் பயிற்சிக்கான நாடகப் பாடமே பால பாடம் எனப்பட்டது.

நாடக மேடையேறும் போது இப்பயிற்சி மிக்கப் பயனுள்ளதாக அமைந்தது.


மேடையில் நடிக்க வேண்டிய பயிற்சி முறைகளை அனைத்து நாடகக் குழுக்களும் பேணி வந்தன. தொழில்முறை நாடகக்குழுக்களில் நடிகர்கள் அனைவரும் ஓரிடத்தில் வாழ்ந்ததால் இவர்களைக் கட்டுப்படுத்த, சட்டாம் பிள்ளை என ஒருவர் அமர்த்தப்பட்டிருந்தார். நாடகத்தை உருவாக்குமிடமே ஒத்திகை என்பது உணரப்பட்டது.
பயின்முறை நாடகக் குழுக்களும் ஓய்வு நேரங்களை நாடக ஒத்திகைக்கென ஒதுக்கிக் கொண்டன. மேனாட்டு நாடக முறையை ஒட்டிய சில நடிப்புக் கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டனர். இவ்வகையில்   நடிப்புச் சீர்த்திருத்தம் பேணப்பட்டது.பிற்காலத்தில் திரைப்படத் துறையில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற நடிகர்கள் உருவாவதற்கு இந்நாடகக் குழுக்கள் பெருந்துணை செய்தன.

முன்னோடிகள்

இக்கால கட்டத்தில் உருவாக்கம் பெற்ற சிறந்த நாடகக்கலைஞர்களாகப் பலரைக்    குறிப்பிடலாம். அவர்களில் முக்கியமானவர்களாக   தி.க.சண்முகம் (TK.Shunmugam),  தி.க.பகவதி (TK.Bhagavathi), என்.எஸ்.கிருஷ்ணன் (NS.Krishnan), எம்.கே.இராதா, எஸ்.வி.சகஸ்ரநாமம், ரி.என்.சிவதாணு, எஸ்.எஸ். இராசேந்திரன், எம்.ஜி.இராமச்சந்திரன், சிவாஜிகணேசன்,  நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பி.எஸ்.கோவிந்தன்,  எம்.எஸ்.திரௌபதி, ரி.வி.நாராயணசாமி, ஏ.பி. நாகராஜன்  போன்றோரைக்கொள்ளலாம். மேலும் பல சிறந்த நடிகர்கள் தொழில் முறை நாடகக் குழுக்களில் உருவானவர்கள்.

ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் பி.யூ.சின்னப்பா நடித்த “கண்ணகி’ வெற்றிப் படத்தை அடுத்து தயாரித்த படம் “குபேர குசேலா’. குசேலர் கதை அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், “குபேர குசேலா’ (1943) படத்தின் கதை என்ன…? “பக்த குசேலா'(1936) என்ற பெயரில் டைரக்டர் கே.சுப்பிரமணியம் ஏற்கனவே தயாரித்தார். குசேலராக பாபநாசம் சிவன் நடித்தார். குசேலரின் மனைவியாகவும், கிருஷ்ணனாகவும் எஸ்.டி.சுப்புலட்சுமி இரட்டை வேடத்தில் நடித்தார். 

தரித்திர குசேலர், குபேர குசேலராக ஆன பிறகு என்ன நடந்திருக்கும்? அளவுக்கு மீறிய பணம் வந்த பிறகு குசேலர் சும்மா இருப்பாரா? காயகல்பம் சாப்பிட்டு இளைஞர் ஆகிறார். ரி.ஆர்.ராஜகுமாரியைக் காதலிக்கிறார். அதனால் அவர் குடும்பத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களையும், திருப்பங்களையும் வைத்து, பி.எஸ்.ராமையா எழுதிய கதைதான், குபேர குசேலா.இப்படத்தில் ஏழை குசேலராக பாபநாசம் சிவன் நடித்தார். காயகல்பம் சாப்பிட்டு இளைஞனாக மாறிய பிறகு வரும் குபேர குசேலராக, பி.யூ.சின்னப்பா நடித்தார். கிருஷ்ணனாக நடித்தவர் பி.எஸ்.கோவிந்தன். (பிற்காலத்தில் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியின் கதாநாயகன்.)

 1947-இல் ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி படம் வெளியானது. படத்தின் தலைப்பு மட்டுமல்ல, படமே நீளம்தான். படச்சுருள் அதிகமாக கிடைக்க ஆரம்பித்ததால் குறைந்த பிலிமில்தான் படமாக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. இதனால் 20 ஆயிரம் அடியில் உருவான படம் இது. போலி சாமியார் பற்றிய கதை. ஆயிரம் பேரின் தலைகளை வெட்டினால் சக்தி பெற்ற சாமியார் ஆகலாம் என வில்லனுக்கு (வில்லனாக நடித்தவர் பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.சுவாமிநாதன்) சொல்லப்படுகிறது.

 படத்தின் முக்கிய பகுதியே, “இந்த மூன்று கேள்விகள்’ தான். அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையென்றால் அவர்களது, தலை துண்டிக்கப்பட்டு விடும்.  999 அரச குமாரர்கள், சிந்தாமணியிடம் வந்து, தங்களது தலையை இழந்தனர். ஆயிரமாவது நபராக வருபவர் தான், கதாநாயகன் பி.எஸ்.கோவிந்தன்! அவர், பல நாடுகளில் அலைந்து, முதல் இரண்டு கேள்விகளுக்கு விடைகளைத் தெரிந்து கொண்டு வருகிறார். அடுத்ததாக வரும் நாட்டின் அரசர் (ஆர்.பாலசுப்பிரமணியம்), கதாநாயகனின் தந்தைக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ஆனால், அந்தக் கேள்வியை கேட்ட வுடன், கதாநாயகனை, அந்த அரசன், அடித்துப் போட்டு விடுகிறார். கேள்வியைக் கேட்கும் வரை அன்பாக இருந்த அரசனின் குணம், ஏன் இப்படி மாறியது என்பது, கதாநாயகனுக்கும் புரியாத விஷயம்!

அடித்தபின், மீண்டும் சகஜநிலைக்கு திரும்பிய அரசன், கதாநாயகனை சமாதானப்படுத்துகிறான். தைரியமாக கதாநாயகன் தொடர்ந்து அதே கேள்வியைக் கேட்க, அரசன் இந்த முறை அடிக்காமல், மிகவும் சோகமாகி விடுகிறான். “சந்நியாசிக்கு உதவிய சுதாவும், ஆகாத மதியும் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இறந்துவிட்டனரா! அல்லது சுதா, மதி கதி என்ன?’என்பது தான் கேள்வி. பதில் வாங்காமல், அந்த இடத்தை விட்டுப் போவதில்லை என்று முடிவு செய்த, கதாநாயகனின் தொந்தரவைப் பொறுக்க முடியாமல் அரசன், அந்தகேள்விக்குப் பதில் “தான் தான்’ என்று சொல்ல, கதாநாயகன் அதிர்ச்சியடைகிறான்.

சாமியாரைப் பற்றி தெரிந்துகொள்ளும் கதாநாயகன், கடைசியாக அரசவையில் அவையோர் முன்னிலையில் சாமியாரின் கபடத்தனத்தை நிரூப்பிக்கிறான். கதாநாயகனுக்கு அடிகொடுத்த மதிவதனன் என்ற அந்த அரசன் தூரத்திலிருந்து தனது வாளை வீசி அந்த சாமியாரின் தலையை வெட்டுகிறார். அதுதான் ஆயிரமாவது தலை. பி.எஸ்.கோவிந்தன் பிரபல நாடக நடிகர். இளம் வயது அவருக்கு. அந்த வயதிலேயே நிறைய ரசிகர்களை பெற்றிருந்தார். அவரது நாடகத்தைப் பார்க்க பெரும் கூட்டம் கூடும். அவரை இதில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் ரி.ஆர்.சுந்தரம்.

எஸ்.வரலட்சுமி, வி.என்.ஜானகி இருவரும் கதாநாயகிகள். எம்.ஆர்.சுவாமிநாதன் வில்லனாக நடித்தார். ஜி.ராமநாதன் இசையமைத்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதன்முறையாக வசனங்களை எழுதினார். இது பிரபல நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். டி.ஆர். சுந்தரம் படமாக்கினார். படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மாடர்ன் தியேட்டர்சின் கல்லாவையும் நிரப்பியது. இன்றும் இப்படத்தை இளைஞர்கள் பார்ப்பார்களாயின் ஆரம்பம் முதல் எதிர்பார்ப்பை உருவாக்கி கதை நகரும் விதத்தால் ஆர்வத்துடன் பார்க்க நேரிடும் என்பதைத் திண்ணமாகச் சொல்லலாம்.

விகடயோகி’ படத்தில் பி.எஸ்.கோவிந்தன் விஞ்ஞானியாக நடித்திருந்தார். அவர் ஒரு மருந்து கண்டுபிடிப்பதாகவும் அதை சாப்பிட்டால் யார் குரலில் வேண்டுமானாலும் பாடும் திறனை பெறலாம் என்பது போலவும் காட்சியை அமைத்தார் கே.சுப்ரமணியம். அதன்படி மருந்து சாப்பிடும் கோவிந்தன், பாகவதரின் குரலை பெற்று, அவரைப் போலவே பாடுவதாக காட்சி. இந்த காட்சிக்கு சின்னப்பாவும் சமதித்துவிட்டார். இதையடுத்து ஓமுகுந்தனே எந்தன் மைந்தனே பாடல் படத்தில் இடம் பெற்றது. படமும் ஹிட். இந்த பாடலும் ஹிட். சின்னப்பாவும் பாகவதரும் சேர்ந்து நடிக்காவிட்டாலும் இருவரின் பாடலும் ஒரே படத்தில் இடம் பிடித்தது, இந்த படத்தில்தான்.

“என் தங்கை” படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி கிடையாது. பார்வையிழந்த தன் தங்கையின் (ஈ.வி.சரோஜா) எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகியாக எம்.ஜி. ஆர். நடித்தார்.

பல சோதனைகளுக்குப் பின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமண ஏற்பாடுகள் செய்வார், எம்.ஜி.ஆர். கடைசி நேரம். எதிர்பாராதவிதமாக தங்கை இறந்து விடுவாள்.

தங்கையின் உடலை தோள் மீது போட்டுக்கொண்டு கடற்கரையில் நடப்பார், எம்.ஜி.ஆர். அவரைக் காப்பாற்றுவதற்காக பி.எஸ்.கோவிந்தன் தன் காதலியுடன் ஓடுவார்.

ஆனால், கடற்கரை சாலையில் நடக்கும் எம்.ஜி.ஆர், கடல் மணலில் வேகமாக நடப்பார். பி.எஸ்.கோவிந்தன் காப்பாற்றுவதற்குள், கடலில் இறங்கி விடுவார், தங்கையின் உடலுடன்!

இப்படங்களுடன் பக்த ஹனுமான், பத்மினி, கல்யாணம் செய்துக்கோ போன்ற சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் 1979 – 80-க்கான விருது பி.எஸ்.கோவிந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

கீழ்க்கண்ட இணையதளங்களிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

http://www.tamilnews.cc/news.php?id=52086#sthash.e98ckKDT.dpuf

http://www.tamilvu.org/courses/diploma/a061/a0614/html/a06145l4.htm

http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title

http://www.vallamai.com/?p=20611

http://m.dinakaran.com/cdetail.asp?Nid=2305#sthash.3O0R0H4D.dpuf

http://new.dinamalar.com/supplementary_detail.asp?id=15447&ncat=2&Print=1

‘’ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி [1947] படத்தில் ’மெய்யழகன்’ என்ற கதாபாத்திரத்தில் பி.எஸ்.கோவிந்தன்

PS.Govindan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-

No comments:

Post a Comment