HIROSIMA DESTRUCTION AFTER WORLD WAR II
என்ன தவறுகள் செய்தோம்? எதற்காக இவ்வளவு பெரிய தண்டனை? வாழும் போதே நரகத்தை கண்டு விட்டோம். இந்த நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமன்றி இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் தண்டனை எதற்கு?
இனி ஒரும் போதும் மனிதர்களாய் பிறக்கவே கூடாது. இப்படித்தான் எண்ணியிருப்பான் அன்றைய நாளில் மரணத்தின் விளிம்பில் துடித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு ஜப்பானியரும்.
உலகையே அதிர வைத்த 2ஆம் உலகப்போரின் மிகப்பெரிய தாக்குதல் எதுவென்றால் கட்டாயம் 1945 ல் பதிவான ஹிரோசிமா நாகசாகி ஆகிய நகர்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குல் என்றே அனைவரும் கூற வேண்டும்.
லிட்டில் போய் எனப்படும் அணுகுண்டு வீச்சினால் அன்றைய ஜப்பான் நாடே கதிகலங்கி நின்றது. ஆனால் அத்தகைய மிகப்பெறும் சக்தி வாய்ந்த அணுகுண்டு ஜப்பான் மீது தொடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன? உலகப்போரில் பங்குப்பற்றிய எத்தனையோ நாடுகளில் அமெரிக்காவுக்கு ஜப்பான் மீது மட்டும் தனிப்பட்ட கோபம் எதற்கு?
அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு பிரயோகித்தமைக்கான காரணத்தை சற்றே மீட்டுப்பார்ப்போம்...
கடந்த 1937ஆம் ஆண்டு ஜப்பான் சீனாவின் மஞ்சூரியாவை கைப்பற்றிய பிறகு காரணங்கள் கேட்காமல் இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது.
மனிதர்களை உயிருடன் புதைப்பதற்கென்றே பாரிய அளவிலான குழியொன்றையும் தன்னகம் வைத்திருந்தது ஜப்பான்.
பெண்கள் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டும் வன்புணர்வுக்கும் அதிகளவில் உட்படுத்தபட்டனர்.
கர்ப்பினி பெண்கள் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.
உலகில் பொருளாதார வளமிக்க இடங்களாக ஹிரோசிமா நாகசாகி காணப்பட்டமை. இதனாலேயே உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது ஜப்பான்.
கடந்த 1941 ஜூலையில் ஜப்பான் இந்தோனேசியா மற்றும் சீனா, கிழக்கு ஆசியாவையும் ஆக்கிரமித்த பிறகு ஜப்பானின் மீது அது வரை போரில் கலந்துக் கொள்ளாத அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது.
இதை பொறுக்க முடியாத ஜப்பான் டிசம்பர் 7, 1941, ஜப்பானியர்கள் வாஷிங்டனுடன் உடன்படிக்கை தொடர்பாக பேசிக் கொண்டிருக்கும் சமயம் அமெரிக்காவின் கப்பற்தளங்களில் ஒன்றான பேர்ல் ஹார்பரை தாக்கியது.
பேர்ல் ஹார்பர் நிகழ்ச்சிக்கு பிறகு அமெரிக்கா பிரித்தானியா உதவியுடன் உக்கிரமாக உலகப்போரில் இறங்கியது.
ஜப்பானின் மீது கொண்ட வஞ்சினம் தான் அமெரிக்காவை முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஜப்பான் மீது பலமுறை அமெரிக்கா தாக்குதல்களைதொடுக்க ஆரம்பித்தது.
நீயா? நானா? என்ற போட்டியில் நானே என்று அமெரிக்கா நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.
ராபர்ட் ஜே ஆப்பன்ஹைமர் தலைமையில் நாட்டில் தலைச்சிறந்த அணு விஞ்ஞானிகள் 200,000 பேரைக் கொண்டு அமெரிக்காவில் ஒரு இரகசிய அணு ஆயுத வடிவமைப்பு நடந்துக் கொண்டிருந்தது.
கடுமையான ஆராய்ச்சியின் பலனாக யூரேனியம்-235, ப்ளுட்டோனியம் போன்ற கனிமங்களை பிளந்து சங்கிலித் தொடர் வினைகளின் மூலம் எண்ணி பார்க்க முடியாத அளவு சக்தி உண்டாக்க முடியுமென கண்டறிந்தனர்.
1945, ஜூலை 16 ப்ளூட்டோனியம் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘லிட்டில் போய்’என்ற முதல் அணு ஆயுதம் தயாரிக்கப்பட்டது.
சோதனை முயற்சியாக அன்று நியூமெக்ஸிகோவில் ட்ரினிட்டி (Trinity) என்ற பெயரில் வெடிப்பு நிகழ்த்தினார்கள்..
உயரே கிளம்பிய காளான் புகையும், வெளிச்சமும், வெடி அதிர்வும் பல மைல்களுக்கு அப்பால் இருந்த விஞ்ஞானிகளையும் மூச்சடைக்க வைத்தது. அந்த அளவு சக்தியின் வெளிப்பாடு எங்கேயும் அவர்கள் கண்டதில்லை.
அமெரிக்காவுக்கு ஜப்பானால் நெருக்கடி அதிகமாகி கொண்டே போனது. ஜப்பானை வென்று முழுவதும் ஆக்கிரமிக்கும் வரை இரண்டாம் உலகப்போருக்கு முடிவு வராது என புதியதாக பதவிக்கு வந்திருந்த அதிபர் ட்ரூமென் கணக்கு போட ஆரம்பித்தார்.
வழக்கமான வழியில் சென்று போரிட்டு வென்றால் பல்யிலாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை இழக்க வேண்டிவரும் என்று எண்ணினார்.
அதற்கு ஒரே தீர்வு அணு ஆயுதத்தை ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்துவது. மன்காட்டன் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு பயங்கர எதிர்ப்பு இருந்தது.
2 பில்லியன் செலவழித்து தயாரிக்கப்பட்ட ஆயுதம் வெறுமனே உறங்கி கொண்டிருக்க முடியுமா?
எனவே ஜப்பானுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்காமல் ஜப்பானின் சில முக்கிய நகரமான க்யாட்டோ, ஹிரோஷிமா,யோககாமா,கோகுரா போன்ற நகரங்கள் அணு ஆயுதத்தால் அமெரிக்கா தாக்க பட்டியலிட்டது.
கடைசியில் ஹிரோஷிமா தான் முதல் குறி என்று தீர்மாணிக்கப்பட்டது. கர்னல் பால் திப்பெட் (Paul tibbets) கமெண்டராக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 6, 1945 என்று நாளும் தீர்மாணிக்கப்பட்டது.
திப்பெட் தலைமையில் புறப்படும் குழுவிற்கு அதுவரை அணுகுண்டு என்றால் என்ன? அதன் விளைவு என்ன? என்று தெரியாது.
மன்காட்டன் விஞ்ஞானிகள் விளக்கம் கொடுக்க வந்த போது சோதனை அணுகுண்டு வெடிப்பு பற்றிய படத்தை, ப்ரொஜடர் வேலை செய்யாததால் போட்டு காட்ட முடியவில்லை.
விஞ்ஞானிகள் விளக்கியதிலிருந்தும், புகைப்படங்களிலிருந்தும் நடக்க போகும் விபரீதத்தை அறிந்து உறைந்து போனார்கள். குண்டு போட்டவுடன் போர் விமானத்தை அதிர்வலை தாக்கும் என்பதால் எப்படி தப்பிப்பது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.
வானம் தெளிவாக இருந்தததால் ஹிரோஷிமாவின் நடுவில் உள்ள T வடிவில் உள்ள அயோய் பாலத்திற்கு குறி வைக்கிறார்கள்.
சரியாக ஹிரோஷிமா நேரப்படி காலை 8:15-க்கு அணுகுண்டு விமானத்திலிருந்து ஹிரோசிமா நோக்கி விடுவிக்கப்படுகிறது. 18000 அடி உயரத்தில் அணுகுண்டு தன்னால் எரியூட்டப்படுகிறது.
விமானம் திரும்பி பாரிய வேகத்தில் வந்த வழியில் விரைகிறது. 43 நொடிகளில் ஒளி விமானத்தை நிரப்புகிறது.
பர்ப்பிள், சிகப்பு கலவையினூடே கருப்பு கலரில் காளான் வடிவில் அடர்த்தியான புகை ஹிரோஷிமா நகரையே மறைக்கிறது. ஒரே நிமிடத்தில் 20000 அடி உயரத்தை அடைந்த காளான் புகை கொஞ்ச நேரத்தில் 30000 அடிக்கு உயர்கிறது.
திப்பெட் விமானத்தில் அறிவிக்கிறார் “வரலாற்று சிறப்புமிக்க முதல் அணுகுண்டை வெடித்து விட்டோம்” என்று.. ஆனால் அன்றைய தினம் ஜப்பானின் மொத்த வரலாறுமே அஸ்தமித்துப்போனது . ஒரு நாடே மௌனித்து போனது ஒரு நிமிடத்தில்..
உலகம் சந்திக்காத கொடூர அழிவொன்றை 1945 ல் ஜப்பான் சந்தித்தது. உடல் உறுப்புகளை இழந்து உடமைகளை இழந்து மக்கள் நிர்கதியான அவல வரலாறு இது.
இந்த ரணம் ஆறுவதற்கு முன் நாகசாகி மீது இன்னுமொரு அணுகுண்டு வீசப்பட்டது. மனிதர்கள் மீது கொத்து கொத்தாக அசூர வேகத்தில் அணுகுண்டு பாய ஆற்ற முடியாத காயங்களுடன் மரணித்து போனவர்கள் ஆயிரக்கணக்கானோர்.
இதன் காரணமாக 1945 ஆகஸ்ட் 15 ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது.
அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்த ஜப்பான் இன்று உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்று. இருப்பினும் லிட்டில் போயின் தாக்கம் இன்றும் ஜப்பானில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
கடந்த 1945ஆம் ஆண்டு ஜப்பானில் செயலால் கொதித்தெழுந்த உலகம் இன்று அதன் துரித வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்கிறது. இன்றைய அளவில் தனக்கென தனி சாமராஜ்யத்தையே உருவாக்கி வைத்திருக்கிறது ஜப்பான் அரசு.
தமது செயற்பாட்டால் தனக்குதானே குழிவெட்டிக்கொண்ட ஜப்பானின் வரலாறு எமக்கெல்லாம் ஒரு பாடம்.
வரலாற்றில் சாதித்ததும் ஜப்பான்தான் .சரித்திரத்தில் வரலாற்றுப் பேரழிவை சந்தித்ததும் ஜப்பான்தான். இன்னும் பலநூற்றாண்டு தாண்டினாலும் தன்னம்பிக்கையின் சின்னம் என பேசப்படும் ஒரு நாடு என்றால் தனி நாடாக ஜப்பான் மட்டுமே வரலாற்றில் பதியப்படும்.
No comments:
Post a Comment