நவபாரத சிற்பி நேரு
சுதந்திரத்தின் பயன்
இந்திய சுதந்திரம் பெற்ற அதாவது ஓரிரு மாதங்களுக்குப் பின்னர், ஜவகர்லால் நேரு பஞ்சாபியில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அவர் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி காரை நோக்கிச் செல்லும் போது ஒரு முரட்டு சர்தார்ஜி அவரை வழிமறித்து, “வாய் கிழியப் பேசுகிaர்களே! சுதந்திரம் வந்து விட்டதால் என்னைப் போன்றவர்களுக்கு என்ன பயன்?” என்று குதர்க்கமாய் கேட்டார்.
நேருஜி அவரைத் தட்டிக்கொடுத்துவிட்டு, “நண்பரே! சுதந்திரத்தின் பலன்தான் உன்னால் ஒரு நாட்டின் பிரதமரை வழிமறித்து கேள்வி கேட்க முடிந்திருக்கிறது, இதேபோல் வெள்ளைக்கார ஆட்சியில் இப்படிக் கேட்டிருந்தால் உம்முடைய தலையைத் துண்டித்திருப்பார்களே” என்றார்.
கேட்டவர் வெட்கித் தலைகுனிந்தார்.
குல்லா எங்கே?
ஒரு சமயம் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்து கொண்டிருந்தது, கூட்டத்தில் இருந்த நேரு வெப்பம் தாங்கமுடியாமல் தனது குல்லாவைக் கழற்றிவைத்துவிட்டு தனது பணிகளில் இருந்தார். கிளம்பும்போது குல்லாவைத் தேடினார், குல்லாய் கிடைக்கவில்லை, எங்கே குல்லா என்று நேருஜி தேடுவதைக் கவனித்து ஒரு ஊழியர் குல்லாவைக் கொண்டு வந்து கொடுத்தார். ஆச்சரியமுடன் அவரைக் கவனித்த நேருஜி, “இது எங்கே இருந்தது” என்றார்.
“நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த பைல்களின் நடுவில் இருந்தது” என்றார் அந்த ஊழியர்.
அறிக்கை எங்கே?
இன்னொரு சமயம் ஜவகர்லால் நேரு ரயிலில் போய்க் கொண்டிருந்தார். திடீரென்று ஏதோ நினைவு வந்தவராக தேடத் தொடங்கினார். பைல்களைப் புரட்டித் தள்ளினார், பேப்பர்களைக் கலைத்தார், கிடைக்கவில்லை.
இதைப்பார்த்த இந்திராகாந்தி பரபரப்பாக வந்து, என்ன தேடுகிaர்கள் எனக்கேட்டார். அன்று மாநில சீரமைப்பு அறிக்கை பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தது. அதனைத்தான் அவர் தேடிக்கொண்டிருந்தார்.
“இப்போது படித்துக் கொண்டிருந்தேன், காணவில்லையே” என்றார் நேரு, சிரித்த இந்திரா,
“கொஞ்சம் எழுந்திருங்கள், அந்த அறிக்கை மேல்தான் நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிaர்கள்” என்றார்.
அமெச்சூர் பிரதமர்
ஜவகர்லால் நேரு இந்திய பிரதமராக இருந்த காலத்தில் கால்பிரெய்த் என்பவர் அமெரிக்காவின் சார்பாக இந்திய தூதுவராக பதவி ஏற்றார்.
அவர் ஒரு நாள் சம்பிரதாய அடிப்படையில், நேருவை முதன் முதலாக வந்து சந்தித்தார்.
“எனக்கு அரசியலில் பெரிய அறிவாற்றல் எதுவும் கிடையாது, சொல்லப்போனால் ஒரு அமெச்சூர் தூதுவன்தான்” என்று அடக்கமாக கால்பிரெய்த் கூறினார்.
நகைச்சுவை உணர்வுள்ள நமது பிரதமர் நேருவும், “அதனால் என்ன நான்கூட ஒரு ஆமெச்சூர் பிரதமர் தானே” என்றார்.
நல்ல பண்பை தமிழ் நாட்டில் பார்த்தேன்
இந்திய நாட்டின் நல்ல பண்புகளின் பரிபூரணத்தை நான் தமிழ் நாட்டில் தான் பார்க்கிறேன்; வடநாட்டில் அதைக்காண முடிவதில்லை. அதனால் தான் முடிந்தபோதெல் லாம் இங்கே வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்.
தமிழ் நாட்டுக்கு வந்து பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசும் போதெல்லாம் பண்டித ஜவர்கலால் நேரு இப்படி கூறுவார்.
நேரு தமிழ் நாட்டின் மீதும் தமிழர்களின் மீதும் கொண்டிருக்கும் மரியாதையை மேற்படி வார்த்தை களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மனைவியின் மறைவு
ஜவகர்லால் நேரு தமது மனைவி கமலா நேருமீது உயிரையே வைத்திருந்தார். சுவிட்சர்லாந்து வரைப் போய் எத்தனையோ பெரிய பெரிய வைத்தியமெல் லாம் கமலாவுக்கு செய்து பார்த்தார் நேரு.
ஒரு பக்கம் தேசத்தைப்பற்றிய கவலை; எந்த நிமிடம் தேச மாதா சிறைக்கும், போராட்டத்துக்கும் அழைப்பார்களோ என்று தயாராக இருக்கவேண்டிய நிலைமை.
இந்த மாதிரியான சமயத்தில் தான் இந்தியாவின் மாணிக்கத்திற்கு ஒரு சிறகு ஒடிந்தது. அவருடைய மனைவி கமலா நேரு கணவனையும், அருமை மகளையும் தவிக்கவிட்டு மறைந்து விட்டார்.
நேருவுக்குத் தடையில்லை
சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலக் கட்டம் அது. தமிழகத்திற்கு வருகை தந்திருந்த பண்டித நேரு புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குச் சென்று கொண்டிருந்தார்.
அது வெள்ளையர் ஆட்சியை ஆதரிக்கும் சமஸ்தானம், எனவே நேருவை புதுக்கோட்டைக்குள் நுழைய தடைப்போட்டது சமஸ்தானம், நேருவின் காரை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி. “உங்கள் கார் எல்லைக்குள் நுழைய கூடாது. இது சமஸ்தான உத்தரவு” என்றனர்.
நேருவைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்றிருந்தனர்.
அப்போது சத்தியமூர்த்தி நேரு காதில் ஏதோ சொல்ல, உடனே இருவரும் காரிலிருந்து இறங்கி புதுக்கோட்டை நகருக்குள் நடக்கத் தொடங்கினர்.
தடை உத்தரவு கொண்டுவந்தவர்கள் ஓடி வந்து, “என்ன இப்படித்தடையை மீறுகிaர்கள்” என்றனர்.
“நேருஜியின் கார்தான் உள்ளே நுழையக்கூடாது என்று தடை. அவருக்கு இல்லை” என்றார் சத்தியமூர்த்தி, அவர்கள் திகைத்து நின்றனர்.
அன்று மூன்று மணிநேரம் மக்கள் வெள்ளத்தில் நடந்து சுதந்திரப்போராட்டத்திற்கான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்தார் நேருஜி.
கத்தி சண்டை புரியுமா
ஐக்கிய அரபுக் குடியரசின் இந்திய அரசாங்கத் தூதுவராக இருந்த கமால் பாட்ஷா ஒரு சமயம் நேருஜியிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது.
“முன் காலத்தில் எல்லாம் கத்திகளைக் கொண்டு எப்படித் தான் சண்டை போட்டார்களோ” என்று சொன்னார்.
உடனே நேரு எழுந்துபோய் இரண்டு கைத்தடிகளைக் கொண்டுவந்தார், ஒன்றை கமாலிடம் கொடுத்தார்.
இன்னொன்றை தம் கையில் பிடித்துக் கொண்டு கத்தியை சுழற்றுவது போல் பாவலா காட்டினார், கமாலுக்கு ஒன்றும் புரியவில்லை.
பிறகு நேருஜி சிரித்துக்கொண்டே,
என்ன கமால்! உங்களுக்கு இந்த கம்புச்சண்டையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை கத்திச்சண்டையைப் பற்றி உங்களிடம் பேசி என்ன பயன் என்று புன்னகைப் புரிந்தார், அங்கு சிரிப்பலை பாய்ந்தது.
ஜெயிலில் போட்டால் எழுதுவேன்
ஒரு சமயம் ‘தி அட்லாண்டிக்’ என்ற பிரபல வெளிநாட்டுப் பத்திரிகை ஒன்றில் இன்றைய இந்தியா என்கிற ஒரு சிறப்பு மலர் வெளியிட ஏற்பாடு ஆகியிருந்தது. அப்போது அதற்கான விஷயங்களைச் சேகரிக்க இந்தியாவுக்கு வந்த ஆர்லிப்ரிட், பிரதமர் நேருவிடம் சென்று,
“இந்த சிறப்பு மலருக்கு ஏதாவது ஒரு கட்டுரை எழுதி கெளரவிக்க முடியுமா” என்று கேட்டார்.
“என்னை ஜெயிலுக்குப் போகச் சொல்aங்களா” எனக் கேட்டார் நேரு.
“இல்லவே இல்லை. ஏன் இப்படிக் கேட்கிaர்கள்? என்று அவர் விசாரித்தார்கள்.
“ஜெயிலில் தான் எழுத நேரமிருக்கும்” என்று சொல்லிவிட்டு சிரித்தார் நேரு
கேக் வெட்ட மறுத்தார்
நேருவுக்கு சின்ன வயதில் பிறந்தநாள் கொண்டாடுவது என்றால் ரொம்பப் பிடிக்கும். அந்த நிகழ்வை தினமும் கொண்டாடலாமே என்பார். வளர்ந்தபின் அதில் விருப்பம் கொண்டதில்லை. நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவுப்படுத்தும் நாள் அது என்று அதை தவிர்த்து வந்தார்.
ஒரு சமயம் நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக, பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு சம்மதித்தார். உற்சாகம் கொண்ட நண்பர்கள், அவர் கேக் வெட்ட வேண்டும் என்று இந்திய நாட்டைப் பற்றியே சதாசர்வகாலமும நினைப்பவர் நேரு என்பதால் இந்திய வடிவில் கேக் தயாரிக்கப்பட்டது.
கேக் வெட்ட நேருவை அழைத்து வந்தார்கள். அரைகுறை மனதுடன் வந்த நேரு கேக் வெட்ட கையில் கத்தியை எடுத்தார்.அப்போதுதான் அவர் இந்தியா வடிவில் அமைக்கப்பட்ட பிறந்தநாள் கேக்கைப் பார்த்தார், பதறிப்போனார்.
“இந்தியாவை நான் துண்டாடமாட்டேன். அதன் மாநிலங்களை எவரும் விழுங்க நான் தயாராக இல்லை என சொல்லி கத்தியை கீழே வைத்துவிட்டுப் போய்விட்டார் நேரு.
No comments:
Post a Comment