NEW DELHI BECAME CAPITAL OF INDIA
FROM DECEMBER 12,1911 FROM CALCATTA
புது தில்லி नई दिल्ली ਨਵੀਂ ਦਿੱਲੀ نئی دہلی | |
---|---|
வலச்சுழியாக மேலிருந்து இடமாக: தலைமைச் செயலகக் கட்டிடம், கன்னாட்டு பிளேசு, சந்தர் மந்தர், ராஷ்டிரபதி பவன், இந்தியாவின் வாயில்
| |
நாடு | இந்தியா |
மாநிலம்/ஆட்பகுதி | தில்லி |
நிறுவப்பட்டது | 1911 |
துவங்கப்பட்டது | 1931 |
பரப்பளவு[1] | |
• தலைநகரம் | 42.7 |
ஏற்றம் | 216 |
மக்கள்தொகை (2011)[2] | |
• தலைநகரம் | 249 |
• அடர்த்தி | 5,855 |
• பெருநகர் | 21 |
இனங்கள் | தில்லியர் |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
• இரண்டாம் அலுவல் மொழி | உருது, பஞ்சாபி[3] |
நேர வலயம் | இ.சீ.நே(ஒசநே+5:30) |
பின்குறி(கள்) | 110xxx |
தொலைபேசி குறியீடு | +91-11 |
வாகனப் பதிவு | DL-1x-x-xxxx to DL-14x-x-xxxx |
நகராட்சி அமைப்பு | புது தில்லி மாநகராட்சி மன்றம் |
இணையதளம் | www.ndmc.gov.in |
புது தில்லி (இந்தி: नई दिल्ली, உருது: نئی دہلی) இந்தியாவின் தலைநகரமாகும். இது தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள ஒரு மாவட்டமும், பெருநகரமும் ஆகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது அரியானாவிலுள்ள ஃபரிதாபாத், குர்கான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.
72.5 m (238 ft) உயரம் கொண்ட குதுப் மினார் - உலகின் மிக உயர்ந்த தனித்து நிற்கும் மினார். |
ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் 1911ஆம் ஆண்டு தனது தில்லி தர்பாரின் போது திசம்பர் 15 இல் இம்மாநகருக்கான அடிக்கல்லை நாட்டினார்.[4] இதனை இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற பிரித்தானியக் கட்டிடக்கலை வல்லுநர்களான சர் எட்வின் லூட்டியன்சும் சர் எர்பெர்ட்டு பேக்கரும் வடிவமைத்து உருவாக்கினர். புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புது தில்லி என 1927ல் பெயர் சூட்டப்பட்டு[5] 1931 பெப்ரவரி 13 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.[6] புது தில்லியிலுள்ள உமாயூனின் சமாதியும், செங்கோட்டையும், குதுப்பின் வளாகமும் உலகப் பாரம்பரியக் களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.[7].
புது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது[8]. மேலும், 21 மில்லியன் மக்கட்தொகையோடு நாட்டின் அதிக மக்கள் கொண்ட மாநகரப் பட்டியலில் முதன்மையாகவும்[9], நகரமைப்பில், 23 மில்லியன் மக்கள் தொகையோடு, உலக மக்கள்தொகை பட்டியலில் ஏழாவதாகவும் விளங்குகிறது[10]. அமெரிக்க ஆலோசனை நிறுவனமான மெர்சரின் ஆய்வுப்படி, உலகின் விலையுயர்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட 214 நகரங்களில், புது தில்லி 113வது இடத்தைப் பிடித்துள்ளது[11]. இங்கிலாந்தைச் சேர்ந்த லாக்பராக் பல்கலைப்பழகம், புது தில்லியை தங்களது தலையாய உலக நகரங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது[12]. 2011 இல் லண்டன் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனமான நைட் ப்ராங்கின் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 37வது இடத்தையும் பிடித்துள்ளது[1
வரலாறு[மூலத்தைத் தொகு]
புராண காலமான, மஹாபாரதத்தில், விஸ்வகர்மாவால் பாண்டவர்களுக்காக, கடவுள் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்க, உருவாக்கப்பட்ட நகரம் இந்திரப்ரஸ்தம் ( தில்லியின் பழைய பெயர் ). இன்றைய தில்லியிலும் ஒரு பகுதி இந்திரப்ரஸ்தம் என்றே வழங்கப்படுகிறது. [14]
1560ல் கட்டப்பட்ட ஹுமாயூன் கல்லறையே முகலாயக் கல்லறைத் தொகுதிக்கான முதல் எடுத்துக்காட்டு. |
தில்லி மாநகரானது முகலாயப் பேரரசரான ஷாஜகானால் நிறுவப்பட்டதாகும். ஏழு புராதான நகரங்களால் உருவாகிய தில்லி, வரலாற்றுச் சிறப்புகளான உமாயூனின் சமாதி, ஜந்தர் மந்தர், லோதித் தோட்டம் ஆகியவைகளைக் கொண்டுள்ளது[15]
பத்தாம் நூற்றாண்டில், புது தில்லியை உருவாக்கிய ப்ரித்திவிராஜ சவுகான் நினைவு அருங்காட்சியத்தின் நடைபாதை.
நிறுவியது[மூலத்தைத் தொகு]
இந்திய நாடு, பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911 ஆம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே நாட்டின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது[16].
பஹாய் தாமரைக் கோயில், தென் தில்லி |
12 திசம்பர் 1911 இல் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி மற்றும் அரசி கன்சார்ட் ஆகியோரைக் கொண்ட புது தில்லிப் பேரவை கூட்டப்பட்டு, பிரித்தானிய இந்தியாவின் புதிய தலைநகராக தில்லியை அறிவித்தனர்[17][18]. மேலும் இராஜப்பிரதிநிதி தங்குவதற்கான மாளிகைக்கு தில்லியிலுள்ள முடிசூட்டுப் பூங்காவில் அடிக்கல் நாட்டினார்.[19][20]. புது தில்லியின் பெரும்பகுதியான கட்டுமானங்கள், ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது சீறிய முயர்ச்சியாலும் திரு. சோபா சிங் அவர்களின் பங்களிப்பாலும் சிறப்பாக நடந்தேறியது.
1639ல் சாஜகானால் கட்டப்பட்ட செங்கோட்டை. இதிலிருந்தே இந்தியப் பிரதமர் விடுதலை நாள் உரை நிகழ்த்துகிறார். |
மொழிகள்[மூலத்தைத் தொகு]
தேசிய தலைநகர் வலயத்தின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
சமயம்[மூலத்தைத் தொகு]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 124,482 (87.66 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 8,480 (5.97 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 2,933 (2.07 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 679 (0.48 %) ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 4,852 (3.42 %) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 312 (0.22 %) ஆகவும் உள்ளது.
No comments:
Post a Comment