GEETHA KADAMBEE TELUGU ACTRESS BORN 1962 JULY 14


GEETHA KADAMBEE TELUGU ACTRESS 
BORN 1962 JULY 14



கீதா என்பவர் ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கீதா, தமிழ்த் திரைப்படமான பைரவியில் நடித்தார். பின்னர், பல்வேறு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.வாழ்க்கைக் குறிப்பு
பள்ளிக் கல்வியை பெங்களூரு பின்னீட் கல்லூரியில் கற்றார். சென்னையிலும் சில காலம் கல்வி கற்றார். 1997 ல் ஒரு சார்ட்டெர்ட் அக்கௌண்டன்டான வாசனை திருமணம் செய்துகொண்டார். தற்போது நியூயோர்க்கில் வசிக்கிறார்.

திரை வாழ்க்கை


1978 ஆம் ஆண்டில் கீதா திரைத்துறையில் நுழைந்தார். பைரவி என்னும் முதல் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதில் ரஜினியின் சகோதரியாக நடித்தார். நிறைய மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பஞ்சாக்னி என்னும் திரைப்படம் தொடங்கி 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997 ல் கீதா திருமணத்தின் காரணமாக, பல காலம் நடிக்கவில்லை. பின்னர், சந்தோஷ்‌ சுப்ரமணியம் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படங்கள்
மலையாளத் திரைப்படங்கள்
பஞ்சாக்னி
வாத்சல்யம்
சுகமோ தேவி
ஒரு வடக்கன் வீரகாத
ஆதாரம்
ஆவனாழி


ஹைதராபாத்: தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரினச்சேர்க்கையாளரான ஒரு பெண்ணை பார்த்து உனக்கு வெட்கமாக இல்லையா, செருப்பால் அடிப்பேன் என நடிகை கீதா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் நடிகை கீதா பதுக்கு ஜதகா பன்டி என்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். குஷ்பு நடத்தும் நிகழ்ச்சி போன்று தான் இது. குடும்ப பிரச்சனைகளை கேட்டு பின்னர் மனோதத்துவ நிபுணர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் ஓரினச்சேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள் கலந்து கொண்டனர்.இளம் ஜோடி


ஓரினச்சேர்க்கையாளர்களில் ஒருவருக்கு 20 வயது. தன்னை ஆணாக கருதும் பெண்ணுக்கு 23 வயது. கடந்த 31ம் தேதி ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் அந்த பெண்கள் பெற்றோர்களுடனான பிரச்சனையை தீர்த்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.கீதா
தன்னை ஆணாக நினைக்கும் பெண்ணை முதலில் அழைத்து பேசினார் கீதா. அதன் பிறகு மற்றொரு பெண், அவர்களின் பெற்றோர், மனோதத்துவ நிபுணர் மற்றும் வழக்கறிருடன் பேசினார் அவர்.
செருப்பால் அடிப்பேன் ஆணாக நினைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக இளம்பெண் கூறினார். இதை கேட்ட கீதா அவரைப் பார்த்து, உனக்கு வெட்கமாக இல்லையா, செருப்பால் அடிப்பேன் என்றார். இந்த சம்பவம் ஓரினச்சேர்க்கையாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER