Wednesday 29 April 2020

RAJASHREE RAO ,ACTRESS BORN 1977 APRIL 29




RAJASHREE RAO ,ACTRESS BORN 1977 APRIL 29


பாரதிராஜா இயக்கித் தயாரித்த `கருத்தம்மா' திரைப்படம் ரிலீஸாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாயகி ராஜஶ்ரீ படம் குறித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். #25yearsOfKaruthamma

ஏ.வி.எம் ஸ்டூடியோ பக்கத்துல நானும், அம்மாவும் ஒரு வேலை விஷயமா வந்திருந்தோம். அப்போ அங்கே வந்த மேக்கப் மேன் கோபி அண்ணா, `படத்துக்காக ஆடிஷன் டெஸ்ட் நடக்குது கலந்துக்குறீங்களா'னு கேட்டார். நாங்களும் என்ன நடக்குதுனு பார்ப்போம்னு போனோம். அங்கே மேக்கப் போட்டு நிறைய பேரை போட்டோ டெஸ்ட் எடுத்துக்கிட்டிருந்தாங்க. நிறைய அழகான பொண்ணுங்களெல்லாம் இருந்தாங்க. நடிகை மகேஸ்வரியும் இருந்தாங்க. `இவ்வளவு அழகான பொண்ணுங்க இருக்குறப்போ நாம செலக்ட் ஆக மாட்டோம்'னு நினைச்சிட்டிருந்தேன். ஏன்னா, என்னோட கலர்.

ராஜஸ்ரீ
ராஜஸ்ரீ

பாரதிராஜா சார் கன்னுக்குட்டியைக் கையிலே கொடுத்துட்டு டயலாக் பேசச் சொன்னார். அந்த சமயத்துல எனக்கு தமிழ் சரியா பேச வராது. இருந்தும் ஏதோ பேசுனேன். எங்களுக்கான டெஸ்ட் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு எங்க ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு போன் வந்தது. நமக்கு யார் போன் பண்றாங்கனு ஆர்வமா ஓடிப் போனேன். `பாரதிராஜா ஆபீஸ்ல இருந்து போன் பண்றோம். டிக்கெட் போட்டுட்டிருக்கோம். ஷூட்டிங் போகணும்'னு சொன்னாங்க. நமக்கு படத்துல கேரக்டர் கொடுத்துட்டாங்கனு சந்தோஷப்பட்டேன். நான், மகேஸ்வரி, கேமரா மேன் கண்ணன், பாரதிராஜா சார் எல்லாரும் ஒண்ணாதான் ஷூட்டிங் கிளம்புனோம். எனக்கும், அம்மாவுக்கும் ஒரே சந்தேகம், `எந்த ரோலில் நடிக்கக் கூப்பிட்டுப் போறாங்க'னு. இதைப் பத்தி யார்கிட்ட கேட்கணும்னு எங்களுக்குத் தெரியல. தேனி போய் இறங்குனோம். படத்தோட முதல் ஷெட்யூல் முடியுற வரைக்கும் பாரதிராஜா சார் பத்தி எதுவும் தெரியாது. அவரோட படங்கள் பற்றிய அறிமுகம்கூட இல்லை.

எனக்கு எப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுப்பார். நான் நடிப்பேன் அவ்வளவுதான். நாங்க நடிச்சது எல்லாத்தையும் சார் ஸ்க்ரீனில் போட்டுப் பார்த்தார். யாருமே சரியா நடிக்கலைனு அவருக்குத் தோனியிருக்கு. எந்தவொரு திருப்தியும் நாங்க நடிச்ச காட்சிகள் மூலமா சாருக்குக் கிடைக்கல. எங்க எல்லாரையும் கூப்பிட்டு ராதிகா மேடம், விஜயகுமார் சார் நடிச்ச `கிழக்குச் சீமையிலே' படத்தைப் போட்டுக் காட்டினார். அப்போதான் பாரதிராஜா சார் எவ்வளவு பெரிய இயக்குநர்னு எனக்குத் தெரிஞ்சது. திரும்பவும் எங்களுக்கு மேக்கப் போட்டு டயலாக்ஸ் சொல்லிக் கொடுத்து நாங்க நடிச்ச எல்லாக் காட்சியும் ஷூட் பண்ணுனார். அந்தச் சமயத்துல நாங்க படத்தோட முதல் ஷெட்யூல் முடிச்சிருந்தோம். ஒரு ஷாட் சரியில்லைனாகூட திரும்பத் திரும்ப எடுப்பார். அவர் மனசுக்கு சரியா வரவரைக்கும் விடமாட்டார். படத்தோட ஷூட்டிங் போயிட்டிருந்த நேரத்துலதான் படத்தோட ஹீரோயின் நான்தான்னு தெரியும். சவாலா எடுத்துக்கிட்டு என்னை படத்துல நடிக்க வெச்சார் பாரதிராஜா சார்.

பாரதிராஜா 
பாரதிராஜா

தமிழ்கூட சரியா பேச வராது. ராதிகா மேடம்தான் எனக்கு டப்பிங் கொடுத்தாங்க. படத்துக்கு தேசிய விருது கிடைச்சப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தது. சிறந்த நடிகைக்கான மாநில விருது படத்துல நடிச்சதுக்காக எனக்கு கிடைச்சது. நிறைய பேர் வந்து போட்டோ எடுத்துட்டுப் போனாங்க. எனக்கு கிடைச்ச அங்கீகாரத்துக்கு பாரதிராஜா சார்தான் காரணம். இந்தப் படத்தோட ஷூட்டிங் அப்ப எனக்கும், மகேஸ்வரிக்கும் ஒரு ஆசை இருந்தது. அதையும் பாரதிராஜா சார்தான் நிறைவேத்துனார்.

ராஜஸ்ரீ
ராஜஸ்ரீ
ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் தீவிர ரசிகர்கள் நாங்க. அவரைப் பாக்கணும்னு பாரதிராஜா சார்கிட்ட கேட்டிருந்தோம். ஒருநாள் அவரோட ஸ்டூடியோவுக்குக் கூட்டிட்டுப் போனார். அப்போ `போறாளே பொன்னுத்தாயி' பாட்டோட டிராக் அங்கே இருந்தது. ராவான டிராக்தான். அதைக் கேட்டுட்டு அப்படியே அழுதுட்டேன். அந்தளவுக்கு ஸ்வர்ணலதா வாய்ஸ் இருந்தது. என்னோட முதல் படத்துலேயே இவ்வளவு பெரிய விஷயங்கள் நடந்தது பெரிய விஷயம். மாதவிங்கிற என்னோட பேரை மாத்தி ராஜஶ்ரீனு வெச்சார். என் வாழ்க்கையோட
திருப்பு முனையா அமைஞ்ச `கருத்தம்மா' ரிலீஸாகி 25 வருஷம் ஆனது எனக்கு சந்தோஷமா இருக்கு' என நெகிழ்கிறார் ராஜஶ்ரீ.



 Rajashree is a famous actress from Tamil movies and television serials. She acted in number of powerful roles which gave her a huge fan following. Her portrayal of different feelings, has got her numerous awards and accolades. She is one of the most successful actresses in her time.
Rajashri is a talented actress who�acted in several films, including Sethu, Run, Manasellam and Vettaiyadu Vilayadu. But she is best remembered for her role in Karuthamma, her debut movie.

Rajashree was introduced to Tamil movies by the legendary director Bharathi Raja in his famous movie “Karuthamma”. She got the title role in this movie which she played perfectly. This emotional story gave her the right start and she capitalized on that to act in many other popular movies such as Run, Nandha and Vettaiyaadu Vilaiyaadu. Each one of these movies gave great chance for her to express her acting skills in the best possible way.
Rajashri, who rose to prominence after getting introduced by Bharathi Raja in Karuthamma, got married to her boyfriend Ansari Raja, owner of Body Shape Gym in Chennai. Friends and relatives close to the bride and groom attended the marriage on February 19th. Soon, a grand reception will be arranged by the newly-married couple.but this marriage ended soon in divorse.
then she married Bujankar Rao (m. 2010)

Rajashree next entered the television serials, where she did a very good performance in the serial “Aalayam”. Her acting as a simple woman who raises to the occasion when the need comes, impressed many viewers, especially girls. She was given many more similar roles in other serials such as Agal Vilakku, Mandhira Vaasal and Sivamayam. Each one of these serials gave Rajashree a good chance for her to showcase her talent and people loved it. Rajashree went on to act in many serials and remains a very popular artist in this media. Even though, she has acted in number of famous movies, it is the television media that gave her the limelight she deserved and Rajashree gave back wonderful performances to this media in return

No comments:

Post a Comment