MARY BARRETT DYER ,RELIGIOUS REFORMER
BORN 1611 - 1660 JUNE 1
மேரி பாரெட் டயர் (Mary Barrett Dyer) (1611[2] – சூன் 1, 1660) ஓர் ஆங்கில சீர்திருத்தத் திருச்சபையினராக இருந்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பாசுடன் நகரில் மாநில சட்டங்களுக்கு எதிராக குவாக்கராக மாறியதால் தூக்கில் இடப்பட்டவர்.[3] பாசுடன் தியாகிகள் எனக் குறிப்பிடப்படும் தூக்கிலிடப்பட்ட நால்வரில் ஒருவராவார்.
இறைவனுடன் தொடர்பு கொள்ள பைபில் படித்தால் போதுமானது என்றும், அதற்கு இடைத்தரகர் போல பாதிரியார்கள் தேவையில்லை என்றும் வலியுறுத்தினார். இவ்வாறு கருதுவது குற்றமாக கருதப்பெற்றமையால், இருமுறை நாடுகடத்தப்பட்டார். இருப்பினும் தம் கருத்தினை வலியுருத்தி மாசசூசெட்சுக்கு மீண்டும் வந்து பிரட்சாரம் செய்தமையால், 1660ல் மக்கள் முன்னிலையில் பாஸ்டன் ஹவுஸ் அருகேயுள்ள காமன்ஸ் பார்கில் தூக்கிலிடப்பட்டார்.[4]
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
மேரி பாரெட் டயர் அவர்களின் பிறந்த காலம் தோராயமாக 1611 என்று கணிக்கப்படுகிறது. இவர் லேடி அர்பெல்லா ஸ்டுவர்ட் மற்றும் சர் வில்லியம் சீமோர் ஆகியோரின் மகளாவாள். இவருடைய இளமைக்காலப் பெயர் பாரெட் என்று சந்தேகிக்ப்பெறுகிறது. இவர் குழந்தையாக இருந்தபொழுது, கிங் சார்லஸ் I நீதிமன்றத்தில் சிறப்பு விருந்தினராக இருந்துள்ளார்.
அமெரிக்க காலனித்துவம்[தொகு]
மேரி (மாரி) பாரெட்டின் திருமணம் இலண்டனில் அக்டோபர் 27, 1633ஆம் ஆண்டு வில்லியம் டயர் என்பவருடன் நடந்ததாக புனித மார்ட்டின் இன் த பீல்ட்ஸ் தேவாலய ஆவணங்களின்படி தெரிய வருகிறது.[5] வில்லியம் டயர் மார்ச் 3, 1635 அல்லது 1636ஆம் ஆண்டு பாசுடனின் பொதுமன்றத்தில் கடன்பட்டோர் எடுக்கும் பிரீமேன்சு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
1637ஆம் ஆண்டு அன்னி அட்சின்சன் "கடவுள் மனிதரிடம் நேரடியாகப் பேசுகிறார்;மதக்குருக்கள் தேவையில்லை" என்ற கூற்றை ஆதரிக்கலானார்.[6] அவருடன் இணைந்து திருச்சபை விதிகளுக்குப் புறம்பாகவும்[7] மாசசூசெட்சு விரிகுடா காலனி விதிகளை மீறியும் ஆண்களையும் பெண்களையும் விவிலியத்தை மீள்வாசிப்பு செய்தார்.அங்கிருந்து ரோட் தீவிற்குச் சென்றார்.
அக்டோபர் 11, 1637ஆம் ஆண்டு அவருக்கு ஊனமுற்ற மகவொன்று இறந்து பிறந்தது. அதனை தானே தனிப்பட்டமுறையில் புதைத்தார். இடைவேளையில் 1637-8களில் அட்சின்சன் , மேரி இருவரையும் மாசசூசெட்சிலிருந்து தள்ளி வைத்திருந்த நிர்வாகம் இந்த "அரக்கப் பிறப்பை" கேள்விப்பட்டு மார்ச்சு 1638ஆம் ஆண்டு ஆளுநரால் மீட்டெடுக்க ஆணை பிறப்பித்து பெருந்திரளான மக்கள் முன்னிலையில் தோண்டி எடுத்தனர்.இதனை ஜான் வின்தராப் இவ்வாறு விவரித்துள்ளார்:[8]:
இந்த விவரணத்தை வின்தராப் பல பத்திரிகையாளர்களுக்கும் அனுப்ப, 1642 மற்றும் 1644 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பிரசுரமாயின. இவாறான வினோதக்குழந்தையின் பிறப்பு கடவுளை மறுத்தோருக்கும் சமய கோட்பாடுகளை மீறியவருக்கும் வழங்கப்படும் தண்டனையாக கருதப்பட்டது.
1638ஆம் ஆண்டு மேரி டயரும் கணவர் வில்லியமும் காலனியிலிருந்து விலக்கப்பட்டனர். ரோஜர் வில்லியம்சு என்பவரின் ஆலோசனைப்படி அட்சின்சன்,டயர் அடங்கிய குழு ரோட் தீவில் போர்ட்மவுத் பகுதிக்கு தஞ்சம் புகுந்தனர்.வில்லியம் டயர் 18 பேருடன் போர்ட்மவுத் உடன்பாடு கையெழுத்திட்டார்.
1652ஆம் ஆண்டு மேரி டயரும் கணவரும் ரோஜர் வில்லியம்சு மற்றும் ஜான் கிளார்க்குடன் இங்கிலாந்து சென்றார். அங்கு ஜியார்ஜ் ஃபாக்சின் உரைகளைக் கேட்டு அவை தானும் அட்சின்சனும் ஏற்கெனவே பல ஆண்டுகளாக நம்பிவந்த கருத்துகளுக்கு ஒத்திருந்தமையால் நண்பர்களின் சமய சமூகத்தில் இணைந்தார். அக்கோட்பாடுகளின் போதகராக மாறினார்.
வில்லியம் டயர் 1652ஆம் ஆண்டு ரோட் தீவிற்குத் திரும்பினார்.ஆனால் மேரி டயர் 1657 வரை இங்கிலாந்தில் இருந்தார்.திரும்பிவந்த மேரி பாசுடன் சென்று அங்கு குவாக்கர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக போராடினார்.கைது செய்யப்பட்டு மாச்சூசெட்சிலிருந்து விலக்கப்பட்டார்.அவரது கணவர் குவாக்கராக மாறாதமையால் கைது செய்யப்படவில்லை.
அங்கிருந்து நியூ இங்கிலாந்து பகுதியில் சமயபோதனை செய்யச் சென்றார். 1658ஆம் ஆண்டு நியூ ஹெவன், கனெக்டிகட்டில் கைது செய்யப்பட்டார். விடுதலையான மேரி கைது செய்யப்பட்டிருந்த சக குவாக்கர்கள் வில்லியம் ராபின்சன்,மர்மடூக் ஸ்டெபென்சன் ஆகியோரைக் காண மீண்டும் தடை விதிக்கப்பட்ட மாசசூசெட்ஸ் சென்றார்.அங்கு மீண்டும் கைது செய்யப்பட்டு நிரந்தரமாக மாநிலத்திற்கு வெளியே கடத்தப்பட்டார். ஆனால் மூன்றாம் முறையாக அவர் சட்டத்தை மீறி குவாக்கர்கள் குழுவொன்றுடன் மாசசூசெட்சினுள் நுழைந்தார். இச்சமயம் அவரை கைது செய்த நிர்வாகம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.அவரது கணவரின் விண்ணப்பத்தால் மன்னிக்கப்பட்டு றோட் தீவிற்குத் கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார்.
மரணம்[தொகு]
றோட் தீவிலிருந்து நியூயார்க் நகரம் லாங் தீவில் பிரச்சாரம் செய்யச் சென்றார். இருப்பினும் உள்மனதின் கட்டளையால் குவாக்கர்களுக்கு எதிரான சட்டமுள்ள மாசசூசெட்சிற்கு மீண்டும் செல்ல விழைந்தார். தனது குடும்பம் மற்றும் கணவனின் வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்காது, மன்னிப்பு கேட்கவும் மறுத்து, மே 31, 1660ஆம் ஆண்டு ஆங்கு சென்று கைதானார். இவருக்கு ஜூன் 1, 1660ல் மக்கள் முன்னிலையில் பாசுடன் பொதுப் பூங்காவில் தூக்கில் இடப்பட்டார்.[9]
இவருடைய மரணம் குவேக்கர்களுக்கு எதிரான சட்டங்களை தளர்த்த பிற்காலத்தில் உதவியது [10]
நினைவகம்[தொகு]
மேரி டயரின் வெங்கலச்சிலை சில்வியா சா யட்சன் என்பவரால் செதுக்கப்பட்டு பாஸ்டன் நகரில் மாசசூசெட்ஸ் மாநில சட்டமன்றத்தின் எதிரே வைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களின் சமய சமூகத்தினை சார்ந்த மேரி டயர் மற்றும் அவரது நண்பர் அன்னே ஹட்சின்சன் அவர்களுக்கு ரோட் தீவில் போர்ட்ஸ்மவுத் எனும் இடத்தில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய தாவரவியல் தோட்டம் நினைவிடமாக அமைக்கப்பெற்றுள்ளது.
குறிப்பிடத்தக்க வழித்தோன்றல்கள்[தொகு]
ரோட் தீவு ஆளுநர்களான எலிஷா டயர், எலிஷா டயர் ஜூனியர், மற்றும் அமெரிக்க செனட்டர் ஜொனாதன் சாஸ் ஆகியோர் மேரி டயரின் குறிப்பிடத்தக்க வழித்தோன்றல்களாக கருதப்படுபவர்களாவர்.[11]
No comments:
Post a Comment