லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
நவம்பர் 8, 1944
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு அப்போதைய சென்னை மாகாணத்தில் நவம்பர் 1944 முதல் 1947 வரை மிகவும் பரபரப்பாக நடந்த குற்றவியல் வழக்காகும். சி. என். லட்சுமிகாந்தன் எனும் தமிழ் பத்திரிக்கையாளர் சென்னை, வேப்பேரியில் நவம்பர் 8, 1944இல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலையில் சென்னை பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தமிழகத்தைக் குலுக்கிய சில கொலை வழக்குகளில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கும் ஒன்று. காரணம் கொல்லப்பட்டவன் அல்ல, குற்றவாளியாகக் கூண்டில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டவர்கள் தான் அந்தப் பரபரப்புக்குக் காரணம். அவர்கள்தான் புகழின் உச்சியில் இருந்த திரைப்பட நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர். 1944ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை 1947 வரை வழக்கு நடந்து முடிவும் வந்தது. இதன் விவரங்களைச் சிறிது இப்போது பார்ப்போம். அந்த காலகட்டத்தில் மஞ்சள் பத்திரிகைகள் மலிந்திருந்தன. அதில் ஒன்று இந்துநேசன் எனும் பத்திரிகை. இதனை நடத்தி வந்தவன் லட்சுமி காந்தன். இந்த ஆளுக்கு அப்போதைய பிரபலமான மனிதர்களின் அந்தரங்கங்களைப் பத்திரிகையில் பிரசுரம் செய்து, அல்லது செய்வதாக மிரட்டி பணம் பிடுங்குவது. இது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருந்தமையால் இந்த லட்சுமிகாந்தன் காட்டில் நல்ல மழை.
இந்த வழக்கில் நடந்த புலன் விசாரணையை அடுத்து ஐயத்திற்குட்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்றிருந்த நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் இயக்குனர் எஸ். எம். சிரீராமுலு நாயுடுவும் அடக்கம். வழக்கில் இயக்குனர் நாயுடு விடுவிக்கப்பட்டு நடிகர்கள் தியாகராஜ பாகவதரும் கிருஷ்ணனும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த அறமன்றத்திலும் இவர்களது மேல்முறையீடு தோல்வியடைந்தது. 1947 வரை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அப்போது நாட்டின் உயரிய முறையீடு அமைப்பாக இருந்த பிரைவி கௌன்சிலுக்கு விண்ணப்பித்தனர்.
பிரைவி கௌன்சில் வழக்கை மீண்டும் விசாரிக்க அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது. இச்சமயம் இருவரும் குற்றமற்றவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை ஆனார்கள். இதுவரை இக்குற்றத்தை இழைத்தவர்கள் யாரென்ற மர்மம் தீர்க்கப்படவில்லை.
இந்த வழக்கினால் பாகவதர் மிகவும் மனமொடிந்ததுடன் தமது செல்வத்தையும் இழந்தார். 1959இல் வறுமையில் இறந்தார். கிருஷ்ணன் தமது மரணம் வரை சில திரைப்படங்களில் நடித்து மீண்டும் புகழ்பெற்றார்.
பின்னணி[தொகு]
சி.என். இலட்சுமிகாந்தன் 1940இல் சென்னையில் சினிமாதூது என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் காகித பற்றாக்குறையினால் அக்காலத்தில் புது பத்திரிக்கைகளை துவக்க அப்போதைய பிரித்தானிய அரசு அனுமதிக்கவில்லை. சினிமாதூது பத்திரிக்கை திரைப்பட பெரும்புள்ளிகளை பற்றி தாறுமாறாக எழுதியதால், சிலர் அனுமதியில்லாமல் சினிமாதூது வெளியிடுப்படுவதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து, அதை மூடும் படி செய்தனர்.
அடுத்து லட்சுமிகாந்தன், இந்து நேசன் எனும் ஏற்கனெவே விற்பனையாகிவந்த பத்திரிக்கையை வாங்கி, அதில் சினிமா புள்ளிகளின் கெட்ட நடத்தையை அநாமதேய செய்திகளாக பதித்தார்.
அதிலும் முக்கியமாக ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், கோணங்கித்தனங்களையும் பச்சையாக எழுத ஆரம்பித்தார். பிறகு சமுதாயத்தின் அனைத்துக் கலைஞர்களும், இவரின் பத்திரிக்கைச் செய்திகளுக்கு இலக்கானார்கள். தனி நபர்களின் மீது அவதூறு பரப்புவதில் கவனம் செலுத்தும் மஞ்சள் ஏடுகளின் முன்னோடியாக இந்துநேசன் விளங்கியது. அதனால் அவர் பல எதிரிகளை பெற்றார்.
கொலைச் சம்பவம்[தொகு]
8-11-1944 அன்று, சென்னை புரசைவாக்கத்தில் ரிக்சாவில் போகும்போது, சிலர் லட்சுமிகாந்தனை கத்தியால் குத்தினர். அவரை சென்னை பொது மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினர் அவரிடம் பல கேள்விகள் கேட்டனர்.
ஒரு நாள் புரசவாக்கம் வேப்பேரி பகுதியில் கை ரிக்ஷாவொன்றில் பயணம் வந்த லட்சுமிகாந்தனை வழிமறித்து சிலர் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டனர். 1944 நவம்பர் 7ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காயத்தோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட லட்சுமிகாந்தன் மறுநாள் கலை சென்னை பொது மருத்துவமனையில் இறந்து போனான். இந்த வழக்கு குறித்து விசாரித்த தமிழ்நாடு போலீசார் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரைக் கைது செய்தனர்.
9-11-1944 அன்று, திடீலென்று அவர் உடல்நிலை சரிந்து மாண்டார். டிசம்பர் 44ல், காவல்துறையினர் 8 பேரை கைது செய்து, கொலை வழக்கு தொடர்ந்தது. இந்த எட்டில் அந்த நாட்களில் சூப்பர் ஸ்டாராக இருந்த தியாகராஜ பாகவதரும்,என்.எஸ்.கிருஷ்ணனும், திரைப்படத் தயாரிப்பாளரான ஸ்ரீராமுலுவும் அடங்குவர். அந்த 8 பேரும் 'கொலை சதி' செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
லட்சுமிகாந்தன்
வழக்கின் விவரம் என்னவென்றால் சென்னை அப்போது மஞ்சள் பத்திரிகைகளின் சொர்க்க லோகமாக இருந்து வந்தது. லட்சுமிகாந்தனின் 'இந்துநேசன்' எனும் பத்திரிகை பிரபலமானவர்களைப் பற்றி தாறுமாறாக எழுதியும், எழுதுவதாக அச்சுறுத்தியும் பணம் பிடுங்கி வந்தது. இதற்கு முன் இந்த ஆள் 'சினிமா தூது' என்ற பத்திரிகையை நடத்தி வந்தான். இந்த ஆளின் பத்திரிகைகளில் சினிமா நடிகர்கள் பற்றிய சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதி வந்தான். மக்களும் இதுபோன்ற வம்புகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டினர். நல்ல வியாபாரம். இப்படி இவர் எழுதி வருவதால் சில பிரபலங்களின் பெயர் சமூகத்தில் கெட்டுப்போய் விட்டது. தங்களைப் பற்றி எழுதிவிடக் கூடாதே என்பதற்காக மற்ற நடிக நடிகையர் அதிகமான பணத்தைக் கொடுத்து இதுபோன்றவர்களை வாயைக் கட்டிப் போட்டிருந்தனர்.
இந்த வகையில் மஞ்சள் பத்திரிகையாளர்களின் காட்டில் நல்ல மழை. இது போன்ற பிளாக் மெயில் பத்திரிகைகளுக்கு எதிராக எம்.கே.தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும், டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடுவும் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஆர்தர் ஆஸ்வால்டு ஜேம்ஸ் ஹோப் என்பவரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் இதுபோன்ற மஞ்சள் பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்ட லைசன்சை திரும்பப் பெற வலியுறுத்தியிருந்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று கவர்னர் பத்திரிகையின் லைசன்சை கேன்சல் செய்துவிட்டார். வேறு பல முயற்சிகள் செய்து பத்திரிகையை வெளிக்கொணர லட்சுமிகாந்தன் முயன்றும் ஒன்றும் முடியவில்லை. சினிமா தூது பத்திரிகையைத்தானே மூடும்படி ஆனது. புதிதாக 'இந்துநேசன்' என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி நடத்தத் தொடங்கினான் லட்சுமிகாந்தன். முந்தைய பாணியிலேயே இதிலும் கட்டுரைகள், தனிநபர் விமர்சனங்கள், இழிவு படுத்தும் செய்திகள் வெளிவந்தன. அதிலும் இவன் எம்.கே.டி., என்.எஸ்.கே. மற்றும் பல திரைப்பட நடிக நடிகைகள் குறித்தெல்லாம் கேவலமான செய்திகளை வெளியிட்டு வந்தான். இதில் அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. சொந்தத்தில் ஒரு அச்சகம் கூட வாங்கிவிட்டான். இந்த வழக்கு பற்றியும் இதுபோன்ற பல பரபரப்பான வழக்குகள் குறித்தும் பிரபல ராண்டார்கை என்பவர் எழுதியிருக்கிறார். அதன்படி இந்த லட்சுமிகாந்தன் இளம் பருவத்தில் ஒரு வக்கீலாக விரும்பினானாம். அவன் ஏழ்மை நிலைமை அவன் மனோரதம் நிறைவேறவில்லை. அதனால் இவன் ஒரு புரோக்கராம இயங்கி வந்தான். வக்கீலுக்கு ஆள் பிடிப்பது, பொய்சாட்சி சொல்வது, பொய்யான ஆவணங்களைத் தயாரிப்பது போன்ற நிழல் நடவடிக்கைகளை செய்து வந்தான். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்றபடி ஒரு நாள் மாட்டிக் கொண்டு சிறை சென்றான். அங்கு அவன் தப்பிக்க முயன்று மாட்டிக் கொண்டு ஏழு ஆண்டு சிறைதண்டனை பெற்றான். ராஜமுந்திரி ஜெயிலில் இவனது வாசம். மறுபடியும் தப்பிக்க முயன்றானாம். மறுபடியும் மாட்டிக்கொண்டு அந்தமான் தீவுக்கு அனுப்பப் பட்டானாம். இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஜப்பானிய படை மெல்ல மெல்லா கிழக்காசிய பகுதிகளைப் பிடித்து முன்னேறி வந்தது. பர்மாவை நெருங்கி அந்தமான் தீவையும் அது பிடித்துக் கொண்டது. அப்போது லட்சுமிகாந்தன் விடுதலையாகி தமிழ்நாடு திரும்பி பிழைப்புக்கு வழி தேடலானான்
வழக்கின் போக்கு[தொகு]
இனி அவன் கொலையுண்ட நிகழ்ச்சிக்கு வருவோம். 1944 நவம்பர் 7 லட்சுமிகாந்தன் தன் வக்கீல் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றான். அவர் இருப்பது வெப்பேரி. அங்கிருந்து புரசவாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு ஒரு ரிக்ஷாவில் திரும்பி வரும்போது சிலர் அந்த ரிக்ஷாவை வழிமறித்து அவனைத் தாக்கிக் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். புரசவாக்கம் தாணா தெரு அருகில் இந்த நிகழ்ச்சி நடந்தது. குத்துப்பட்டு காயத்துடன் விழுந்து கிடந்த லட்சுமிகாந்தன் மெல்ல எழுந்து தட்டுத்தடுமாறி வெப்பேரிக்குச் சென்று மறுபடியும் தன் வக்கீலைப் பார்த்து நடந்ததை விவரித்தான். அவர் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பகுதிகளில் அப்போது ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வசித்து வந்தனர். அப்படியொரு ஆங்கிலோ இந்திய இளைஞன் இவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான். வழியில் ரிக்ஷாவை நிறுத்தச் சொல்லிவிட்டு லட்சுமிகாந்தன் வெப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் கொடுக்க விரும்பினான். அப்போது கூடவந்த ஆங்கிலோ இந்திய இளைஞன் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான். ரத்தம் அதிகம் வெளியேறவும் ஓய்ந்து போன லட்சுமிகாந்தன் ரிக்ஷாவில் உட்கார்ந்தபடி நடந்தவற்றைச் சொல்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நம்பியார் என்பவர் ஒரு காகிதத்தில் அவற்றைக் குறித்துக் கொண்டார். ஜெனரல் ஆஸ்பத்திரியில் அவன் சேர்ந்தான். அங்கு அவனுடைய ரத்தப் போக்கு நிற்கவில்லை. டாக்டர்கள் பரிசோதனை செய்து வந்த போதும் மறுநாள் விடியற்காலை 4.15க்கு அவன் உயிர் பிரிந்தது. முன்பே குறிப்பிட்டபடி பிரபலங்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. தீர்ப்பில் பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் தண்டிக்கப்பட்டனர். ஸ்ரீராமுலு நாயுடு விடுதலையானார். இருவருக்கும் தீவந்தர தண்டனை கிடைத்தது. உடனே அவ்விருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். அதன் முடிவு தெரிய காலதாமதமானதால் இவர்கள் அதற்குள் இரண்டரை வருடங்கள் சிறையில் கழித்தனர். கடைசியில் பிரிவி கவுன்சில் இவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஒரு அரக்கன் மாண்டு போனான், இருபெரும் நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் சிறையிலிருக்கும்படி நேர்ந்துவிட்டது. இதனால் தமிழ்த் திரையுலகமே பல மாற்றங்களுக்கு உட்பட்டுவிட்டது.
ஏப்ரல் 1945ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஆரம்பித்தது. அன்று இந்தியாவின் பிரபலமான குற்றத்துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப் பட்ட 8 பேருக்கும் வாதிட்டனர். ஸ்ரீராமுலுவின் மேல் ஆதாரம் வன்மையில்லாத்தால் அவர் விடுவிக்கப் பட்டார்.
மே 45ல், பாகவதர், கிருஷ்ணன் உள்பட ஆறுபேர் 'கொலை சதி' குற்றம் செய்தவர் என தீர்மானிக்கப்பட்டது. நீதிபதி எல்லோருக்கும் ஆயுள்தண்டனை கொடுத்தார். பிறகு குற்றவாளிகள், மேல் நீதிமன்றத்திறத்தில் முறையிட்டனர்; ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் வாதத்தை ஏற்க மறுத்து அவர்களது தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.[1]
1946ல், பாகவதரும், கிருஷ்னனும் தங்கள் வழக்கை லண்டனிலுள்ள ப்ரிவி கௌன்ஸிலுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, பாகவதர் நடித்த ஹரிதாஸ் 100 வாரங்கள் மேல் திரை அரங்குகளில் ஓடி, ஒரு புது சாதனையை செய்தது.
ஏப்ரல் 1947ல் ப்ரிவி கௌன்ஸில் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை மறு பரிசீலனை செய்து, பாகவதரையும், கிருஷ்ணனையும் ஏப்ரல் 1947ல், விடுதலை செய்தது.
விடுதலைக்கு பின்[தொகு]
முப்பது மாதம் சிறை வாசத்திற்க்கு பின், தன் விசிறிக் கூட்டங்கள் நடுவே விடுவிக்கப்பட்ட பாகவதர் நேரே வடபழனி முருகன் கோவிலில் சென்று கும்பிட்டு, சொந்த ஊர் சென்றார். அவரும், கலைவாணரும் சேர்ந்து 1950களில் படம் எடுத்தனர்; ஆனால் அவர்கள் புகழ் முன்பிருந்த சிகரங்களை எட்டவில்லை.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.
தமிழகத்தைக் குலுக்கிய சில கொலை வழக்குகளில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கும் ஒன்று. காரணம் கொல்லப்பட்டவன் அல்ல, குற்றவாளியாகக் கூண்டில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டவர்கள் தான் அந்தப் பரபரப்புக்குக் காரணம். அவர்கள்தான் புகழின் உச்சியில் இருந்த திரைப்பட நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர். 1944ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை 1947 வரை வழக்கு நடந்து முடிவும் வந்தது.
இதன் விவரங்களைச் சிறிது இப்போது பார்ப்போம். அந்த காலகட்டத்தில் மஞ்சள் பத்திரிகைகள் மலிந்திருந்தன. அதில் ஒன்று இந்துநேசன் எனும் பத்திரிகை. இதனை நடத்தி வந்தவன் லட்சுமி காந்தன். இந்த ஆளுக்கு அப்போதைய பிரபலமான மனிதர்களின் அந்தரங்கங்களைப் பத்திரிகையில் பிரசுரம் செய்து, அல்லது செய்வதாக மிரட்டி பணம் பிடுங்குவது. இது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருந்தமையால் இந்த லட்சுமிகாந்தன் காட்டில் நல்ல மழை.
ஒரு நாள் புரசவாக்கம் வேப்பேரி பகுதியில் கை ரிக்ஷாவொன்றில் பயணம் வந்த லட்சுமிகாந்தனை வழிமறித்து சிலர் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டனர். 1944 நவம்பர் 7ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காயத்தோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட லட்சுமிகாந்தன் மறுநாள் கலை சென்னை பொது மருத்துவமனையில் இறந்து போனான். இந்த வழக்கு குறித்து விசாரித்த தமிழ்நாடு போலீசார் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரைக் கைது செய்தனர்.
வழக்கின் விவரம் என்னவென்றால் சென்னை அப்போது மஞ்சள் பத்திரிகைகளின் சொர்க்க லோகமாக இருந்து வந்தது. லட்சுமிகாந்தனின் 'இந்துநேசன்' எனும் பத்திரிகை பிரபலமானவர்களைப் பற்றி தாறுமாறாக எழுதியும், எழுதுவதாக அச்சுறுத்தியும் பணம் பிடுங்கி வந்தது. இதற்கு முன் இந்த ஆள் 'சினிமா தூது' என்ற பத்திரிகையை நடத்தி வந்தான். இந்த ஆளின் பத்திரிகைகளில் சினிமா நடிகர்கள் பற்றிய சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதி வந்தான். மக்களும் இதுபோன்ற வம்புகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டினர். நல்ல வியாபாரம். இப்படி இவர் எழுதி வருவதால் சில பிரபலங்களின் பெயர் சமூகத்தில் கெட்டுப்போய் விட்டது. தங்களைப் பற்றி எழுதிவிடக் கூடாதே என்பதற்காக மற்ற நடிக நடிகையர் அதிகமான பணத்தைக் கொடுத்து இதுபோன்றவர்களை வாயைக் கட்டிப் போட்டிருந்தனர்.
இந்த வகையில் மஞ்சள் பத்திரிகையாளர்களின் காட்டில் நல்ல மழை. இது போன்ற பிளாக் மெயில் பத்திரிகைகளுக்கு எதிராக எம்.கே.தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும், டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடுவும் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஆர்தர் ஆஸ்வால்டு ஜேம்ஸ் ஹோப் என்பவரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் இதுபோன்ற மஞ்சள் பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்ட லைசன்சை திரும்பப் பெற வலியுறுத்தியிருந்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று கவர்னர் பத்திரிகையின் லைசன்சை கேன்சல் செய்துவிட்டார்.
வேறு பல முயற்சிகள் செய்து பத்திரிகையை வெளிக்கொணர லட்சுமிகாந்தன் முயன்றும் ஒன்றும் முடியவில்லை. சினிமா தூது பத்திரிகையைத்தானே மூடும்படி ஆனது. புதிதாக 'இந்துநேசன்' என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி நடத்தத் தொடங்கினான் லட்சுமிகாந்தன். முந்தைய பாணியிலேயே இதிலும் கட்டுரைகள், தனிநபர் விமர்சனங்கள், இழிவு படுத்தும் செய்திகள் வெளிவந்தன. அதிலும் இவன் எம்.கே.டி., என்.எஸ்.கே. மற்றும் பல திரைப்பட நடிக நடிகைகள் குறித்தெல்லாம் கேவலமான செய்திகளை வெளியிட்டு வந்தான். இதில் அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. சொந்தத்தில் ஒரு அச்சகம் கூட வாங்கிவிட்டான்.
இந்த வழக்கு பற்றியும் இதுபோன்ற பல பரபரப்பான வழக்குகள் குறித்தும் பிரபல ராண்டார்கை என்பவர் எழுதியிருக்கிறார். அதன்படி இந்த லட்சுமிகாந்தன் இளம் பருவத்தில் ஒரு வக்கீலாக விரும்பினானாம். அவன் ஏழ்மை நிலைமை அவன் மனோரதம் நிறைவேறவில்லை. அதனால் இவன் ஒரு புரோக்கராம இயங்கி வந்தான். வக்கீலுக்கு ஆள் பிடிப்பது, பொய்சாட்சி சொல்வது, பொய்யான ஆவணங்களைத் தயாரிப்பது போன்ற நிழல் நடவடிக்கைகளை செய்து வந்தான். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்றபடி ஒரு நாள் மாட்டிக் கொண்டு சிறை சென்றான்.
அங்கு அவன் தப்பிக்க முயன்று மாட்டிக் கொண்டு ஏழு ஆண்டு சிறைதண்டனை பெற்றான். ராஜமுந்திரி ஜெயிலில் இவனது வாசம். மறுபடியும் தப்பிக்க முயன்றானாம். மறுபடியும் மாட்டிக்கொண்டு அந்தமான் தீவுக்கு அனுப்பப் பட்டானாம். இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஜப்பானிய படை மெல்ல மெல்லா கிழக்காசிய பகுதிகளைப் பிடித்து முன்னேறி வந்தது. பர்மாவை நெருங்கி அந்தமான் தீவையும் அது பிடித்துக் கொண்டது. அப்போது லட்சுமிகாந்தன் விடுதலையாகி தமிழ்நாடு திரும்பி பிழைப்புக்கு வழி தேடலானான். இனி அவன் கொலையுண்ட நிகழ்ச்சிக்கு வருவோம்.
1944 நவம்பர் 7 லட்சுமிகாந்தன் தன் வக்கீல் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றான். அவர் இருப்பது வெப்பேரி. அங்கிருந்து புரசவாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு ஒரு ரிக்ஷாவில் திரும்பி வரும்போது சிலர் அந்த ரிக்ஷாவை வழிமறித்து அவனைத் தாக்கிக் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். புரசவாக்கம் தாணா தெரு அருகில் இந்த நிகழ்ச்சி நடந்தது. குத்துப்பட்டு காயத்துடன் விழுந்து கிடந்த லட்சுமிகாந்தன் மெல்ல எழுந்து தட்டுத்தடுமாறி வெப்பேரிக்குச் சென்று மறுபடியும் தன் வக்கீலைப் பார்த்து நடந்ததை விவரித்தான். அவர் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அந்தப் பகுதிகளில் அப்போது ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வசித்து வந்தனர். அப்படியொரு ஆங்கிலோ இந்திய இளைஞன் இவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான். வழியில் ரிக்ஷாவை நிறுத்தச் சொல்லிவிட்டு லட்சுமிகாந்தன் வெப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் கொடுக்க விரும்பினான். அப்போது கூடவந்த ஆங்கிலோ இந்திய இளைஞன் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான்.
ரத்தம் அதிகம் வெளியேறவும் ஓய்ந்து போன லட்சுமிகாந்தன் ரிக்ஷாவில் உட்கார்ந்தபடி நடந்தவற்றைச் சொல்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நம்பியார் என்பவர் ஒரு காகிதத்தில் அவற்றைக் குறித்துக் கொண்டார். ஜெனரல் ஆஸ்பத்திரியில் அவன் சேர்ந்தான். அங்கு அவனுடைய ரத்தப் போக்கு நிற்கவில்லை. டாக்டர்கள் பரிசோதனை செய்து வந்த போதும் மறுநாள் விடியற்காலை 4.15க்கு அவன் உயிர் பிரிந்தது.
முன்பே குறிப்பிட்டபடி பிரபலங்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. தீர்ப்பில் பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் தண்டிக்கப்பட்டனர். ஸ்ரீராமுலு நாயுடு விடுதலையானார். இருவருக்கும் தீவந்தர தண்டனை கிடைத்தது. உடனே அவ்விருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். அதன் முடிவு தெரிய காலதாமதமானதால் இவர்கள் அதற்குள் இரண்டரை வருடங்கள் சிறையில் கழித்தனர். கடைசியில் பிரிவி கவுன்சில் இவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஒரு அரக்கன் மாண்டு போனான், இருபெரும் நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் சிறையிலிருக்கும்படி நேர்ந்துவிட்டது. இதனால் தமிழ்த் திரையுலகமே பல மாற்றங்களுக்கு உட்பட்டுவிட்டது.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு - 2
என்னதான் கத்திக்குத்து வாங்கினாலும் லட்சுமிகாந்தன் சாகவில்லை. வழிந்த ரத்தத்தோடு நேராக மீண்டும் வழக்கறிஞர் நற்குணத்தின் வீட்டுக்குச் சென்று நடந்ததைக் கூறினார். தன்னுடன் இருந்த ப்ரூ (Brew) என்னும் ஒரு ஆங்கிலோ இந்தியரை, உடனடியாக லட்சுமிகாந்தனை மருத்துவமனையில் சேர்க்குமாறு சொன்னார் நற்குணம். பொருத்தமான பெயர்தான்.
ஆனால் லட்சுமிகாந்தனுக்கு வழியும் ரத்தமும் சரி, கோபமும் சரி, கொஞ்சமும் அடங்கவில்லை. அதனால் மருத்துவமனைக்குச் செல்லும் முன் முதலில் வேப்பேரி காவல் நிலையத்திற்குச் சென்று, வடிவேலுவும், 30 வயது மதிக்கத்தக்க இன்னொரு நபரும் சேர்ந்து தன்னை கத்தியால் குத்திவிட்டதாக புகார் செய்துவிட்டுதான் மருத்துவமனைக்குச் சென்றார். இதில் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று காவல் நிலையத்துக்கு ரிக்ஷாவில் சென்ற பின் ரிக்ஷாவை விட்டு லட்சுமிகாந்தனால் இறங்கக்கூட முடியவில்லை. அதனால் அப்போது காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நம்பியார் வெளியே வந்து, லட்சுமிகாந்தன் சொல்ல சொல்ல, புகாரை அவரே எழுதிக்கொண்டார்.
அதன் பின் பொது மருத்துவமனையில், வென்லாக் வார்டில் (Wenlock Ward) லட்சுமிகாந்தன் அட்மிட் ஆக, டாக்டர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் அவரை பார்த்தபோது, ஏறக்குறைய தன்னுடைய வாழ்வின் முடிவிற்கே லட்சுமிகாந்தன் வந்திருந்தார். கத்தியால் குத்துப்பட்ட பின் நிறைய நேரம் தாமதப்படுத்தி வந்ததால், மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. நவம்பர் 9, 1944 அன்று அதிகாலை 4:15 மணிக்கு, வழக்கமாகச் சொல்வதுபோல், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
லட்சுமிகாந்தனை வடிவேலுவும், நாகலிங்கமும் கொன்றது உண்மைதான். ஆனால் இந்த திட்டத்திற்கு பின் ஆரியவீரசேனன், ஜெயானந்தம், ராஜாபாதர், ஆறுமுகம் போன்றோரும் இருந்தனர். போலீஸாரின் அதிரடியில் முதலில் மாட்டியது வடிவேலு. நவம்பர் 9ம் தேதியன்றே வடிவேலுவைக் கைது செய்தனர் போலீஸார். பின்பு ஒவ்வொருவராக கைது செய்யப்பட, கடைசி நேர திருப்பமாக ஜெயானந்தம் அப்ரூவராக மாறினான். இதன்பின்தான் பெரிய தலைகள் உருள ஆரம்பித்தன.
நவம்பர் 27, 1944 - அசோகா பிலிம்ஸ் அலுவலகத்துக்கு போலீஸார் வந்து என்.எஸ்.கிருஷ்ணனை கைது செய்வதாகக் கூறினர் போலீஸார். எதுவும் கூறவில்லை என்.எஸ்.கே. அமைதியாக அவர்களுடன் கிளம்பினார். அதே நேரத்தில் மாம்பலத்தில் தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டார். ஆனால் ஸ்ரீராமுலு நாயுடு மட்டும் ஜனவரியில்தான் கைது செய்யப்பட்டார்.
பாகவதரும், என்.எஸ்.கேவும் ஜாமீனில் வெளிவந்தனர். வெளியே வந்தவுடன் விறுவிறுவென்று ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த படங்களிலெல்லாம் என்.எஸ்.கே நடித்து முடித்தார். ஜனவரி 12, 1945 அன்று இருவரின் ஜாமீனும் ரத்தானது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பாகவதரும், என்.எஸ்.கேவும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செஷன்ஸ் விசாரணை ஏப்ரல் 12, 1945 அன்று ஆரம்பமானது. ஸ்ரீராமுலு நாயுடு சார்பாக வாதாட பிரபல வழக்கறிஞர் கே.எம்.முன்ஷி பம்பாயிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார். அதற்காக முன்ஷிக்கு ஒரு நாளைக்கு ரூ.75,000 கொடுக்கப்பட்டது. பாகவதருக்காகவும், என்.எஸ்.கேவுக்காகவும் வாதாட வி.டி.ரங்கசாமி அய்யங்கார், வி.ராஜகோபாலச்சாரி, ரோலண்ட் பிராடல், எஸ்.கோவிந்தசாமி நாதன் ஆகியோர் ஆஜராகி இருந்தார்கள்.
கே.எம்.முன்ஷி வாதத் திறமை ஸ்ரீராமுலு நாயுடுவைக் காப்பாற்றியது. ஆம், கொலைத் திட்டம் தீட்டியதாக சொல்லப்பட்ட நவம்பர் 7, 1944 அன்று, பம்பாய் தாஜ் மகால் ஹோட்டலில் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியாருடன், ஸ்ரீராமுலு நாயுடு தங்கி இருந்ததாக நிரூபிக்கப்பட்டது. இந்த நிரூபணம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏப்ரல் 20, 1945 அன்று ஸ்ரீராமுலு நாயுடு விடுதலை செய்யப்பட்டார். இதன்பின் என்.எஸ்.கேவுக்காகவும் வாதாட கே.எம்.முன்ஷி நியமிக்கப்பட்டார்.
நவம்பர் 2 முதல் 11 வரை என்.எஸ்.கே சேலம் நகரில் இருந்ததை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தார் முன்ஷி. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்த பலரும் என்.எஸ்.கேவுக்கு சாதகமாக சாட்சி அளித்தனர். ஆனாலும் நீதிபதிகள் நிறைய விஷயங்களில் திருப்தி அடையவில்லை. 27 நாட்கள் விசாரணை முடிந்தபின் மே 5, 1945 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வடிவேலு, நாகலிங்கம், ஆரியவீரசேனன், ராஜாபாதர் ஆகியோர் கொலை, கொலைக்கான சதி ஆகியவற்றில் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்பட்டனர். தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் - இவர்கள் இருவரும் கொலைக்கான சதித் திட்டத்துக்கு உடந்தையாக இருந்தனர் என்று ஒன்பது பேர் அடங்கியிருந்த நீதிபதிகள் குழுவில் ஆறு பேர் தெரிவித்திருந்ததால், ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
72 காரணங்களை சுட்டிக்காட்டி ஜுலை 12, 1945 அன்று உயர்நீதிமன்றத்தில் பாகவதரும், கிருஷ்ணனும் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்டோபர் 22, 1945 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனாலும் அக்டோபர் 29 அன்று உயர்நீதிமன்ற தீர்ப்பு, செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதற்குப்பின் லண்டன் ப்ரிவி கவுன்சிலில் (Privy Council) பாகவதரும், கிருஷ்ணனும் அப்பீல் செய்தனர்.
இந்தமுறை இருவருக்காகவும் வாதாட வந்தவர் வேலூர் எல்.எத்திராஜ். பாகவதரும், கிருஷ்ணனும் லட்சுமிகாந்தனின் சில எதிரிகளை நவம்பர் 7, 1944 அன்று ஒற்றைவாடை தியேட்டரில் சந்தித்து கொலைக்காக பணம் கொடுத்தனர் என்று பிராசிக்யூஷன் தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் சாட்சியத்தில், சதித் திட்டம் தீட்டிய தினம் நவம்பர் 7 என்றும், குற்றப் பத்திரிக்கையில் நவம்பர் 8 என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டினார் எத்திராஜ். மேலும் அப்ரூவரான ஜெயானந்தம் கிட்டதட்ட ஆறு விதமான வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதில் ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு ரொம்பவே முறண்பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டினார் எத்திராஜ். சதித் திட்டம் தீட்டியதாக சொல்லப்பட்ட நவம்பர் 7 முன்பே, அக்டோபர் 19ம் தேதியன்று லட்சுமிகாந்தனைக் கொல்ல முயற்சி நடந்ததையும் நிரூபித்தார் எத்திராஜ். இப்படி படிப்படியாக செஷன்ஸ் கோர்ட் வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் விட்டிருந்த நிறைய ஓட்டைகளை எத்திராஜ் தன் திறமையால் அடைத்தார்.
தீர்ப்பளிக்கும் நாள் வந்தது. தீர்ப்பின் சாராம்சம் இதுதான், "அப்ரூவர் ஜெயானந்தத்தின் வாக்குமூலம் நிரூபணமாகவில்லை. அதனால் ஜெயானந்தத்தின் வாக்குமூலத்தை வைத்து பார்க்கும்போது தியாகராஜ பாகவதரையும், என்.எஸ்.கிருஷ்ணனையும் தண்டிப்பது நியாயமாகாது". இருவரும் விடுதலை ஆனார்கள். ஏறக்குறைய 30 மாதங்கள்.....ஆம், இரண்டரை வருடங்கள் சிறையில் கழித்த பிறகு!
#சிறையில் இருந்து வந்த பின்பு பாகவதரின் திரையுலக வாழ்க்கை சரிந்து போனது. திராவிடக் கருத்துகளை சமுதாய சீர்திருத்த படங்களாக மக்கள் பார்க்கத் தொடங்கிய காலமது. பாகவதரின் பாடல்கள் நிறைந்த மென் படங்கள் எடுபடாமல் போனது. தன் இறுதிக் காலத்தில் ஆண்டவனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டு கோயில்களில் மட்டுமே பாடி, ஏழ்மையில் மூழ்கி மறைந்தார். தன்னைப் பற்றிக் குறிப்பிட்டு பாகவதர் சொன்னது "என்னைப் போல் வாழ்ந்தவனும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவனும் இல்லை"
#இதற்கு நேர்மாறாக சிறையில் இருந்து வந்த பின்பு என்.எஸ்.கே பல படங்களில் நடித்து புகழின் உச்சியைத் தொட்டார். என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ. மதுரம் நகைச்சுவை காட்சிகள் இருக்கிறதா என்று தெரிந்துகொண்ட பின்பே படம் பார்க்கும் அளவுக்கு, மக்களின் மனதில் இடம் பெற்றார் என்.எஸ்.கே.
#சிறையிலிருந்து விடுதலையானபின் நிறைய ஊர்களில் என்.எஸ்.கேவுக்கு விழா எடுத்தார்கள். ஜுலை 30, 1947 அன்று திருவல்லிக்கேணியில் நடராஜா கல்விக் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் பம்மல் சம்பந்த முதலியார் என்.எஸ்.கேவுக்கு "கலைவாணர்" என்ற பட்டம் சூட்டி, "கலைவாணர்" என்று பொறிக்கப்பட்ட வெள்ளிக் கேடயத்தையும் அளித்தார்.
No comments:
Post a Comment