Sunday 13 November 2016

P.SUSHILA இசையரசி’ பி. சுசீலா பிறப்பு 1935 நவம்பர் 13

P.SUSHILA இசையரசி’ பி. சுசீலா 
பிறப்பு 1935 நவம்பர் 13 





இசையரசி’ என அழைக்கப்படும் பி. சுசீலா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர். திரைப்படத்துறையில் சுமார் அரை  நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’ ‘சிங்களம்’ என பல இந்திய மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். 

சுமார் 25,000-க்கும் மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஐந்து முறை தேசிய விருதுகள்’, ‘ பத்து முறைக்கும் மேல் மாநில விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். 

மேலும், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தன்னுடைய வசீகரக் குரலால் இசை நெஞ்சங்களை வருடி, என்றென்றும் அழியா புகழ்பெற்று விளங்கும் பி. சுசீலாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.
பி. சுசீலா
With P Susheela.jpg
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர்புலப்பாக்க சுசீலா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி, கருநாடக இசை
தொழில்(கள்)பாடகி
இசைக்கருவிகள்இசைக்கலைஞர்
இசைத்துறையில்1952-2007
வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலப்பாக்க முந்தராவ் கவுத்தாரம் என்பவர்களுக்கு பிறந்தார். சுசீலாவுக்கு
 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். தந்தை ஒரு வக்கீல். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.

இசைத் துறை[தொகு]

சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 

1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன. சுதர்சனம் இசையமைத்த "டொக்டர்" என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.

இசைப்பயணம்

இளம்வயதிலேயே குறுகியகாலத்திற்குள் பாரம்பரிய இசையில் தேர்ச்சிப்பெற்றவராக விளங்கிய அவர், ஆரம்பத்தில் சென்னை வானொலியில் ‘பாப்பா மலர் நிகழ்ச்சியில்’ பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குனர் ‘கே.எஸ் பிரகாஷ்ராவ்’ அவர்கள், தன்னுடைய ‘பெற்றதாய்’ திரைப்படத்தில் முதன் முதலாக பின்னணிக் குரல் பாட வைத்தார். 

1953 ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் ‘ஏ.எம் ராஜாவுடன்’ இணைந்து, பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையில் ‘எதுக்கு அழைத்தாய்’ என்றப் பாடலைப்பாடினார். பிறகு ‘ஏ.வி.எம் ஸ்டுடியோவில்’ சிறிது காலம் பணியாற்றிய அவர், ‘லஷ்மிநாராயணம்’ என்பவரிடமிருந்து மேலும் தமிழ் கற்றுத் தேர்ந்தார். 

அதன் பிறகு, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற திரைப்படத்தில் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்’ மற்றும் ‘உன்னைக் கண் தேடுதே’ என்ற பாடல்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதே ஆண்டில் ‘எஸ்.வி பிரசாத்’ இயக்கத்தில் வெளிவந்த ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தில் இவர் பாடிய இரண்டு பாடல்கள் மேலும் புகழைப் பெற்றுத்தந்தது.

தாய்மொழி தெலுங்கு என்றாலும், தமிழ் கற்றப்பிறகு, அவர் உச்சரிப்பில் உதிர்ந்த அனைத்துப் பாடல்களும் கேட்பவர் மனதில் ஒரு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். 1955 ஆம் ஆண்டுக்கு பிறகு, தன்னுடைய தேன் குரலால் தமிழ் இசை நெஞ்சங்களின் மனதை உருகவைத்த அவர், தொடர்ந்து பலப் பாடல்களை பாடினார். 

குறிப்பாக ‘ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்’, ‘நினைக்கத் தெரிந்த மனமே’, ‘சிட்டுக்குருவி முத்தம்’, ‘முத்தான முத்தல்லவோ’, ‘மன்னவனே அழலாமா’, ‘பேசுவது கிளியா’, ‘ஆயிரம் நிலவே வா’, ‘வளர்ந்த கலை’, ‘அனுபவம் புதுமை’, ‘தாமரை கன்னங்கள்’, ‘மறைந்திருந்துப் பார்க்கும்’ போன்ற பலப் பாடல்கள் இசை நெஞ்சங்களின் மனதில் ஆலயமணியாய் ஒலித்தன. அமுதக்குரலில் ‘தமிழ் மொழியைப்’ பற்றி அவர் பாடிய ‘தமிழுக்கும் அமுதென்றுப் பேர்’ என்ற பாடல் தமிழ் பிரியர்களின் மனதை அமுத மழையால் நனைத்தது.

‘நாகேஸ்வரராவ்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, ‘எம். எஸ். விஸ்வநாதன்’ என்று அன்றைய இசையமைப்பாளர்களில் தொடங்கி, ‘இசைஞானி இளையராஜா’, ‘ஏ.ஆர் ரகுமான்’ என மேலும் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர், தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’, ‘சிங்களம்’ எனப் பல இந்திய மொழிகளில் பாடி, இசைத் துறைக்கு அரியதோர் பங்காற்றி உள்ளார். 

இசைத் துறையில் 60 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மாபெரும் சாதனைப் படைத்து வரும் சுசீலா அவர்கள், தன் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவி, இசைப் பணியாற்றி வருவதோடு மட்டுமல்லாமல், தேசிய அளவில் இசைத்துறையில் சாதனைப் புரிபவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி, கௌரவித்து வருகிறார்.

பல பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப்படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார்.

1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை படைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். திரைப்படத்தில் பாடுவதற்கு முன் எச்.எம்.வி இசைத்தட்டில்தான் எனது பாடல்கள் இடம்பெற்றன. என் குரல் நன்றாக இருப்பதாக கூறி ஏவி. மெய்யப்ப செட்டியார்தான் என்னை திரைக்குக் கொண்டு வந்தார்.

அவரால்தான் எனக்கும் பேரும் புகழும் கிடைத்தது. எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ண தாசன், வாலி போன்ற பெரிய கலைஞர்களோடு பணியாற்றி யதை பெருமையாக கருதுகிறேன். எம்.எஸ்.வி இசையில் வெளியான ‘நாளை இந்த வேளை பார்த்து’ பாடலுக்குத்தான் எனக்கு முதல் முறையாக தேசிய விருது கிடைத் தது. இந்தப் பாடலை பதிவு செய்யும்போதே அதற்காக எனக்கு விருது கிடைக்கும் என்று எம்.எஸ்.வி கூறினார். அதேபோல கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது.

நடிப்புக்கு டாடா 

இயக்குநர் கே.எஸ். கோபால கிருஷ்ணன் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு எப்போதுமே நடிப்பில் பிரியம் இருந்ததில்லை. அந்த நாட்களில் இசையமைப்பாளரின் மெட்டுக்கு சரியாக பாடியதால்தான் எனக்கு பாராட்டுகள் குவிந்தன.
இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன்.

விருதுகள்[தொகு]

கம்பன் புகழ் விருது, 2016 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை
இந்திய அரசின் பத்ம பூஷன் விருது - ஜனவரி 2008
தேசிய அளவில் மிகச்சிறந்த பின்னணிப் பாடகி விருது ஐந்து தடவைகள்
ஆந்திர மாநில அரசினரின் விருது ரகுபதி பெங்கையா விருது (2001)
கலைமாமணி விருது
பி. சுசீலா பாடிய சில பாடல்கள்:[தொகு]
ஆலயமணியின் ( பாலும் பழமும் )
யாருக்கு மாப்பிள்ளை ( பார்த்தால் பசி தீரும் )
பார்த்தால் பசி ( பார்த்தால் பசி தீரும் )
காவேரி ஓரம் ( ஆடிப்பெருக்கு )
இளமை கொலுவிருக்கும் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
தண்ணிலவு ( படித்தால் மட்டும் போதுமா )
முத்தான முத்தல்லவோ ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
அமுதைப் பொழியும் ( தங்கமலை ரகசியம் )
பருவம் எனது ( ஆயிரத்தில் ஒருவன் )
தூது செல்ல ( பச்சை விளக்கு )
பக்கத்து வீட்டு ( கற்பகம் )
நெஞ்சத்திலே நீ ( சாந்தி )
லவ்பேர்ட்ஸ் ( அன்பே வா )
அத்தான் என் அத்தான் ( பாவமன்னிப்பு )
சிட்டுக்குருவி ( புதியபறவை )
அத்தை மகனே ( பாத காணிக்கை )
கண்ணன் வருவான் ( பச்சை விளக்கு )
கொஞ்சி கொஞ்சி ( கைதி கண்ணாயிரம் )
ஆயிரம் பெண்மை ( வாழ்க்கைப் படகு )
ஆடாமல் ஆடுகிறேன் (ஆயிரத்தில் ஒருவன் )
நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
நீ இல்லாத ( தெய்வத்தின் தெய்வம் )
அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
உன்னைக் காணாத ( இதய கமலம் )
என்னை மறந்ததேன் ( களங்கரை விளக்கம் )
இதுதான் உலகமா ( ஆடிப்பெருக்கு )
கண்ணிழந்த ( ஆடிப்பெருக்கு )
மாலைப் பொழுதின் ( பாக்கியலெட்சுமி )
மலரே மலரே ( தேன் நிலவு )
மன்னவனே ( கற்பகம் )
நாளை இந்த வேளை ( உயர்ந்த மனிதன் )
நான் உன்னை வாழத்தி பாடுகிறேன் ( நூற்றுக்கு நூறு )
காதல் சிறகை ( பாலும் பழமும் )
ஆண்டவனே உன் ( ஒளிவிளக்கு )
ராமன் எத்தனை ( லெட்சுமி கல்யாணம் )
தங்கத்திலே ஒரு ( பாகப்பிரிவினை )
சொன்னது நீ தானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
என்ன என்ன ( வெண்ணிற ஆடை )
அத்தானின் முத்தங்கள் ( உயர்ந்த மனிதன் )
காட்டுக்குள்ளே திருவிழா ( தாய் சொல்லைத் தட்டாதே )
அத்தை மகள் ( பணக்கார குடும்பம் )
பாலிருக்கும் ( பாவமன்னிப்பு )
பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
உன்னை ஒன்று ( புதிய பறவை )
என்னை பாட வைத்தவன் ( அரசகட்டளை )
அம்மாம்மா காற்று வந்து ( வெண்ணிற ஆடை )
காண வந்த ( பாக்யலெட்சுமி )
மறைந்திருந்து ( தில்லானா மோகனாம்பாள் )
பச்சை மரம் ( ராமு )
தேடினேன் வந்தது ( ஊட்டி வரை உறவு )
சிட்டுக்குருவிக்கென்ன ( சவாளே சமாளி )
இரவுக்கு ஆயிரம் ( குலமகள் ராதை )
உனக்கு மட்டும் ( மணப்பந்தல் )
தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
வெள்ளிக்கிழமை ( நீ )
ரோஜா மலரே ( வீரத்திருமகன் )
ஹலோ மிஸ்டர் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
தாமரை கன்னங்கள் ( எதிர்நிச்சல் )
காத்திருந்த கண்களே ( மோட்டார் சுந்தரம் பிள்ளை )
மதுரா நகரில் ( பார் மகளே பார் )
அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
என்னருகே நீ இருந்தால் ( திருடாதே )
காற்று வந்தால் ( காத்திருந்த கண்கள் )
மெளனமே பார்வையால் ( கொடி மலர் )
பால் வண்ணம் ( பாச மலர் )
போக போக தெரியும் ( சர்வர் சுந்தரம் )
வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
பார்த்தேன் சிரித்தேன் ( வீரத்திருமகள் )
ஒருத்தி ஒருவனை ( சாரதா )
ஒரே கேள்வி ( பனித்திரை )
நெஞ்சம் மறப்பதில்லை ( பனித்திரை )
இயற்கை என்னும் ( சாந்தி நிலையம் )
ஒரு காதல் தேவதை ( சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு )
யாதும் ஊரே ( நினைத்தாலே இனிக்கும் )
ஆயிரம் நிலவே வா ( அடிமைப் பெண் )
மாதமோ ஆவணி ( உத்தரவின்றி உள்ளே வா )
என் கண்மணி ( சிட்டுக்குருவி )
விழியே கதையெழுது ( உரிமைக் குரல் )
தங்கத் தோணியிலே ( உலகம் சுற்றும் வாலிபன் )
மஞ்சள் நிலவுக்கு ( முதல் இரவு )
பேசுவது கிளியா ( பணத்தோட்ட )
அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
அன்புள்ள மான்விழியே ( குழந்தையும் தெய்வமும் )
வாழ நினைத்தால் ( தாயில்லாமல் நானில்லை )
அடுத்தாத்து அம்புஜத்த ( எதிர் நீச்சல் )
அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )
நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )





No comments:

Post a Comment