DONALD TRUMP
டொனால்ட் டிரம்ப்பின் வாழ்க்கை குறிப்பு
அமெரிக்க அதிபர் january 20,2017
டொனால்ட் டிரம்ப்பின் வாழ்க்கை குறிப்பு
2016 அமெரிக்க தேர்தல் முடிவு -
Donald Trump | |
---|---|
President of the United States Elect | |
Taking office January 20, 2017 | |
Vice President | Mike Pence (elect) |
Succeeding | Barack Obama |
Personal details | |
Born | June 14, 1946 New York City, New York, U.S. |
Political party | Republican (1987–1999, 2009–2011, 2012–present) |
Other political affiliations | Democratic (before 1987, 2001–2009) Reform (1999–2001) Independent (2011–2012)[1][2] |
Spouse(s) |
|
Children |
|
Alma mater | Fordham University University of Pennsylvania (BS) |
Signature |
தேர்தலில் அதிபர் பதவிக்காகப் போட்டியிட முடிவெடுக்க நீண்ட காலத்துக்கு முன்பே, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிக பிரபலமான , சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட கோடீஸ்வரர்.
| |
---|---|
President of the United States
Elect |
குடிவரவுப் பிரச்சனையில் அவருடைய சர்ச்சைக்குரிய நிலைப்பாடு மற்றும் சினத்தைத் தூண்டிய பிரசார பாணி ஆகியவை மட்டுமல்லாது, அவரது கடந்த கால பிரபல்யமும் அவர் குறித்த அவநம்பிக்கை உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.
ஆனால் , குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் மூத்த குடியரசுக் கட்சி வேட்பாளர்களையெல்லாம் ஓரங்கட்டி, இந்த 70 வயது வர்த்தகர், ஆருடங்களையெல்லாம் பொய்யாக்கினார்.
இப்போது அதிபர் தேர்தலிலும் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் பிளவு படுத்தும் போட்டிகள் ஒன்றில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹிலரி கிளிண்டனை வென்றுள்ளார் டிரம்ப்.
ஆரம்ப கட்ட வாழ்க்கை
நியு யார்க்கின் ரியல் எஸ்டேட் வணிகர் ஃப்ரெட் டிரம்ப்பின் நான்காவது மகன் டிரம்ப்.
செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவரானாலும்,டிரம்ப் அவரது அப்பாவின் நிறுவனத்தில் மிகவும் கீழ் நிலை வேலைகளை பார்க்கவேண்டியிருந்த்து.
பின்னர் அவர் பள்ளியில் தவறாக நடந்து கொண்டதால் 13வது வயதிலேயே ராணுவப் பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்பட்டார்.
பின்னர் அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள வார்ட்டன் கல்லூரியில் படித்து முடித்தார். அவரது அண்ணன் ஃப்ரெட் விமானியாக முடிவு செய்த நிலையில், அப்பாவின் நிறுவனத்துக்கு அவருக்குப் பின்னர் வாரிசானார்.
ஃபிரெட் டிரம்ப் மதுப் பழக்கத்தால் அவரது 43வது வயதில் காலமானது, டொனால்ட் டிரம்பை அவர் வாழ்க்கை முழுவதும், மதுவையும் சிகெரெட்டுகளையும் தவிர்க்க வைத்த்து என்கிறார் அவரது சகோதரர்.
தான் வீட்டு மனை வணிகத்தில் தனது அப்பாவிடம் ஒரு மிலியன் டாலர் கடன் வாங்கி நுழைந்ததாக டிரம்ப் கூறியிருந்தார். அதற்குப் பின்னர்தான் அவர் தனது தந்தையின் நிறுவனத்தில் இணைந்தார். நியுயார்க்கில் தன் தந்தையின் வீட்டு குடியிருப்புத் திட்டங்களை நிர்வகிக்க அவர் உதவினார்.
பின்னர் 1971ல் அவர் அந்த நிறுவனங்களைக் கையில் எடுத்தார். அவர் தந்தை 1999ல் காலமானார். தனது தந்தைதான் தனக்கு உத்வேகமாக இருந்தார் என்று அப்போது டிரம்ப் கூறியிருந்தார்.
வர்த்தகப் பேரரசர்
டிரம்ப் தனது குடும்ப வணிகத்தை, ப்ரூக்லின் மற்றும் குவீன்ஸ் பகுதிகளில் நடத்திய குடியிருப்புத் திட்டங்களிலிருந்து, கவர்ச்சிகரமான மன்ஹாட்டன் திட்டங்களுக்கு மாற்றி, மோசமான நிலையில் இருந்த கமோடார் ஹோட்டலை , க்ராண்ட் ஹையாட் ஹோட்டலாக மாற்றியதுடன், ஐந்தாவது அவென்யூவில் 68 அடுக்கு கொண்ட டிரம்ப் டவரைக் கட்டினார்.
டிரம்ப் ப்ளேஸ், டிரம்ப் உலக டவர் மற்றும் டிரம்ப் சர்வதேச ஹோட்டல் போன்ற தனது பெயரைத் தாங்கிய பல கட்டடங்களைக் கட்டினார். இது போன்ற டிரம்ப் டவர்கள் உலகில் மும்பை, இஸ்தான்புல் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் கட்டப்பட்டன.
ஹோட்டல்களையும் , சூதாடும் விடுதிகளையும் கட்டினார் டிரம்ப். ஆனால் அந்த நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் திவாலாகின. கேளிக்கை வர்த்தகத்திலும் டிரம்ப் வெற்றி கண்டார். 1996லிருந்து 2015 வரை அவர் மிஸ் யுனிவர்ஸ், மிஸ் யு.எஸ்.ஏ, மிஸ் டீன் யூ.எஸ்.ஏ போன்ற அழகிப் போட்டிகளை நடத்தினார்.
2003ம் ஆண்டில் அவர் என்.பி.சி தொலைக்காட்சியில் `` தெ அப்ரெண்டிஸ்`` என்ற ரியலிட்டி நிகழ்ச்சியை நடத்தினார். இதில் டிரம்ப்பின் நிறுவனத்தில் நிர்வாகப் பணி புரிய போட்டியாளர்கள் போட்டி போடும் நிகழ்ச்சி காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் 14 பகுதிகளை டிரம்ப்பே நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் 14 பகுதிகளை டிரம்ப்பே நடத்தினார்.
இதற்கு இவர் தனக்கு 213 மிலியன் டாலர்கள் தரப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
பல புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார்.நெக் டைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விற்பனை வரை பல பொருட்கள் அவர் நடத்தும் பல நிறுவனங்களால் விற்கப்படுகின்றன.
அவரது சொத்து மதிப்பு 3.7 பிலியன் டாலர்கள் என்று ஃபோர்ப்ஸ் இதழ் கூறுகிறது. ஆனால் டிரம்ப்போ தனக்கு 10 பிலியன் டாலர்கள் சொத்து இருப்பதாகக் கூறுகிறார்
கணவர் மற்றும் தந்தை
டிரம்ப்புக்கு மூன்று முறை திருமணம் ஆகியிருக்கிறது.
அவருடைய மிகப் பிரபலமான மனைவி, அவரது முதல் மனைவியான இவானா ஸெல்னிக்கோவா என்ற செக் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனையும், மாடலழகியும்தான். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் . பின்னர் அவர்கள் 1990ல் விவாகரத்து பெற முயன்றதை அடுத்து நடந்த நீதிமன்றப் போரில் பல பத்திரிகைகளுக்கு தீனி கிடைத்தது.
அவருடைய மிகப் பிரபலமான மனைவி, அவரது முதல் மனைவியான இவானா ஸெல்னிக்கோவா என்ற செக் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனையும், மாடலழகியும்தான். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் . பின்னர் அவர்கள் 1990ல் விவாகரத்து பெற முயன்றதை அடுத்து நடந்த நீதிமன்றப் போரில் பல பத்திரிகைகளுக்கு தீனி கிடைத்தது.
டொனால்ட் டிரம்ப் இவானாவை துஷ்பிரயோகம் செய்தார் என்பது உட்பட பல குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார். ஆனால் பின்னர் இவானா அந்த சம்பவங்களை பெரிது படுத்தவில்லை.
donald trump marla maples wedding photos |
பின்னர் டிரம்ப் மர்லா மேப்பிள்ஸை 1993ல் மணந்தார். அவர்களுக்கு டிஃபனி என்ற மகள். பின்னர் 1999ல் விவாகரத்து.
Ivanka Trump and father Donald Trump |
அதன் பின்னர் 2005ல் தற்போதைய மனைவியான மெலனியா நாஸை திருமணம் செய்து கொண்டார் டிரம்ப். அவர்களுக்கு ஒரு மகன் . முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகள் இப்போது டிரம்ப் நிறுவனத்தை நடத்த உதவுகிறார்கள். ஆனாலும், டிரம்ப்தான் இதன் தலைமை நிர்வாக அதிகாரி.
வேட்பாளர்
டிரம்ப் 1987லேயே அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஆசையை வெளிப்படுத்தினார். 2000ம் ஆண்டு அதிபர் தேர்தலில் சீர்திருத்தக்கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.
2008க்குப் பின், அதிபர் ஒபாமா அமெரிக்காவில் பிறந்தவரா என்று கேள்வி கேட்டு பிரசாரம் செய்த ‘ பர்தர்’ இயக்கத்தின் மிக வெளிப்படையாகப் பேசும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார் டிரம்ப்.
இந்த சந்தேகங்கள் எல்லாம் முற்றிலும் பொய்யாக்கப்பட்டுவிட்டன.
ஒபாமா ஹவாயில் பிறந்தவர். இந்த அதிபர் தேர்தலில் அந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று ஒரு வழியாக டிரம்ப் ஒப்புக்கொண்டார் . ஆனாலும் அதை எழுப்பியதற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை
.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில்தான் டிரம்ப் , அதிபர் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை முறையாக அறிவித்தார். அமெரிக்காவை மீண்டும் ஒரு மாபெரும் நாடாக மாற்றக்கூடிய ஒருவர் நாட்டுக்குத் தேவை என்றார் அவர் . தனது பிரசாரத்துக்குத் தேவையான பணத்தை மற்றவர்களிடமிருந்து திரட்டத் தேவையில்லாத நிலையில், எந்த ஒரு தனிப்பட்ட நலன் சாரந்த குழுவுக்கும் தான் கடமைப்பட்டவராக இருக்கவில்லை என்றும் தான் ஒரு சரியான வெளியிலிருந்து வரும் வேட்பாளர் என்றும் டிரம்ப் கூறினார்.
’’அமெரிக்காவை மீண்டும் மாபெரும் நாடாக்குவோம்’’ என்ற கோஷத்துடன் , டிரம்ப் சர்ச்சைக்குரிய ஒரு பிரசாரத்தைச் செய்தார். அமெரிக்கப் பொருளாதாரத்தை பலப்படுத்துவது, மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே குடியேறிகளை தடுக்கும் வகையில் சுவர் ஒன்றை எழுப்புவது, முஸ்லீம்கள் அமெரிக்காவுக்குள் வருவதை தற்காலிகமாகத் தடை செய்வது போன்றவை அவர் அளித்த உறுதி மொழிகள்.
குடியரசுக் கட்சியில் அவரது போட்டியாளர்களான டெட் குரூஸ் மற்றும் மார்க்கோ ருபையோ ஆகியோரின் பெரு முயற்சிகளையும் , அவரது பிரசாரக் கூட்டங்களில் நடத்தப்பட்ட பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மீறி, இந்தியானா மாநிலத்தில் நடந்த பிரைமரி தேர்தலுக்குப் பின்னர் கட்சியின் அனுமானிக்கப்பட்ட வேட்பாளராக மாறினார் டிரம்ப்.
தேர்தல் வெற்றியாளர்
டிரம்ப்பின் பிரசாரம் சர்ச்சைகள் மிகுந்ததாக இருந்து. 2005ம் ஆண்டில் அவர் பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசிய ஒளிநாடா வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் இந்தப் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்று அவரது கட்சியினரே கூறினார்கள்.
ஆனால் ஹிலரி வெல்வார் என்று தொடர்ச்சிாக வந்த கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி வெற்றி பெறுவேன் என்று அவர் தொடர்ந்து கூறிவந்தார்.
பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தி்லிருந்து வெளியே கொண்டு வர நடத்தப்பட்ட வெற்றிகரமான பிரசாரத்திலி்ருந்து தனக்கு உத்வேகம் கிடைத்ததாக கூறிய அவர் பிரெக்ஸிட் போல பத்து மடங்கு வெற்றியை தான் பெறுவேன் என்றார்.
வாக்குப்பதிவு நாள் நெருங்குகையில் அதை எந்த ஒரு அரசியல் பகுப்பாய்வாளரும் நம்பவில்லை. ஹிலரியின் மின்னஞ்சல் குறித்த புதிய சர்ச்சை காரணமாக அவருக்குக் கிடைத்த மிகத் தாமதமான ஆதரவு கூட இவர்களது நிலைப்பாட்டை மாற்றவில்லை.
இதற்கு முன்னர் எந்த ஒரு பொது பதவியையும் வகிக்காத அல்லது ராணுவத்தில் பணி புரியாத முதல் அமெரிக்க அதிபராக டிரம்ப் இருப்பார்.
ஜனவரியில் அமெரிக்காவின் 45வது அதிபராவதற்கு முன்னரே, டிரம்ப் இதன் மூலம் சாதனை ஒன்றைப் படைத்துவிட்டார்.
அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் பாடுபடுவேன்: டிரம்ப் வெற்றியுரை
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்,அனைத்து அமெரிக்க மக்களின் நலனுக்காகவும் பணிபுரியப்போவதாகவும், நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
கடும் போட்டி மற்றும் பலதரப்பட்ட பிரசாரத்திற்கு பிறகு தனது போட்டியாளர் ஹிலரியை வீழ்த்தியுள்ள டொனால்ட் டிரம்ப், ஹிலரி கடுமையாகப் பிரசாரம் செய்தார் என்று சுட்டிக்காட்டினார். இந்த நாட்டுக்காக அவர் உழைத்ததற்கு நன்றி தெரிவித்தார். லட்சக்கணக்கான உழைக்கும் குடிமக்கள் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக வாக்களித்திருப்பதாகவும், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தனது முழுத் திறனை உணரும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அமெரிக்காவுடன் நல்லுறவை மேற்கொள்ள விரும்பும் நாடுகளை சரியான முறையில் அணுகப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சிக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
வியாழனன்று அதிகார மாற்றம் குறித்து விவாதிக்க டிரம்பை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார் அதிபர் ஒபாமா.
உடைந்து கொண்டிருக்கும் நாட்டின் உள்கட்டமைப்பை சீர் செய்வது மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தை இரட்டிப்பாக்குவதும் தான் தனது முதல் கடமை என்று டிரம்ப் தனது வெற்றி உரையில் தெரிவித்துள்ளார்.
அதிபர் வாக்கெடுப்பில் டிரம்ப் வெற்றி பெற்ற நாளிலிருந்து, வெள்ளை மாளிகையில் அதிபராக பதவியேற்கும் காலம் வரை கண்காணிக்கும் மேற்பார்வைக் குழுவை கிறிஸ் கிறிஸ்டீ முன்னடத்துவார். இவர் நியூஜெர்சியின் குடியரசுக் கட்சி ஆளுநர்.
மேலும் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்வார் டிரம்ப்.
நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பால் ரேயன் மற்றும் மெக்கொனல் ஆகிய இருவருமே டிரம்பிற்கு ஆதரவாக உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
நிறுவப்பட்ட ஆணைகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் குறித்து, குறிப்பாக ஐரோப்பாவில் கவலை தெரிவித்திருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருடன் இணைந்து பணிபுரிவதாக உறுதியளித்திருக்கின்றனர்.
பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந், டிரம்பின் வெற்றி நிலையற்ற தன்மையில் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல், பகிரப்பட்ட ஜனநாயக கொள்கைகளை பொறுத்தே இருநாடுகளுக்கு மத்தியிலான நெருங்கிய ஒத்துழைப்பு அமையும் என தெரிவித்துள்ளார்.
மேலும் உலகளவில் டிரம்பிற்கு இருக்கும் பொறுப்புகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞாயிறன்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களுக்கு மத்தியில் சிறப்பு கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ரஷிய அதிபர் புதின், இரு நாடுகளுக்கும் மத்தியில் ஏற்படும். நல்லுறவு, சர்வதேச பாதுகாப்பு மற்றும் ரஷியா - அமெரிக்க நாடுகளின் நன்மைக்கு வித்திடும் என தெரிவித்துள்ளார்.
நேட்டோ , சிரியாவில் நடைபெறும் போர் மற்றும் யுக்ரைனில் ரஷியாவின் தலையீடு ஆகியவைக் குறித்து ஒபாமாவின் நிர்வாகத்தில் பதற்றநிலை இருந்து வந்த போதிலும் அவைகளில் தளர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று டிரம்ப் சுட்டிக்காட்டியிருந்தார்.
டிரம்பிற்கு தனது வாழ்த்துக்களை அனுப்பிய சீன அதிபர் ஷீ ஜிங் பிங், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவருடன் இணைந்து பணிபுரியும் நேரத்தை எதிர்நோக்கி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இருநாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு சமாதான போக்கை கடைபிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, சீனா அந்நிய செலாவணி சந்தையில் தலையிடுவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
சீன இறக்குமதிகளுக்கு வரி விதிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment