JAWAHARLAL NEHRU ,
FIRST PRIME MINISTER OF INDIA
BORN 1889 NOVEMBER 14
சவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.
சவகர்லால் நேரு जवाहरलाल नेहरू | |
---|---|
முதல் இந்தியப் பிரதமர் | |
பதவியில் 15 ஆகத்து 1947 – 27 மே 1964 | |
அரசர் | ஆறாம் சார்சு (1947–1950) |
குடியரசுத் தலைவர் | இராசேந்திர பிரசாத் இராதாகிருஷ்ணன் |
பொது ஆளுநர் | மவுண்ட்பேட்டன் பிரபு சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி |
Deputy | சர்தார் வல்லப்பாய் படேல் |
முன்னவர் | பதவி நிறுவப்பட்டது |
பின்வந்தவர் | குல்சாரிலால் நந்தா(இடைக்காலம்) |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 31 அக்டோபர் 1962 – 14 நவம்பர் 1962 | |
முன்னவர் | வி கே கிருட்டிண மேனன் |
பின்வந்தவர் | யஷ்வந்த்ராவ் சவான் |
பதவியில் 30 சனவரி 1957 – 17 ஏப்ரல் 1957 | |
முன்னவர் | கைலாசு நாத கட்சு |
பின்வந்தவர் | வி கே கிருட்டிண மேனன் |
பதவியில் 10 பிப்ரவரி 1953 – 10 சனவரி 1955 | |
முன்னவர் | என் கோபால்சாமி ஐயங்கார் |
பின்வந்தவர் | கைலாசு நாத கட்சு |
நிதியமைச்சர் | |
பதவியில் 13 பிப்ரவரி 1958 – 13 மார்ச் 1958 | |
முன்னவர் | தி. த. கிருஷ்ணமாச்சாரி |
பின்வந்தவர் | மொரார்சி தேசாய் |
பதவியில் 24 ஜூலை 1956 – 30 ஆகஸ்ட் 1956 | |
முன்னவர் | சி டி தேஷ்முக் |
பின்வந்தவர் | தி. த. கிருஷ்ணமாச்சாரி |
வெளிவிவகாரத் துறை அமைச்சர் | |
பதவியில் 15 ஆகஸ்ட் 1947 – 27 மே 1964 | |
முன்னவர் | பதவி நிறுவப்பட்டது |
பின்வந்தவர் | குல்சாரிலால் நந்தா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நவம்பர் 14, 1889 அலகாபாத், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | மே 27, 1964(அகவை 74) புது தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | கமலா நேரு |
பிள்ளைகள் | இந்திரா காந்தி |
படித்த கல்வி நிறுவனங்கள் | திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் இன்ஸ் சட்ட நீதிமன்றம் பள்ளி |
தொழில் | பார் அட் லா |
சமயம் | இல்லை (இறைமறுப்பு)[1][2][3] |
கையொப்பம் |
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசு கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.
வாழ்க்கை வரலாறு[தொகு]
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் "சிகப்பு நகை" என்று பொருள், இச்சொல்லிலிருந்து "ஜவஹர்லால்" என்ற பெயர் உருவானது.
'காசுமீர பண்டிதர்' என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார். (காசுமீரக் கால்வாயைக் குறிக்கும் சொல் நெகர் மருவி நேரு ஆயிற்று இராசகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் ஆகியது). நேரு குடும்பம் பிரதான வீதியையும் சந்தடி நிறைந்த கடைத் தெருவையும் ஒட்டியிருந்த பழைய பகுதியான சௌக்கியில் முதலில் வசித்து மோதிலால் நேரு பல வருடங்களுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார்.
ராஜாக்கள் ,ஜமிந்தார்கள் ,மற்றும் பணக்காரர்களின் வழக்குகளை ஏற்று நடத்தியதால் பேரும் ,புகழுடன் நிதியும் அவரிடம் குவிந்தது. எனவே மோதிலால் தனது இருப்பிடத்தை பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார்
ஆனந்தபவன்
இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேருவும் அவரின் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட்டும் கிருஷ்ணாவும், ஆனந்தபவன் என்ற பெரிய மாளிகையில் வளர்ந்து வந்தனர். அக்காலத்தில் இந்திய உயர் குடிமக்களால், அன்று அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர்.
கல்வி[தொகு]
ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமற்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஜவகர்லால் நேரு, ஹார்ரோவில் உள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. அவர், பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும், தங்குமிடத்தின் நிலை வீட்டிலிருந்து வெகுதொலைவு வந்ததை உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார்.
நேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். சுதந்திர வெளிப்பாட்டிற்கு பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம், வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவித்தது மற்றும் அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.
1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயிலப் பதிவு செய்து கொண்டார். ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை மாறாகத் தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912 இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் இல் ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.
திருமணம்[தொகு]
கமலா கவுல் என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை, 1916 பிப்ரவரி 7 இல் மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாகச் செயல்பட்டார்.
ஆனால் 1936 இல் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். இருந்தாலும் பின்னாளில் 1946 இன் வைசிராயான இலூயி மவுன்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுன்ட்பேட்டனுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கருத்துகள் உண்டு[4]. அவரின் கடைசிக் காலத்தில் தன் மகளோடும் உடன்பிறந்தாள் விசயலட்சுமி பண்டிதையருடனும் வாழ்ந்தார்.
அரசியல்[தொகு]
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசு கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளை சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவை காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள காரணமாக இருந்தது[5]. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.
சிறை வாழ்க்கை[தொகு]
1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார்.
இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.
ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை "நவீன இந்தியாவின் சிற்பி" என்று குறிப்பிடுவதுண்டு. இவருடைய மகள் இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும், இந்தியாவின் பிரதம மந்திரிகளாக இருந்திருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் பிரதம மந்திரி.[தொகு]
தீன் மூர்த்தி பவன் - நேரு பிரதமராக இருந்த காலத்தில் அவருடைய இல்லமாகவும், தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகம்
நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1945ம் ஆண்டு சூன் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை மாற்றித்தரும் திட்டத்துடன் இங்கிலாந்து அமைச்சரக தூதுக்குழு வந்ததால் நேருவும் அவரின் சகாக்களும் விடுவிக்கப்பட்டனர்.
நேரு இடைக்கால அரசாங்கத்தைத் தலைமையேற்று நடத்தி செல்லும்போது மத வன்முறை, அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க் கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக், முஸ்லிம்களுக்காகப் பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரியது ஆகியவற்றால் உண்டான கலவரங்கள் நேருவின் ஆற்றலை முடக்கின. சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் நேரு தயக்கத்துடன் வேறு வழியின்றி 1947 ஜுன் 3 -இல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
"பல வருடங்களுக்கு முன்னாள் நாம் விதியுடன் போராடினோம். இப்போது நாம் செய்த சத்தியத்தை செயலாக்கும் நேரம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் அல்லது முழு அளவில் இல்லாவிட்டாலும் மிக அவசியமாக வந்து விட்டது. நடுநிசி நேரத்தில், உலகம் உறங்கும்போது இந்தியா சுதந்திரத்துடன் உயிர்ப்புடன் விழிக்கும். சரித்திரத்தில் மிக அரிதான சமயம் வரும், அப்போது ஒரு சகாப்தம் முடியும்போது மற்றும் தேசத்தின் ஆத்மா கொடுமைப்பட்டது முடிவதை தேடும்போது பழையனவற்றிலிருந்து நாம் புதியவற்றிற்காக வர வேண்டும்.
இந்தப் புனிதமான நேரத்தில் இந்தியாவின் சிறந்த மனிதநேயத்திற்காகவும் இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நாம் பிரமாணம் செய்துகொள்வோம்."[6] இந்தக் காலகட்டம் ஆழமான சமுதாய வன்முறையால் குறிப்பிடப்பட்டது. இந்த வன்முறை பஞ்சாப் மாகாணம், டில்லி, வங்காளம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தது. நேரு பாகிஸ்தானிய தலைவர்களுடன் பாதிக்கப்பட்ட அகதிகளின் கோபத்தைத்தணித்து அமைதியை உண்டாக்கி உற்சாகப்படுத்த எல்லா இடங்களுக்கும் பயணம் செய்தார்.
நேரு, மௌலானா ஆசாத் மற்றும் பிற முஸ்லிம் தலைவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களைப் பாதுகாத்து அவர்களை இந்தியாவிலேயே இருக்கும்படி உற்சாகப்படுத்தினார். அந்த நேரத்து வன்முறை அவரை மிகவும் பாதித்ததால் எல்லாவற்றையும்எவற்றை? நிறுத்த ஆணையிட்டார், ஐக்கிய நாடுகள் அவையும் 1947 இந்திய பாகிஸ்தான் போரை நிறுத்தச் சொன்னது.
சமுதாயக் கலவரங்களுக்காகப் பயந்த நேரு, ஐதராபாத் மாநிலத்தைச் சேர்க்க ஆதரவு அளிக்கத் தயங்கினார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த ஆண்டுகளில் நேரு அவரின் சொந்த விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளவும் அவரைக் கவனித்துக் கொள்ளவும் அடிக்கடி மகள் இந்திராவையே நாடினார். 1952 இல் நடந்த தேர்தலில் நேருவின் தலைமையின் கீழ் காங்கிரசு பெருமளவில் வெற்றி பெற்றது. நேருவைக் கவனிப்பதற்காக இந்திரா, அவருடைய அதிகாரப் பூர்வமான வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
தீன் மூர்த்தி பவனில் நேருவின் படிப்பு
பொருளாதாரக் கொள்கைகள்[தொகு]
நேரு நவீன புதுப்பிக்கப்பட்ட இந்திய முறைப்படியான மாநிலத்திட்டம் மற்றும் பொருளாதாரத்தின் மேல் கட்டுப்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்த ஆயத்தமானார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். அது அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. தொழில்களை அதிகப்படுத்துதல், வருமான வரிகள்மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்கள் நன்மைக்குச் சேவை செய்யும் சில நுணுக்கமான தொழிற்சாலைகளான சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற் சாலைகள் தனியாரிடம் போவதை தடுத்து அரசாங்கமே நடத்த திட்டமிட்டார்.
நேரு நில மறு பங்கீட்டை முதன்மைபடுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டும் திட்டத்தை அமல்படுத்தினார், மேலும் விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையைப் பரப்பினார். தொடர்ச்சியான சமுதாய முன்னேற்றத் திட்டங்களைக் குடிசைத்தொழில்களை பரப்பும் நோக்கத்துடன் செயல்படுத்தினார். பெரிய அணைகளை (இவற்றை "இந்தியாவின் புதுக் கோவில்கள்" என்று அழைத்தார்) கட்ட ஊக்கப்படுத்தியதோடு அல்லாமல் விவசாயம், நீர் மின்சாரம் ஆகியவற்றை பெரிதும் ஆதரித்தார். அணுஆற்றலில் இந்தியா சிறக்கவும் திட்டங்களைச் செயல்படுத்தினார்.
பிரதம மந்திரியாக நேரு பதவி வகுத்த காலத்தில் பெரும்பாலான காலங்களில் விவசாய உற்பத்தி அதிகரித்தும், முன்னேறி இருந்தும் கூட இந்தியா தொடர்ந்து மிகவும் மோசமான உணவுப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டி இருந்தது. நேருவின் தொழிற்சாலை கொள்கைகள் "தொழிற்சாலை கொள்கை தீர்வு " 1956 மாறுபட்ட உற்பத்திகள் மற்றும் கனரக இயந்திரங்கள் வளர்ச்சியை ஊக்குவித்தது.[7]
இருப்பினும் மாநிலத்திட்டம், கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றினால் உற்பத்தி, தரம் மற்றும் லாபம் முடங்கத் தொடங்கின. இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 2.5% என்ற நிலையான வளர்ச்சி தரத்தை எட்டினாலும், கடுமையான வேலையில்லா திண்டாட்டம், பரவலான வறுமை மக்களைத் தொடர்ந்து ஆட்டிப்படைத்தது.
கல்வி மற்றும் சமூக சீர்திருத்தம்[தொகு]
இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார். அவரது அரசாங்கம் உயர் கல்வி நிறுவனங்களை அமைத்துக் கவனித்து வந்தது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள், தேசிய தொழில்நுட்ப கழகங்கள் ஆகியவை அவற்றுள் சில. நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பால் மற்றும் மதிய உணவு அளிக்கும் திட்டத்தையும் அமலாக்கினார். கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார்.
இந்திய நாடாளுமன்றம், நேருவின் அறிவுரைப்படி இந்து மதச் சட்டத்தில், ஜாதி வேறுபாடுகளைக் குற்றமாகப் பாவித்தல், பெண்களுக்கான சமூக சுதந்திரம் மற்றும் சட்ட உரிமைகளை அதிக படுத்துதல் போன்ற மாற்றங்களை உருவாக்கியது.[8][9][10] [11] .பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைசாதியினர் அனுபவித்த சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மேல் நிலையில் உள்ளவர்களுடன் அவர்கள் போட்டியிடும்போது ஏற்படும் குறைபாடுகளைக் களையும் வகையில் அரசாங்கப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்காக இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார். மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம் போன்றவற்றை ஆதரித்த நேரு அரசில் சிறுபான்மையினர் அதிகளவில் பங்குபெறச்செய்தார்.
தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை[தொகு]
ஆங்கில ஆளுமையிலிருந்து சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலங்களில், புதிய சுதந்திர இந்தியாவை நேரு 1947 முதல் 1964 வரை வழிநடத்தினார். அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும், தங்களுக்குள் நடந்த பனிப் போரின்போது இந்தியாவைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ள இரண்டு நாடுகளும் போட்டியிட்டன.
1948 இல் காஷ்மீரில் ஐக்கிய நாடுகளின் ஆணையால் ஒரு மாநாடு நடத்துவதாக உறுதி அளித்திருந்தாலும், ஐக்கிய நாடுகளின் பேரில் வளர்ந்த அதிகமான சலிப்பினால் 1953 இல் மாநாடு நடத்துவதைக் கைவிட்டார். தான் முன்பு ஆதரித்த காஷ்மீரி அரசியல்வாதி,ஷேக் அப்துல்லா பிரிவினையைத் தூண்டும் நோக்கத்துடன் செயல் பட்டதாக இப்போது சந்தேகித்து அவரைக் கைது செய்ய ஆணை இட்டார். அவருக்குப் பதிலாகப் பக்ஷி குலாம் முகமது இடம் பெற்றார்.
உலகப் பார்வையில் நேரு சமாதானப்படுத்துவதில் மன்னர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளர். கூட்டுச்சேராக் கொள்கை மற்றும் கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கி, முறைப்படுத்திய நாடுகளுக்கு முன்னோடியாக இருந்து பகைமை நாடுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் நடுநிலை வகிக்க முனைந்தார்.இயக்கம் தோற்றுவித்த உடன், மக்கள் குடியரசான சீனாவை அடையாளம் கண்டுகொண்டு (நிறைய வட தேசங்கள் தொடர்ந்து சீனாவுடன் நல்லுறவு கொண்டிருந்தன),
நேரு சீனாவை ஐக்கிய நாடுகளுடன் சேர்த்துக் கொள்ள வாதாடினார் மற்றும் கொரியர்களுடனான சண்டையில் சீனர்களை ஆத்திரக்காரர்கள் என்று பிரகடனப் படுத்துவதை நேரு மறுத்தார். 1950 இல் திபெத் ஊடுருவியும் அதனுடன் சுமூகமான உறவை ஏற்படுத்த வழி வகுத்தார். கம்யுனிச நாடுகளுக்கும், மேற்கத்திய தேசங்களுக்கும் இடையில் இறுக்கத்தைத் தளர்த்தி பிளவைச் சரிக்கட்ட நம்பிக்கையுடன் தூதுவர்போல் செயல்பட்டார். மிதவாதக் கொள்கை மற்றும் சீனாவின் மீது இருந்த நம்பிக்கையும், சீனா, 1962 இல் திபெத்தை ஒட்டியிருந்த அக்ஸாய் சின்னை காஷ்மீரிலிருந்து தன்னுடன் இணைத்துக் கொண்டது சீன-இந்திய போருக்கு வழிவகுத்தது.
அணுஆயுத பயங்கரத்தையும், மிரட்டல்களையும் மற்றும் உலக துன்பத்தையும் தணிக்க நேருவின் கடின முயற்ச்சி பலராலும் ஆதரிக்கக்கப்பட்டது[12]. அணு ஆயுதங்களால் மனித சமுதாயத்திற்கு உண்டாகும் விளைவுகளைப் பற்றிய அவரது முதல் ஆராய்ச்சி மற்றும் அவரால் "பயங்கரமான அழிவு இயந்திரங்கள்" என்று கூறப்பட்டவைகளை ஒழிக்க அயராது பிரச்சாரம் செய்தார்.அணு ஆயதங்களை அவர் ஆதரிக்காததற்கு அவரிடம் பல காரணங்கள் இருந்தன. இந்த அணு ஆயுதப் போட்டி ராணுவத்தையும் தாண்டித் தன் சொந்த நாட்டைப் போல் மற்ற நாடுகளையும் வளர்ச்சி குறைவானதாக்கி விடும் என்று நேரு கருதினார் .[13]
1956 இல் இங்கிலாந்து, பிரான்ஸ்,மற்றும் இஸ்ரேல் சேர்ந்து சசூயஸ் கால்வாயை ஊடுருவியதை விமர்சித்தார். சந்தேகமும் நம்பிக்கையின்மையும் இருந்தும் இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையில் குளிர்ந்த உறவைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டதால் சோவியத் யூனியனை ஆதரிக்க வேண்டியதாயிற்று. இங்கிலாந்து மற்றும் உலக வங்கியின் நடுநிலையால் நேரு 1960-இல் இண்டஸ் தண்ணீர் உடன்படிக்கையில் பாகிஸ்தான் ஆட்சியாளர் ஆயுப் கானுடன் கையெழுத்திட்டார். இது பஞ்சாப் மாகாணம்த்தில் உள்ள முக்கிய நதிகளின் வளங்களைப் பங்கு போட்டுக்கொள்வதில் நடந்த நீண்ட நாள் வழக்குகளைத் தீர்ப்பதற்காகக் கையெழுத்திடப்பட்டது.
இறுதி காலம்[தொகு]
தேர்தலில் நேரு காங்கிரசை மிகப் பெரிய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும் அவருடைய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது. உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப் போன நேரு பதவியைத் துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். 1959 இல் தனது மகள் இந்திரா காங்கிரசு தலைவரானதும் அதிக விமரிசனங்கள் எழுந்தன. நேரு மக்களாட்சிக்குப் புறம்பானது "என்று கூறி தன் கட்சியில் இந்திராவின் பதவியை மறுத்தார்.
[14] இந்திராவே கொள்கை விஷயத்தில் தன் தந்தையுடன் மிகுந்த கசப்புணர்வுடன் இருந்தார், குறிப்பாக, காங்கிரசு காரிய கமிட்டிகேரளா [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசை நீக்கியது.[14] நேரு தொடர்ந்து மகளின், பாராளுமன்றப் பழமையை மதிக்காதது மற்றும் தூக்கி எறிவது போல் நடப்பது போன்றவற்றால் தர்மசங்கடத்திற்கு உள்ளானார். தன் தந்தையின் பெயரால் இல்லாமல் தன் சொந்த அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்திரா செயல்பட்டது மிகுந்த மனவருத்தத்தை அவருக்கு ஏற்படுத்தியது [15].
திபெத்தின் மீதான 1954 சீன-இந்திய உடன்படிக்கையில் பஞ்சசீலக் கொள்கைகள் அடிப்படையாக இருந்தாலும்,பின்னர் நேருவின் வெளியுறவுக் கொள்கை எல்லைச்சண்டையினால் மற்றும் தலாய்லாமாவுக்கு அடைக்கலம் தர முடிவு செய்து அனுமதி அளித்தது இவையெல்லாம் சீனாவின் எதிர்ப்பை அதிகப்படுத்தியதால் சிரமப்பட்டது. பல வருடங்கள் தொடர்ந்து சமாதானம் பேசியும் தோல்வியடைந்ததால், நேரு 1961 இல் போர்த்துக்கலிலிருந்து கோவாவை இணைத்துக் கொள்ள இந்திய ராணுவத்திற்கு அனுமதியளித்தார். கோவா விடுதலை மூலம் அவரது புகழ் அதிகரித்தாலும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவருக்குக் கண்டனங்களும் அதிகரித்தன.
நேரு 1962 இல் நடந்த தேர்தலில் குறைந்த ஆதரவுடன் காங்கிரசை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். எதிர்க்கட்சிகளான இடது சாரி பாரதிய ஜன சங்கம், சுதந்திரா கட்சி சமூகவாதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவைகள் நன்கு பரிமளித்தன.
ஒரு சில மாதங்களில் சீனா உடனான எல்லைத் தகராறு,வெளிப்படையான சண்டையானது.
முன்னாள் ஏகாதிபத்தியத்தினால் பாதிக்கப் பட்டவைகள் ஆதலால் சொல்வழக்காக " இந்தி-சைனி பாய் பாய்"(இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்) என்று கூறப்பட்டதுபோல் இருவரும் ஒரு உறுதித்தன்மையைப் பங்கிட்டுக் கொண்டதாக நேரு ஊகித்தார்.வளரும் நாடுகளுக்கு மத்தியில் சகோதரத்துவம் மற்றும் உறுதித்தன்மை போன்ற நல்ல நெறிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தார்.
நேரு, ஒரு பொதுவுடைமை நாடு தன்னைப் போன்ற இன்னொரு நாட்டைத் தாக்கும் என்பதை நம்பவில்லை.மற்றும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் அவர், உடைக்கமுடியாத பனிபடர்ந்த இமாலயச் சுவருக்குப் பின்னால் பாதுகாப்பாக உணர்ந்தார். இந்த இரண்டும்,சீனாவின் உள்நோக்கங்களையும்,மற்றும் ராணுவ சக்தியையும் நேரு மிகத் தவறாகக் கணக்கிட்டதை நிரூபித்தன.
பின் வரும் அறிக்கைகள் சீனா சண்டையிட்ட இடங்களை ஆக்கிரமித்து விடக் கூடாது என்ற நேருவின் எண்ணத்தை -சுருக்கமாக, நினைவில் நிற்கக்கூடிய ஒரு வரியில் தெரிவிக்கின்றன அது, ராணுவத்திடம் "அவர்களை வெளியே தூக்கி எறியுங்கள்" என்று கூறியதுதான். சீனா அதிரடியாகத் தன் தாக்குதலைத் தொடங்கியது.[16]
சில நாட்களில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் சீனா ஊடுருவி இந்திய ராணுவத்தின் பலகீனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி, சீன சக்திகள் அஸ்ஸாம் வரை சென்று விட்டன. அவருடைய அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள்மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்று அதிக அளவில் விமர்சிக்கப்பட்டது. இதனால் நிர்ப்பந்தத்தின் பேரில் பாதுகாப்பு அமைச்சரான கிருஷ்ண மேனனை பதவியிலிருந்து நீக்கி, அமெரிக்க ராணுவ உதவியை நாடினார்.
1963 நேருவின் ஆரோக்கியம், குறைந்து வந்ததால் மாதக் கணக்கில் அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது.சில வரலாற்றாளர்கள் இதைச் சீன ஊடுருவலிலிருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகமாகக் கதை கட்டி எழுதியதை, நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார்.[17] 1964 இல் காஷ்மீரிலிருந்து திரும்பியதும் நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். அவர் 1964, 27 மே அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.டில்லித் தெருக்களில் இருந்தும்,மயானத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். '
சட்டமயமாக்கல்[தொகு]
லண்டண், ஆல்ட்விச்சில் உள்ள நேரு அவர்களின் சிலை
இந்தியாவின் முதல் பிரதமமந்திரி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக நேரு, மிகச் சக்திவாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையுடன் நவீன இந்திய அரசாங்கத்தை மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். கிராமத்தின் மூலை முடுக்குகளில் இருந்த குழந்தைகளை அகில உலக ஆரம்பக் கல்வி சென்றடைய அவர் உருவாக்கிய முறையால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். நேருவின் கல்வித் திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்விநிறுவனங்கள் உருவாகி வளர்ச்சியடையக் காரணமானதால் பாராட்டுப் பெற்றது. அத்தகைய நிறுவனங்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்[18] அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்,[19] அகில இந்திய நிர்வாகக் கல்வி நிலையம் ஆகியவை.
இந்தியப் பாரம்பரிய மக்கள் கூட்டத்திற்கு,சிறுபான்மை மக்கள்,பெண்கள்,பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆதிவாசிகள் ஆகியோருக்கு சரிசமமான சந்தர்ப்பங்கள் மற்றும் உரிமைகள் கிடைக்க, தொலைநோக்கோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தியதற்காகப் பெருமைப்படுத்தப்பட்டார்.[20][21]. பெண்கள் மற்றும் தாழ்ந்த பிரிவைச்[22] சேர்ந்தவர்களுக்கு எதிராக நடந்து கொள்வது போன்றவற்றிற்கு முடிவு கட்டும் வகையில் மாநில அரசுகளைக் கடுமையாக உழைக்கத் தூண்டி மிகவும் அக்கறை காட்டினார்.அவர் வாழ்நாளில் இதில் மிகக் குறைந்த வெற்றியே பெற்றார்.
பிராந்திய வேறுபாடுகளைப் பாராட்டினாலும் நேருவின் தோல்வியடையாத தேசியவாத உறுதி இருப்பினும் இந்தியர்களுக்கு இடையில் ஒற்றுமையை உறுதிபடுத்தக்கூடிய திட்டங்களை வகுத்தார். இங்கிலாந்து விலகிச் சென்றபின் சுதந்திரத்திற்கு முன்னாள் இருந்த வேறுபாடுகள் தலைதூக்கின. பொதுக் குழுவின் கீழ் மாகாணத் தலைவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாகக் கூற விரும்பவில்லை என்பதை முக்கியமாகக் குறிப்பிட்டு நிரூபித்தது.
மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் மொழி இரண்டும் புதிய தேசத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்த நேரத்தில் நேரு, தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் தேசிய இலக்கிய கழகம் உருவாக்கி மொழிகளுக்கு இடையே பிராந்திய இலக்கியங்களை மொழி மாற்றம் செய்யும் திட்டம்,மற்றும் ஒரு ராஜ்யத்திலிருந்து பொருள்களை வேறு ராஜ்யங்களுக்கு மாற்றல் செய்வது ஆகிய திட்டங்களை வகுத்து ஒரே ஐக்கிய இந்தியாவாக வளர்க்க நினைத்தார்.நேரு, "ஒன்று சேர் அல்லது அழி" என்று எச்சரித்தார்.[23]
சோவியத் ஒன்றியத்தால் 1989ல் வெளியடப்பட்ட நினைவுத் தபால்தலையில் நேரு
நாங்பாவில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பினை அளிக்கும் நேரு
அவருடைய வாழ்நாளில் நேரு இந்தியாவில் நல்ல தகுதியை அனுபவித்தார் மற்றும் உலகம் முழவதும் அனைவராலும் அவருடைய நல்ல நெறிகளுக்காகவும், உயர்ந்த மனித பண்புக்காகவும் புகழப்பட்டார்.அவரின் பிறந்தநாள்,14 நவம்பர் இந்தியா முழுவதும்" குழந்தைகள் தினமாக " கொண்டாடப்படுகிறது.அவர் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இந்தியக் குழந்தைகள் அவரை "சாச்சா நேரு ' (மாமா நேரு)என்றே இன்று வரை நினைவு வைத்துள்ளனர். காங்கிரசு கட்சியின் புகழ் பெற்ற அடையாளமாக அவருடைய நினைவை அடிக்கடி கொண்டாடுகிறது. காங்கிரசு தலைவர்களும் மற்றவர்கள் பலரும் அவருடைய ஆடைகள் அணியும் முறையைக் குறிப்பாக "காந்தி குல்லாவை " விருப்பமாக அணியத்துவங்கினர்.நேருவின் திட்டங்களும் மற்றும் கொள்கைகளும் காங்கிரசு கட்சியின் கொள்கைகளையும் மற்றும் முக்கிய அரசியல் தத்துவங்களையும் வடிவமைத்தது. அவருடைய உணர்ச்சிமயமான பந்தம் பின்னாளில் அவர் மகள் இந்திரா, தேசிய அரசாங்கம் மற்றும் காங்கிரசு கட்சியின் தலைவராகக் கருவியாய் செயல்பட்டார்.
நேருவின் வாழ்க்கையைப் பற்றிக் குறும் படங்கள் எடுக்கப்பட்டன. 1988 தொலைக் காட்சித் தொடரான பாரத் ஏக கோஜ் ', தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற அவரது நூலைத் தழுவியது. மற்றும் 2007 இல் ராஜின் இறுதி நாட்கள் [24] என்ற தொலைக்காட்சி படம், கேட்டன் மேத்தாவின் சர்தார் திரைப்படம், இதில் பெஞ்சமின் கிலானி நேருவாக நடித்தார்.
நேருவின் சொந்த விருப்பமான ஷெர்வானி அணிவது வட இந்தியாவில் இன்றும் ஒரு விழா உடையாக, சீருடையாகக் கருதப்படுகிறது.அதோடல்லாமல்,அவருடைய தனி உடை அலங்காரத்திற்க்காக ஒரு வகைக் குல்லா மற்றும் நேரு சட்டையென அவர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
நினைவு[தொகு]
இந்தியா முழுவதும் நிறையப் பொதுநிறுவனங்கள் மற்றும் நினைவகங்கள் நேருவின் நினைவிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று.
மும்பை நகரத்தின் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம்.
டில்லியில் நேருவின் வசிப்பிடம், நேரு நினைவுக் கூடம் மற்றும் நூலகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
நேரு குடும்பத்தாரின் ஆனந்த பவன் மற்றும் சுராஜ் பவன் ஆகியவைகளும் நேரு மற்றும் அவர் குடும்பத்தாரின் சட்டபூர்வமான நினைவகமாக இருக்கிறது.
எழுதிய நூல்கள்[தொகு]
நேரு சிறந்த ஆங்கில எழுத்தாளராகத் திகழ்ந்தார். அவர் எழுதிய நூல்கள் " தி டிஸ்கவரி ஆஹ்ப் இந்தியா " , "க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி" , அவருடைய " சுயசரிதை " மற்றும் " டுவார்ட்ஸ் ப்ரீடம் ".
No comments:
Post a Comment