Saturday 23 June 2018

M.S.VISWANATHAN ,MUSIC DIRECTOR ,LEGEND OF MUSIC BORN 1928JUNE 24 - 2015 JULY 14




M.S.VISWANATHAN ,MUSIC DIRECTOR ,LEGEND OF MUSIC BORN 1928JUNE 24 - 2015 JULY 14



” அன்பு மலர் ஆசை மலர் ” பாசமலர் படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் BORN 24 சூன் 1928 பாடும் பாடலும் ,இசையும் காதுகளில் என்றென்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan), அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 - 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)[1]. விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.
அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!.

நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி.
இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!.
மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை!
குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!
இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான்!
மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம்!
சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி!
எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன் –ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்!

மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்!
இளையராஜவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்!
`புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்!
தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு!
தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது!

உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டுவந்தார்!
`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது!
இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான் சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறு சுறுப்பாக இருக்கிறார்!
பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்!
சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள்!

வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!
`அத்தான்..... என்னத்தான்....’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிரிந்தது அரங்கம்!

1940 களில் குடும்ப வறுமையால் சினிமாவில் நுழைந்து , அநதக் கால இசையமைப்பாளர்களின் அரவணைப்பை பெற்று, இசை உதவியாளராக உயர்வு பெற வெறும் அனுதாபம் மட்டும் காரணமாக இருக்கவில்லை. இயல்பான ஆற்றலும் , இசை மீதான தீராத காதலுடன் தான் அவரது இசை வாழ்வு தொடங்கியது.

“புது வசந்தமாமே வாழ்வில்

இனிதாய் சுகமே காண்போமே ” என்ற பாடலுக்கு மெட்டமைக்கப் போராடிக்கொண்டிருந்த இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாநாயுடுவுக்கு இன்று நாம் கேட்கும் அந்தப்பாடலின் மெட்டுக்கு இதமாய் மெட்டமைத்து காட்டி பாரட்டுப்பெற்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

திருச்சி லோகநாதன் பாடிய அந்தப் புகழ் பெற்ற பாடலே மெல்லிசை மன்னரின் முதல் பாடல்.

அன்றைய புகழ் பெற்ற அத்தனை இசையமை ப்பாளர்களின் அறிமுகமும் ,அவர்களது இசைக்கு உதவியாளனாக பயணிக்க வைத்தாலும் இசைமேதை சி.ஆர்.சுப்பராமன் என்ற இசையமைப்பாளரின் உதவியாளனாக மட்டுமல்ல பிரதான ஹார்மோனியக் கலைஞனாக உயர்ந்தமை அவரது இசை வாழ்வுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது.

சி ஆர் சுப்பராமன் மரணத்தால் இடையில் நின்று போன அவரது படங்களான தேவதாஸ்,சண்டிராணி போன்ற படங்களை மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து முடித்தார்கள். எனினும் தனியே இசையமைக்கும் ஆர்வம் நடிகர் எம் .ஜி ஆர் நடித்த ஜெனோவா [1953] என்ற திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது.

அந்தக்காலத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களான எம் .எஸ். ஞாமணி , டி.ஏ.கல்யாணம் போன்ற இசைய மைப்பாளர்களும் இணைந்து இசையமைத்தார்கள். அந்தப்படத்தில் இடம் பெற்ற பாடல் பெரிய வெற்றி யைத் தரமுடியவில்லை எனினும் ” பரலோக மாத பரிதாபம் இல்லை “[பி .லீலா ] , ” நானறிவேனே உங்கள் ஜாலம் ” [ஏ .எம் .ராஜா +பி. லீலா ], “ஆசையே அலை மோதுதே ” [ஏ .எம் .ராஜா +பி. லீலா ], போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

பின்னாளில் இரட்டையர்களாக என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட மெல்லிசை மன்னர்கள் என்ற இணை 1950 களின் இறுதியிலும் 1960 பத்களிலும் உச்சம் பெறத் தொடங்கியது.

மெல்லிசையில் உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருந்த ஹிந்தி திரைப்பட இசை போல தமிழ் திரையிசை யையும் மெல்லிசைப்பக்கம் திருப்பியவர்களில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள்.
சம்பிரதாயமான ராகங்களிலேயே மரபு மாறாத இனிமையும் புதுமையும் மிக்க பாடல்களைத் தந்த அவர்கள் ,தமது காலத்தின் போக்காக அமைந்த உலக வெகுஜன இசையின் [பொப் இசையின் ] போக்குகளை எல்லாம் தமிழ் சினிமாவின் காட்சிக்கு ஏற்பசையை இசை தந்தார்கள்..

கர்னாடக இசை ராகங்களுடன் , ஹிந்துஸ்தானிய சங்கீத ராகங்களையும் ,ஹிந்துச்தானிய வாத்தியக்கருவிகளையும் இணைத்து பிரமிக்க வைக்கும் பாடல்களை அநாயாசமாகத் தந்து நம்மாலும் ஹிந்திப் பாடல்களுக்கு நிகராக இசையமைக்க முடியும் என நிரூபித்தார்கள்.

சாக்ஸபோன் , கிடார் ,ஹார்மோனிகா, ஒபோ , ட்ரம்பெட் ,கிளாரினெட்,பொன்கொஸ் போன்ற மேலைத்தேய , லத்தீன் அமெரிக்க இசைக்கருவிகளை இசை மேதை சி.ராமசந்திரா ஹிந்தி திரைப்படங்களில் பயன்படுத்தி புதுமை செய்தது போல ,அவற்றை தமிழ் திரை இசையில் புகுத்தி வெற்றிகண்டவர் மெல்லிசை மன்னர்கள்.

“உணர்ச்சியில்லாமல் நல்ல இசையை வழங்குதல் சாத்தியமற்றது..” என்பார் வயலின் இசை மேதை யகூடி மெனுகின் [Yehudi Menuhhin ] கூற்றுக்கு இணங்க உணர்வுகளை கிளறிவிடும் அற்புத கானங்களை தன்ன்னிகரற்று தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்பது இசைரசிகர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளும் கருத்தாகும்.

அவர்கள் இணைந்து இசையமைத்த பந்தபாசம் ,பாலும் பழமும் , பாகப்பிரிவினை ,பாசமலர் போன்ற படங்கள் மட்டுமல்ல பல்வேறு படங்களிலும் அவர்களின் இசை சோடை போனதில்லை.சாகாவரம் பெற்ற பாடல்களின் சொந்தக்கார்ரர்கள் மெல்லிசைமன்னர்கள்.
இசையில் பாண்டித்தியம் பெற்ற ராமமூர்த்தியும் , உலக இசையின் மீதும் பேரரவம் கொண்ட தேடல்மிக்க விஸ்வநாதனின் கூட்டிணைவு தந்த வெற்றிக்கனிகளை தமிழ் மக்கள் பரிபூரணமாக அனுபவித்தனர்.

இது போன்ற பாடல்களை பதத்திற்கு கூறி செல்லலாம்.எங்கெல்லாம் நல்லிசை கிடைக்குமோ அங்கெல்லாம் தேனிக்கள் போல சேகரித்து படைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

1965 மனக்கசப்பால் இரு மேதைகளும் பிரிந்தமை தமிழ் இசை ரசிகர்களுக்கு பேரிழப்பானதாகும்.தனித்து இசையமைத்தபின்னரும் வெற்றிக்கொடி நாட்டிக் காண்பித்தவர் விஸ்வநாதன்.

கனதிமிக்க ராகங்களைக் கையாண்டு வெற்றிகண்டு பாமரர்களை மட்டுமல்ல இசை அறிஞர்களையும் வியக்க வைத்தவர் விஸ்வநாதன்.

எத்தனை எத்தனைஇனிய மெட்டுக்கள் , இடையி சைகள் , எத்தனை எத்தனை வாத்தியங்கள் ,அதில் எத்தனை ,எத்தனை வியக்க வைக்கும் பிரயோகங்கள்!
பாட்டு என்றால் பாடுகிற படி இருக்க வேண்டும் என்பதின் இலக்கணமாக அமைந்த வகையில் பாட்டு வரிகளுக்கு உயிரோட்டமான இசையை தந்த நல்லிசையின் முன்னோடி விஸ்வநாதன்.

தனியே பிரிந்து இசையமைத்த சாகாவரமிக்க பாடல்களுக்கு சில உதாரணங்கள்..

பொன்னெழில் பூத்தது புது வானில் [கலங்கரை விளக்கம் ] இந்தப்பாடலின் இடையிசைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
நிலவே என்னிடம் நெருங்காதே [ ராமு [
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும் [ கொடிமலர் ]
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா [ உயர்ந்த மனிதன் ]
பூமாலையில் ஓர் மல்லிகை [ ஊட்டி வரை உறவு ]
முத்துக்களோ கண்கள் [ நெஞ்சிருக்கும் வரை ]
1960 கள் மட்டுமல்ல 1970 களில் எத்தனை ,எத்தனை இனிமையான பாடல்கள்,,அப்பப்பா ,,!
இயற்க்கை என்னும் இளைய கன்னி [ சாந்தி நிலையம் ]
நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும் [ நிலவே நீ சாட்சி ]
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் [ராமன் எத்தனை ராமனடி ]
பொட்டு வைத்த முகமோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் [ மூற்று தெய்வங்கள் ]
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் [தேனும் பாலும் ]
1970 களின் மத்தியில்
தென்றலுக்கு என்றும் வயது பதினாரன்றோ [பயணம்]
அதிசயராகம் ஆனந்த ராகம் [ அபூர்வ ராகங்கள் ]
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு [ வாழ்வு என் பக்கம் ]
ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் [ அபூர்வ ராகங்கள்

]
மெல்லிசைமன்னரின் தனித்துவம் வாய்ந்த சிறப்பு என நான் கருதுவது அவரது தனித்துவமிக்க இசை ஆளுமையை பாடக,பாடகிகள் மீது பதிய வைப்பதே!அவரது ஆளுமை பாடும் பாடகர்களின் குரலிலும் துல்லியமாக துருத்தி நிற்கும் வண்ணம் பாதிப்பை ஏற்படுத்தி விடுவதை நாம் கேட்கலாம்.

எந்த பெரிய பாடகர் பாடும் பாடலிலும் விஸ்வநாதனின் இசை ஆன்மா வெளிப்பட்டு நிற்கும். திரைபாடங்க ளுக்கு மட்டுமல்ல ,பக்திப்பாடல்கள் , தனிப்பாட்டல்கள் போன்றவற்றிற்கும் இசையமைத்தவர்

மெல்லிசைமன்னர்.வாத்திய இசையாக அவர் வடித்த Thrilling Thematic Tunes என்கிற இசை வடிவம் இசைஞானி போன்றோர் பின்னாளில் செய்த வாத்திய இசை வடிவங்க்ளுக்கு ஆதர்சமாக இருந்தது எனலாம். அவர் இசையமைத்த பக்திப்பாடல்களில் சில
..

புல்லாங் குழல் கொடுத்த மூங்கில்களே
ஆயர் பாடி மாளிகையில்
இலங்கை வானொலியில் ” பொங்கும் பூம்புனல் ” என்ற நிகழ்ச்சியின் முன்னிசை மெல்லிசை மன்னரின் Thrilling Thematic Tunes இல் வருகின்ற அழகிய இசைத்துணுக்காகும்.பிரமிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்ட புல்லாங்குழல் இசையை நாம் அதில் கேட்டு மகிழ்ந்தோம்.

மெல்லிசையின் வற்றாத ஊற்றாக பொங்கி பிரவாகித்த மெல்லிசைமன்னரின் கற்பனை வளம் விரிந்து சென்றது.தன்னெழுச்சியாக மெட்டுக்களை அள்ளி வீசுவதும் , சளைக்காமல் புதிய புதிய சந்தங்களை அள்ளி வீசுவதிலும் அவருக்கு அவரே நிகராக இருந்தார்.
அவருடன் இணைபிரியா சகபாடியாக இருந்த கவிஞர் கண்ணதாசன் மெல்லிசைமன்னர் பற்றி இப்படி நினைவு கொள்கிறார் ..
” அவனுக்கு இசையை தவிர வேறு ஒன்றும் தெரியாது.அவன் அரசியல், உலக நடப்புக்கள் பற்றி கேட்டால் சிரிப்பாக இருக்கும். ஆனால் இசை என்று வந்தால் , உலகெங்கிலும் என்னென்ன இசை உண்டு என்பது அவனுக்கு தெரியும். Light Music இல் அவன் INTERNATIONAL .”

அவர் இசையமைத்த அற்புத பாடல்களை எப்படி சீரழித்து விட்டார்கள் என்பதை இப்போது காட்சிகளாகக் காண சகிக்க முடியவில்லை.பாடல்களின் சிறப்புக்களால் தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் நடிகர்கள் மட்டுமே.
அவர் படைத்த அற்புத கானங்களால் காண சகிக்காத காட்சிகள் உலாவிக்கொண்டிருக்கின்றன.சகிக்க முடியாத வானொலிகள் , தொலைக்காட்சிகள் உயிர் பெற்றுக்கொடிருக்கின்றன.

இப்பட்டிப்பட்ட ஓர் அபூர்வ இசைமேதையை தகுந்த முறையில் கௌரவிக்காத ஒரு நாட்டில் ,இசை வீணர்களுக்கு டாக்டர் பட்டங்களும்,கௌரவங்களும் கொடுத்து விருதுகளை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தை ” தமிழ் நாட்டின் அடையாளப்பாடலை பண்டைத் தமிழர் பொற்றி வளர்த்த முல்லைப்பண்ணான இன்றைய மோகனத்தில் நம் மரபிசையின் மேன்மையை நெகிழ தந்த இசை மேதையை ,வீணாய் போன இந்த சகட்டுமேனி விருதுகள் கொடுத்து கேவலபடுத்த முடியாது.
அது போன்ற விருதுகளைப் பெறுவது நல்லிசை மேதைகளுக்கு பெருத்த அவமானமானதாகும் .
பிறப்பால் மலையாளியாகப் பிறந்து தமிழ் திரை இசையை தன ஆற்றலாலும் ,கடின உழைப்பாலும் வளர்த்த இசை மாமேதை எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பற்றி இசைஞானி சொல்வது நமக்கும் சாலப்பொருந்துகிறது.

” அவரது இசை என் நாடி , ஊறிக்கிடக்கிறது ” !
அவருடைய பாடல்கள் நல்ல இசை ரசிகர்களின் நாடி ,நரம்புகளிலெல்லாம் ஊறித்தான் கிடக்கிறது.
பாசமலர் படத்தில் அவர் பாடும் ” அன்பு மலர் ஆசை மலர் ” தமிழர்கள் காதுகளில் என்றென்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கை[தொகு]
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.[2]. இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.

இசை பயணம்[தொகு]
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள் [3]. தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள் [4]. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார் [5]. 1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது

நடிகராக விஸ்வநாதன்[தொகு]
கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா, அ. இ. ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் [6].

இசையமைத்த திரைப்படங்கள்[தொகு]
தமிழ் - 800 திரைப்படங்கள்
மலையாளம் - 80 திரைப்படங்கள்
தெலுங்கு - 30 திரைப்படங்கள்
கன்னடம் - 15 திரைப்படங்கள்
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]
முதன்மைக் கட்டுரை: எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
இராமமூர்த்தியுடன் இணைந்து சுமார் 750 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.

1950 களில் வெளிவந்த

” வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே” சண்டிராணி ], தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்[பெற்ற மகனை விற்ற அன்னை ] , கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே , துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன பேசுவது[ , நான் அன்றி யார் வருவார் [ மாலையிட்ட மங்கை ] போன்ற சில பாடல்களும் ,பின் 1960 களில் வெளிவந்த பாடல்களை விபரிப்பது அவசியமற்றது.இருந்தாலும் சில பாடல்களை சொல்லியே ஆக வேண்டும்
மலர்ந்தும் மலரத பாதி மலர் போல [பாசமலர் ]
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் [ பாக்கியலக்சுமி ]
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் [ பாலும் பழமும் ]
ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை [ பணத்தோட்டம் ]
கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே [ கர்ணன் ]

முதன்மைக் கட்டுரை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான பாடல்களில் சில:[தொகு]
எங்கே தேடுவேன் (பணம்)
மயக்கும் மாலை (குலேபகாவலி)
குறுக்கு வழியில் (மகாதேவி)
முகத்தில் முகம் (தங்கப்பதுமை)
செந்தமிழ் தேன்மொழியாள் (மாலையிட்ட மங்கை)
தென்றல் உறங்கிடும் (பெற்ற மகனை விற்ற அன்னை)
ஆடைகட்டி (அமுதவல்லி)
ஏன் பிறந்தாய் மகனே (பாகப்பிரிவினை)
தங்கத்திலே ஒரு குறை (பாகப்பிரிவினை)
ஆடாத மனமும் (மன்னாதி மன்னன்)
பிறக்கும் போதும் (கவலை இல்லாத மனிதன்)
பாலிருக்கும் பழமிருக்கும் (பாவமன்னிப்பு)
அத்தான் என்னத்தான் (பாவமன்னிப்பு)
ஜல் ஜல் ஜல் (பணம்)
காலங்களில் அவள் (பாவமன்னிப்பு)
மாலைப் பொழுதின் (பாக்யலெட்சுமி)
மலர்களைப்போல் தங்கை (பாசமலர்)
நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)
பால்வண்ணம் (பாசம்)
பாலும் பழமும் (பாசம்)
உடலுக்கு உயிர்காவல் (மணப்பந்தல்)
வாராய் என் தோழி (பாசமலர்)
அத்திக்காய் காய் (பலே பாண்டியா)
தேவன் கோயில் (மணியோசை)
எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்)
கல்லெல்லாம் மாணிக்க (ஆலயமணி)
கொடி அசைந்ததும் (பார்த்தால் பசி திரும்)
மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
ஓடம் நதயினிலே (காத்திருந்த கண்கள்)
பொன்னை விரும்பும் (ஆலயமணி)
பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
பூஜைக்கு வந்த மலரே (பாதகாணிக்கை)
நினைப்பதெல்லாம் ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
பொறந்தாலும் ( போலிஸ்காரன் மகள் )
ரோஜா மலரே ( வீர திருமகன் )
சொன்னது நீதானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
உள்ளம் என்பது ஆமை ( பார்த்தால் பசி திரும் )
வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
வீடுவரை உறவு ( பாத காணிக்கை )
இந்த மன்றத்தில் ( போலிஸ்காரன் மகள் )
அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
அத்தை மடி ( கற்பகம் )
அவள் பறந்து போனாளே ( பார் மகளே பார் )
கண்கள் எங்கே ( கர்ணன் )
நெஞ்சம் மறப்பதில்லை ( கர்ணன் )
நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
பார் மகளே பார் ( ஆனந்த ஜோதி )
பனி இல்லாத ( ஆனந்த ஜோதி )
பாரப்பா பழனியப்பா ( பெரிய இடத்துப் பெண் )
பக்கத்து வீட்டு ( கற்பகம் )
பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
உள்ளத்தில் நல்ல உள்ளம் ( கர்ணன் )
ஆடவரெல்லாம் ( கருப்புப் பணம் )
ஆயிரத்தில் ( கை கொடுத்த தெய்வம் )
ஆரோடும் மண்ணில் ( பழனி )
அமைதியான நதி ( ஆண்டவன் கட்டளை )
அவளுக்கென்ன ( சர்வர் சுந்தரம் )
அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
அவள் மெல்ல சிரித்தாள் ( பச்சை விளக்கு )
அத்தை மகள் ரத்தினத்தை ( பணக்கார குடும்பம் )
அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
எனக்கொரு மகன் ( பணம் படைத்தவன் )
என்ன பார்வை ( காதலிக்க நேரமில்லை )
ஹலோ மிஸ் ( என் கடமை )
சிட்டுக் குருவி ( புதிய பறவை )
அண்ணன் என்னடா ( பழனி )
இந்த புன்னகை ( தெய்வத் தாய் )
நான் ஒரு குழந்தை ( படகோட்டி )
ஒளிமயமான எதிர்காலம் ( பச்சைவிளக்கு )
கண் போன போக்கிலே ( பணம் படைத்தவன் )
பறக்கும் பந்து பறக்கும் ( பணக்கார குடும்பம் )
பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் )
மூன்றெழுத்தில் என் ( தெய்வத்தாய் )
தொட்டால் பூ மலரும் ( படகோட்டி )
தங்கரதம் ( கலைக்கோயில் )
அதோ அந்த பறவை ( ஆயிரத்தில் ஒருவன் )
சின்ன சின்ன கண்ணனுக்கு ( வாழ்க்கை படகு )
என்ன என்ன வார்த்தைகளோ ( வெண்ணிற ஆடை )
காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
கண்ணன் வருவான் ( நெஞ்சிருக்கும் வரை )
குமரிப் பெண்ணின் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
நேற்றுவரை நீ யாரோ ( வாழ்க்கைப் படகு )
உன்னை நான் சந்தித்தேன் நீ ( ஆயிரத்தில் ஒருவன் )
யார் அந்த நிலவு ( சாந்தி )
ஹலோ மிஸ்டர் ஜமின்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
நான் மாந்தோப்பில் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
சித்திரமே ( வெண்ணிற ஆடை )
பூ முடிப்பாள் ( நெஞ்சிருக்கும் வரை )
விண்ணோடும் முகிலோடும் ( புதையல் )
பெற்ற விருதுகள்[தொகு]
இசைப்பேரறிஞர் விருது, 2003
கலைமாமணி விருது
மதிப்புறு முனைவர் பட்டங்கள் - 2

No comments:

Post a Comment