MOOVALOOR RAMAMIRTHAM 1883-1962
தேவதாசி முறை” ஒழித்த " . ஒரு பெண் போராளி"
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.....
(படம் :- கலைவாணர் ,மதுரம்மாவுடன் மூவலூர் '' ராமாமிர்தம் அம்மையார்")
1883-ஆம் ஆண்டு திருவாரூரில் கிருஷ்ணம்மாள் - சின்னச்சாமி ஆகியோரின் மகளாகப் பிறந்தவர் ராமாமிர்தம்.
இவர் பிறந்த சமூகத்தாரால் இசையும் கலைகளும் பெருமளவு வளர்க்கப்பட்டிருந்தாலும் பொட்டுக் கட்டுதல் எனும் பெயரில் இச் சமூகம் பல நூற்றாண்டுகளாகப் பெரும் இழிவுகளைச் சந்தித்து வந்தது. எனவே மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளை ஒழித்தால்தான் இத்தகையச் சமூக இழிவில் இருந்து விடுபட முடியும் என்பதை முதன் முதலில் உணர்ந்த பெண் போராளி ராமாமிர்தம் அம்மையார்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழகத்தின் முதல் பெண் களப் போராளியாகவும், முதல் பெண் பேச்சாளராகவும் அம்மையார் உருவானார்
தந்தை பெரியார், திரு.வி.க மற்றும் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரின் .முயற்சியால்... டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் மூலமாக "தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்" நிறைவேற்றப்பட்டது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்களுக்கு உடனடியாகச் சிறிதேனும் விடுதலை அளிக்கும் உடனடித் தீர்வுகளுக்காக அவர்களோடு இணைந்து இரண்டறக் கலந்து பணியாற்றுவது அவசியம் என்ற கருத்து பெண்ணிய விமர்சகர்களிடம் தற்போது எழுந்துள்ளது. அதற்குச் சிறந்த சான்றாக வாழ்ந்து மறைந்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
- பா ஜீவசுந்தரி எழுதிய `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்' நூலில் இருந்து.
No comments:
Post a Comment