Monday 18 June 2018

JIJIBHAI SHAHAJI BHONSLAE ,MOTHER OF SIVAJI DIED JUNE 17,1674



JIJIBHAI SHAHAJI BHONSLAE ,MOTHER OF SIVAJI DIED JUNE 17,1674



ஜிஜாபாய் ஷாகாஜி போஸ்லே (Jijabai Shahaji Bhosale) ( DIED 17 சூன் 1674), மராத்தியப் பேரரசின் நிறுவனர் சிவாஜியின் அன்னையாவார்.

குடும்பம்[தொகு]
ஜிஜாபாய் - ஷாகாஜி போஸ்லே இணையருக்கு ஆறு மகள்களும், சம்பாஜி மற்றும் சிவாஜி என இரண்டு மகன்களும் பிறந்தனர்.

சிவாஜிக்கு மூன்று வயது இருக்கையில் ஜிஜாபாயின் கணவரும், சிவாஜியின் தந்தையுமான சகாஜி போஸ்லே, துக்காபாய் என்பவரை 1630-இல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு, இரண்டாம் மனைவி மற்றும் சம்பாஜியுடன் தனியாக வாழ்ந்தார்.

1644ல் சகாஜி, பூனேயில் தன் முதல் மனைவி ஜிஜாபாய் மற்றும் இளைய மகன் சிவாஜிக்கும் லால் மஹால் எனும் அரண்மனை கட்டி குடியமர்த்தினார்.


சிவாஜி மீதான அக்கறை[தொகு]
தாய்நாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும் உறுதியான பற்று கொள்ளும்வகையில் ஜிஜாபாய், சிவாஜிக்கு தமது பாடங்களுடன் கருத்துளைக் கூறி ஓர் அழிக்க முடியாத நம்பிக்கையை அவருக்குள் உருவாக்கினா.  சுய-மரியாதை மீதான ஓர் இயற்கையான பற்றையும், அன்னிய அரசியல் செல்வாக்கின் மீதான வெறுப்பையும் ஜிஜாபாய், சிவாஜிக்கு ஊற்றி வளர்த்தார். சொந்த கலாச்சாரத்தின் மீதான அவரின் பற்றும், பொறுப்பும், அத்துடன் சிறந்த இந்திய புராணங்களான மகாபாரதம், இராமாயணத்தில் போன்றவற்றிலஇருந்து எடுத்துக்கூறிய கதைகளும் சிவாஜியின் பண்பை வடிவமைத்தன.

மறைவு[தொகு]
ஜிஜாபாயின் மூத்த மகன் சம்பாஜி ஒரு முற்றுகைப் போரில், அப்சல் கான் எனும் படைத்தலைவனால் கொல்லப்பட்டார். சிவாஜி மராத்தியப் பேரரசராக முடிசூட்டிக் கொண்ட பின்னர் ஜிஜாபாய், 17 சூன் 1674-இல் உயிர் துறந்தார்


விதி வலியது. மானுக்கு முடி சூட்டப்பட்ட பன்னிரண்டாவது நாள் ராஜா மாதாவாக இருந்த ஜீஜாபாய் மறைந்தார்.1674 june 17

வீரம் செறிந்த மராத்திய மண்ணின் வீரர்கள் முகலாய மன்னர்களிடமும் நிஜாம்களிடமும் தளபதிகளாகப் பணியாற்றிய காலகட்டம் சுயமரியாதை மிகுந்த கூர்மையான் புத்திசாலிப் பெண்மணியான ஜீஜாபாயின் தந்தை ஜாதவி ராவ் மொகலாயர்களின் பக்கம். கணவர் ஷாஹாஜி நிஜாமின் பக்கம். தந்தையும் கணவரும் எதிரெதிர் அணியில் என்ற சூழ்நிலையில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த ஜீஜாபாய் தன் புகுந்த வீட்டின் பக்கமே நின்றார். ஆனாலும் மராத்திய மக்கள் சுய மரியாதையோடு தமக்கென ஒரு ராஜ்ஜியத்தி உருவாக்கி சுயமாக ஆளவேண்டுமென்பதே அவரது லட்சியமாக இருந்தது. அதற்காக தனக்கொரு வீர மகன் பிறக்க வேண்டும் என தன் இஷ்டதெய்வமான ஜகதாம்பிகையைப் பிரார்த்தித்தார் ஜீஜாபாய். 1630 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி அவருக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு அவர் சூட்டிய பெயர் சிவாஜி. தன் மகனை மாவீரனாக்குவதற்கு உறுதி பூண்டார் அந்த வீர அன்னை.


சிவாஜிக்கு முதல் ஆசிரியரே அவரது அன்னை தான். சிறு வயதிலேயே தினமும் ராமாயணம் மகாபாரதம் மற்றும் பாகவத்த்திலிருந்து கதைகளை சொல்லி வீரத்தையும் அறநெறிகளையும் போதித்தார் ஜீஜாபாய்.

மகன் பரதனை வளர்த்த சகுந்தலையைப்போல லவ குசனை வளர்த்த சீதை போல தந்தை இல்லாத குறை தெரியாதபடி சிவாஜியை வளர்த்தார். தக்க வயதில் சிவாஜிக்கு போர்ப் பயிற்சி அளித்து வீரனாக்கினார். பதினாறு வயதில் சிவாஜி படையெடுத்துச் சென்று தோரங் கத் கோட்டையைக் கைப்பற்றியது அவரது இளமை வீரத்துக்கு எடுத்துக்காட்டு. இரவு முழுவதும் தான் இருந்த சிவ நேரிக்கோட்டையிலிருந்து சிகக்கோட்டையையே கண் அயராமல் கவனித்துக்கொண்டிருந்த ஜீஜாபாய் காலையில் கோட்டையின் மேல் சிவாஜி பறக்க விட்ட காவிக் கொடியைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

ஔரங்கசீப்பை ஆக்ரா கோட்டையில் சந்திப்பதற்காக சிவாஜி புறப்பட்டுச் சென்ற போது நாட்டை அவரது கைகளில் ஒப்படைத்துச் சென்றார். ஆக்ரா கோட்டையில் சிவாஜியும் அவரது மன ராம் பாஜியும் சிறை பிடிக்கப்பட நெருக்கடியான நிலையிலும் நாட்டின் நிர்வாகத்தைத் திறம்பட கவனித்துக்கொண்டார் ஜீஜாபாய்.

1664ல் சிவாஜியின் தந்தை வேட்டைக்குச் சென்று குதிரையிலிருந்து விழுந்து இறந்த போது தாய் ஜீஜாபாய் அந்தக்கால மரபுப்படி தன் கணவருடன் சேர்ந்து உடன் கட்டை ஏற விரும்பினார். ஆனால் சிவாஜி இந்த நாட்டுக்கு உங்கள் வழிகாட்டுதல் அவசியம் என எடுத்துச் சொல்லி உடன் கட்டை ஏறாமல் தடுத்து நிறுத்தினார்.


1674ல் தன் தாயின் ஆசியோடு அரியணையேறினார் சிவாஜி. விதி வலியது. மானுக்கு முடி சூட்டப்பட்ட பன்னிரண்டாவது நாள் ராஜா மாதாவாக இருந்த ஜீஜாபாய் மறைந்தார்.

No comments:

Post a Comment