Monday 18 June 2018

MUMTAZ MAHAL DIED ON CHILD LABOUR BORN 1593 SEPTEMBER 1-1631 JUNE 17










MUMTAZ MAHAL  DIED ON CHILD LABOUR 
BORN  1593 SEPTEMBER 1-1631 JUNE 17


பழைய நினைவுகளில் இருந்து ஷாஜகான் மீண்ட போது மும்தாஜ் பேகத்தின் உயிர் பிரிந்திருந்தது 1631 june 17.

ஏழைகள் மற்றும் ஏழைகளின் சார்பில் தலையிட்டு அவர் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது, நீதிமன்றத்திற்காக நிகழ்த்தப்பட்ட யானை மற்றும் போர் சண்டைகளைப் பார்த்து மகிழ்ந்தாள்.மும்தாஜ் பல கவிஞர்கள், அறிஞர்கள் மற்றும் பிற திறமையான நபர்களை ஆதரித்தார். புகழ்பெற்ற சமஸ்கிருத கவிஞர் வன்சிதரா மிஸ்ரா வின் கவிதைகள் பேரரசி க்கு பிடித்தவை

அவரது பிரதான பெண்மணி Sati-un-Nissa யின் பரிந்துரையின் பேரில், , மும்தாஜ் ஏழை அறிஞர்கள், இறையியலாளர்கள் மற்றும் பக்தியுள்ள ஆண்கள், மகள்களுக்கு ஓய்வூதியங்கள் மற்றும் நன்கொடைகளை வழங்கினார் முகலாய சாம்ராஜ்யத்தில் கட்டிடக்கலைக்கு எல்லா பெண்களுக்கும் பொதுவானது, எனவே மும்தாஸ் ஆக்ராவில் ஜஹாரா பாக் ஆறுஒட்டிய தோட்டத்திற்கு தன கலையுணர்வை அர்ப்பணித்தார்,

பல குற்றவாளிகள் மும்தாஜின் கருணை பார்வையில் இருந்து தப்பி யுள்ளனர் பல ஏழைகள் ,அனாதைக்கு திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் .தனக்கு எண்ணற்ற கொடுமைகள் 
செய்த மாமியார் நூர்ஜஹான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுத்தவர் மும்தாஜ்


ஜஹாங்கீரின் இறப்புக்கு பின் ஷாஜகான் பதவிக்கு வந்தது பிடிக்காதவர் கான் ஜஹான் லோதி .அவரை விடாமல் துரத்திக்கொண்டிருந்தார் ஷாஜஹான் ..புந்தேல்கண்டு ,கோண்ட்வண, என்று அஹமத் நகரில் முற்றுகை இட்டார் .பஞ்சம் காரணமாய் உணவு பற்றாக்குறை யில் இருந்த ஷாஜஹான் பின்னடைவை சந்தித்தார் ஆனால் அடிமேல் அடியாய் இன்னொரு செய்தி அவருக்கு காத்திருந்தது

மும்தாஜ் பேகம் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார் .14 ஆவது பெண்குழந்தை சுகமாய் பிறந்திருக்கிறது என்று

புர்ஹாண்பூர் மாளிகையில் மும்தாஜின் கைகளை பிடித்துக்கொண்டார்....
கண்ணீர் வடித்தார் ...
அழாதீர்கள் ..மன்னவரே !

எனக்கு ஒரு இறுதி ஆசை ஒன்று உள்ளது .இனி நீங்கள் யாரையும் திருமணம் செய்துகொள்ள கூடாது நான் இறந்த பிறகு என் சமாதி மேல் ஒரு அழகிய மண்டபம் கட்டுங்கள்...செய்வீர்கள் தானே அன்பரே !

ஷாஜகான் கடந்த வருடங்களுக்கு பயணப்பட்டிருந்தார்

மீனா பஜார் .அழகான பெண்கள் மட்டும் நடத்தும் ஒரு வாரம்மட்டும் நடக்கும் க டை தெரு .ஆண்கள் எவருக்கும் அனுமதி இல்லை அரசு முக்கியஸ்தர்கள் மட்டுமே பங்கெடுக்கலாம் .அந்தப்புர அழகிகளை பொருக்கி எடுக்கும் திருவிழா என்றும் சொல்லலாம் .

சந்திரனை பரிகசிக்க செய்யும் வட்ட முகம் .

காந்தத்தினாலே செய்யப்பட்ட அழகிய கண்கள் ,......

அதில் எப்போதுமே பொதிந்து நிற்கும் அழகும் ,பேரொளியும் நிறைந்த பார்வை ......

சிற்பி செதுக்கியது போல் அழகிய வளைவான நாசி .....

இதழில் எப்போதும் குடி கொண்டிருக்கும் புன்னகை ...,

யாரிவள் ?

என்ன இளவரசரே ! அப்படி பார்க்கிறீர்கள் !!
வேண்டுமா உங்களுக்கு இந்த வைரக்கல் ! 
-
வலது கையை விரித்தாள் .அதில் ஒரு வைரம் ஜொலித்துக்கொண்டிருந்தது


-ஆகா ..என்ன அழகான கைகள் ! 
வைரத்தை விட அவள் உள்ளங்கை மிக அழகாயிருந்தது!! 
ஷாஜகான் உள்ளம் துடித்து கொண்டிருந்தது

உங்களுக்காக விலையை குறைத்து சொல்கிறேன் 
ஒரு லட்சம் தந்தாள் போதும் !
-
அவள் விரித்து அந்த கேள்வியை கேட்டவுடன் 
வாங்காமல் இருக்க முடியுமா !!
யோசனையில் ஆழ்ந்தார் .

என்ன இளவரசரே ! 
பேசாமல் என்னையே பார்த்து கொண்டிருக்கிறீர்கள் !!
........
வைரம் வேண்டாமா !? 
கலவென நகைத்தாள் 
....
பணம் இல்லையா ? 

கேலியான பார்வை யை வீசி எறிந்தாள் 
.....
அப்போதும் அந்த பெண்ணையே 
பார்த்துக்கொண்டிருந்தார் .....

சிரித்துக்கொண்டிருந்தார் ...
லயித்துக்கொண்டிருந்தார் ..
அவள் அழகை பருகி கொண்டிருந்தாள் 
...........................
சட்டென்று தன் கழுத்தில் இருந்த முத்து மாலையையும் ,வைர பதக்கம் பதித்த சங்கிலியையும் அந்த பெண்ணின் 
கையில் கொடுத்தார் .

அவள் திகைத்து நின்றாள் .......

அந்த சந்தையில் பெண்கள் எழுப்பிய ஆரவாரம் விண்ணை பிளந்தது- ..........................

அவள் பெயர் அர்ஜூமந் பானு பேகம் என்ற மும்தாஜ்

பழைய நினைவுகளில் இருந்து ஷாஜகான் மீண்ட போது மும்தாஜ் பேகத்தின் உயிர் பிரிந்திருந்தது 1631 june 17.


இந்தியாவிலுள்ள நினைவு சின்னங்களில் உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியல் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகனால் இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகல் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மும்தாஜைக் காட்டும் படம்
1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஸ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஸ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷா ஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது:

"குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால், மன்னிக்கப்பட்டவனைப் போல் அவன் தனது பாவங்களிலிருந்து விடுதலை பெறுவான். ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு உண்டாகும். சூரியனும், சந்திரனும் கண்ணீர் வடிப்பர். படைத்தவனைப் பெருமைப் படுத்தவே இக்கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது".
தாஜ்மகால், பாரசிக கட்டிட கலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான சமர்கண்டிலுள்ள தைமுரின் சமாதி , ஹுமாயுன் சமாதி , ஷா ஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிற மணர்கர்களால் கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான் வெண்ணிறச் சலவை கற்களால் பயன்படுத்தியுள்ளான். இவன் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் திருந்திய நிலையை அடைந்தன.

கட்டிடக்கலை
தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவி மட்டம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசிக கட்டிட கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றி (cube) வடிவமானது.இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு மினார்கள் அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.

வெளிப்புற அழகூட்டல்
தாஜ்மகாலின் வெளிப்புற அழகூட்டல், முகலாய கட்டிட கலை சார்ந்த பிற கட்டிடங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக் கட்டிடத்தின் வெளிப்புற அழகூட்டல், நிறப்பூச்சு, சாந்துப்பூச்சு அல்லது கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது. மனித உருவங்களையோ பிற விலங்கு உருவங்களையோ அழகூட்டல்களில் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ள இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க அழகூட்டல்களில், வணபெழுதுகள் , செடி கொடி வடிவங்களும் பயன்பட்டுள்ளன. தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்டுள்ள வனப்பெழுத்துக்கள் "துலுத்" எனப்படும் வகையைச் சார்ந்தது. இவற்றைப் பாரசீக வனப்பெழுத்துக் கலைஞரான அமானத் கான் என்பவரால் உருவாக்கியுள்ளார். இவ் வனப்பெழுத்துக்கள் சலவைக்கல்லில், சூரிய கந்த கற்கள் பதித்து உருவாக்கப்பட்டவை.

கட்டுமானம்
ஆக்ரா நகருக்குத் தெற்கே உள்ள நிலமொன்றில் தாஜ்மகால் கட்டப்பட்டது. மகாராஜா ஜெய் சிங் என்பவருக்குச் சொந்தமான இந்த நிலத்தைப் பெறுவதற்காக, ஷா ஜகான் அவருக்கு ஆக்ரா நகரின் மையப்பகுதியில் பெரிய நிலமொன்றை வழங்கினார். ஏறத்தாழ மூன்று ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட பகுதி அகழப்பட்டு மண் நிரப்பி இறுக்கப்பட்டு ஆற்று மட்டத்திலிருந்து 50 மீட்டர் உயரத்துக்கு நிரப்பப்பட்டது. முதன்மைக் கட்டிடப் பகுதியில் ஆழமான கிணறு போன்ற அமைப்புகள் தோண்டப்பட்டு கற்களும், சிறு பாறைகளும் இட்டு நிரப்பி அத்திவாரம் இடப்பட்டது. மூங்கிலால் ஆன சாரமரங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்காக செங்கற்களால் தற்காலிக அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வமைப்புக்கள் மிகவும் பெரிதாக இருந்ததால் இதட் அகற்றுவதற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடுமென்று அக்காலத்து மேற்பார்வையாளர்கள் கருதியதாகத் தெரிகிறது. மரபுவழிக் கதைகளின்படி கட்டிடம் கட்டி முடிந்ததும், இந்தத் தற்காலிக அமைப்பில் இருந்து எவரும் கற்களை எடுத்துத் தாங்களே வைத்துக் கொள்ளலாம் என அறிவித்தானாம் இதனால் ஓரிரவிலேயே இவ்வமைப்புக்கள் அகற்றப்பட்டனவாம். சலவைக்கற்களை கட்டிடக் களத்துக்கு எடுத்துச் செல்வதற்கு 15 கிலோமீட்டர் நீளமான சாய்தளபாதை பாதை ஒன்று மண் போட்டு இறுக்கி அமைக்கப்பட்டதாம். 20 தொடக்கம் 30 எருதுகளைக் கொண்ட குழுக்களைக் கொண்டு இதற்கென உருவாக்கப்பட்ட வண்டிகளில் கற்களை ஏற்றி இழுத்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.

கறுப்பு நிறத் தாஜ் மஹால்
தாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான் அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட கறுப்பு நிறத் தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவிருந்த சந்தேகத்தின்படி ஆராய்ச்சியாளர்கள் அத்தாஜ்மஹால் இருந்த இடத்தின் சான்றுகளை ஆராய்ந்துள்ளனர்.அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காணப்படவில்லை ஆனால் அதன் அமைப்புகள்,கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகளைப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ்மகாலைப் பார்த்து வந்தார் என்பதும் தாஜ்மகாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.........


பிரபல மொகலாய ராணி மும்தாஜ் மகல் ஷாஜகான் 1631 ஜூன் 17 இல் இறந்தார்

Mumtaz Mahal (1 September 1593 – 17 June 1631) [mumˈt̪aːz mɛˈɦɛl]; meaning "the chosen one of the palace") was a Mughal Empress and chief consort of emperor Shah Jahan. The Taj Mahal in Agra was constructed by her husband as her final resting place.

Born as Arjumand Banu Begum in Agra in a family of Persian nobility as a daughter of Abdul Hasan Asaf Khan, making her a niece and later daughter-in-law of Empress Nur Jehan, the wife of the emperor Jahangir.[1] Arjumand Banu Begum was married at the age of 19, on 10 May 1612, to Prince Khurram, later known as Emperor Shah Jahan, who conferred upon her the title "Mumtaz Mahal". Though betrothed to Shah Jahan in 1607, she ultimately became his second wife in 1612 and was his favorite. She died in Burhanpur in the Deccan (now in Madhya Pradesh) during the birth of their fourteenth child, a daughter named Gauhara Begum.[2]

Mumtaz Mahal mothered fourteen children by Shah Jahan, including Aurangzeb, the Imperial Prince Dara Shikoh, the heir apparent anointed by Shah Jahan, who temporarily succeeded Shah Jahan until deposed by his brother Aurangzeb, and Jahanara Begum, the Imperial Princess.

No comments:

Post a Comment