Friday 15 June 2018

the legend of tamil cinema A.C.thirulogaChandar JUNE 11,1930-2016 JUNE 15







the legend of tamil cinema 
A.C.thirulogaChandar
JUNE 11,1930-2016 JUNE 15




ஏ. சி. திருலோகச்சந்தர் (A. C. Tirulokachandar, 11 சூன் 1930 - 15 சூன் 2016) தமிழகத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார்.[2][3] 1969 இல் இவர் இயக்கிய தெய்வமகன் திரைப்படம் ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தென்னிந்தியத் திரைப்படமாகும்.[4][5]

வேலூர் மாவட்டம் ஆற்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருலோகச்சந்தர். 1962 இல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார்.[6]



பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தரின் மறைவையொட்டி, மூத்த பத்திரிகையாளரும், சமூக வலைத்தள கருத்தாளருமான ஏழுமலை வெங்கடேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவிட்டுள்ளார்.

'ஏ.சி.திருலோகச்சந்தர் - வெற்றிகளை குவித்தவர் ' என்ற தலைப்பில் அவர் இட்ட பதிவில் இடம்பெற்ற வியத்தகு தகவல்கள்:

* கல்லூரியில் படிக்கும்போது சக நண்பனின் தந்தை அறிமுகம் கிடைக்கிறது. அவர் வேறு யாருமல்ல, பல ஆண்டுகளாக சினிமா உலகில் கோலோச்சிவரும் பத்மநாப ஐயர். அவரிடம் உதவி இயக்குநராக சேருகிறார் ஏ.சி.திருலோகச்சந்தர். 1952ல் வெளியாகும் அந்த படம் எம்ஜிஆர் நடித்த 'குமாரி'யில் பணிபுரிகிறார். இதேபோல இன்னொரு ஜாம்பவான் இயக்குநர் கே.ராம்நாத்திடமும் உதவி இயக்குநர் வேலை.

* இப்படி காலம் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் இயக்குநர் ஜோசப் தளியத், தான் இயக்கும் 'விஜயபுரி வீரன்' படத்தில் உதவி இயக்குநர் என்பதோடு திரைக்கதை அமைக்கும் வாய்ப்பையும் அளிக்கிறார். ஆங்கில படங்களை பார்த்து அதன் தாக்கத்தில் விதவிதமான காட்சிகளையும் கதைகளையும் மனதில் வடிவமைப்பதில் ஏசிடி படு கில்லாடி.

* சி.எல்.ஆனந்தன் (நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை) கதாநாயகனாக நடித்து 1960-ல் வெளியான 'விஜயபுரி வீரன்' படம் மெகா ஹிட். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் எஸ்.ஏ.அசோகனுக்கும் ஏவிஎம் நிறுவனத்திடம் நல்ல நட்புண்டு. அதன் அடிப்படையில் ஏ.சி.டி திறமை பற்றி மெய்யப்ப செட்டியாரிடம் சொல்கிறார். இப்படித்தான் ஏவிஎம் என்ற தாய்வீட்டில் நுழைகிறார் ஏ.சி.டி.


* 1962ல் சி.எல்.ஆனந்தனை கதாநாயகனாகவும் நடிகை சச்சுவை கதாநாயகியாகவும் வைத்து ஏவிஎம்முக்காக வீத்திருமகனை இயக்குகிறார் ஏசிடி. ரோஜா மலரே ராஜகுமாரி மற்றும் வெத்திலை போட்ட பத்தினி பொண்ணு ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் அலறின. படம் படு ஹிட். இன்னொரு பக்கம் ஏசிடி கொடுத்த கதைதான் ஏவிஎம்மில் தயாரான சிவாஜி, ஜெமினி நடித்து நட்பின் பெருமையை சொன்ன 'பார்த்தால் பசி தீரும்' படம். குழந்தை நட்சத்திரத்திலேயே கமல் இரட்டை வேடத்தில் கலக்கிய படம் இது.

* 1963ல் ஏசிடி-ஏவிஎம் காம்பினேஷனில் 'நானும் ஒரு பெண்' படம். சிறந்த படம், தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தது. சிவக்குமாரை முதன் முதலில் 'காக்கும் கரங்கள்' (1965) என்ற படம் மூலம் திரையில் அறிமுகப்படுத்தியதும் ஏசிடிதான்.ஏவிஎம் முதன் முதலில் வண்ணப்படம் தயாரிக்க விரும்பியதும் அந்த வாய்ப்பு அப்போதைய வசூல் சக்ரவர்த்தியான எம்ஜிஆருக்கே போனது. அதற்குமுன் வெளியான நாகிரெட்டியின் 'எங்க வீட்டு பிள்ளை' செய்து கொடுத்த வசூல் அப்படி..

* எம்ஜிஆரை வித்தியாசமான பாணியில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்து, ஏசிடியே இயக்கவேண்டும் என்று அடம்பிடித்தவர் நடிகர் அசோகன்தான். ஏசிடி இயக்கி 1966ல் வெளியான 'அன்பே வா', 50 ஆண்டுகளாகியும் இன்றும் ரசிகர்களை சுண்டியிழுக்கிறது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமோ?


* இதேபோல ஏசிடி- ஏவிஎம் கூட்டணியில் ஜெமினி நடித்த 'ராமு' படமும் சிவாஜி நடித்த 'பாபு' படமும் ஹிட்டாகி பல மொழிகளில் தாண்டவம் போட்டது தனிக்கதை. நடிகர் ரவிச்சந்திரனையும் காஞ்சனாவையும் வைத்து கலர்ஃபுல்லாக ஆனால் திகிலோடு மிரட்டிய ஏசிடியின் இன்னொரு பிளாக் பஸ்டர் படம் 'அதே கண்கள்'. ஏசிடி இயக்கத்தில் மைல் கல் படம் என்றால் 'இரு மலர்கள்' (1967) படத்தை சொல்லவேண்டும். சிவாஜி, பத்மினி ஆகிய இருவரையும் அசால்ட்டாக சாந்தி என்ற பாத்திரத்தில் துவம்சம் செய்திருப்பார் கே.ஆர். விஜயா.

* இங்கே இன்னொரு சுவையான விஷயம் என்ன வென்றால் 1967-ல் சிவாஜியை வைத்து ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய 'இரு மலர்கள்' படம்.. ரிலீசுக்கு ஏற்பாடு ஆகிவிட்டது.. அதே நாளில் ஜாம்பவான் ஸ்ரீதர், சிவாஜி நடித்த 'ஊட்டி வரை உறவு' படத்தை வெளியிடுகிறார். ஆனால் என்ன ஆச்சர்யம். ஒரு கதாநாயகனின் இரண்டு படங்களுமே நூறு நாட்களை கடந்தன.

* 1970-ல் சிவாஜியை வைத்து ஏசிடியின் 'எங்கிருந்தோ வந்தாள்' படம் ரிலீசுக்கு ஏற்பாடு ஆகிவிட்டது.. சோதனையாக டி.ஆர். ராமண்ணா சிவாஜியை வைத்து 'சொர்க்கம்' படத்தை அதே நாளில் ரிலீஸ் செய்கிறார். இரண்டு படங்களுமே 100 நாட்கள்.

* 1975ல் சிவாஜியை வைத்து ஏசிடி, 'டாக்டர் சிவா' படம் இயக்கி வெளியிடும் அதே நாளில் ஸ்ரீதர் மீண்டும் சிவாஜி கதாநாயகனாக நடித்த 'வைர நெஞ்சம்' படத்தை வெளியிடுகிறார். இம்முறையும் ஸ்ரீதர் படத்தோடு ஏசிடியின் படமும் 100 நாட்களை கடந்து வெற்றிக்கொடி நாட்டுகின்றன. ஒரு கதாநாயகனை வைத்து படம் இயக்கி அதே கதாநாயகனின் இன்னொரு படத்துடன் ஒரே நாளில் மோதி மூன்று முறை வெற்றிகண்டவர் ஏ.சி.திருலோகச்சந்தர்..

* 'பாரதவிலாஸ்', 'அவன்தான் மனிதன்', 'பத்ரகாளி', இலங்கையின் நாயகி மாலினி பொன்சேகாவை சிவாஜியுடன் ஜோடிபோட்டு சஸ்பென்ஸ் படமாக எடுத்த 'பைலட் பிரேம்நாத்', ரஜினியுடன் 'வணக்கத்துக்குரிய காதலியே', நதியாவுடன் சிவாஜி கலக்கிய 'அன்புள்ள அப்பா' என ஏசி திருலோகச்சந்தரின் இயக்குநர் பயணம் பெரியது என்பதைவிட வெற்றிகரமானது.


* 'பாவமன்னிப்பு' படத்தில் சிவாஜி முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு கோரமான முகம் வெளிப்படும் காட்சியை உந்துதலாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் 'தெய்வமகன்' (1969). சிவாஜி தந்தை, மகன்கள் என மூன்று வேடங்களில் நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி அசத்திய படம். எல்லாவற்றையும் விட ஆஸ்கார் விருதுக்காக முதன் முதலில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட படம், ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய தெய்வமகன்தான்.

ஏ.சி.திருலோகச்சந்தர் [இயக்குநர்]

பல ஆண்டுகளாக சினிமா உலகில் கோலோச்சி வந்த பத்மநாப ஐயர் என்பவரிடம் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக சேர்ந்து பணியாற்றினார் ஏ.சி.திருலோகச்சந்தர். அவர் பணியாற்றிய முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த “குமாரி”. இப்படம் 1952-இல் வெளியானது. ஜாம்பவான் இயக்குநர் கே.ராம்நாத்திடமும் சில காலம் உதவி இயக்குநர் வேலை செய்தார்.

இதன் பின்னர் இயக்குநர் ஜோசப் தளியத், தான் இயக்கும் ‘விஜயபுரி வீரன்’ படத்தில் உதவி இயக்குநர் அந்தஸ்து வழங்கினார். அத்தோடு திரைக்கதை அமைக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆங்கில படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் விதவிதமான காட்சிகளையும் கதைகளையும் மனதில் வடிவமைப்பதில் ஏ.சி.திருலோகச்சந்தர் படு கில்லாடியாகத் திகழ்ந்தார்.

ஏ.சி.திருலோகச்சந்தர் திறமையைப் பற்றி ஏவி.மெய்யப்பச் செட்டியாரிடம் சொன்னவர் நடிகர் எஸ்.ஏ.அசோகன். இப்படித்தான் ஏவிஎம் ஸ்டூடியோ என்ற தாய்வீட்டில் நுழைந்தார் ஏ.சி.திருலோகச்சந்தர்.

1962-ஆம் ஆண்டில் நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை சி.எல்.ஆனந்தனைக் கதாநாயகனாகவும்; நடிகை சச்சுவைக் கதாநாயகியாகவும் வைத்து ஏவி.எம். நிறுவனத்துக்காக ”வீத்திருமகன்” என்ற படத்தினை இயக்கினார் ஏ.சி.திருலோகச்சந்தர். இப்படத்தில் இடம்பெற்ற ரோஜா மலரே ராஜகுமாரி மற்றும் வெத்திலை போட்ட பத்தினி பொண்ணு ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஓங்கி ஒலித்தது. படமும் திரையிட்ட இடங்களிலெல்லாம் ஓஹோவென்று ஓடியது.

ஏவி.எம்.நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் சரோஜாதேவி நடித்து நட்பின் பெருமையைச் சொன்ன படம் ‘பார்த்தால் பசி தீரும்’. குழந்தை நட்சத்திரத்திலேயே கமல் இரட்டை வேடத்தில் அசத்திய படம் இது. இப்படத்திற்குக் கதை எழுதிக்கொடுத்தது ஏ.சி.திருலோகச்சந்தர். இப்படமும் மகத்தான வெற்றிப்படம்.

1963-இல் ஏ.சி.திருலோகச்சந்தர்-ஏவி.எம் கூட்டணியில் உருவானது ‘நானும் ஒரு பெண்’ என்ற படம். மிகச் சிறந்த படம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி, எஸ்.வி.ரங்காராவ் போன்ற பலர் நடித்த இப்படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்தது.

பழனிச்சாமியாக இருந்த சிவகுமாரை முதன் முதலில் ‘காக்கும் கரங்கள்’ (1964) என்ற படம் மூலம் திரையில் அறிமுகப்படுத்தியதும் ஏ.சி.திருலோகச்சந்தர் தான். ஏவி.எம். நிறுவனம் முதன் முதலில் வண்ணப்படம் தயாரிக்க விரும்பியதும் அந்த வாய்ப்பு அப்போதைய வசூல் சக்ரவர்த்தியான எம்.ஜி.ஆருக்கேப் போனது. அதற்குமுன் வெளியான சக்கரபாணி-நாகிரெட்டியின் விஜயா வாஹினி ஸ்டூடியோஸ் தயாரித்த ‘எங்க வீட்டு பிள்ளை’ பெற்றுக்கொடுத்த மாபெரும் வசூல் புரட்சி.

எம்.ஜி.ஆரை வித்தியாசமான பாணியில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்து, ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களே இயக்கவேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டவர் நடிகர் அசோகன். ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கி 1966-இல் வெளியான ‘அன்பே வா’, 50 ஆண்டுகளாகியும் இன்றும் ரசிகர்களைக் சுவர்ந்திழுக்கிறது. சாதாரணமாக எம்.ஜி.ஆரின் படங்கள் அம்மா, அக்கா, தங்கை செண்டிமெண்ட் நிறைந்ததாகத் தானிருக்கும். ஆனால் அன்பே வா அதற்கு நேர் எதிர்மறையாக நகைச்சுவை ததும்ப படமாக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆரும் இது என் படமல்ல உங்கள் படம். ஆதலால் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு நீங்கள் படமாக்கிக் கொள்ளுங்கள் என்று முழு சுதந்திரம் கொடுத்தார்.

இதேபோல ஏ.சி.திருலோகச்சந்தர் – ஏவி.எம் கூட்டணியில் ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா நடித்த ‘ராமு’ படமும், சிவாஜிகணேசன், நிர்மலா, விஜயஸ்ரீ நடித்த ‘பாபு’ படமும் மாபெரும் வெற்றி பெற்று பல மொழிகளில் வெளிவந்தது.. நடிகர் ரவிச்சந்திரனையும் காஞ்சனாவையும் வைத்து அசத்தல் வண்ணத்தில் ஆனால் திகிலோடு மிரட்டியது ஏ.சி.திருலோகச்சந்தரின் இன்னொரு பிளாக் பூஸ்டர் திரைப்படம் ‘அதே கண்கள்’. 1967-ஆம் ஆண்டில் வெளிவந்தது இப்படம். இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. பூம்பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, சின்னப்பெண்ணொருத்தி சிரிக்கிறாள், கண்ணுக்குத் தெரியாதா, என்னென்னமோ நான் நினைத்தேன், ஹோ ஹோ எத்தனை அழகு இருபது வயதினிலே என்ற அற்புதமான பாடல்கள் வேதாவின் இசையில் உருவாகி சக்கைப்போடு போட்டது இப்படத்தில். ஏ.சி.திருலோகச்சந்தரின் இயக்கத்தில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது என்றால் 1967-இல் வெளிவந்த ‘இரு மலர்கள்’ படத்தை சொல்லவேண்டும். சிவாஜிகணேசன், பத்மினி, ரோஜா ரமணி, நாகேஷ், மனோரமா ஆகிய பலர் நடித்திருக்கும் இப்படத்தில் சிவாஜிகணேசன், பத்மினி இருவரையும் அசால்ட்டாக சாந்தி என்ற பாத்திரத்தில் துவம்சம் செய்திருப்பார் கே.ஆர்.விஜயா.

ஒரு சுவையான விஷயம் யாதெனில் 1967-இல் சிவாஜியை வைத்து ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய ‘இரு மலர்கள்’ படம்.. வெளியீட்டுக்கு ஏற்பாடாகிவிட்டது.. அதே நாளில் இயக்குநர் ஜாம்பவான் ஸ்ரீதர், சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, ரி.எஸ்.பாலையா நடித்த ‘ஊட்டி வரை உறவு’ படத்தை வெளியிடுகிறார். ஆனால் ஒரு கதாநாயகனின் இரண்டு படங்களுமே நூறு நாட்களை கடந்து ஓடி மிகப் பெரிய வெற்றியை ஈட்டின.

1970-இல் சிவாஜிகணேசன், ஜெயலலிதா, நாகேஷ், சுந்தரராஜனை வைத்து ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய ‘எங்கிருந்தோ வந்தாள்’ படம் வெளியீட்டுக்கு ஏற்பாடாகிவிட்டது. அன்றும் சோதனையாக ரி.ஆர். ராமண்ணா சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, விஜயலலிதாவை வைத்து ‘சொர்க்கம்’ இயக்கிய படத்தை அதே நாளில் வெளியிட்டார். என்றாலும் இரண்டு படங்களுமே சிறந்த படமாக இருந்ததால் 100 நாட்கள் கடந்து ஓடியது.

1975-ஆம் ஆண்டில் சிவாஜிகணேசனை வைத்து ஏசி திருலோகச்சந்தர், ‘டாக்டர் சிவா’ என்னும் படத்தை  இயக்கி வெளியிட்ட அதே நாளில் ஸ்ரீதர் மீண்டும் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்த ‘வைர நெஞ்சம்’ படத்தை வெளியிட்டார். இம்முறையும் ஸ்ரீதர் படத்தோடு ஏசி திருலோகச்சந்தர் படமும் 100 நாட்களைக் கடந்து வெற்றிக்கொடி நாட்டின. ஒரு கதாநாயகனை வைத்து படம் இயக்கி அதே கதாநாயகனின் இன்னொரு படத்துடன் ஒரே நாளில் மோதி மூன்று முறை வெற்றிகண்டவர் ஏ.சி.திருலோகச்சந்தர்.

‘பாரதவிலாஸ்’, ‘அவன்தான் மனிதன்’, ‘பத்ரகாளி’, இலங்கையின் நாயகி மாலினி பொன்சேகாவை சிவாஜிகணேசனுடன் ஜோடி சேர்த்து எடுத்த ‘பைலட் பிரேம்நாத்’, ரஜினிகாந்துடன் ‘வணக்கத்துக்குரிய காதலியே’, நதியாவுடன் சிவாஜிகணேசன் கலக்கிய ‘அன்புள்ள அப்பா’ என ஏசி திருலோகச்சந்தரின் இயக்குநர் பயணம் 65 க்கும் மேல் பெரியது என்பதைவிட வெற்றிகரமானது.

கே.பாலாஜியின் மாபெரும் வெற்றிப்படங்களில் என் தம்பி, திருடன், தங்கை போன்ற படங்களும் இவர் இயக்கத்தில் உருவானவை.

1969-இல் வெளிவந்த ‘தெய்வமகன்’ சிவாஜிகணேசன் தந்தை, மகன்கள் என மூன்று வேடங்களில் நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி அசத்திய படம். எல்லாவற்றையும் விட ஆஸ்கார் விருதுக்காக முதன் முதலில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட படம், ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய தெய்வமகன்தான்.

தமிழ் தவிர தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.

11.06.1930 அன்று வேலூர் மாவட்டம், ஆற்காடு என்னுமிடத்தில் பிறந்த ஏ.சி.திருலோகச்சந்தர் வயது முதிர்வின் காரணமாக 15.6.2016-அன்று தனது 86-ஆவது வயதில் காலமானார்.

தமிழ் சினிமாவின் சாதனையாளர்களில் ஒருவரான உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கிறோம் ஏ..சி.திருலோகச்சந்தர் அவர்களே.
இயக்கிய திரைப்படங்கள் சில[தொகு]
இல. ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1 1987 அன்புள்ள அப்பா தமிழ் 
2 1985 பாபு இந்தி 
3 1985 தோ திலான் கி டாஸ்தான் இந்தி 
4 1982 தெரி கசாம் இந்தி 
5 1982 வசந்தத்தில் ஓர் நாள் தமிழ் மௌசாம் திரைப்படத்தின் மீள்தயாரிப்பு
6 1981 லாரி டிரைவர் ராஜாகண்ணு தமிழ் 
7 1980 விஸ்வரூபம் தமிழ் 
8 1978 பைலட் பிரேம்நாத் தமிழ் 
9 1978 வணக்கத்திற்குரிய காதலியே தமிழ் 
10 1978 என்னைப்போல் ஒருவன் தமிழ் 
11 1977 பெண் ஜென்மம் தமிழ் 
12 1977 பத்ரகாளி தெலுங்கு 
13 1976 பத்ரகாளி தமிழ் 
14 1975 டாக்டர் சிவா தமிழ் 
15 1975 அன்பே ஆருயிரே தமிழ் 
16 1975 அவன்தான் மனிதன் தமிழ் கஸ்தூரி நிவேசாவின் மீள்தயாரிப்பு
17 1974 தீர்க்கசுமங்கலி தமிழ் 
18 1973 பாரத விலாஸ் தமிழ் 
19 1972 அவள் தமிழ் 
20 1972 தர்மம் எங்கே தமிழ் 
21 1971 பாபு தமிழ் ஒடியல் நின்னுவின் மீள் தயாரிப்பு
22 1970 எங்க மாமா தமிழ் பிரம்மச்சாரி இந்தித் திரைப்படத்தின் மீள்தயாரிப்பு
23 1970 எங்கிருந்தோ வந்தாள் தமிழ் கிலோனா திரைப்படத்தின் மீள் தயாரிப்பு
24 1969 தெய்வமகன் தமிழ் 
25 1969 திருடன் தமிழ் 
26 1969 அன்பளிப்பு தமிழ் 
27 1969 இரு மலர்கள் தமிழ் 
28 1968 என் தம்பி தமிழ் 
29 1968 ராமு தெலுங்கு ராமு தமிழ்த் திரைப்படத்தின் மீள்தயாரிப்பு
30 1967 அதே கண்கள் தமிழ் 
31 1967 ஆவே கல்லு தெலுங்கு 
32 1967 தங்கை தமிழ் 
33 1966 அன்பே வா தமிழ் 
34 1966 ராமு தமிழ் 
35 1965 நாடி ஆடாஜன்மே தெலுங்கு 
36 1965 காக்கும் கரங்கள் தமிழ் 
37 1964 மெயின் பி லட்கி ஹூன் இந்தி 
38 1963 நானும் ஒரு பெண் தமிழ் 
39 1962 வீரத்திருமகன் தமிழ் 
மறைவு[தொகு]
திருலோகச்சந்தர் 2016 சூன் 15 அன்று தனது 86-ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.[7] இவருக்கு மல்லி சீனிவாசன் என்ற மகளும், ராஜ்சந்தர் என்ற மகனும் உள்ளனர். இவரது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது இன்னொரு மகன் பிரேம் திரிலோக் அமெரிக்காவில் காலமானார்

No comments:

Post a Comment