Friday, 13 October 2017

MARGARET THATCHAR ,POWER MAIDEN BORN 13 OCTOBER,1925


MARGARET THATCHAR ,POWER MAIDEN BORN 13 OCTOBER,1925





மார்கரெட் ஹில்டா தாட்சர்[மூலத்தைத் தொகு]

மார்கரெட் ஹில்டா தாட்சர் (Margaret Hilda Thatcher, Baroness Thatcher, 13 அக்டோபர் 1925 – 8 ஏப்ரல் 2013) பிரித்தானியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் பொறுப்பாற்றிய பிரித்தானிய பிரதமராக 1979 முதல் 1990 வரை தொடர்ச்சியாக பணியாற்றினார்.[2] 

1975 முதல் 1990 வரை தமது கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகப் பணியாற்றி உள்ளார். சோவியத் இதழாளர் ஒருவரால் தாட்சரின் சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் காரணமாக பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டார்[3][4]; அதுவே அவரது விடாநிலை அரசியலையும் தலைமைப் பண்பையும் குறிக்கின்ற அடைபெயராக பிரித்தானிய வலதுசாரிகளாலும் அழைக்கப்படலாயிற்று.[5] இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் தாட்சரிசம் என அழைக்கப்படலாயிற்று.


வேதியியல் ஆய்வாளராக துவங்கிய மார்கரெட்பின்னர் சட்டம் படித்து பார் அட் லா ஆனார். 1959ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக பின்ச்லே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970இல் எட்வர்டு ஹீத் தலைமையேற்ற அரசில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1975ஆம் ஆண்டில் நடந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் ஹீத்தை தோற்கடித்து பிரித்தானிய எதிர்கட்சித் தலைவரானார். 1979ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார்.

1970-களில் உலகின் பல்வேறு முதலாளித்துவ நாடுகள் பிரிட்டன் உட்பட கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் தாட்சர் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் வீழ்ந்துவரும் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தொடர்ந்து பல அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.[6] 

பதவியேற்றவுடன் ஆற்றிய உரையில் தனது கொள்கைகள் என்னவென்பதை பிரகடனப்படுத்தினார். அவரது அரசியல் கொள்கையும் பொருளியல் கொள்கைகளும் விதி களைவு (முக்கியமாக நிதித்துறையில்), நெகிழ்வான தொழிலாளர் சந்தைகள், அரசுத்துறையைத் தனியார்மயமாக்கல், தொழிற்சங்கங்களின் வலிமை மற்றும் தாக்கத்தை குறைத்தல் ஆகியவற்றை வலியுறுத்துவனவாக இருந்தன. துவக்கத்தில் இவரது கொள்கைகளால் மிகவும் புகழ் பெற்றார்; 


பின்னர் நாட்டின் பொருளியல் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் புகழ் மங்கியது. 1982இல் இவர் பாக்லாந்து போரில் பெற்ற வெற்றி மற்றும் பொருளாதார மீட்சி இவருக்கு மீண்டும் ஆதரவைப் பெருக்கியது. இதனால் 1983ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.

தாட்சரிசம்[மூலத்தைத் தொகு]

பணக்காரர்களை பலவீனப்படுத்தி தொழிலாளர்களை வாழ வைக்க முடியாது என்பது அதில் ஒன்று. பலமானவர்களை பலவீனப்படுத்துவதன் மூலம் பலவீனர்களை பலப்படுத்திவிட முடியாது என்ற ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழியையும் அவர் மேற்கோள் காட்டினார். 1979ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சி எனப்படும் பழமைவாதக் கட்சியின் சார்பில் பிரதமராக பொறுப்பேற்ற அவர், 1990ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். ஆட்சிக்கு வந்தவுடனேயே மக்கள் நலத்திட்டங்களுக்கு வேட்டு வைத்ததுதான் அவர் செய்த முதல் சாதனையாகும்.

தொழிலாளர்களுக்கு‍ எதிரான கொள்கை[மூலத்தைத் தொகு]

ஓய்வூதியம் உட்பட தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகளை அவர் பறித்தார். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதில் முனைப்பு காட்டினார். அவர் பொறுப்புக்கு வந்த பொழுது பிரிட்டனின் பணவீக்க விகிதம் 27 சதவிகிதமாக இருந்தது. இதைச் சமாளிக்க அவர் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் பாதையைப் பின்பற்றினார். பிரிட்டனில் 130 ஆண்டுகளாக பணியாற்றி வந்த டியுசி எனும் தொழிற்சங்கத்தை முடக்கினார். தொழிற்சங்க உரிமைகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார். தொழிற்சங்கங்களுக்கு நிர்வாகம் மூலம் சந்தா பிடித்து தரப்படாது என்று திருத்தம் கொண்டு வந்தார். அவரது ஆட்சிக்காலத்தில்தான் பிரிட்டனின் வரலாறு காணாத சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம் வெடித்தது.

சுரங்க தொழிலாளர் சங்கத்தின் தலைவரான ஆர்தர் ஸ்கர்ட்கல் என்பவரை கைது செய்து சிறையிலடைத் தார். அவர் சோவியத் ஏஜெண்ட் என்று பொய்க்குற்றச்சாட்டை சுமத்தினார். பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக ஆஸ்திரேலியாவிலிருந்து மலிவு விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்யலாம் என்று அவர் முதலாளிகளுக்கு வழிகாட்டினார். தாட்சர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் என்பது பொதுவாக நவீன தாராளமயமாக்கல் பாதைக்கு வழிவகுத்தது.


1987இல் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரானார். இந்தக் காலகட்டத்தில் அவர் விதித்த கம்யூனிட்டி சார்ஜ் என்ற வரி மக்களிடையே கசப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அமைச்சரவையில் அவரது ஐரோப்பிய ஒன்றியம் குறித்த கருத்துக்களும் ஏற்கப்பட வில்லை. இதனையடுத்து 1990இல் நவம்பர் மாதம் தமது பதவியிலிருந்து விலகினார். இவருக்கு வாழ்நாள் முழுமையும் பிரபுக்கள் அவையில் அங்கத்தினாராக செயல்பட ஏதுவாக லின்கன்சையர் கவுன்டியின் கெஸ்டவென் தொகுதியின் பரோனசாக அரசப்பதவி வழங்கப்பட்டது.

பொதுத்துறையை தனியார்மயமாக்குவது தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வது சமூக நலத்திட்டங்களை வெட்டுவது என்பது‍ தான் தாட்சர் பின்பற்றிய கொள்கை

 சிலரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

அப்படிப்பட்டவர்களில் மார்கரெட் தாட்சருக்கு முக்கிய இடம் உண்டு. மாகி என்றும், இரும்புப் பெண்மணி என்றும் செல்லமாக அழைக்கப்பட்டவர் தாட்சர்.
மறைந்த தாட்சர்தான் இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் ஆவார். மிகுந்த தைரியமும், மதி நுட்பமும், துணிச்சலாக செயல்படும் தன்மையும் கொண்டவர் தாட்சர்.

சாதாரண மளிகைகடைக்காரின் மகளாக பிறந்த தாட்சர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராக, உலகமே பார்த்து வியக்கும் தலைவராக மாறியது வரலாறு.

தாட்சரின் வாழ்க்கையிலிருந்து சில துளிகள்..

1925ல் பிறந்து...
1925ம் ஆண்டு கிராந்தம் என்ற இடத்தில் மார்கரெட் ராபர்ட் என்ற பெயருடன் பிறந்தார் தாட்சர். ஆக்ஸ்போர்டில் கல்வி -ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டப்படிப்பை முடித்தார் தாட்சர்.

951ல் திருமணம் 1951ம் ஆண்டு டெனிஸ் தாட்சரை மணந்தார்.
இரட்டைக் குழந்தைகள் தாட்சர் தம்பதிக்கு கரோல் மற்றும் மார்க் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

1959ல் எம்.பி. ஆனார் 1959ம் ஆண்டு முதல் முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தாட்சர். டோரிகளின் தலைவியானார் 1975ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவியானார் மார்கரெட் தாட்சர்.
79 முதல் 90 வரை பிரதமர் 1979ம் ஆண்டு முதல் முறையாக பிரதமரானார் தாட்சர். அதன் பின்னர்1990 வரை அவர் அசைக்க முடியாத பிரதமராக பதவியில் தொடர்ந்தார்

வரலாறு படைத்தவர் 1975ல் நடந்த கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு வில்லி ஒயிட்லா போட்டியிட்டார். அவரை எதிர்த்து துணிச்சலுடன் களம் இறங்கிய மார்கரெட் தாட்சர் தேர்தலி்ல் வெற்றி பெற்றபோது அனைவரும் அசந்து போயினர். காரணம், கட்சித் தலைவராக பெண் ஒருவர் வெற்றி பெற்றது அதுவே முதல் முறை என்பதால். நாட்டின் முகத்தை மாற்றியவர் பிரதமர் பதவியில் மார்கரெட் தாட்சர் இருந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் முகத்தையே அவர் மாற்றியமைத்தார். உலகின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருந்தார்.


அனைவரையும் ஒருங்கிணைத்தவர் நாடு எப்படி இருக்க வேண்டும், நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்டிப்புடன் செயல்படுத்திக் காட்டியவர் தாட்சர். அரசியல்வாதிகள், நிர்வாகம், தொழிற்சங்கங்கள் என மூன்று முக்கியப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்து அரசை நடத்தியவர் தாட்சர்.

பொருளாதாரத்தை நிமிர்த்தியவர் சரிந்து போய்க் கிடந்த இங்கிலாந்தி பொருளாதாரத்தை தூக்கிய நிறுத்திய பெருமையும் தாட்சருக்கு உண்டு. மிகப் பெரிய சாதனைகளை தாட்சர் இதில் படைத்துள்ளார்.

அப்பாவைப் போல பொறுப்பானவர் மார்கரெட்டின் தந்தை ராபர்ட் மிகவும் சிக்கணமாக வாழ்க்கை நடத்தியவர். ஒரு காசு செலவழிப்பது என்றாலும் பலமுறை கணக்குப் பார்த்து செய்தவர். மளிகைக் கடை வியாபாரம்தான் ராபர்ட்டின் குடும்பத்தைக் காப்பாற்றியது என்பதால் எப்போதும் வியாபாரம், வியாபாரம் என்றிருப்பார். தந்தையைப் பார்த்து தான் நிறையக் கற்றுக் கொண்டதாக தாட்சர் பலமுறை கூறியுள்ளார்.

அழகிய கவிஞர் சிறுவயதில் நிறையக் கவிதைகள் எழுதியுள்ளார் மார்கரெட் தாட்சர். இவருக்குப் பிடித்த கவி மேதை ருட்யார்ட் கிப்ளிங்.ஆய்வாளராக சில காலம் வேதியியலில் பட்டப் படிப்பை முடித்த பின்னர் ஆய்வில் இறங்கினார். சில காலம் எஸ்ஸக்ஸில் உள்ள பிளாஸ்டிக் ஆலை ஒன்றில் ஆய்வாளராகவும் வேலை பார்த்துள்ளார்.

தேர்தலில் தோல்வி.. காதலில் வெற்றி 1950ல் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்த சோகம் அவரைத் தாக்கிய நிலையில் டெனிஸ் தாட்சரை சந்தித்தார். காதலில் விழுந்தார். அடுத்த ஆண்டே இருவரும் மணம் புரிந்து கொண்டனர்.

1959ல் மாபெரும் வெற்றி சில தேர்தல்களில் நின்று தோல்வியடைந்த நிலையில், 1959ல் நடந்த தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றார் மார்கரெட். மார்கரெட் தாட்சர்.. மில்க் ஸ்னாட்சர் இவர் பின்னர் கல்வி அமைச்சர் பதவிக்கும் உயர்ந்தார். அப்போது இவர் செய்த காரியம், இவருக்கு சுவாரஸியமான பட்டப் பெயரை பெற்றுத் தந்தது. பள்ளிகளுக்கு வழங்கிய இலவச பால் திட்டத்தை ரத்து செய்தார் தாட்சர். இதனால் இவரை எதிர்க்கட்சியினர் மார்கரெட் தாட்சர்.. மில்க் ஸ்னாட்சர் என்று கேலி செய்ய ஆரம்பித்தனர்.

இங்கிலாந்தின் காமராஜர் ஆனால் கல்வித்துறைக்கு இவர் நிறைய செய்துள்ளார் என்பதுதான் முக்கியமானது. கிட்டத்தட்ட இங்கிலாந்தின் காமராஜர் என்று கூறும் அளவுக்கு கல்விக்கு நிறைய செய்துள்ளார். பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். 16 வயது வரை கட்டாயக் கல்வித் திட்டம் அதில் ஒன்று. நர்சரி பள்ளித் திட்டத்தை விரிவுபடுத்தினார்
எதிர்க்கட்சித் தலைவியாக கலக்கியவர் எதிர்க்கட்சித் தலைவியாக கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றியுள்ளார் தாட்சர். தனது கட்சியை அடிமட்ட அளவில் ஸ்திரப்படுத்தினார். அ

னைவரும் பார்த்து மிரளும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்தி கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். தன்னையும் இந்த காலகட்டத்தில் வளர்த்துக் கொண்டார்.
பிரதமராக பிரமாதப்படுத்தியவர் பிரதமர் பதவியில் முதல் முறையாக அமர்ந்தபோது பல சீர்திருத்தங்கள மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார் தாட்சர். அதில் முக்கியமானது வருமான வரி விகிதத்தை குறைத்தது. இதுபோக மேலும் பல வரி சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார்.

தீவிரவாத தாக்குதலில் உயிர் தப்பினார் அயர்லாந்து தீவிரவாதிகள் வைத்த குறியில் ஒருமுறை தாட்சர் சிக்க நேரிட்டது. 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரைட்டன் நகரி்ல நடந்த கட்சி மாநாட்டின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் தாட்சர் உயிர் தப்பினார். ஆனால் 6 பேர் உயிரிழந்தனர்.
தைரியமாக எதிர்கொண்டார் இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டித்த தாட்சர், தீவிரவாதிகளை கண்டு பயப்பட மாட்டேன், பூண்டோடு ஒழிப்பேன் என்று வீராவேசமாக பேசியபோது இங்கிலாந்து மக்கள் அசந்து போயினர்
அயர்லாந்து தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார் சொன்னதற்கேற்ப தீவிரமாக செயல்பட்ட தாட்சர், 1985ம் ஆண்டே அயர்லாந்து தீவிரவாத அமைப்புக்கும், இங்கிலாந்து அரசுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமையை மாற்றினார்.

புயலுக்குப் பின் அமைதி பிரதமராக பல காலம் இங்கிலாந்தை திறம்பட இயக்கிய தாட்சர் தனது ஓய்வுக்குப் பின்னர் பொது வாழ்க்கையில் தலை காட்டாமல் ஒதுங்கியிருந்தார். சுயசரிதம் எழுதினார். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றார். குறிப்பாக அவரது மனம் கவர்ந்த அமெரிக்காவை வலம் வந்தார்.

பெரும் வெற்றிடம் சாதாரண ஒரு தலைவராக மார்கரெட் தாட்சர் இருந்ததில்லை. இரும்புப் பெண்மணியாக, புத்திசாலியாக, புதுமை விரும்பியாக திகழ்ந்தவர். சாதாரணர்கள் முதல் ராஜ குடும்பம் வரை, எலிசபெத் ராணிவரை அத்தனை பேரின் அன்பையும் பெற்றிருந்தவர் தாட்சர். 





அவரது மறைவு நிச்சயம் இங்கிலாந்தில் பெரும் வெற்றிடத்தையே ஏற்படுத்தியுள்ளது. தாட்சருக்குப் பிறகு பெயர் சொல்லும் பிரதமரை இங்கிலாந்து கண்டதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!

No comments:

Post a Comment