Friday, 6 September 2019

gangai konda cholapuram ,kanakku vinayagar









#கணக்கு_விநாயகர்
கங்கைகொண்ட சோழபுரம்.

கணக்கு சொன்ன பிள்ளையார் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் அருகே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கனக விநாயகர் அமைந்துள்ளார்.


ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தபின், தன் தந்தை ராஜராஜ சோழன் கட்டிய மிகப்பெரிய தஞ்சை பெருவுடையார் கோவில்போல தானும் கட்டவேண்டுமென தீர்மானித்து அதற்கான திருப்பணிகளைத் துவக்கினான். அப்போது அனுதினமும் வழிபட அரண்மனைக்குமுன் இந்த கனக விநாயகர் கோவிலை அமைத்து, கோவிலுக்கு வடகிழக்கே பிரகதீஸ்வரர் கோவில் அமைக்கும் பணியை தன் அமைச்சரிடம் ஒப்படைத்தான்.

திருப்பணிகளுக்குத் தேவையான பொன்- பொருட்களை அரண்மனைக் கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார். அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன்வைத்து வணங்கியபின்பே ஆலயத் திருப்பணிகளை ஆரம்பிப்பார். (இந்த விநாயகருக்கு பால், எண்ணெய் அபிஷேகம் செய்யும்போது இவர் பச்சைநிற மேனியராகக் காட்சிதருவார்.) இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவந்தன.

ஒரு நாள் ஆலயத் திருப்பணிகளைப் பார்வையிட மன்னன் வந்தான். ஆலயம் கம்பீரமாக எழும்பிக்கொண்டிருப்பது கண்டு பரவசமடைந்தான். பின் அமைச்சரிடம், “”திருப்பணிக்கான செலவுக்குரிய கணக்கை நாளைக் காலை தெரிவியுங்கள்” என கட்டளை இட்டுவிட்டுச் சென்றான் மன்னன்.

அமைச்சருக்குத் தூக்கிவாரிப் போட்டது. திருப்பணி செய்யும் மும்முரத்தில் அவர் கணக்கு ஏதும் எழுதவில்லை.

அமைச்சருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தெய்வம்தான் தம்மைக் காக்க வேண்டுமென்று கனக விநாயகர் சந்நிதிக்கு ஓடோடி வந்தார். “”பெருமானே, மன்னர்
திடீரென கணக்குக் கேட்கிறார். நான் என்ன செய்வேன்? தாங்கள்தான் இதற்கு வழிகாட்டவேண்டும்” என கண்ணீர்மல்கி மனமுருகப் பிரார்த்தனை செய்துவிட்டு இல்லம் சென்றார்.

அன்றிரவு அமைச்சர் கனவில் தோன்றிய கனக விநாயகர், “”அமைச்சரே, வருந்தாதீர். இதுவரை எத்து நூல் எட்டு லட்சம் பொன் செலவானது என மன்னரிடம் கூறுங்கள்” என அருளி மறைந்தார். கண்விழித்த அமைச்சர் கனக விநாயகர் சந்நிதி நோக்கி கைகூப்பி வணங்கினார். உடனே ஓலைச் சுவடியை எடுத்து அதில் “எத்து நூல் எட்டு லட்சம் பொன்’ என்று எழுதி வைத்துவிட்டார்.

மரவேலை, சுவர் வேலை செய்யும்போது வளைவு வராமல் இருப்பதற்காக பயன்படுத்தும் நூலை எத்து நூல் என்பர். இதைக்கொண்டே கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும் கல், மரம், மணல் எவ்வளவு வாங்கப்பட்டது என கணக்கிட்டுவிடலாம். எத்து நூல்தான் முக்கிய இடம் வகிக்கிறது.

மறுநாள் அமைச்சர் மன்னரிடம் விநாயகர் கனவில் சொன்னபடி கூறினார். “”இவ்வளவு செலவானதென்றால் நாம் நினைத்தபடியே கோவில் சிறந்த முறையில்தான் உருவாகிவருகிறது. மகிழ்ச்சி! அமைச்சரே, எப்படி நீங்கள் இவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டீர்கள்” என்று கேட்டான் மன்னன்.

நடந்த உண்மைகளை அமைச்சர் அப்படியே கூறிவிட்டார். ஆச்சரியமடைந்த மன்னன் கனக விநாயகர் சந்நிதிமுன் நின்று கண்ணீர் மல்க வணங்கினான். “”விநாயகப் பெருமானே தெரிவித்த கணக்கானதால் அது சரியாகத்தான் இருக்கும். இதன்மூலம் பிரகதீஸ்வரர் ஆலயம் எழும்ப விநாயகரே ஆசி வழங்கவிட்டார். எனவே இந்த கனக விநாயகர் இனிமேல் நமக்குக் கணக்குப் பிள்ளையார் ஆகிவிட்டார்” என பெருமிதத்துடன் கூறினான்.

இந்த விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறிடத்திற்கு மாற்றிவிடக்கூடாதென்று எண்ணி, 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இவரின் சந்நிதிமுன் மிகச்சிறிய நுழைவாயிலைக் கட்டிவிட்டான். அந்நியர் படையெடுப்பு வந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருள்தான் காரணம்.

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் ஆலய கோபுரத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும் இவ்வால யம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது...










கணபதி மூலாதார சக்தியின் வடிவமாகும். ‘’ என்பது ஞானத்தையும், ‘’ என்பது மோட்சத்தையும், ‘பதி’ என்பது இருப்பிடத்தையும் குறிப்பதாகும். ஞானத்திற்கும் வீடுபேற்றிற்கும் அதிபதி என்பதால், இவர் ‘கணபதி’ எனப்பட்டார். இவர் கணங்களின் தலைவனாக இருந்தமையால் ‘கணபதி’ என ரிக் வேதமும், யானை முகத்தைக் கொண்டிருந்தமையால் ‘யானைமுகத்தான்’ என அதர்வணவேதமும், ஒற்றைக் கொம்பை கொண்டிருந்ததால் ‘ஒற்றைக்கொம்பன்’ என தைத்ரிய உபநிஷத்தும் கூறுகின்றன. இவர் வினைகளை அழிக்கும் தலைமை நாயகர் என்பதால் ‘விநாயகர்’ என்றும், விக்னங்களை தீர்ப்பவர் என்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

சிவபெருமான் 64 வடிவங்களைக் கொண்டிருப்பது போல, கணபதி 32 வடிவங்களை கொண்டுள்ளார். சிவாலயம் இல்லாத ஊர் இருக்கலாம்; ஆனால் விநாயகர் கோவில் இல்லாத ஊரை காண்பது அரிது. விநாயகர் வழிபாட்டின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையே இதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு கடவுளையும் வணங்கும்போது அவருடைய உருவம் அல்லது படத்தை வைத்து வழிபடுவது நடைமுறை. ஆனால் விநாயகரை வழிபட உருவமோ அல்லது படமோ தேவையில்லை. அவரை நினைத்து மண், சாணம், மஞ்சள், வெல்லம் இப்படி ஏதாவது ஒன்றை கைப்பிடி அளவு பிடித்து வைத்தாலே போதும். அது கணபதியின் உருவமாகி விடும்.

பண்டைய மன்னர்கள் ஆலயத்தையும், ஆலய வழிபாட்டையும் மையமாக வைத்தே ஆட்சி புரிந்தனர். அதனால் அவர்களது ஒவ்வொரு செயலும் இறை வணக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது. எந்த இறைவனை உயர்வான சக்தியாக கருதினார்களோ, அந்த இறைவனுக்கே ஆலயம் எழுப்பும்போதும் அதை கடைப்பிடிக்க தவறியதில்லை. கங்கை நதி வரை படையெடுத்துச் சென்று மாபெரும் வெற்றியைப் பெற்று அதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்னும் ஊரையும், சோழகங்கம் என்னும் ஏரியையும், கங்கைகொண்ட சோழீச்சுரம் என்னும் ஆலயத்தையும் நிர்மாணித்த ராஜேந்திரசோழன் அவைகளுக்கெல்லாம் முதற்பணியாக ஒரு விநாயகர் திருக்கோவிலை எழுப்பினான்.

கங்கைகொண்ட சோழீச்சுவரமுடையார் கோவிலுக்கு கன்னிமூலையில் (தென்மேற்கு திசையில்) விநாயகர் ஆலயத்திற்கான கட்டுமானப் பணியை மேற்கொண்ட ராஜேந்திர சோழன், கங்கை படையெடுப்பின் போது தான் கொண்டு வந்த விநாயகர் சிலையை அங்கு பிரதிஷ்டை செய்தான். அந்த விநாயகருக்கு ‘கனக விநாயகர்’ என்று பெயரிட்டு கும்பாபிஷேகமும் செய்வித்தான். இவ்வாலயத்தில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலை வாதாபியில் இருந்தும், நுளம்பர் நாட்டில் இருந்தும் கொண்டு வரப்பட்டதாக இருவிதமான வரலாற்றை முன்வைக்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். இந்த கனகவிநாயகர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பிறகுதான், கங்கைகொண்ட சோழீச்சுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

கங்கைகொண்ட சோழீச்சுரத்தின் திருப்பணி அமைச்சர் ஒருவர் ஒருங்கிணைப்பிலும், அவருக்கு கீழே கணக்கர் ஒருவர் மேற்பார்வையிலும் தடையின்றி நடைபெற்று வந்தது. திருப்பணிக்காக செலவிடப்படும் பொன்- பொருட்களை கையாளவேண்டியது கணக்கரின் பணியாகும். அரண்மனை கருவூலத்தில் அனுதினமும் பொன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் கணக்கர், அவற்றை கனக விநாயகர் திருவடியின் முன்வைத்து வணங்கிய பிறகே, ஆலயத் திருப்பணிகளுக்காக செலவிடுவார். இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டு காலம் ஆலய கணக்கரின் மேற்பார்வையில் திருப்பணி மும்முரமாக நடைபெற்று வந்தன.

ஒரு நாள் ஆலயத் திருப்பணியை பார்வையிட மன்னன் ராஜேந்திரன் வந்தான். ஆலயம் கம்பீரமாக எழும்பிக் கொண்டிருப்பது கண்டு பரவசமடைந்தான். பின் கணக்கரிடம், “திருப்பணி செலவுக்குரிய கணக்கை நாளைக் காலை தெரிவியுங்கள்” என கூறிவிட்டுச் சென்றான்.

ஆலய மேற்பார்வை செய்த கணக்கருக்கு தூக்கிவாரிப் போட்டது. திருப்பணிக்குத் தேவையான செலவைத்தவிர வேறு எந்த செலவும் செய்யாததாலும், காலை முதல் இரவு வரை ஆலயப் பணியிலேயே முழுமையாக ஈடுபட்டிருந்ததாலும் அவருக்கு கணக்கு எழுத நேரமில்லாமல் போனது. மேலும் அரசனும் இதுநாள் வரை கணக்குக் கேட்காததால் வரவு செலவு கணக்கை அவர் எழுதி வைக்க நினைக்கவில்லை. ஆனால் மன்னன் கேட்ட பிறகு கொடுத்துதானே ஆகவேண்டும். பதினாறு வருட கணக்கை தயார் செய்வது எப்படி என்றெண்ணி கவலைப்பட்டவர், தம்மை தெய்வம்தான் காக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கனக விநாயகர் சன்னிதிக்கு ஓடோடி வந்தார்.

“பெருமானே! மன்னர் திடீரென கணக்குக் கேட்கிறார். நான் என்ன செய்வேன்? தாங்கள்தான் இதற்கு வழிகாட்ட வேண்டும்” என கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்துவிட்டு, நடப்பது நடக்கட்டும் என்பதாக இல்லம் சென்றார்.

அன்றிரவு கணக்கர் கனவில் தோன்றிய கனக விநாயகர், “கணக்கரே! வருந்தாதீர். நாளை மன்னரை சந்தித்து, ‘இதுநாள் வரை எத்து நூல் என்பது லட்சம் பொன் செலவானது’ என கூறுங்கள்” என அருளி மறைந்தார்.

கண்விழித்த அமைச்சர் கனக விநாயகர் சன்னிதி நோக்கி கைகூப்பி வணங்கினார். உடனே ஓலைச் சுவடியை எடுத்து அதில் ‘எத்து நூல் என்பது லட்சம் பொன்’ என்று எழுதி வைத்துவிட்டு உறங்கிவிட்டார். மரவேலை, சுவர் வேலை செய்யும்போது வளைவு வராமல் இருப்பதற்காக பயன்படுத்தும் நூலை ‘எத்துநூல்’ என்பர். இதைக்கொண்டே ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படும் கல், மரம், மணல், மற்றும் இதர பொருட்கள் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என கணக்கிட்டுவிடலாம். பண்டைய கோவில் கட்டுமானத்தில் எத்து நூல் முக்கிய இடத்தை வகித்துள்ளது.

மறுநாள் மன்னரிடம் வந்த கணக்கர், விநாயகர் கனவில் சொன்னபடி கூறினார். அதைக் கேட்ட மன்னன் “இவ்வளவு செலவானதென்றால் நான் நினைத்தாற்போல கோவில் சிறந்த முறையில்தான் உருவாகிவருகிறது. மகிழ்ச்சி! கணக்கரே, எப்படி நீங்கள் இவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னீர்கள்” என்று கேட்டான்.

நடந்த உண்மைகளை கணக்கர் அப்படியே கூறிவிட்டார். ஆச்சரியமடைந்த மன்னன் உடனடியாக கனக விநாயகர் சன்னிதிக்குச் சென்று கண்ணீர் மல்க வணங்கினான்.

“விநாயகப் பெருமானே கணக்கு தெரிவித்து, பிரகதீஸ்வரர் ஆலயம் எழும்ப ஆசி வழங்கிவிட்டார். அவ்விதத்தில் கனகவிநாய கரான இவர், ஆலயப் பணியின் கணக்குப் பிள்ளையார் ஆகிவிட்டார்” என பெருமிதத்துடன் கூறினான்.

இந்த அற்புத விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறு இடத்திற்கு மாற்றிவிடக்கூடாது என்று நினைத்த மன்னன், 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இந்த விநாயகரின் சன்னிதி முன் மிகச்சிறிய நுழைவு வாசலைக் கட்டினான். அந்நியர் படையெடுப்பு நடந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருளே காரணமாகும்.

கணக்கரை காப்பதற்காக கணக்குரைத்த கனக விநாயகர் அன்றுமுதல் ‘கணக்கு விநாயகர்’ என்று அழைப்படலானார். இதுவே காலப்போக்கில் கணக்க விநாயகர் என்றாகிப் போனது. கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைநகராக மாற்றிக் கொண்டு இங்கிருந்தவாறே ஆட்சியை தொடர்ந்த சோழ மன்னன் அனுதினமும் கணக்க விநாயகர் ஆலயம் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான். போர்க்களம் செல்வது முதல் எந்தவொரு வேலையையும் செய்யும் முன்பாக, அவன் வழக்கமாக வழிபடும் முக்கிய கோவில்களில் கணக்க விநாயகர் கோவிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. அவ்வாலய வழிபாடு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தது.

வழிபாட்டு பலன்

சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததும், வடதிசை பார்த்து அமைந்ததுமான இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்யும் போது, இவரின் திருமேனி பச்சைநிறமாக மாறுவது தனிச் சிறப்பாகும். மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப, சிறிய ஆலயம் என்றாலும் அளவற்ற அருளும் ஆற்றலும் தரும் ஆலயமாக இது திகழ்கிறது. புதிதாக ஆலயம் கட்டும் முயற்சியில் ஈடுபடுவோர், ஏற்கனவே உள்ள ஆலயத்தை புதுப்பிக்க நினைப்போர், சொந்தமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் புதிதாக வணிகம் தொடங்குவோர், ஏற்கனவே செய்துவரும் வணிகத்தில் சரிவை சந்திப்பவர்கள், கல்வியில் மேன்மை பெற விரும்புபவர்கள், இந்த விநாயகரை வழிபட்டு பலனும் பலமும் பெறலாம்.

குறிப்பாக கங்கைகொண்ட சோழபுரம் செல்பவர்கள், ஒரு வெற்றிச் சின்னத்தின் வரலாற்றில் இடம் பிடித்துள்ள இந்த விநாயகரை அவசியம் தரிசித்தல் வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழீச்சுவரமுடையார் ஆலயத்தின் தென்மேற்கில் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கணக்க விநாயகர் ஆலயம். இங்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது. நடந்தும் ஆலயத்தை அடையலாம்.




கி.பி.7ம் நூற்றாண்டில் அப்பர், திருவாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற சமயக் குரவர்களால் தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு தோன்றியது. சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ் இலக்கியங்களில் விநாயகர் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தமிழ்நாட்டில் நடந்த பண்டைய அகழ்வாராய்ச்சியிலும் பிள்ளையார் சிற்பங்கள் கிடைக்கவில்லை. கி.பி.630668ல் மகாராஷ்டிரம் பகுதியில் இருந்து நரசிம்ம பல்லவனால் பிள்ளையார் சிலை தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. சாளுக்கிய மன்னன் புலிகேசியை வாதாபி என்னுமிடத்தில் நரசிம்ம பல்லவன் வெற்றி கொள்கிறான். அப்போது  அந்த ஊரில் புதுமையான வடிவில் செதுக்கப்பட்டிருந்த சிலையை தன் வெற்றிச் சின்னமாக எடுத்து வந்து தன் ஆட்சி எல்லையில் வைத்தான். அன்று முதல் அம்மன்னனுக்கு வெற்றிமேல் வெற்றி குவிந்தன. அன்று அவன் எடுத்து வந்த சிலை எது தெரியுமா அதுதான் விநாயகர் சிலை. அதுதான் இன்றைய விநாயகர் சிலைகளுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை புத்தமதம் வேரூன்றி இருந்தது. புத்தருக்கு ஞானமளித்த போதிமரம் அரசமரம் எனவே அரசமரத்தடியில் புத்தர் சிலையை வைத்திருந்தனர் புத்த மதத்தினர். மகேந்திர பல்லவனுக்கு ஏற்பட்ட தீராத வயிற்றுவலியை திருநாவுக்கரசர் போக்கினார். அதனால் அம்மன்னன் சைவ மதத்தைத் தழுவினான். அத்துடன் அரசமரம் தோறும் விநாயகர் சிலை வைக்க உத்திரவிட்டான். இப்படித்தான் பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் தோன்றியது. 5000 ஆண்டுகளுக்கு முன் ஆவணிமாதம் தான் வருடப்பிறப்பாக இருந்தது. ஆகவேதான் ஆவணியில் முதன் முதலாக விநாயகப் பெருமானை வழிபடும்  வழக்கம் ஏற்பட்டது. ஆவணி சதுர்த்தி வருடப்பிறப்பன்று பிள்ளையாரோடு தொடங்குகிறது என்று வாரியார் சுவாமிகள் கூறியுள்ளார். நாட்களைக் கணிப்பதெல்லாம் சூரியனை வைத்துதான். சூரியனின் சொந்த வீடு சிம்மம்.  

அங்கிருந்துதான் சூரிய பகவான் பன்னிரண்டு ராசிகளுக்கும் புறப்படுகிறார். ஆகவே வருடப்பிறப்பு ஆவணியில் தான். இன்றைக்கும் கொல்லம் ஆண்டு ஆவணியில் தான் தொடங்குகிறது. காலமாற்றத்தால் வருடப்பிறப்பு சித்திரையாக மாறிவிட்டது. ஒருசமயம் சிவபெருமானுக்கு ஒரு எண்ணம் எழுந்தது. அதன்படி திருக்கயிலையில் தம்மை வழிபட்டு சேவை செய்கிற அனைத்திற்கும் அதிபதியாக கணேசன், கந்தன் இவர்களால் யாரை நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. யோசனை செய்த பரமன் ஞானப்பழத் திருவிளையாடல் போல் இன்னோர் திருவிளையாடல் நடத்த திட்டமிட்டார். இருவரிடமும் இந்த சோதனையில் வெற்றி பெறுபவருக்கு கண அதிபதி பட்டம் சூட்ட முடியும் என்றார். உங்கள் இருவரில் யார்முதலில் உலகைச் சுற்றி வருகிறீர்களோ அவரே என்னை சுற்றியுள்ள கணங்களின் தலைவன் ஆக்குகிறேன் என்றார். ஏற்கனவே ஏமாந்த முருகன் இம்முறை சாமர்த்தியமாக தாய் தந்தையரை உடனே வலம்வர ஆரம்பித்தான். விநாயகர் விடுவாரா யோசித்தார். ராம நாமத்துக்குள் இந்த பிரபஞ்சமே அடக்கம் என்ற ரகசியம் அவருக்குத் தெரியும்.

உடனே தரையில் ‘ராமா’ என எழுதி அதைச் சுற்றி வந்து முருகனையும் முந்திவிட்டார். விநாயகரின் புத்திசாலித்தனத்தை அறிந்த ஈசன் வியந்தார். மூத்த மகனைப் பாராட்டி கணங்களுக்கு உரிய அதிபதி பதவியை வழங்கி விநாயகர் இனி நீ கணபதி என்ற திருநாமம் பெற்று விளங்கிடுவாய் என அருளினார்.
விநாயகர் ஓர் எளிய தெய்வம். சிவனின் மைந்தர்கள் ஐவர் விநாயகர் வீரபத்திரர் பைரவர், ஐயனார், முருகன் ஐவரில் விநாயகர் ஒருவருக்கே பிள்ளையார் என்ற திருநாமம். விநாயகர் என்றால் தனக்கு மேல் வேறொரு தலைவன் இல்லாதவன். ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்தினத்தில் இவரது பெருமையைப் பாடியுள்ளார். தனக்கு மேற்பட்ட தலைவன் இல்லாத ஒப்பற்றவர் இவர்.பிள்ளையார் எளிமையானவர். கூடத்தில் இருப்பார், மாடத்திலிருப்பார், கோபுரத்தில் இருப்பார், ஏன் குடிசையில் கூட இருப்பார். ஆற்றங்கரையில் காட்சி தரும் இவர் மலை உச்சியிலும் இருப்பார். எல்லா மரத்தடியிலும் இவரைக் காணலாம். அரசமரம், இலந்தை, வன்னி, கொன்றை, விளா, வேப்பமரத்தடியிலும் இவரைக் காணலாம்.

இவரைக் கல்லிலும் வடிக்கலாம், விலையுயர்ந்த நவரத்தின கற்களாலும் வடிக்கலாம். விலையுயர்ந்த தங்கம் மற்றும் பஞ்சலோகத்திலும் வடிக்கலாம், ஏன் கடல் நுரை பிள்ளையார் கூட உண்டு. (திருவலஞ்சுழி) சந்தனம், மஞ்சள் ஏன் சாணத்திலும் இவரைப் பிடித்து வைத்து  வணங்கலாம். புல்லை ஆபரணமாகவும், பொரியை நிவேதனமாகவும் ஏற்றுக் கொள்வார். எளியவர், ஏழைப் பங்காளன் உக்கிரமான கடவுள் சிலை அருகே இவரை வைத்தால் போதும். அந்த உக்கிரத்தை தணித்து விடுவார் இவர். வடநாட்டுப்படி சித்தி, புத்தி வல்லபை விநாயகரின் தேவிகள். க்ஷேமம், லாபம் என இரு பிள்ளைகள் சந்தோஷி என ஒரு பெண் விநாயகருக்கு. பிள்ளயாரின் பெண் உருவத்தின் பெயர் விநாயகி கணேசாயினி. அத்துடன் விநாயகரை பிரம்மச்சாரியாக கருதி ஒரு சாரார் வழிபடுகின்றனர். ஒரு சாரார் பிரம்மனின் புதல்விகளான சித்தி புத்தியை தன் சக்திகளாகக் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

சிலர் இவர்மீது கொண்ட அன்பால் திருக்கல்யாணம் செய்து வணங்குகின்றனர்.விநாயகர் திருமாலின் 12 புத்திரிகளை திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார் வாரியார் சுவாமிகள். அவர்கள் பெயர்கள், மோதை, பிரமோதை, ஸீமநஸை, சுந்தரி, மனோரமை, தங்கலை, கேசினி, சாந்தை, சாருஹாசை, ஸீமத்யமை, நந்தினி, சர்மதை. தும்பிக்கை இல்லாத மனிதமுக விநாயகர்தான் ஆதி விநாயகர். கூத்தனூர் சரஸ்வதி ஆலயம் அருகே பூந்தோட்டத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் குடந்தை சாலையில் திலதர்ப்பணபுரியில் இவரைக் காணலாம். இவ்வாலய சிவன் பெயர் முக்தீஸ்வரர் அம்பாள் சுவர்ணவல்லி. இத்துடன் ஆலயம் உள்ளே தும்பிக்கை விநாயகரும் உள்ளார். ஆதி விநாயகர் சந்நதி கோயில் வெளிப்புறம் உள்ளது.இவ்வாலயத்தில் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியன்றும் மாலை 6 மணிக்கு கோபூஜை முதல் யாகம் வரை நடத்துவர். அப்போது ஆதி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், தேன், பால், தயிர் அபிஷேகம் நடக்கும்.

பௌர்ணமியன்று நம் குறையை நிவர்த்தி செய்யும்படி ஆதி விநாயகரிடம் வேண்டிக் கொண்டு நம் பூஜையறையில் காய்ந்த மட்டைத் தேங்காயை வைத்து வணங்கியபின் சங்கடஹர சதுர்த்தியன்று ஆலயம் எடுத்துச் சென்று ஐயரிடம் கொடுத்தால் யாசத்தில் போட்டு விடுவார். பின் நம் பெயரில் அர்ச்சனை செய்வார்.
மகாராஷ்டிராவில் பிள்ளையார் சதுர்த்தியை மிக உற்சாகமாக 10 நாட்கள் கொண்டாடுவார்கள். சுமார் 100 வருடங்களுக்கு முன் பாலகங்காதர திலகர் எல்லோரும் ஒற்றுமையாக பூஜையில் ஈடுபடும் ஒரு நல் வழியை இப்பண்டிகை மூலம் ஏற்படுத்தினார். அப்போது முதல் இப்பண்டிகை மகாராஷ்டிராவின் இன்றியமையாத பண்டிகையாகிவிட்டது. இங்கு சீசனுக்கு ஏற்றாற்போல் பிள்ளையார் அலங்காரம் மாறுபடும். கோட் சூட், கிரிக்கெட்பேட், டீ சர்ட் என மார்டன் பிள்ளையாரை பல வடிவங்களில் இங்கு பார்க்கலாம்.

எல்லோர் இல்லங்களிலும் 4, 5 பிள்ளையார் படங்களாவது இருக்கும். பக்தர்கள் விழாவிற்கு ஒவ்வொரு பகுதிக்கும் போட்டியிட்டு பந்தல் அலங்காரமும் பிள்ளையார் அலங்காரமும் செய்வார்கள். பெரிய மார்;கட்டில் சித்தி புத்தி பிள்ளையாரை தரிசிக்கலாம். இவர் ஊர்காக்கும் தெய்வம். பூனாவில் மட்டுமே 3 துதிகளையுடைய பிள்ளையாரை பார்க்கலாம். திரிகண்ட கணபதி என்பர். இந்த அதிசயக்கோயில் சோமவார் பேட்டில் உள்ளது. பேஷ்வா காலத்தில் கட்டப்பட்டது. தலையில் வெள்ளி கிரீடம், முறம்போல் காது, கையில் பரசு சூலம் அபய ஹஸ்தம் மோதகத்துடன் 4 கரம். இங்கு சுரங்கப்பாதையும் உள்ளது. வருடம் ஒரு நாள் குரு பூர்ணிமா தினத்தன்று தான் திறந்து வைப்பர். முப்பெரும் சக்தி, மும்மூர்த்திகள், மூவுலகமே யாவும் என்னுள் அடக்கம் எனக் கூறும் திரிகண்ட கணபதி இவர்.முதல் முதல் வழிபடப்பட்ட பிள்ளையார். தெய்வங்களில் முதலாமவர் விநாயகர் அவருக்கு தமிழகத்தில் முதன் முதலாக எழுப்பப்பட்டதாக கருதப்படும் கோயில் தூத்துக்குடி மாவட்ட ஆறுமுக மங்கலத்தில் அமைந்துள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோயில்தான். கிட்டத்தட்ட 2300 வருடங்களுக்குமுன் அமைக்கப்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.       
                                       
கி.மு நான்காம் நூற்றாண்டில் வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையில் இருந்து 1000 அந்தணர்களை வரவழைத்து பெரிய யாகம் செய்ய முடிவெடுத்தான். ஆனால் வந்தவர்கள் 999பேர்கள்தான். ஒருவர் குறைவதால் மன்னன் கவலை கொண்டான். உடனே விநாயரை பிரார்த்தனை செய்தான். அதனால் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரமாவது நபராக வந்து யாகத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து யாக முடிவில் ஆறுமுக மங்கலத்தை தானமாகப் பெற்று அங்கேயே தங்கி விட்டார். அதனால் இவருக்கு ஆயிரத்தெண் விநாயகர் எனப் பெயர். விநாயகருக்கென அமைந்துள்ள முக்கியமான கோயில்களில் தேர், கொடிமரம் அமைத்து விழா காணும் கோயில்கள் இதுவும் ஒன்று. திருவாவடுதுறை ஆதனத்தால் தேர், கொடிமரம் உற்சவமூர்த்திகள் தரப்பட்டன. ஆதிசங்கரர் உடல் உபாதை நீங்க இங்கு வந்து கணேச பஞ்ச ரத்தினம் பாடி பின் திருச்செந்தூர் சென்று சுப்ரமணிய புஜங்க ஸ்தோத்திரம் பாடி வியாதி நீங்கப் பெற்றார்.

அதனால் இங்கு வந்து வேண்டினால் உடல் உபாதை நீங்கும். பிரார்த்தனை நிறைவேறியபின் 1008 தேங்காய் உடைத்து வழிபடுகிறார்கள். 108 தீபவழிபாடு செய்கிறார்கள். சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம் 7ம் நாள் பஞ்சமுக ஹோமம் நடத்துவர். பின் கணபதி, நடராஜருடன் வீதியுலா வருவார். ஏரலில் இருந்து 4 கி.மீ இவ்வாலயம் உள்ளது. பெயர் ஆறுமுக மங்கலம். அதேபோல முதன் முதலில் விநாயகருக்காக கட்டப்பட்ட குடைவரை கோயில் தான் பிள்ளையார்பட்டி. கற்பக விநாயகர் ஆலயம். பிள்ளையார் அம்சமான சித்தியும், புத்தியும் பிரம்மாவின் புத்திரிகளாகப் பிறந்தனர். இவர்கள் இருவரும் கமலை, வல்லியும் திருவலிதாய இறைவன் முன் தவம் இருந்தனர். தங்கள் இருவருக்கும் ஒருவரே மாப்பிள்ளையாக வரவேண்டும் என்று ஒரே மணமகனைத் தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்றனர் இச்சகோதரிகள். யோசித்த ஈசன் இதற்கு ஏற்றவன் பிள்ளையார்தான் மாப்பிள்ளையாவார் என முடிவெடுத்தார். அப்போது கஜமுகாசுரன் அட்டகாசத்தை தன் தந்தத்தை உடைத்து அசுரவதம் செய்தார்.

பெருச்சாளி வடிவெடுத்த அசுரனுக்கு ஞானம் கொடுத்து வாகனமாக ஆக்கிக் கொண்டார். சம்ஹாரம் முடிந்தபின் இவருக்கு சம்சாரம்(கள்) கிடைத்தது. ஈசன் ஆணைப்படி திருவலிதாய தலத்தில் கமலை, வல்லியை மணந்துகொண்டு வலிதாய நாதர் அருள் பெற்று அங்கேயே தங்கிவிட்டார்.  இது ஒரு குருஸ்தலமும் கூட. கருவறை முன் நின்று நேராக சுயம்பு வலிதாயரை வணங்கி வலப்புறம் பார்த்தால் ஜகதாம்பாளான தாயம்மையை தரிசிக்கலாம். அண்ணாந்து பார்த்தால் மண்டப விதானத்தில் அஷ்டலட்சுமிகள் அருள்புரிகின்றனர். இத்தலத்தை வணங்கினால் பக்தர்களை துன்பம் அணுகாது. ஞானத்துடன் சொர்க்கபதவியும் கிட்டும். புகழ் உண்டாகி வாழ்க்கைத்தரம் உயரும்.  மயிலாப்பூர், திருவான்மியூர், திருவேற்காடு, திருவிற்கோலம், திருஇலம்பயம் கோட்டூர், திருஊறல், திருவாலங்காடு, திரு வெண்பாக்கம், திருமுல்லைவாயில், திருவொற்றியூர் ஆகிய சிவத்தலங்கள் ஒரு மாலைபோல அமைய இவைகள் மத்தியில் மணிமாலை நடுநாயகமாக மின்னுகிறது திருவலிதாய ஆலயம்.

இதன் பெயர் பாடி என்பர். வில்லிவாக்கம், அம்பத்தூர் இடையில் அமைந்துள்ளது. பிள்ளையாருக்கு திருமணம் நடந்த தலம் இதுதான். வாதாபி கணபதியை கொண்டுவந்த நரசிம்ம பல்லவன் தென்னாட்டு சுற்றுலா வந்தபோது காரைக்குடி பக்கத்தில் உள்ள அழகான மலையைக் கண்டான். அந்த மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவர்தான் இந்த விநாயகர் முதல் குடைவரை கோயில் இது. வலம்புரி விநாயகர் இரண்டு திருக்கரங்கள் ஒருகரத்தில் லிங்கத்தை வைத்துக்கொண்டு அர்த்த பத்ம ஆசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். இது நகரத்தாருக்கு சொந்தமான கோயில். காரைக்குடியும் சுற்றுவட்ட 70 கிராமங்களும் நாட்டுக் கோட்டை செட்டியார்களின் பிறப்பிடம். இங்கு விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும்.  விநாயகர் சதுர்த்தியன்று (ஆவணி மாத வளர்பிறை 4ம் நாள்) மெகா கொழுக்கட்டையை நிவேதனம் செய்வார்கள். 10 நாள் விழா முதல் நாள் கொடியேற்றம் காலை நடைபெறும். பின் இரவு மூஷிக வாகன உலா நடைபெறும். ஒவ்வொருநாளும் காலையில்  வெள்ளிக் கேடயத்தில் சுவாமி உலா வருவார்.

2ம் நாள் இரவு சிம்ம வாகனம், 3ம் நாள் இரவு பூத வாகனம், 4ம் நாள் இரவு கமல வாகனம், 5ம் நாள் இரவு ரிஷப வாகனம், 6ம் நாள் இரவு கஜமுக சம்ஹாரம் நடைபெறும். 7ம் நாள் இரவு மயில் வாகனம், 8ம் நாள் இரவு குதிரை வாகனம் நடைபெறும். 9ம் நாள் மாலை திருத்தேர் உலா நடைபெறும். இரவு யானை வாகனம் 10ம் நாள் விநாயகர் சதுர்த்தி உச்சிகாலத்தில் மெகா கொழுக்கட்டை நைவேத்யம்/ காலை தீர்த்தவாரி உற்சவம் இரவு பஞ்சமூர்த்தியினர் உலா நடைபெறும். 9ம் நாள் மட்டுமே மூலவரை சந்தனகாப்பு அலங்காரத்தில் தரிசிக்க முடியும். ஆண்டுதோறும் திருமூலர் அருளிய திருமந்திரம் நூலை இலவசமாக பக்தர்களுக்கு தருவார்கள். கி.பி.1202 முதல் இக்கோயில் நகரத்தாருக்கு சொந்தமானது என அறியலாம். இந்தியாவின் புகழ் பெற்ற விநாயகர் கோயில் இது. இவ்வாலய சிவன் பெயர் மருதீசர். அம்பாள் பெயர் வாடாமலர் மங்கை. இவர்களுடன் சோமாஸ்கந்தர், முருகனையும், தரிசிக்கலாம். தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் உள்ளது பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில்.

இங்கு 16 திரி விளக்கு உள்ளது. இதற்கு தான் ஷோடசவிளக்கு எனப் பெயர். இவ்விளக்கின் 2 லிட்டர் எண்ணெய் ஊற்றலாம். 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஆசிர்வதிப்பது போல் தோன்றும் இவ்விளக்கை தரிசித்தால் 16 வகை பேறு பெறலாம். எப்போதும் விநாயகர்சந்நதியில் இந்த 16 விளக்குகளும்  எரிந்து கொண்டே இருக்கும்/ கனக விநாயகர் என்ற பெயர் கொண்ட இவரை ராஜேந்திர சோழன் வழிபட்டவர். இவருக்கு கணக்குப் பிள்ளையார் என பெயர்/ கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயம் அமைக்க திட்டமிட்டு திருப்பணிக்குத் தேவையான பொன் பொருளை அரண்மனை கணக்காளரிடம் ஒப்படைத்தார். அவர் அமைச்சரிடம் கொடுத்தார். அமைச்சர் அவற்றை கனக விநாயகர் முன் வைத்து பின் கட்டுமான பணி செய்வார். 15 ஆண்டுகள் திருப்பணி நடைபெற்றது. ஒருநாள் கோயில் பணிகளை பார்வையிட வந்த மன்னர் அமைச்சரைப் பாராட்டினார். பின் திருப்பணி செலவு கணக்கை நாளை தருமாறு கூறிச்சென்றார். அமைச்சர் இதுவரை கணக்கே எழுதவில்லை என கலங்கினார். விநாயகரிடம் சென்று புலம்பினார். பின் இல்லம் திரும்பி உறங்கினார்.


கனவில் பிள்ளையார் வந்தார். அமைச்சரே வருந்த வேண்டாம். கோயிலுக்கு இதுவரை என்னூற்றியெட்டு லட்சம் செலவானது என கூறிவிடுங்கள் என்று கூறி மறைந்தார். அப்படியே மன்னரிடம் கூறிவிட்டார். அமைச்சர் கோயில் கட்டுமானம் சரிபார்க்க  என்னூற்றி எட்டு லட்சம் என்றால் கோயில் சிறந்த முறையில் தான் உருவாகியுள்ளது என்றார் மன்னர். இதனால் இவ்விநாயகருக்கு கணக்கு விநாயகர் என்று பெயர். காஞ்சி காமாட்சி ஆலயத்தின் ராஜகோபுரம் அருகே சிந்தூர கணபதி, ஜயஸ்தம்பம் அருகே விக்ன நிவாரண கணபதியும் பிரசன்ன கணபதியும் உள்ளனர். பள்ளியறை எதிரே இஷ்டசித்தி கணபதி அம்மன் சந்நதி வாயிலில் இருபுறமும் விநாயகர்கள், சுப்ரமணியர் உற்சவ காமாட்சி எதிரே துண்டிர மகாராஜா கணபதி. பங்காரு காமாட்சியின் இருபுறமும் விக்னேஸ்வரர், சுப்ரமணியர், காயத்ரி மண்டபம் முன் இருபுறம் சக்தி கணபதி சிங்கார வேலவரும், அரூபலட்சுமி அருகே சௌபாக்ய கணபதி, சந்தான ஸ்தம்பம் எதிரே சந்தான கணபதி.  ஜயஸ்தம்பம் இடப்புறம் வரசித்தி கணபதி, குளக்கரையில் திருமஞ்சன விநாயகர், காமாட்சி அம்மன் ஆலய தெருக்கோடியில் ஏலேலோ விநாயகர்களையும் தரிசிக்கலாம்.







No comments:

Post a Comment