Monday 23 September 2019

OPERATION VIJAY - GOA SURRENDER

OPERATION VIJAY - GOA SURRENDER


ஆப்ரேசன் விஜய்’ பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை! By Aashika| Updated: Friday, July 13, 2018, 18:02 [IST] முக்கியமான ஓர் நிகழ்வை கூட்டாக செய்து முடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு பெயரை வைத்து தொடர்ந்து அதை குறித்தான தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், திட்டமிட்ட செயல் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று அணுகும் வகையில் அது உதவிடும். இந்த விஷயம் ராணுவத்தினர் மத்தியில் ஏகப்பிரபலம்.


 இந்திய வரலாற்றில் இரண்டு முறை ஆப்ரேசன் விஜய் என்ற பெயரில் ஆப்ரேசன் நடந்திருக்கிறது. முதலாவதாக 1961 ஆம் ஆண்டு வாஸ்கோட காமா 1498 ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்ததிலிருந்து சுமார் 450 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த போர்ச்சுகீசியர்களை வெளியேற்றும் வகையில் நடத்தப்பட்ட போர். இன்னொன்று 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு நடைப்பெற்ற கார்கில் போர். விஜய் என்றால் வெற்றி என்று பொருள் தரும் கார்கில் போரில் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆப்ரேசன் விஜய் என்று பெயரிடப்பட்டது. அதோடு கார்கில் விஜய் திவாஸ் என்று வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. கார்கில் போரின் போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் இந்த நாளை அனுஷ்டிக்கிறார்கள். 

 இந்தியாவிற்கு நுழைய முதல் கடல் வழியை கண்டுபிடித்தவர்கள் போர்ச்சுகீசியர்கள். போர்ச்சுகீசிய வீரன் வாஸ்கோட காமா கடல் வழியாக பயணித்து காலிகட் வந்தடைகிறார். அப்போது அந்த பகுதியை ஆட்சி செய்து வந்த ஜமோரின் என்ற அரசர் அவரை வரவேற்று உபசரிக்கிறார். மூன்று மாதங்களில் கிளம்பும் போது எக்கச்சக்கமான பரிசுப் பொருட்களுடன் திரும்புகிறார் வாஸ்கோட காமா. இந்தியாவில் பரிசாக கிடைத்த பொருட்கள் அதன் உண்மையான விலையை விட சுமார் 60 மடங்கு அதிகமாக ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்கப்பட்டது. 

 1501 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக வாஸ்கோடகாமா காலிகட் வருகிறார். வந்தவர் கண்ணூரில் ஒரு தொழிற்சாலையை நிறுவுகிறார். அங்கிருந்து அவர்களது ஆதிக்கம் ஆரம்பமாகிறது. அரபிய வியாபாரிகளுக்கு போர்ச்சுகீசியர்களின் இந்த வளர்ச்சி கோபத்தை உண்டாக்குகிறது. அதோடு அவர்களை மன்னர் ஆதரவு தருகிறாரே என்று கடுங்கோபம். அவ்வப்போது மன்னருக்கு போர்ச்சுகீசியர்களுக்கும் இடையில் புகைச்சலை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். போர்ச்சுகீசியர்களுக்கும் மன்னருக்கும் இடையில் போர் நடந்தது. இதில் போர்ச்சுகீசியர்கள் வெற்றி பெற்றார்கள். 1505 ஆம் ஆண்டு இந்தியாவிற்கான போர்ச்சுகீசிய கவர்னராக பிரான்ஸிஸ்கோ டி அல்மீடியா பதவியேற்றார். இந்திய பெருங்கடலை தாங்களே நிர்வகிப்போம் என்றார்கள் எங்கள் அனுமதியின்றி இந்தப் பகுதியை யாரும் கடந்து செல்லக்கூட அனுமதிக்க முடியாது என்றார்கள். இதற்காக இவர்கள் கொண்டு வந்த பாலிஸி தான் ப்ளூ வாட்டர் பாலிசி

 அல்மீடியாவிற்கு பிறகு 1509 ஆம் ஆண்டு அல்ஃபோன்சோ டி அல்புக்வர்கியு என்பவர் இரண்டாம் கவர்னராக பொறுப்பேற்றார். ஒவர் பிஜாபூர் சுல்தானிடமிருந்து 1510 ஆம் ஆண்டு கோவா வை கைப்பற்றினார். கோவாவை கைப்பற்றிய அல்புக்வர்கியு தான் போர்ச்சுகீசிய கொடியை இந்தியாவில் நிலைக்கச் செய்தவர் என்று போற்றப்படுகிறார். நாளடைவில் போர்ச்சுகீசியர்களின் தலைமையிடமாக கோவா விளங்கியது. பதினாறாம் நூற்றாண்டு முடிவதற்குள்ளாக இந்தியாவைச் சுற்றி கோவா, டாமன், டியு, சால்செட் போன்ற இந்திய கடல் எல்லையை எல்லாம் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தின் கீழ் சேர்த்துக் கொண்டார்கள். 
இந்த காலகட்டத்தில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வாணிபம் செய்வதற்காக வருகிறார்கள். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டினை நிர்வாகம் செய்வதற்கும் இந்தியாவை விட பன் மடங்கு வளர்ந்திருக்கும் பிரிட்டிஷ்காரர்களை சாமாளிக்கும் திறன் சிறிய நாடான போர்ச்சுகீசியர்களிடம் இருக்கவில்லை. போர்ச்சுகீசியர்கள் வியாபாரத்தைவிட தங்கள் மதத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்கு பிரதான முக்கியத்துவம் வழங்கினார்கள் என்பதால் அவை இங்கே எடுபடவில்லை. மெல்ல தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் இழக்க ஆரம்பித்தார்கள். 1612 ஆம் ஆண்டு சூரத்தை பிரிட்டிஷிடம் விட்டுக் கொடுத்தார்கள். 1631 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களிடமிருந்த ஹூக்லியை முகலாயர்கள் கைப்பற்றினார்கள்.
இப்படி ஒரு பக்கம் போர் மூலமாக ஒவ்வொன்றாக இழந்து வர போர்ச்சுகீசிய இளவரசிக்கும் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸுக்கும் 1661 ஆம் ஆண்டு திருமணம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் போர்ச்சுகீசிய இளவரசிக்கு வழங்கப்பட்ட வரதட்சனையாக போர்ச்சுகீசிய ஆதிக்கத்தில் இருந்த மும்பையை எழுதி வாங்கினார் இரண்டாம் சார்லஸ். 1739 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களின் வடக்கு பகுதியை எல்லாம் மராத்திய மன்னர் கைப்பற்றினார். நாலாபுறமும் இப்பிடி ஒவ்வொன்றாக இழந்த போர்ச்சுகீசியர்களிடம் இறுதியாக நிலைத்தது கோவா, டாமன் மற்றும் டியு. இந்தியாவிற்கு முதன் முதலாக வந்த அந்நிய நாட்டினர் போர்ச்சுகீசியர்கள். அதே போல இந்தியாவை விட்டு கடைசியாக சென்றவர்களும் போர்ச்சுகீசியர்கள் தான். இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்த போதும் போர்ச்சுகீசியர்கள் கோவாவிலேயே இருந்தார்கள்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதாக ஆங்கிலேயர்கள் அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் ஜூலியா மெனீஸ் என்ற மருத்துவரை கோவாவில் வசித்து வந்த ராம் மனோஹர் லோஹியா என்பவர் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். இதற்கு முன்பாகவே இருவரும் நண்பர்கள். மும்பையில் இருந்த போது மருத்துவர் மெனீஸை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றிருந்தார். இருவரும் இணைந்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக கோவாவில் தொடர்கிற போர்ச்சுகீசிய ஆட்சியை நிறுத்த வேண்டும் என்று கூட்டங்களை போராட்டங்களை நடத்தினார்கள். இவர்களது போராட்டங்களை தொடர்ந்து போலீஸ் இருவரையும் கைது செய்தது. 
தொடர்ந்து கோவாவுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தீவிரமாக போராட ஆரம்பித்தார்கள். 1946 ஆம் ஆண்டிலிருந்து போர்ச்சுகீசியர்களை ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டங்கள் ஆயுத்தமாகின. ஒரு பக்கம் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவும் போராடினார்கள். ஏராளமான மக்கள் கைது செய்யப்பட்டார்கள். கோவா மக்கள் இந்த நிலம், கடல்,மண் எல்லாமே தங்களுக்கு உரிமையானது அதனை எங்கிருந்தோ வந்த போர்ச்சுகீசியர்கள் ஆட்சி செய்து நம்மை அடிமையாக வைத்திருப்பதா என்று கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. 
1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற போதும் கோவா போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு போர்ச்சுகீசியர்களையும் இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று சூளுரைத்தார். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போர்ச்சுகீசியர்கள் கோவாவை விட்டு வெளியேற மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சு நாட்டினர் நீண்ட இழுப்பறிக்கு பிறகு ஆட்சியை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டார்கள்.
1954 ஆம் ஆண்டு போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. போராட்டக்காரர்கள் போர்ச்சுகீசியர்களின் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளை கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக புகார் அளித்தது போர்ச்சுகீஸ். 1960 ஆம் ஆண்டு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியானது. அதில் அந்த நிலப்பகுதியை கையாளும் உரிமை போர்ச்சுகீசியர்களுக்கு இருப்பது போலவே இந்திய எல்லைக்கு உட்பட்டு இருப்பதால் இந்தியர்களுக்கும் அந்த நிலம் சொந்தமானது தான் என்று சொல்லப்பட்டது. கொல்லப்பட்டார்கள்.
 இதனைத் தொடர்ந்து மக்கள் மிகத் தீவிரமாக போராட்டத்தில் இறங்கினார்கள். கோவாவில் இருந்த டிராகோல் கோட்டையில் இந்திய கொடியை ஏற்றினார்கள். 1955 ஆம் ஆண்டு கோவாவில் இருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இருக்கும் போர்ச்சுகீசியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். போர்ச்சுகீசியர்களின் ஆட்சியில் கீழ் இருக்கக்கூடிய கோவா, டாமன் மற்றும் டியு ஆகிய பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். போர்ச்சுகீசியர்கள் எளிதாக சென்று வியாபாரம் மேற்கொள்ளும் வழித்தடங்களில் எல்லாம் தடையை ஏற்படுத்தினார்கள். 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி இந்தியப் படை கோவாவில் நுழைந்துவிட்டது. அந்த படையினருக்கு வெற்றியை குறிக்கும் வகையில் ஆப்ரேசன் விஜய் என்று பெயிரிடப்பட்டிருந்தது. சுமார் 36 மணி நேரம் தரைவழி, கடல் வழி, வான் வழி என எல்லா வழித்தடங்களையும் முடக்கியது ஆப்ரேசன் விஜய்.... வேறு வழியின்றி போர்ச்சுகீசியர்கள் இந்திய அரசங்கத்திடம் சரணடைந்தார்கள்.




No comments:

Post a Comment