Tuesday 3 September 2019

கீழா நிலைக் கோட்டை KEELANILAI FORT HISTORY





கீழா நிலைக் கோட்டை  
KEELANILAI FORT HISTORY


தமிழகத்தை ஆண்ட வேந்தர்களில் ஒருவரே பாண்டியர்கள். மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கேரளாவிற்கு உட்பட்ட சில பகுதிகளை செழிமை மிக்கதாக ஆட்சி செய்துவந்த இவர்களுக்கு இந்தியாவில் வேறெந்த மன்னர்களுக்கும் இல்லாத மிக நீண்ட வரலாறு உண்டு. பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்னும், முத்தும் நிறைந்த நகராகவும், இவர்களது போட்டைகளே முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரத் தோற்றம் கொண்டதாக இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. இதில், ஆங்கிலேயர்களே கண்டு அஞ்சிய பாண்யர்களின் கோட்டை எங்குள்ளது தெரியுமா

புதுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறந்தாங்கி சாலையில் கானாடுகாத்தான் அடுத்துள்ளது கீழாநிலைக் கோட்டை கிராமம். இப்பகுதி இந்தப் பெயர் பெறக் காரணமே இங்கே உள்ள சிறிய காட்டில் மறைந்து கிடக்கும் பாண்டியரின் கோட்டையே. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோட்டை உள்ளது.

கீழா நிலைக் கோட்டை 

சிறிய காட்டின் நடுவே எதிரிகள் யாரும் உள்ளே நுழைய முடியாதவாறு பல அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள பாண்டிய மன்னரின் கோட்டையான கீழாநிலைக் கோட்டை கட்டுமானத்தில் தனித்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இக்கோட்டையின் மதில்சுவர்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரத்துடன் தோற்றமளிப்பதை காண முடியும்.

மதில் சுவற்றில் பாதை கி.பி 17ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த பாண்டியர்கள் தங்களுக்கான ஆயுதக் கிடங்காகவும், பாதுகாப்பிற்காகவும் கட்டப்பட்டது கீழா நிலைக் கோட்டை. கோட்டையைச் சுற்றிலும் பிரம்மாண்டமான மதில் சுவர்களைக் கட்டி அதிலேயே பல பாதுகாப்பு அரண்களும், அவசர காலத்தில் தப்பிக்கும் வகையிலான சுரங்க வழிகளும் அமைந்துள்ளது.

கோட்டையின் கம்பீரம் 

புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் காணப்படும் கோட்டைகள் பெரும்பாலும் சிறிய அளவிலான நிலபரப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த கீழாநிலை கோட்டை மட்டும் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் பல அடுக்குகளாக பிரித்து கட்டியுள்ளனர். கோட்டையின் உள்ளே இருந்தபடியே வெளியில் உள்ள எதிரிகளை வீழ்த்தும் வகையில் அரண்கள் உள்ளன.

பாண்டியரின் பிரங்கி 

கீழா நிலைக் கோட்டைச் சுவர்களின் உயரம் சுமார் 30 அடிக்கும் மேல் உள்ளது. கோட்டையைச் சுற்றிலும் பாதுகாவல்கள் நிற்கும் வகையில் தலங்களும் உள்ளன. கோட்டைக்கு நடுவே கொடி மரமும், அதன் முன் சிறிய பீரங்கியும் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயரின் தாக்குதல் 

எளிதில் தகர்க்கமுடியாத இக்கோட்டையினை சுற்றிவளைத்த ஆங்கிலேயர்ப் படை தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக கோட்டைச் சுவற்றில் குண்டுகள் பாய்ந்த தடங்கள் உள்ளன. இதனைக் கொண்டு இக்கோட்டை சிறிது காலம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும் என்று கணிக்க முடிகிறது.

நர்த்தமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களில் ஒன்று நர்த்தமலை. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி சாலையில் சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இங்கு உள்ள கற்கோவில் பிரசிதிபெற்றது

No comments:

Post a Comment