Sunday 1 September 2019

SREE LATHA NAMBOODRI ,MALAYALAM COMEDY ACTRESS BORN 1953 MARCH 11




SREE LATHA NAMBOODRI ,MALAYALAM 
COMEDY ACTRESS BORN 1953 MARCH 11



ஸ்ரீலதா நம்பூதிரி-கேரளாவில் உதயா ஸ்டூடியோவின் வடக்குப்பாட்டுக் காலம் முதல் மலையாளத் திரையுலகில் திடகாத்திரமாக வலம் வருகின்ற ஓர் நகைச்சுவை நடிகை; மட்டுமல்லாது சிறந்த நகைச்சுவைப் பாடகி. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகையாக இருந்துவரும் ஒரு சாதனையாளர். 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். ஜனங்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்வதோடு, சோகமான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது கண்கலங்கச் செய்யவும் தெரிந்த ஆற்றலுள்ளவர். இவரது தாயார் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்ற ஓர் மேடைப் பாடகியாதலால் அவரிடமிருந்தே இவரும் சாஸ்திரீய சங்கீதத்தை முறையாக கற்று தேர்ந்தவர்.


இவரது பிறப்பிடம் ஆலப்புழா மாவட்டம், கருவற்றா. இவரது தந்தை பாலகிருஷ்ணன் இராணுவத்தில் பணிபுரிந்தவர். அதனால் அவ்வப்போது குடிபெயர்ந்து பல இடங்களுக்கும் செல்லும் நிலை இவரது குடும்பத்தாருக்கிருந்தது. அதனால் ஆலப்புழா மட்டுமல்லாமல், முதுகுளம், ஹரிப்பாடு, குருவாயூர் என பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளை வாடகை வீடுகளில் களிக்கவேண்டியதாயிற்று. அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஹரிப்பாடு ஊரில் இவர் வசித்துவந்த வாடகை வீட்டினருகே இவர் பயின்ற பள்ளியின் அருகே இயக்குநரும், பாடலாசிரியருமான ஸ்ரீகுமாரன் தம்பியின் வீடும் இருந்தது. அவர் ஸ்ரீலதாவின் திறமைகளை அறிந்து பொது மேடைகளில் பாட வைத்தார். K.P.A.C நாடக மன்றத்தில் நாடகங்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகர் சத்தியனின் மகளாக தனது 15-ஆவது வயதில் ‘ஆஷா தீபம்’ என்ற படத்தில் திரையில் அறிமுகமானார். கே.எஸ்.சேதுமாதவனின் ‘பார்யமார் சூழ்ச்சிக்குக’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்தார். இதைத் தொடர்ந்து எம்.கிருஷ்ணன் எனபவரது இயக்கத்தில் ‘படிச்ச கள்ளன்’ படத்தில் அடூர்பாஸியின் ஜோடியாக நடித்தார். அப்படம் வெற்றிப்படமனது. ஐந்தாறு படங்களும் வரத்துவங்கியதில் இவர் ஒரு நகைச்சுவையாக உருவாகினார். அடூர்பாஸி-ஸ்ரீலதா ஜோடி மக்களிடையே பிரபலமடைந்தது. 1967—இல் துவங்கி 200-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். பிரபல பழம்பெரும் நடிகை குமாரி தங்கம் இவரது உறவினர்.


இத்தருணத்தில் ஆயூர்வேத மருத்துவரும் நடிகருமான ‘காலடி’ நம்பூதிரி என்பவரோடு ஒரு படத்தில் நடித்தார். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. நடிப்பதோடு மேடைக் கச்சேரிகளையும் நிகழ்த்திவந்த ஸ்ரீலதாவின் கச்சேரிகளை நம்பூதிரி சென்று கேட்டு வந்தார். நாளடைவில் பெற்றோரின் எதிர்ப்புக்கிடையே திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்குப்பின் நடிப்பதை நிறுத்துவிட்டு 15 ஆண்டுகள் கணவரின் ஆயூர்வேத மருத்துவம் தொடர்பான பணிகளைக் கவனித்துக் கொண்டு மேடைக்கச்சேரிகளும் செய்துவந்தார். இத்தம்பதியினருக்கு விஷாக் என்ற மகனும் கங்கா என்ற மகளும் உள்ளனர். இவரது கணவர் 2005-இல் காலமாகிவிட்டார். அதனால் மீண்டும் திரைப்பிரவேசம் செய்தார். ‘துளசிதளம் எந்ந பரம்பரையில்’ என்ற சந்திரகுமார் இயக்கிய படம் மறு பிரவேசத்தின் முதல் படமாக அமைந்தது. ‘ஓர்மா’, ’அம்ம மனசு’ என்ற படங்கள் இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது.

பெரிய திரையில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சின்னத்திரையிலும் நடிக்கத்துவங்கி சட்டக்காரி, மழவில் மனோரமா, பார்கவி நிலையம், லேடீஸ் ஹாஸ்டல் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார் ஸ்ரீலதா.

Sreelatha Namboodiri is an Indian film actress best known for her work in Malayalam cinema. She has acted in more than 200 films. Khadeeja in 1967 was her debut movie. She paired up with Adoor Bhasi in most of the films and they portrayed a comedy couple. Actress Kumari Thankam is her aunt.

Sreelatha was born as Vasantha, in Karuvatta, Alappuzha. Her father,Balakrishnan Nair was an army officer and mother, Kamalamma was a music teacher in Government school. She has four younger brothers. Yesteryear actress Kumari Thankam is her father’s sister. Her primary education was at Govt. Girls High School, Haripad, Alappuzha. She joined K.P.A.C.(Kerala People’s Arts Club), when she was studying in seventh grade, as a singer and later started performing drama in many stages.



She was married to Late Dr. M.K. Parameshwaran Namboothiri known as Kaladi Namboothiri, an Ayurveda Doctor and an actor in 1979. They both acted together in Papathinu Maranamilla, a 1979 movie. She took a break from movies after marriage and settled in Kunnamkulam, Thrissur. After her marriage to Dr. Namboothiri, she converted to Brahmin community and became an Antharjanam. The couple have a son, Visakh and a daughter, Ganga. She made a come back, after her husband’s death in 2005 , with Pathaka. She currently resides at Thiruvanathapuram, Kerala.

No comments:

Post a Comment