30% டெப்ரிசியேஷன், 3 ஆண்டில் வாகனத்தின் விலை ஜீரோ... கைகொடுக்குமா புதிய திட்டம்!
ரஞ்சித் ரூஸோ
2001 பிப்ரவரிக்குப் பிறகு, (19 ஆண்டுகள் கழித்து) கடந்த ஜூலை மாதத்தில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஆட்டோமொபைல் துறை. பொருளாதாரம் யூடர்ன் அடிப்பதை காட்டும் முதல் இண்டிகேட்டர் ஆட்டோமொபைல்தான். இந்த 21-ம் நூற்றாண்டில் நாம் சந்திக்கும் மூன்றாவது மந்தநிலை இது
இதற்கு முன்பு ஏற்பட்ட அனைத்துப் பொருளாதார மந்தநிலையிலும் முதலில் பாதித்தவை கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை தான். அதற்குப் பிறகு, இது ஒரு நோய் போல அனைத்து செக்மென்ட்டுகளுக்கும் பரவும். டூ-வீலர் செக்மென்ட்தான் கடைசி. ஆனால், பெரும்பாலும் டூ-வீலர் செக்மென்ட்டுக்கு பரவும் முன் மந்தநிலை தானாகவே சரியாகிவிடும். இம்முறை வித்தியாசமாக முதலில் பாதிக்கப்பட்டது கார் செக்மென்ட். அதன்பிறகுதான் கமர்ஷியல் வாகனங்கள். இந்தியாவில் 80 சதவிகித சந்தையை கொண்டிருக்கும் இருசக்கர வாகனங்களும் இப்போது பாதிப்படைந்துள்ளன.
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
vikatan
இந்தப் பாதிப்பு எவ்வளவு பெரியது என்றால், ப கார்களின் விற்பனை கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு -21.56 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை 13.57 சதவிகிதம் குறைந்துள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் 7.43 சதவிகிதமும், டூ-வீலர்கள் 12.93 சதவிகிதமும் விற்பனை இழந்துள்ளன. கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கும் அதிகமான உள்நாட்டு விற்பனையை இழந்துள்ளோம். அதுவும், ஏற்றுமதி 1.17 சதவிகிதம் உயர்ந்திருக்கும் இதே நேரத்தில் இந்த வீழ்ச்சி என்பது கடுமையாக யோசிக்க வைக்கிறது.
30% Depreciation
30% Depreciation
Autoity
பல கார், பைக் மற்றும் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள், 'உற்பத்தி இல்லா தினங்கள்' என்று அறிவித்து தங்கள் தொழிற்சாலைகளை சில நாள்கள் மூடிவருகின்றன. லட்சத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். இந்த மந்த நிலையை சரிகட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
கார்களுக்கான பதிவுத் தொகையை ரூ.600-ல் இருந்து 5,000 ரூபாய் எனவும், பைக்குகளுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.1,000 எனவும் 20 மடங்கு வரை உயர்த்துவதாக அறிவித்திருந்தது மத்திய அரசு. தற்போது இந்த பதிவு விலை ஏற்றம் ஜூன் 2020 வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி வரி செலுத்தியிருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வரியின் மீதத்தொகை 30 நாள்களுக்குள் கொடுக்கப்படும்.
23 ஆகஸ்ட் 2019-ல் இருந்து 31 மார்ச் 2020 வரை வாங்கும் வாகனங்களின் தேய்மான விலை 15 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களும், IC இன்ஜின் வாகனங்களும் ஒன்றாக விற்பனை செய்யப்படும். அரசு, மின்சார வாகனங்களுக்கான கட்டுமானம் உருவாக்குவதிலும், பேட்டரி போன்ற உதிரிபாகங்களை உருவாக்கி அதன் ஏற்றுமதியை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தும்.
மத்திய அரசு அலுவலகங்களில் பழைய வாகனத்தை மாற்றுவதற்கும், புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.
மார்ச் 31, 2020 வரை உருவாக்கப்படும் பிஎஸ்-4 வாகனங்களை மார்ச் 31-ம் தேதி கடந்தபின்னும் பதிவு செய்யலாம்.
பழைய வாகனங்களை அழித்து மறுசுழற்சி செய்யும் ஸ்கிரேப்பேஜ் பாலிசி விரைவில் கொண்டுவரப்படும்.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு தரும் கடனின் வட்டியை, அதாவது ரெப்போ ரேட்டை குறைத்துள்ளது. இதனால், மக்களுக்கு கொடுக்கப்படும் வாகன கடன், வீட்டு கடன், மற்றும் இதர சில்லறைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்க வேண்டும்.
இப்போது நடைபெறும் மந்தநிலைக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், இதில் ஒரு சில பிரச்சனைகளுக்கு மட்டுமே அரசு தீர்வை அணுகியுள்ளதாக தெரிகிறது.
இந்த முயற்சிகளால் என்ன மாற்றங்கள் ஏற்படும்?
வங்கிகளின் ரெப்போ ரேட்டை இந்த ஆண்டு நான்கு முறை 0.25% ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. ஆனால், இதன் பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடத்தவில்லை. இப்போது மீண்டும் 0.35% குறைத்துள்ளார்கள். வங்கிகள் அவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்தச் சலுகையை நிச்சயம் மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று அரசு இப்போது கடுமை காட்டுகிறது. இதனால், மக்கள் வாங்கும் வீட்டுக் கடன், வாகன கடன், பெர்சனல் லோன் போன்றவற்றின் வட்டி குறையும். வாகனங்கள், சொத்துகள் வாங்குவது அதிகரிக்கும்.
மத்திய அரசு வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் பணம் கொடுத்திருப்பதால் MSME நிறுவனங்களுக்கு கடன்கள் கிடைக்கும். இதனால், டீலர்களும், பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் மூடப்படுவதில் இருந்து காப்பாற்றப்படும்.
மார்ச் 31-க்குப் பிறகும் பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்யலாம் என்று அறிவித்திருப்பதால், பிஎஸ்-4 வாகனங்களின் விலை அதிரடியாக குறையும் எனக் காத்திருந்தவர்கள் இனி வாகனம் வாங்கத் தொடங்குவார்கள்.
அரசின் அறிவிப்பில் மிக முக்கியமானது, 31 மார்ச் 2020 வரை வாங்கப்படும் வாகனங்களின் தேய்மான தொகையை (டெப்ரிசியேஷன்) 15 சதவிகிதம் அதிகரித்திருப்பது. இதனால், தற்போது வாங்கும் வாகனங்களின் தேய்மானம் 30 சதவிகிதமாக அதிகரிக்கிறது.
இது எப்படி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால், இப்போது ஒரு வாகனத்தை வாங்கும்போது அதன் விலை 3 ஆண்டுகளிலேயே 90 சதவிகிதத்துக்கு குறைந்துவிடும். இதனால், வாங்கும் வாகனத்தை சீக்கிரமே விற்றுவிடுவார்கள். 1 லட்ச ரூபாய் வாகனத்தின் பேப்பர் விலை 10,000 ரூபாயாக இருக்கும். ஆனால், அந்த வாகனம் யூஸ்டு மார்க்கெட்டில் சுமார் 40,000 ரூபாய்க்கு விற்பனையாகும். இதனால் நிறைய புது வாகனங்கள் யூஸ்டு மார்க்கெட்டில் கிடைக்கும்.
இதில் இருக்கும் அட்வான்டேஜை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிதாக பயன்படுத்திக்கொள்வார்கள். எப்படியென்றால், இப்போது ஒரு நிறுவனம் ஐந்து புதிய இலகுரக கமர்ஷியல் வாகனம் வாங்குகிறார்கள். பேப்பரை பொறுத்தவரை அதன் மதிப்பு இன்னும் நான்கு ஆண்டில் பூஜ்ஜியமாக மாறிவிடும். ஆனால், யூஸ்டு மார்க்கெட்டில் இந்த வாகனங்கள் ஒரு கணிசமான விலைக்கு விற்பனையாகும். இதனால், ஒரு குறிப்பிட்டத் தொகை லாபமாகக் கிடைக்கும். டெப்ரிசியேஷன் பூஜ்ஜியமானதால் அவர்களுக்கு வரியும் இருக்காது. இதனால், மீண்டும் புதிய வாகனம் வாங்குவார்கள்.
பொருளாதார மந்தநிலை!
பொருளாதார மந்தநிலை!
ஸ்கிரேப்பேஜ் பாலிசியை அரசு கொண்டுவருவதாகக் கூறியுள்ளது. இந்தக் கூடுதல் தேய்மானமும் ஸ்கிரேப்பேஜ் பாலிசியும் ஒரே நேரத்தில் வருவது பெரிய பலம். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 10 அல்லது 15 ஆண்டு பழைய வாகனங்களை மறுசுழற்சிக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றும், இப்படிக் கொடுத்தால் புது வாகனம் வாங்குபவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும் எனவும், அறிவித்தால் பழைய கார்கள் ஸ்கிரேப்புக்கு வரும். புது வாகனங்கள் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் வாங்குவது அதிகரிக்கும். பிரைவேட் கமர்ஷியல் வாகன உரிமையாளர்கள் இதை அதிகம் பயன்படுத்த உந்தப்படுவார்கள்.
மின்சார வாகனம் வந்துவிட்டால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் IC இன்ஜின் வாகனங்களை நிறுத்திவிடுவார்களா என்ற அச்சம் இருந்தது. இப்போது ஐசி இன்ஜின்களை நிறுத்தப்போவதில்லை என்பதை உறுதியாகச் சொல்லிவிட்டாதால் மக்களுக்க இருந்த அச்சம் குறையும். புது வாகனம் வாங்குவது அதிகரிக்கும்.
எலெக்ட்ரிக் கார்கள்
எலெக்ட்ரிக் கார்கள்
டெஸ்லா
வாகனம் வாங்கும் முடிவில் இருந்தவர்களுக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தன. இப்போது அதில் ஒரு சில குழப்பங்கள் தீர்ந்துள்ளன. ஆனால் இவை போதாது.
கார் விற்பனை வீழ்ச்சியில் உள்ளதால் கார்களுக்கு வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனால், நிதி அமைச்சரின் திட்டத்தில் அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
No comments:
Post a Comment