Saturday, 24 August 2019

வாஜ்பாய்-இன்று பாகிஸ்தானியர் சொல்கிறார்கள், காஷ்மீர் அவர்களுடையது என்று





வாஜ்பாய்-இன்று பாகிஸ்தானியர் சொல்கிறார்கள், காஷ்மீர் அவர்களுடையது என்று

நரசிம்மராவ் பிரதமராக இருக்கும்போது
இந்தியாவின் பிரதிநிதியாக ஜநாசபைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித்தலைவராக இருந்த வாஜ்பாய் அவர்களை அனுப்பி வைத்தார்...
vajpai -sivakasi culture whatsup group


ஐ.நா சபையில் காஷ்மீர் பற்றி சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.

இந்தியாவின் பிரதிநிதி தன் பேச்சை துவங்கினார்

"என் கருத்தை சொல்லும் முன், ஒரு சிறு கதையை சொல்ல விரும்புகிறேன் .காஷ்மீர் என்ற பெயர் வர காரணமாய் இருந்த ரிஷி காஷ்யாப் காட்டினூடே சென்று கொண்டிருந்த போது ஒரு அழகிய ஏரியை கண்டார்.

ஆஹா நாம் நீராட நல்லதொரு இடம் என்று தன் உடைகளை களைந்து ஓர் ஓரமாக வைத்துவிட்டு நீராட சென்றார். திரும்பிவருகையில், அவர் தம் துணிகளை யாரோ சில பாகிஸ்தானியர்கள் களவாடி சென்றிருந்தனர்."

இப்படி சொன்னதும் பாகிஸ்தான் பிரதிநிதி எழுந்து பொய் சொல்லாதீர்கள், அந்த காலத்தில் பாகிஸ்தானே இல்லை. பாகிஸ்தானியர் எப்படி களவாடி இருக்க முடியும் என்று கூச்சலிட்டார்

உடனே நம்மவர் சிரித்து கொண்டே, சரி, நான் சொல்ல வந்த விஷயம் முடிந்து விட்டது, விஷயத்துக்கு வருவோம்

இன்று பாகிஸ்தானியர் சொல்கிறார்கள், காஷ்மீர் அவர்களுடையது என்று கூறினார்

கரகோஷம் விண்ணை பிளந்தது🇮🇳

No comments:

Post a Comment