Friday, 16 August 2019

DEVIKA ,TAMIL ACTRESS LEGEND




DEVIKA ,TAMIL ACTRESS LEGEND



தேவிகா (ஏப்ரல் 25, 1943 - மே 2, 2002) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்திருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா.

தமிழ்த் திரைப்பட இயக்குநரான ஏ. பீம்சிங்கிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார்.

தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான ரகுபதி வெங்கய்யா நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார்.

தேவிகாவின் மகள் கனகா தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட அனுபவம்
தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.

அவர் நடித்த முதல் திரைப்படமான முதலாளியில் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

எம். ஜி. ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சிவாஜியுடன் வரலாற்றுப் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், குலமகள் ராதை, பலே பாண்டியா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த சுமைதாங்கி ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவையும், மற்றும் வாழ்க்கைப் படகு, வானம்பாடி என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

தேவிகா நடித்த கடைசிப்படம் இப்படியும் ஒரு பெண் ஆகும்.

ப‌ழம்பெரும் நடிகை தேவிகா! இவரை பற்றி சொல்ல‍ வேண்டும் என்றால், பெண்மைக்கே உரிய அச்ச‍ம், மடம், நாண‌ம் மற்றும் பயிற்பு போன்ற நான்கையும் ஒருங்கே பெற்றிருப்ப‍வர். இவர் நடிக்கும் போதும் சரி, பாடல்வரிகளுக்கு வாயசைத்து நடிக்கும்போதும் சரி, முதலில் நடிப்பை வெளிப்படுத்துவது இவரது கண்களே எனலாம்.

தேவிகாவின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் ஆகும். இவருக்கு இவரது பெற்றோர் வைத்த‍ பெயர் பிரமீளா. தனது சொந்தப் பெயரிலேயே, இரண்டாவது கதாநாயகியாக நடித்து வெற்றி பெற்ற‍ தெலுங்குப் படம், “நாட்டிய தாரா” என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்தது. அக் காலக்கட்ட‍த்தில் தேவிகாவையும் அவரது நடிப்பையும் பார்த்த‍வர்கள் “யார் இந்த அழகு தேவதை?” என்று கேட்டு வியந்தனர்.

தமிழ்ப்பட உலகில் நாட்டியப்பேரொளி பத்மினியும், நடிகையர் திலகம் சாவித்திரியும் கொடி கட்டிப்பறந்த காலக்கட்டத்தில், இவர்களுக்கு அடுத்த இடத்தைப் பெற்று, தமிழிலும், தெலுங்கிலும் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங் களில் தேவிகா நடித்துள்ளார். இந்த சமயத்தில் நடிகை பானுமதி “மணமகன் தேவை” என்ற படத்தைத் தமிழில் தயாரித்தார். கதாநாயகன் சிவாஜிகணேசன். இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பிரமீளா (தேவிகா) நடித்தார்.

தமிழ்த்திரைப்பட‍த்தின் மீதுள்ள‍ காதலால் தமிழ்த்திரையிலும் புகழ் பெறவேண்டும் என்ற ஆசை பிரமீளா (தேவிகா)வுக்கு ஏற்பட்டது. அதற்காக, நல்ல நடிப்பு பயிற்சிபெற விரும்பி, அக்காலக் கட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய எஸ். வி.சகஸ்ரநாமத்தின் “சேவா ஸ்டேஜ் ” நாடகக்குழுவில் சேர்ந்தார். இந்த சமயத்தில் சேவா ஸ்டேஜ் நாடகங்களில் நடிகர் முத்துராமன் நடித்து வந்தார். பிரமீளா தன் பெயரை “தேவிகா” என்று மாற்றிக் கொண்டார். நாடகத்தில் நடித்ததன் மூலம் , தேவிகாவின் நடிப்பில் மெருகு ஏறியது. தமிழை அழகாகவும், திருத்தமாகவும் பேசக் கற்றுக்கொண்டார்.

1957-ல் எம்.ஏ.வேணு “முதலாளி” என்ற படத்தைத் தயாரித்தார். இதில் கதாநாயகன் எஸ். எஸ்.ராஜேந்திரன். கதாநாயகி தேவிகா. பல படங்களில் துணை டைரக்டராக இருந்த “முக்தா” சீனிவாசன் டைரக்டராக அறிமுகமானார். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, 1957 தீபாவளிக்கு வெளி வந்த இப்படம், பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களையும், பெரிய பேனர் படங்களையும் தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றது. “ஏரிக்கரை மேலே போறவளே பெண் மயிலே … ஆபோகி ராகத்தில் அமைந்த அந்த‌ பாடலை எஸ் .எஸ். ராஜேந்திரன் (ரி.எம். சவுந்தரராஜன் குரலில்) பாட தேவிகா வயல் வெளியில் நடந்து செல்வார். பாட்டும், இந்தக் காட்சியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதன் விளைவாக‌ தேவிகா நட்சத்திர அந்தஸ்தை எட்டிப்பிடித்தார்.

“பாவமன்னிப்பு”, “பந்த பாசம்”, “அன்னை இல்லம்”, “குலமகள் ராதை “, “ஆண்டவன் கட்டளை”, “கர்ணன்”, “முரடன் முத்து”, “சாந்தி”, “நீல வானம்”, “பழநி” , பலே பாண்டியா போ ன்ற குறிப்பிடும் படியான நிறைய படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஜோடியாக தேவிகா நடித்தார். . இவற்றில் நீல வானத்தில் தேவிகா நடிப்பு அற்புதம்.

“ஆண்டவன் கட்ட‍ளை” என்ற படத்தில் வரும் ஆழகே வா என்ற இந்தப்பாடல், இக்கதையின் ஓட்டத்திற்கும், அந்த கதாபாத்‍தி ரத்திற்கும் கட்டாயமாகத்  தேவைதான் . அதை அளவோடு தந்திருப்பார்கள். அதுவும் தேவிகா அவர்கள் பெரிதாக கவர்ச்சி ஏதும் காட்டாமல் தனது கண்களிலேயே உணர்ச்சிகளைக் காட்டி, சிவாஜி யை மட்டுமல்ல‍ அந்த பாடலைப் பார்க்கும் நம்மையும் சுண்டி இழுப் பார். 

இயக்குநர் ஸ்ரீதர் இயக்க‍த்தில் தேவிகா நடித்த “நெஞ்சில் ஓர் ஆலயம், “நெஞ்சம் மறப்பதில்லை” ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்கள் ஆகும்.

“நெஞ்சில் ஓர் ஆலயம், திரைப்படத்தில் சொன்ன‍து நீதானா என்ற பாடல் வரிகளுக்கு வாயசைத்து நடித்த‍தோடு அல்லாமல் ஏதோ அவரே சிதார் இசைக்கருவியை இசைப்பது போலவே தனது விரல்களால் மீட்டுவதுபோல் நடித்திருப்பது அற்புதம்.

காதல் மன்ன‍ன் ஜெமினிகணேசனுடன் தேவிகா ஜோடியாக நடித்த “சுமைதாங்கி” மிகச்சிறந்த படம். இதை ஸ்ரீதர் டைரக்ட் செய்தார். எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் தேவிகா நடித்த “அன்பு எங்கே?”, ” வானம்பாடி”, “மறக்க முடியுமா?” ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வை. ஏ.நாகேசுவரராவ், கே.பாலாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ஆர்.எஸ். மனோகர், கல்யாணகுமார் ஆகியோருடன் இணைந்து நடித்தவர் தேவிகா.

எம்.ஜி.ஆருடன் “ஆனந்தஜோதி” என்ற ஒரே ஒரு படத்தில் கதா நாயகியாக தேவிகா நடித்தார். பீம்சிங்கிடம் துணை டைரக்டராகப் பணியாற்றிய தேவதாசுக்கும், தேவிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் மணம் செய்து கொண்டனர். இவர்களுடைய ஒரே மகள் கனகா. “வெகுளிப்பெண்” என்ற படத்தைத் தேவிகா சொந்தமாகத் தயாரித்தார்.

இதை டைரக்ட் செய்தவர் தேவதாஸ். கதை– வசனம் கலைஞானம். மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த தேவிகாவுக்கும், தேவதாசுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளிலும் 150-க்கு மேற்பட்ட படங்களில் நடித்த தேவிகா, பின்னர் பட உலகில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தார்.


அம்மா, அக்கா போன்ற வேடங்களில் நடிக்கவில்லை. குடும்பப்பாங்கான படங்களில் நடிக்கப் பொருத்தமானவர் என்ற பெயரைத் தேவிகா பெற்றிருந்தார். சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள தன் வீட்டில் தேவிகா வசித்து வந்தார். நெஞ்சு வலி காரணமாக, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தேவிகா 1-5-2002 அன்று மரணம் அடைந்தார். தேவிகாவின் மகள் கனகா  பல சினிமா படங்களில் நடித்தார். நடிகர் ராமராஜனுடன் அவர் நடித்த “கரகாட்டக்கார ன்” 52 வாரங்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம். :

No comments:

Post a Comment