P
'சொல்லின் செல்வர்கள்'
வாரியார் சுவாமிகளைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில் மதிப்பிட வேண்டும் என்றால், இப்படிச் சொல்லலாம்: அவர் சொல்லின் செல்வர், சமயோசிதப் பேச்சில் வல்லவர்.ஒருமுறை அவருடைய சொற்பொழிவு நடந்த பொழுது சில பேர் இடையில் எழுந்து வெளியே சென்றனர். அப்பொழுது வாரியார் , 'சொல்லின் செல்வன்' என்று அனுமனைக் குறிப்பிடுகிறார்கள்.
இங்கேயும் சில 'சொல்லின் செல்வர்கள்' இருக்கிறார்கள்.
நான் நல்ல விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்வதைத் தான் சொல்கிறேன்” என்று பேச்சின் இடையே அவர்களை மென்மையாக அங்கதச் சுவையுடன் சாடினார்.
அதற்குப் பிறகு யாரும் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.

Comments
Post a Comment