JAMUNA ,LEGEND ACTRESS BORN 1936 AUGUST 30


JAMUNA ,LEGEND ACTRESS 
BORN 1936 AUGUST 30


ஜமுனா – பிறப்பு- 30.08.1936 – வயது-77. நிச்சயதாம்பூலம், குழந்தையும் தெய்வமும், தங்கமலை ரகசியம், நல்லதீர்ப்பு, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மிஸ்ஸியம்மா போன்ற பல்வேறு தமிழ்ப் படங்களிலும் 198-க்கும் மேற்பட்ட தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்த அழகும் ஆற்றலும் கொண்ட புகழ்பெற்ற நடிகை. தெலுங்கில் புட்டில்லு என்ற படத்தில் 1952-இல் அறிமுகமானார். நடிக்க வருமுன் பள்ளியில் மேடையில் நடித்து வந்தார். இந்திப்படங்களிலும் நடித்துள்ளார். ஜுல்லாரி ரமணராவ் என்ற கல்லூரி விரிவுரையாளரை மணந்து கொண்டார். இவர்கட்கு வம்சி கிருஷ்ணா என்ற மகனும் ஷ்ரவந்தி என்ற மகளும் உள்ளனர். தமிழிலும் தெலுங்கிலும் சிவாஜிகணேசன்,ஜெய்சங்கர், ஜெமினிகணேசன்,  நாகேஷ்வரராவ், என்.ரி.ராமராவ், சோபன்பாபு போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்தவர்.

அமுதாய்ப் பொழிந்த நிலவு -அந்தநாள் ஞாபகம்

புராணப் படங்களின் ஆதிக்கம் குறையாத ஐம்பதுகளில் தெலுங்கு சினிமாவை சீர்திருத்த சினிமாவாக மாற்றிக்காட்டிய சினிமா சிற்பிகளில் முக்கியமானவர் கரிகாபட்டி ராஜா ராவ். புகழ்பெற்ற மருத்துவராகவும் இருந்த இவர், நாடகம், சினிமா இரண்டையும் சீர்திருத்தக் கருவியாகக் கையாண்டவர். இவரது பெருமைமிகு அறிமுகம்தான் ‘ஆந்திராவின் நர்கீஸ்’ என்று புகழப்படும் ஜமுனா.

தெலுங்கு சினிமாவின் காவிய கால சூப்பர் ஸ்டார்கள் என்.டி.ஆர்., அக்கினேனி நாகேஷ்வர ராவில் தொடங்கி அறுபதுகளின் முன்னணிக் கதாநாயகர் அத்தனை பேருடனும் சுமார் 200 தெலுங்குப் படங்களில் நடித்தவர்.

தமிழில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் நடித்திருந்தாலும் சிவாஜி, எம்.ஜி.ஆரில் தொடங்கி ஜெய்சங்கர் வரையிலும் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களை ஈர்த்த காந்தக் கண்களுக்குச் சொந்தக்காரர். தெலுங்கு, தமிழ் மொழிகளைக் கடந்து இந்திப் பட உலகிலும் வெற்றிக்கொடி நாட்டிய கன்னடத்துப் பெண்.

ஜமுனாவின் தந்தை சீனிவாச ராவ் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள துக்கிராலா என்ற ஊரில் குடியேறியவர். அந்த ஊரின் கறிமஞ்சள் உலகப்புகழ் பெற்றது. அதையும் பருத்தி இழைகளையும் ஏற்றுமதி செய்யும் வெற்றிகரமான வியாபாரியாக இருந்தார். இவரது மனைவி கவுசல்யாதேவி கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்தவர்.

ஜமுனா வட கர்நாடகத்தின் ஹம்பியில் பிறந்தபோது அவரது நட்சத்திரத்தை மனதில் வைத்து அவருக்கு ஜமுனா என்ற நதியின் பெயரை வைத்தார்கள். அம்மாவிடம் இளமையிலேயே வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். பிறகு பரதம் பயின்றார்.

தெலுங்கு சினிமாவில் பின்னாளில் நடிகராக உயர்ந்த ‘கொங்கரா ஜக்கையா’ஜமுனாவின் பள்ளி ஆசிரியர். ஜமுனாவின் நடிப்புத் திறனைக் கண்ட பள்ளி ஆசிரியர் ஜக்கையா, “ உங்கள் மகளை நீங்கள் நாடகங்களில் நடிக்க வைக்கலாமே” என்று அவரது அம்மாவிடம் எடுத்துக் கூற, ஜமுனா பத்து வயது முதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். படிப்பிலும் படுசுட்டியாக இருந்ததால் அவரை டாக்டருக்குப் படிக்க வைக்க விரும்பினார் அவரது அப்பா. இதற்காகத் தன் குடும்ப நண்பரான டாக்டர் கரிகாபட்டி ராஜா ராவிடம் மகளை அழைத்துச் சென்று ஆலோசனை கேட்டார்.

ஜமுனாவின் அழகைக் கண்ட அவரோ தனது ‘மா பூமி’ என்ற நாடகத்தில் கதாநாயகியின் தங்கையாக நடிக்க வைத்தார். நாடகத்தில் அவரது நடிப்பைக் கண்ட ராஜா ராவ், ஜமுனாவைப் புகைப்படங்கள் எடுத்து, அவற்றை இந்திப்பட உலகில் புகழ்பெற்ற கேமராமேனாக இருந்த தம் நண்பர் வி. என். ரெட்டிக்கு அனுப்பிவைத்தார்.

“நான் முதல்முறையாகத் தயாரிக்க இருக்கும் படத்துக்கு இந்தப் பெண்ணைக் கதாநாயகி ஆக்கலாம் என்று நினைக்கிறேன். உன் அபிப்ராயம் என்ன?” என்று கேட்டு எழுதினார். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் வி. என். ரெட்டியிடமிருந்து பதில் இல்லை. இனியும் தாமதிக்க முடியாது என்று எண்ணி, வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்தார்.

அப்போது ரெட்டியிடமிருந்து ஒரு தந்தி வந்தது. அதில் ‘இந்தப் பெண் ஆந்திராவின் நர்கீஸ்’என்று புகழ் பெறுவாள்’என்று செய்தி அனுப்பியிருந்தார். இதற்கு மேலும் தயங்குவாரா கரிகாபட்டியார். உடனடியாக ஜமுனாவைத் தனது படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

1953-ல் வெளியான ‘புட்டில்லூ’ என்ற அந்தத் தெலுங்குப் படத்தில் ஜமுனாவின் நடிப்புக்குப் பாராட்டு மழை பொழிந்தது. அடுத்துவந்த மூன்று ஆண்டுகளில் தெலுங்கு சினிமாவின் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்தார். அறிமுகப் படம் வெளியான அடுத்த ஆண்டே 1954-ல் வெளியான ‘பணம் படுத்தும் பாடு’ படத்தின் மூலம் தமிழில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார்.

எச்.எம்.ரெட்டி தனது ‘ரோகிணி பிக்சர்ஸ்’ பட நிறுவனம் சார்பில், தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்த நகைச்சுவைப் படம் இது. என்.டி. ராமராவ் -சவுகார் ஜானகி ஜோடியாக நடித்திருந்த இந்தப் படத்தில் ஜமுனா இரண்டாவது கதாநாயகி. நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலுவுக்கு ஜோடி.

தமிழில் அறிமுகப் படம் தோல்வியடைந்தாலும் 1955-ல் விஜயா – வாகினி ஸ்டூடியோ தயாரித்த ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை ஜமுனாவுக்குப் பெற்றுத் தந்தார் சாவித்திரி. ஜெமினி கணேசனும், சாவித்திரியும் நடித்து ரசிகர்களை உருக்கிய இந்தப் படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்.

கொட்டக் கொட்ட உருளும் காந்தக் கண்களைக் கொண்டு குழந்தைத்தனம் கொண்ட சீதா என்ற ஜமீன்தார் மகள் வேடத்தில் ஜமுனா பிரமாதமாக நடித்திருந்தார். ‘தமிழ்ப் படவுலகம் ஒரு நல்ல நடிகையைப் பெற்றுக்கொண்டது’ என ஆனந்த விகடன் எழுதியது. தெலுங்கிலும் வெளியாகி வெற்றிபெற்ற இந்தப் படத்தை ஏவி.எம். நிறுவனம் இந்தியில் தயாரிக்க அங்கேயும் வெற்றிபெற்று ‘யாரிந்தப் பெண்மணி?’ எனக் கேட்க வைத்தது.

‘மிஸ்ஸியம்மா’ மூலம் கிடைத்த புகழ் ஜமுனாவைத் தென்னகத்தின் முன்னணிக் கதாநாயகி ஆக்கியது. சாவித்திரி, சரோஜா தேவி, பானுமதி, அஞ்சலி தேவி என ஐம்பதுகளில் ஜொலித்த கதாநாயகிகளில் யாருடைய திறமையிலும் கடுகளவும் சளைதவர் அல்ல என்று பெயர் பெற்றார் ஜமுனா. நளினமான நடனம், கண்ணியம் மீறாத கிளாமர், கண்களால் பேசி நடிக்கும் திறன் என்று கலக்கிய ஜமுனா, 1957-ல் சிவாஜிகணேசனுடன் ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடித்தார்.

அந்தப் படத்தில் சுசீலாவின் தேன் குரலில் ஜமுனா பாடுவது போல் இடம்பெற்ற ‘அமுதைப் பொழியும் நிலவே’ என்ற பாடலில் அவரது பவ்யமான நடிப்பைக் கண் குளிரக் கண்டு, அந்தப் பாடலை பாடாத ஆண், பெண் ரசிகர்களே அன்று இல்லை என்று சொல்லும்விதமாக அனைவரும் பாடிப் பாடி , ஜமுனாவைக் கொண்டாடினார்கள்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து சிவாஜியுடன் பல படங்களில் நடித்த ஜமுனா, அண்ணா கதை வசனம் எழுதிய ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கு சினிமாவில் ஜமுனாவின் நடிப்புக்குப் பல படங்கள் உதாரணமாக இருக்க, தமிழில் அவரது நடிப்புத்திறன் முழுமையாக வெளிப்பட்டு நின்ற படம் ‘குழந்தையும் தெய்வமும்.’ ஏவி.எம். தயாரிப்பான இந்தப் படத்தில் ஜமுனாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஜெய்சங்கர்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு தெலுங்குப் பட உலகுக்குத் திரும்பி அங்கே 15 ஆண்டுகள் கதாநாயகியாக நடித்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில், கமலுக்கு அம்மாவாக நடித்தார்.

மங்காத புகழுடன் வாழும் ஜமுனாவை 1983-ல், அரசியலுக்கு வருமாறு அழைத்தார் அந்நாளின் பிரதமர் இந்திரா காந்தி. காங்கிரசில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்தல் களம் வென்று மக்கள் பணி புரிந்த ஜமுனா, புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர். தற்போது அரசியலில் இருந்து விலகி வாழும் ஜமுனா, 1965-இல் கல்லூரிப் பேராசிரியர் ரமண ராவை மணந்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு வம்சி கிருஷ்ணா, ஸ்ரவந்தி ஆகிய வாரிசுகள் உள்ளனர்.

நன்றி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்



ஜமுனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். 1953ல் புட்டிலு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[1]

எல். வி. பிரசாதின் மிஸ்ஸம்மா திரைப்படத்தில் நடித்தபிறகு இவர் புகழ்பெற்றார்.[2]

இளமைக்காலம்
ஜனா பாய் என்ற இயற்பெ 
யர் கொண்ட ஜமுனா கர்நாடகாவில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் நிப்பானி ஶ்ரீனிவாசன் ராவ் - கௌசல்யாதேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலா எனுமிடத்தில் வளர்ந்தார்.[1] நடிகை சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார். அதனால் சாவித்திரி ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார்.

தொழில்
ஜமுனா பள்ளியில் மேடை நடிகராக இருந்துள்ளார். அவருடைய அன்னை ஹார்மோனியம் போன்றவற்றை இசைக்க கற்றுத் தந்தார். டாக்டர் காரிகாபதி ராஜா ராவ் மா பூமி என்ற ஜமுனாவின் நாடகத்தினைப் பார்த்தவர், தன்னுடைய புட்டிலு திரைப்படத்தில் நடிகையாக்கினார்.[1] தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஜமுனா, அரசியலிலும் இணைந்தார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமிந்திரி மக்களவைத் தொகுதியில் 1989ல் தேர்வு செய்யப்பட்டார். 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


''சாவித்ரி பட விஷயத்துல நடிகை ஜமுனா அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது!'' - செளகார் ஜானகி

தமிழ்த் திரையுலகில் நடிப்புச் சுடராக வலம் வந்தவர் சாவித்ரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர். பங்களாக்கள், கார்கள், நகைகள் என செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருந்தார். அதன்பிறகு, படத் தயாரிப்பில் இறங்கினார். அதில் சந்தித்த பொருளாதார இழப்பு, வருமான வரி பிரச்னை போன்றவற்றால் வறுமையின் பாதாளத்தையும் சந்தித்தார். இந்த நடிப்புத் தேவதையின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பது அனைவருமே அறிந்தது. இந்த நிலையில், நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கையை, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கிவருகிறார், நாக் அஸ்வின். தமிழில் 'நடிகையர் திலகம்' என்கிற அவருடைய பட்டப்பெயரிலும், தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரிலும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு உருவாகிவருகிறது. 



அந்தப் படத்தில், சாவித்ரி கதாபாத்திரத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தச் சமயத்தில், சாவித்ரியுடன் நடித்த நடிகைகளில் ஒருவரான ஜமுனா, ''சாவித்ரியுடன் நெருங்கிப் பழகி நடித்தவர்களில் நான் மட்டுமே உயிருடன் இருக்கிறேன். எனக்குத்தான் அவர் தொடர்பான நிறைய தகவல்கள் தெரியும். என்னிடம் அவரைப் பற்றிக் கேட்காமல் அவர் வாழ்க்கையை எப்படிப் படமாக்கலாம்?'' என்று கேள்வி எழுப்பி, சினிமாத்துறையின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார். இது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து கருத்து அறிய சாவித்ரி காலத்தில் நடித்தவர்களைத் தொடர்புகொண்டோம். 


சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் சரியானவர் இல்லை என்று பழம்பெரும் நடிகை ஜமுனா தெரிவித்துள்ளார். நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாவித்ரியாக கீர்த்தி ஒத்து வர மாட்டார் என்று பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து பழம்பெரும் நடிகை ஜமுனா கூறியிருப்பதாவது, நான் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். சாவித்ரியுடன் நடித்தவர்களில் நான் மட்டுமே உயிரோடு உள்ளேன். சாவித்ரியை பற்றி எனக்கு நிறைய தெரியும். அப்படி இருக்கும்போது படம் எடுப்பவர்கள் என்னிடம் எதுவும் கேட்காதது வேதனையாக உள்ளது. சாவித்ரியாக நடித்துள்ள பெண்ணுக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கு தெரியாமல் அவரால் எப்படி சாவித்ரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியும்?
தற்போதைய நடிகைகள் அரைகுறை உடையில் நடிக்கிறார்கள். எங்கள் காலத்தில் எல்லாம் அப்படி கிடையாது. எனக்கு மகன் பிறந்தபோது குழந்தையை தொட்டிலில் போடும் நிகழ்ச்சிக்கு வந்தார் சாவித்ரி. நல்ல கணவர் அமைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஜெமினி கணேசன் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறி என்னை கட்டிப்பிடித்து அழுதார். ஜெமினி வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் கேட்காமல் நீ தானே அவரை திருமணம் செய்து கொண்டாய் என்று சாவித்ரிக்கு ஆறுதல் கூறினேன். அவருக்கு சென்னையில் 3 பங்களா,
கொடைக்கானலில் ஒரு வீடு இருந்தது. சாவித்ரியை போன்று சினிமாவில் வேறு எந்த ஒரு நடிகையும் சம்பாதிக்கவில்லை. அவர் வீட்டில் நீச்சல் குளம் கட்டினார். மைசூரில் இருந்து சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அறையை உருவாக்கினார்.




ஜமுனா கருத்து பற்றி நகைச்சுவை நடிகை சச்சு பேசுகையில், ''தெலுங்குத் திரையுலகில் இன்றும் மரியாதையாக நினைக்கப்படுபவர், சாவித்ரி அம்மா. எனக்குத் தெரிந்தவரை, செளகார் ஜானகி அம்மாவுக்குத்தான் சாவித்ரி அம்மாவைப் பற்றி நிறைய தெரியும்'' என்றார். எனவே, புட்டபர்த்தியில் இருக்கும் செளகார் ஜானகியைத் தொடர்புகொண்டோம். ''என் தங்கை கிருஷ்ணகுமாரி இறந்ததிலிருந்து மனசே சரியில்லைம்மா. அதான் பாபாகிட்ட வந்துட்டேன்'' என்றவரிடம் நடிகை ஜமுனாவின் கருத்து பற்றிச் சொன்னோம். சில நிமிட அமைதிக்குப் பிறகு தொடர்ந்தார் செளகார் ஜானகி. 


''சாவித்ரிகூட நடித்தவர்களில் நானும் இன்னும் உயிரோடதாம்மா இருக்கேன். தவிர, ஒருத்தரின் வாழ்க்கை வரலாற்றையே படமாக எடுத்தாலும், அதில் இயக்குநரின் கற்பனையும் கொஞ்சம் சேரத்தான் செய்யும். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தபோதும், இது மாதிரியான கருத்துகள் வரத்தானே செய்தது. சாவித்ரி விஷயத்தில், தனக்கு மட்டும்தான் அவர் பற்றி எல்லாம் தெரியும் என்று ஜமுனா சொல்லியிருந்தால், அது சரியான வார்த்தை கிடையாது. நானும் சாவித்ரியும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கோம்.  அவரும் நானும் 'ஆறத காய' என்ற கன்னடப்படத்தில் நடிக்கும்போதுதான் அவர் நிலைமை மிகவும் சீரியஸாகி, மருத்துவமனையில் சேர்த்தார்கள். அதன்பிறகு சாவித்ரி திரும்பி வரவே முடியாத உலகத்துக்குச் சென்றுவிட்டார். அதனால், அவருடைய கடைசிக் காலங்களில்கூட அவருடன் நான் நல்ல நட்புடன் இருந்திருக்கிறேன். அதனால்,  நிறைய விஷயங்களை மனம்விட்டுப் பேசியிருக்கோம்.

 அவுட்டோர் ஷூட் போகும்போதெல்லாம் நான் செல்ஃப் குக்கிங்தான். நான் சமைச்சதை இருவரும் சேர்ந்து சாப்பிட்டவாறு நிறைய பேசியிருக்கிறோம். பர்சனல் விஷயங்களைப் பேசும்போது, 'உன்னை மாதிரி தைரியம் எனக்கு வராது' என்று அடிக்கடி சொல்வார். சாவித்ரி வாழ்ந்தது, வீழ்ந்தது எல்லாருக்கும் தெரியும். அவர் பற்றிய படம் எடுப்பது குறித்து என் கருத்தைக் கேட்டால், எடுக்கவே வேண்டாம் என்றுதான் சொல்வேன். சாவித்ரி எதனால் வீழ்ந்தார், எப்படியெல்லாம் வீழ்ந்தார் என்று அவர் வாழ்க்கையின் சோகமான பக்கங்களை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கும். இறந்துவிட்ட ஒருவர் பற்றி ஏன் கிளற வேண்டும்?'' என்றார் செளகார் ஜானகி.


Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER