Friday, 16 August 2019

DELHI CHIEF MINISTER ARAVIND -LEGEND



DELHI CHIEF MINISTER ARAVIND -LEGEND



 அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal, இந்தி:अरविंद केजरीवाल) (பிறப்பு:16 ஆகஸ்ட் 1968) 8ஆம் தில்லி முதல்வர் ஆவார். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகரும் ஆவார். தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.[1]

வாழ்க்கை வரலாறு

அரவிந்த் கெஜ்ரிவால் அரியானாவிலுள்ள இசாரில் 1968 ஆம் ஆண்டு‍ ஆகஸ்டு‍ 16 ஆம் நாள் பிறந்தவர்[2],[3]. கேஜ்ரிவாலின் தந்தை கோவிந்த ராம் கேஜ்ரிவால், தாய் கீதா தேவி. ஐஐடி கரக்பூரில் 1989 ஆம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றவர். 1992ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைப் பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்த்துறைப் பணியில் (IRS) சேர்ந்து தில்லியில் வருமானவரி ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்தார். அங்கு பணி புரியும்போது அரசுத்துறையில் தகவல்கள் வெளிப்படையாக இல்லாமையே ஊழலுக்கு வழிவகுப்பதை உய்த்தறிந்தார். தான் பணியில் இருக்கும்போதே ஊழலுக்கு துணைபுரியும் செயலாக்கங்களை மாற்றவும் எதிர்க்கவும் போராடி வந்தார்.[4] வருமானத்துறை அலுவலகத்தில் ஒளிவின்மையைக் கொண்டுவரப் பல மாற்றங்களை துவக்கி வைத்தார்.

சனவரி 2000 ஆம் ஆண்டில் தற்காலிக பணிஓய்வு பெற்றுக்கொண்டு பரிவர்த்தன் என்ற தில்லியை மையமாகக் கொண்ட குடிமக்கள் இயக்கமொன்றைத் துவக்கினார். இது நியாயமான, ஒளிவுமறைவற்ற, பொறுப்புள்ள அரசாண்மைக்காகப் பாடுபடுகிறது. பெப்ரவரி,2006ஆம் ஆண்டில் முழுவதுமாக பணிஓய்வு பெற்றுக் கொண்டு பரிவர்த்தன் பணிகளில் இறங்கினார்[5].

அருணா ராய் போன்றவர்களுடன் இணைந்து தகவல் பெறும் உரிமைக்காக அமைதியான சமூக இயக்கத்தை நடத்தினார். 2001ஆம் ஆண்டில் தில்லியில் தகவல்பெறும் உரிமைச்சட்டம் நிறைவேறியது[3]. நாட்டளவில் 2005ஆம் ஆண்டு நிறைவேறியது. அதன்பிறகும் சட்டத்தை ஏட்டளவில் நிற்கவிடாது மக்களறியும் வண்ணம் இந்தியா முழுவதும் பயணித்து பரப்புரை யாற்றினார்[6],[7]. மேலும், தனது அமைப்பின் மூலம் இச்சட்டத்தின் மூலம் சிறப்பான தகவல்களைப் பெற்று அரசாண்மையில் மாற்றங்களைக் கொண்டு வருபவர்களுக்கு விருதுகள் வழங்கத் தொடங்கினார்[8]. இவ்வகையில் அரசின் செயல்களை மக்களும் கண்காணித்து பங்கேற்கத் தூண்டுகிறார்.

பெப்ரவரி6, 2007இல் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி 2006ஆம் ஆண்டுக்கான "ஆண்டின் சிறந்த இந்தியர்" பட்டத்தை பொதுமக்கள் சேவைக்காக அரவிந்துக்கு வழங்கியது.

அரசியல்
அண்ணா அசாரே தலைமையில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டார். 26 நவம்பர் 2012ல் ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கி, 2013 இல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்து மக்களின் ஆதரவைப் பெற்றார்[9]. 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தில்லி முதல்வர் பதவியில் இருந்த சீலா தீக்‌சித்தை புது தில்லி சட்டமன்ற தொகுதியில் 25,864 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்[10],[11]. திசம்பர் 28ஆம் தேதி டெல்லி முதல்வராகப் பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்[12]. சன லோக்பால் என்ற சட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால் அறிவித்த படி அவர் பதவி விலகினார்[13][14].

ஆதரவில் பிரச்சினைகள்

டெல்லியில் 38 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி அமைத்த இவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ., வினோத் குமார் பின்னியின் ஆதரவு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதையடுத்தும், 10.02.2014 முதல் முண்டுகா தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ., ரம்பீர் சோகீன் தனது ஆதரவை விலக்கிக்கொண்டதாலும் நெருக்கடி உண்டாகியது[15].

பதவி முடிவு
புது டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் 13.02.2014 அன்று அவையில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தார். இதில் ஆதரவு 27ம், எதிராக 42 பேரும் ஓட்டு அளித்தனர். ஆகையால் இது தாக்கல் ஆகவில்லை. அதனால் 14.02.2014 வெள்ளிக்கிழமை அன்று இவர் பதவி விலகினார்.[16]

2014ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பங்கேற்பு
தம் முதல்வர் பதவியை விட்டு விலகுமுன் 2014 சனவரியில் கேஜ்ரிவால் தாம் இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.[17] ஆனால் அம்மாத இறுதியில் ஆம் ஆத்மி கட்சியினரின் வற்புறுத்தலால் கேஜ்ரிவால் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.[18] மார்ச்சு 25ஆம் நாள் கேஜ்ரிவால் பா.ஜ.கட்சியால் பிரதமர் பதவிக்கென்று நிறுத்தப்பட்ட நரேந்திர மோடியை எதிர்த்து தாம் வாரணாசித் தொகுதியிலிருந்து பாராளுமன்ற இடத்திற்குப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.[19][20]

தில்லி சட்டமன்றம் (2015)
தில்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் புது தில்லி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு பாசகவின் நிபுர் சர்மாவை 31,583 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார். 2015 பிப்பரவரி 13ஆம் தேதி தில்லியின் எட்டாவது முதல்வராக பதவியேற்றார்.[21] இவர் எந்த துறையையும் தனக்கு எடுத்துக்கொள்ளவில்லை.[22][23] 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் வெளியிட்ட அறிக்கையில் தலைமைச்செயலகத்தில் பணிபுரிபவர்கள் சனிக்கிழமையும் பணிக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளதால் அலுவலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது .[24]

தனி வாழ்க்கை
கேஜ்ரிவாலின் மனைவி பெயர் சுனிதா. அவர்களுக்கு இரு குழந்தைகள்
உள்ளனர். கேஜ்ரிவால் சைவ உணவு அருந்துபவர். பல ஆண்டுகளாக விபாசனா செய்துவருகிறார்.[25] சடங்கு சம்பிரதாயங்களை விரும்பாத அவர் தமது பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை[26

No comments:

Post a Comment