Friday, 30 August 2019

DARA SHUKOH , BROTHER OF AURANGAZEEB MURDERED 1659 , AUGUST 30



DARA  SHUKOH , 
BROTHER OF AURANGAZEEB 
MURDERED 1659 , AUGUST 30



தாரா சிக்கோ (Dara Shukoh, தாரா ஷிக்கோ, பாரசீகம்: دارا شكوه , மார்ச் 20, 1615 – ஆகத்து 30, 1659) முகலாயப் பேரரசன் ஷாஜகானுக்கும் மும்தாஜ் மகாலுக்கும் பிறந்த மூத்த மகனும், முடிக்குரிய இளவரசரும் ஆவார். பாரசீக மொழியில் தாரா ஷிகோ என்றால் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், உடன்பிறந்த ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு கொடூரப் போருக்கு பின்னர், தாரா ஷிகோவை அவருடைய இளைய சகோதரர் அவுரங்கசீப் தோற்கடித்துக் கொலை செய்து ஆட்சிப் பொறுப்பினைக் கைப்பற்றினார்.[1][2][3].

மரணம்

1657-ஆம் ஆண்டு ஷாஜஹான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையை கைப் பற்ற அவரின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. இவர்களில் தாரா ஷிகோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். ஸாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா ஷிகோ, ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔரங்சீபின் மீது படையெடுத்தார்.

உடல் தேறிய ஷாஜஹானின் ஆதரவு இருந்தபோதிலும், ஆக்ராவிற்கு 13 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள அமோகர் போர்க் களத்தில் 1658 ஜூன் 8-ஆம் தேதி தாரா ஷிகோவை ஔரங்சீப் தோற்கடித்தார். தோல்விக்கு பிறகு ஆதரவு தேட முயன்ற தாரா ஷிகோ, சிலரின் வஞ்சக சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு ஔரங்கசீபிடம் ஒப்படைக்கப்பட்டார். சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலை நகரில் அழுக்கேறிய யானையின் மீது கைதியாக இழுத்துச் செல்லப்பட்ட தாரா ஷிகோ, ஔரங்கசீபின் ஆட்களால் 1659 ஆகஸ்ட் 30-ஆம் தேதி கொல்லப்பட்டார். ஔரங்கசீப், இறந்துப் போன உடலிலிருந்து தலையை வெட்டி, அவரது தந்தையிடம் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

கொள்கைகள்

தாரா ஷிகோ, மென்மையும், இறையுணர்வும் நிறைந்த சூஃபி அறிஞராக திகழ்ந்தார். அவர் இந்துக்கள், முஸ்லீம்களிடையே மத நல்லிணக்கத்தையும், கூடி வாழ்தலையும் வலியுறுத்தினார். தீவிர மத அடிப்படைவாதியான ஔரங்கசீபை தாரா ஷிகோ வெற்றிக் கொண்டிருந்தால், இந்தியா எவ்வளவு மாறுபாடு அடைந்திருக்குமென்று வரலாற்று ஆய்வாளர்கள் ஊகம் கூறுகின்றனர். தாரா ஷிகோ லாஹூர் நகரின் புகழ் பெற்ற காதிரி சுஃபி ஞானியான மையன் மிர் அவர்களின் மாணாக்கராவார். இதற்கு மையன் மிரின் சீடரான முல்லா ஷா பதக்ஷி உதவினார்.

தாரா ஷிகோ, இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண மிகுந்த முயற்சி மேற்கொண்டார். இந்த முயற்சியின் விளைவாக, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்கென்று, சமஸ்கிருத உபநிஷத்துகளை பாரசீகத்திற்கு மொழிப்பெயர்த்தார். அவரது மிகவுமறிந்த படைப்பான மஜ்ம-உல்-பஹ்ரெயின் (இரு பெருங்கடல்களின் சங்கமம்), சூஃபியிசத்திற்கும், இந்து மதத்தின் ஒரு தெய்வ கோட்பாட்டிற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண முயன்றுள்ளது.

தனது சகோதரன் ஔரங்கசீப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டத நுண் கலைகள், இசை, நாட்டியம் ஆகியவைகளின் புரவலராகத் தாரா ஷிகோ திகழ்ந்தார். 1630 –களில் துவங்கிஅவர் இறக்கும் வரை படைத்த எழுத்துக்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு தாரா ஷிகோவின் தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த தொகுப்பை அவரது மணைவி நதிரா பானுவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அவர் இறந்தபின், தாரா ஷிகோவின் தொகுப்பு முகலாய அரசு நுலகத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட்டது. தாரா ஷிகோவின் படைப்புகளின் மீதான அவரது அடையாளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எல்லா படைப்புகளும் அழிக்கப்படவில்லை.

50 உபநிடதங்களை மொழிபெயர்த்த விளைவு அல்லா உபநிஷடம் உருவானதா?: தாரா சிக்கோ (1615-1659) ஜஹாங்கீருடைய புதல்வன், அக்பரின் பேரன். பொதுவாக இவனைப்பற்றி அதிகமாக புகழ்ந்துதான் சரித்திராசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். 1657ல் சமஸ்கிருதத்திலிருந்து 50 உபநிடதங்களை பாரசீகத்திற்கு மொழிபெயர்த்துள்ளான் என்று சில குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், அவன் மற்றவர்களால் அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்த வேலையை கண்காணித்தான் என்றுள்ளது[1]. எனவே சமஸ்கிருதம் மற்றும் பாரசீகம் தெரிந்த பலர் இதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். அதாவது அக்பரது காலத்திற்குப் பிறகுக் கூட இத்தகைய மொழிபெயர்ப்புகள் தொடர்ந்துள்ளன என்று தெரிகிறது. “சிர்-இ-அக்பர்”, என்ற அத்தொகுப்பு “மிகப்பெரிய ரகசியம்” எனப்படுகிறது. அதாவது “கிதாப் அல்-மக்னுன்” (மறைத்து வைக்கப்பட்டுள்ள புத்தகம்) என்று குரானைக் குறிப்பிட்டு, அதுதான் உபநிடதங்கள் என்றும் குறிப்பிட்டான். பாரதத்தில் உபநிடதங்கள் என்றுமே ரகசியமாக இருந்ததில்லை. பல இடங்களில் பண்டிதர்களால் விவாதிக்கப்பட்டு வந்தது. எனவே, முகலாயர் காலத்தில் அது “மிகப்பெரிய ரகசியம்” என்று ழைக்கப்பட்டதற்கறென்ன காரணம் என்று பார்க்க வேண்டும். உபநிடதங்கள் அப்படியே மொழிபெயர்க்கப் பட்டிருந்தால், ஒரு பிரசினையும் இல்லை. ஆனால், மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது எனும் போது, மொழிபெயர்ப்பில் ஏதோ செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒரு வேளை மேலே குறிப்பிட்ட அல்லா உபநிஷடம் அல்லது அல்லாவுபநிஷத் அல்லது அது போன்ற உபநிடதங்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டன் போலும்.

சூபித்துவம்–வேதாந்தங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்த தாரா சிக்கோ: தாராசிக்கோவின் “மஜ்மா-உல்-பஹ்ரைன்” (இரண்டு சாகரங்களின் சங்கமம்) என்ற புத்தகம், சூபித்துவம் மற்றும் வேதாந்தத்தை ஒப்பீடு செய்து எழுதப்பட்டுள்ள நூலாகும். ஆனால், இதனால் என்ன தாக்கம் என்று சொல்லப்படவில்லை. ஒருவேளை இந்துமதக் கருத்துகளை முகமதிய கருத்துகள் போன்று மாற்றியமைத்து, பாரசீகத்தில் எழுதி அவை சூபி நூல்கள் என்று அறிவித்தார்கள் போலும். சீக்கியர்களின் ஏழாவது குருவான குரு ஹர் ராயுடன் நட்பு கொண்டிருந்தான். ஒருவேளை, இவனும் அக்பர் போலவே, “தீன்-இலாஹி” மதசோதனைகளில் ஈடுபட்டானா என்று தெரியவில்லை. நூர்ஜஹானுக்குப் பிறகு இவன் தான் பட்டத்திற்கு வரவேண்டும் நிலையில் தான், ஔரங்கசீப் இவனுக்கு போட்டியாக கிளம்பி வேலை செய்ய ஆரம்பித்தான். இந்து ராஜாக்களின் ஆதரவு பெற தாரா சிக்கோ முயன்றிருக்கலாம். ஆனால், ஔரங்கசீப் தன்னுடைய வேலையில் குறியாக இருந்தான். இருப்பினும், தனது பதவியை நிலைநிறுத்திக் கொள்ள இத்தகைய வேலைகளில் ஈடுபட்டான் போலும்.

உபநிடதங்களில் நாட்டம், வேட்டையில் குறி, சிற்றின்ப விளக்கம்: தாராசிகோ இத்தகைய மத-ஆராய்ச்சிகளோடு ஓவியத்திலும், வேட்டையிலும் ஈடுபாடு கொண்டிருந்தான். வேட்டைப் பற்றிய ஓவியங்களின் பின்னணியில் பெண்ணின்பம் போன்ற சரச உணர்வுகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்[2]. வேட்டையில், தமது இலக்கின் மீது குறியாக கண்களை வைத்துக் கொண்டு பார்த்து, சுட்டு வீழ்த்துவது வழக்கம். அதேபோல, தனக்குப் பிடித்தமான பெண்ணைப் பார்த்து, அவளை காமவேட்டையில் வீழ்த்துவது ஆணின் திறமை[3]. தாரா சிக்கோவிற்கு இதெல்லாம் பொறுத்தமான விசயங்கள் அல்ல என்று நினைக்க வேண்டாம். ஆன்மீகம், சூபித்துவம் என்றெல்லாம் இருக்கும் போது, இதில் எப்படி மனம் ஈடுபடுகிறது, இது முரண்பாடல்லவோ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். இந்துக்களின் அஹிம்சையை மதிப்பவன் என்றால், ஏன் வேட்டையில் ஈடுபட்டு மிருகங்களைக் கொன்றிருக்க வேண்டும் என்று கேட்கலாம். ஆனால், இளவரசனாக இருந்த அவன் தனது அரசக்கடமைகள், பாரம்பரியங்கள் முதலியவற்றைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும்[4] என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

பதவிக்காக குறியாக இருப்பது தவறில்லை: உண்மையில் “கிதாப் அல்-மக்னுன்” (மறைத்து வைக்கப்பட்டுள்ள புத்தகம்) என்று குரானைக் குறிப்பிட்டு, அதுதான் உபநிடதங்கள் என்றும் குறிப்பிட்டதையே ஆசார-அடிப்படவாத முகமதியர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், மிருகவேட்டையை காமவேட்டையோடு ஒப்பிடுவதை, எந்த முகலாய அரசனும் தவறு என்று சொல்லமாட்டான். “ஹராம்” என்றதையே “ஹேரம்” ஆக்கி பெண்களை அனுபவித்து வரும் பழக்கத்தைக் கொண்டவர்களுக்கு, இதெல்லாம் சகஜம் என்றுதான் சொல்லவேண்டும். வேட்டையில் விழுந்த மிருகங்கள் எப்படி வேட்டையாடியவர்களுக்கு உணவாகிறதோ, அதுபோலத்தான், ஹேரத்தில் சிக்கிய பெண்களின் கதியும். ஹேரத்தை விட்டு விடுதலையான அல்லது தப்பியோடி வந்த பெண்கள் தாம், அங்கிருக்கும் நிலையை உலகிற்கு சொல்லவேண்டும். தாராசிக்கோ காலத்தினால் பிற்பட்டு வந்தாலும், மதவொப்பீடு, பெண்ணின்பம் என்றெல்லாம் இருப்பதானால் இங்கு குறிப்பிட வேண்டியதாகிறது. ஆனால், இவனே, தனது சகோதரனால் வேட்டையாடிக் கொல்லப்படுகிறான்.

தாராசிக்கோவின் மனைவிகள் குடும்பம் முதலியன: தாரா சிக்கோ நதிரா பானு பேகம் என்ற அழகியப் பெண்ணை 1633ல் கல்யாணம் செய்து கொண்டான். 1659ல் இவள் காலமானாள். 26 ஆண்டு தாம்பத்திய நடத்தியதில் நான்கு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் பிறந்தனர். அதாவது அத்தகைய காலகட்டத்திலும், இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இருப்பினும் இவனுக்கு பல மனைவிகள் இருந்தனர் என்று தெரிகிறது. ஔரங்கசீப் இவனைக் கொன்ற பிறகு, தாரா சிக்கோவின் மனைவிகள் மற்றும் மகள்கள் முதலியோருக்கு, ஔரங்கசிப்பின் ஹேரத்தில் இடம் கொடுக்கப்பட்டது[5]. இதிலிருந்து, காமம், உடலின்பம் என்றெல்லாம் வரும்போது, முகலாயர்கள் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறார்கள். மேலும், வெட்டையைக் கூட காமரசத்துடன் விளக்கும் திறமை தாரா சிக்கோவிற்கு அனுபவம் இல்லாமல் வந்திருக்க முடியாது. மேலும், இதெல்லாம், அவர்களிடம் சகஜமாக இருந்தது. எனவே மிருகங்களை வேட்டையாடினால், அஹிம்சை பேசக்கூடாது என்பதோ, வேதாந்தம்-குரான் ஒப்பீடு செய்வதால், காமத்தில் ஈடுபடக் கூடாது என்பதோ, அவர்களிடம் எந்தவித கட்டுப்பாடோ, தடையோ, எதிர்ப்போ இல்லை. அவ்வாறு நினைப்பதே முரண்பட்டதாகும்.

தீன் இலாஹியைத் தழுவ வற்புறுத்தல், அதிகாரப்பிரயோகம் முதலியவை மேற்கொண்டது: கான்–இ-ஆஜம் எனப்படுகின்ற மிர்ஜா ஆஜிஜ் கோகா என்பவர் அக்பரின் மதத்திற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். அக்பருடன் வளர்க்கப்பட்டு வந்து, பெரிய படைத்தளபதியானவர், அக்பருக்கு மிக நெருக்கமானவர் அதாவது அக்பரின் “சகோதரன்” (Half-brother) என்று குறிப்பிடப்படுகிறான். 1594ல் அக்பர் தன்னைக் கூப்பிட்டபோது, வெறுப்போடு மறுத்து, மெக்காவுக்குச் சென்று விட்டார். ஆனால், அக்பரது ஆட்கள் அங்கும் துரத்திக் கொடுமைப் படுத்தினர். இதனால், வேறுவழியில்லாமல், தில்லிக்குத் திரும்பி வந்து, அக்பருடன் சமாதானம் செய்து கொண்டு, தீன் இலாஹியை ஏற்றுக் கொண்டார். இதனால், 1580ல் படைத்தலைவரானார், 1587ல் தனது மகளை இளவரசன் மூரதிற்கு திருமணம் செய்து கொடுத்ததால் அக்பருக்கே சம்பந்தியானார்[6]. நண்பன் மற்றும் முசல்மானுக்கே இந்த கதி என்றால், இந்துக்களின் கதி என்னவாகியிருக்கும் என்று யோசிக்க வேண்டியுள்ளது. அதாவது, வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர், அதற்காக வேண்டிய செயல்கள் யாவும் அthiகாரத்துடன், வன்முறையுடன் மேற்கொள்ளப்பட்டன என்பது தெரிகிறது.

ஜோதிடத்தில் நம்பிக்கை: அக்பர் நவம்பர் 23. 1542ல் பிறந்தபோது, அவருக்கு பத்ர்-உதீன் மொஹம்மது அக்பர் என்று பெயர் வைக்கப்பட்டது.

பத்ர்-உதீன் = பௌர்ணமி அன்று பிறந்த,
மொஹம்மது = மொஹம்மது நபி,
அக்பர் = மிகப்பெரிய, சிறந்த மற்றும் அவரது தாத்தாவின் பெயர், செயிக் அலி அக்பர் ஜாமி[7].
ஆனால், சுன்னத் செய்து பெயர் வைக்கும் போது, உறவினர்கள் மற்றும் ஜோதிடர்களின் அறிவுரைப்படி அவரது பெயர் மற்றும் பிறந்த தேதி மாற்றப்பட்டது. பத்ர்-உதீன் மொஹம்மது அக்பர் என்பது ஜலாலுத்தீன் மொஹம்மது அக்பர் என்றும் பிறந்த தேதி அக்டோபர் 15, 1542 என்று மாற்றப்பட்டது[8]. அக்பருக்கு ஜோதிடத்தில், குறிப்பாக ஆரூடங்களில் அதிக நம்பிக்கை இருந்ததது என்று தெரிகிறது. தமது வம்சாவளியில் மகனால் தந்தைக்கு ஏதாவது தொந்தரவு, பிரச்சினை அல்லது ஆபத்து வரும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.  முகமதியர், இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், அரேபியாவில் மற்றும் இஸ்லாம் உலகத்தில் ஜோதிட நம்பிக்கை இருந்து வந்துள்ளது, வருகிறது. அரேபிய-பாரசீக மொழிகளில் பற்பல ஆரூட, ஜோதிட, எதிர்கால பலன்கள் கூறும் புத்தகங்கள் இஸ்லாத்திற்கு முன்பும், பின்மும் இருந்தன. முன்பே குறிப்பிட்டப்படி, மத்தியத்தரைக் கடல் நாடுகளில் இந்துக்கள் 18ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து, படிப்படியாக மதம் மாற்றப்பட்டாலும், முந்தைய பழக்க-வழக்கக்களை அவர்கள் தொடர்ந்து வேறுவிதமாக பின்பற்றி வந்தார்கள். புத்தகங்களும் அவ்வாறே மாற்றி எழுதப்பட்டன.

No comments:

Post a Comment