CHITRANGADA SINGH ,BOLLYWOOD
ACTRESS BORN AUGUST 30,1976
சித்ராங்கதா சிங் (பிறப்பு 30 ஆகஸ்ட் 1976) [1] ஒரு இந்திய நடிகர். முதன்மையாக இந்தி திரைப்படங்களில் நடிப்பவர்.[2] யே சாலி ஜிந்தகி , ஹஜாரான் குவாஷிஹீன் ஐசி , தேசீ பாய்ஸ் , இன்கார் , ஐ, மீ அர் மெயின் மற்றும் பஜார் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.[3]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சித்ரங்காதா சிங் ஜோத்பூர் , ராஜஸ்தானில் [4] பிறந்தார். கோட்டா, ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்தில் பரேலி மற்றும் மீரட் ஆகிய இடங்களிலும் வளர்ந்தார். இவரது தந்தை முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி நிரஞ்சன் சிங், பணி காரணமாக பல இடங்களில் மாறுதல் பெற்று கடைசியாக மீரட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[5] அவரது சகோதரர் திக்விஜய் சிங் சாஹால் ஒரு குழிப்பந்தாட்டக்காரர். சோபியா பெண்கள் பள்ளி, மீரட்டில் கல்வி பயின்ற பிறகு, அவர் புது தில்லி லேடி இர்வின் கல்லூரியில் இருந்து மனையியல் (உணவு மற்றும் ஊட்டச்சத்து) துறையில் பட்டம் பெற்றார்.[6]
ஜான் ஆபிரகாம் , தீபிகா படுகோனே , சித்ரங்காதா சிங் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் தங்களது தேசி பாய்ஸ் விளம்பரங்களில், 2011 |
தொழில்
தொடக்கம் மற்றும் விடுமுறை (2003 முதல் 2010 வரை)
திரைப்பட துறையில் நுழைவதற்கு முன்பாக மாதிரியாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது கல்லூரிக் கல்வி முடிந்தபின், ஐசிஐசிஐ வங்கி மற்றும் அலுக்காஸ் நகைக்கடை போன்ற நிறுவனங்களுக்கு விளம்பர மாதிரியாகப் பணி செய்யத் தொடங்கினார்.
குல்ஸர் மூலம் சன்செட் பாயின்ட் என்ற இசை காணொளியில் நடித்த பிறகு அவர் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.[7]
பாடகர் அபிஜித் பட்டாச்சார்யாவின் இசை காணொளியில் தொடர்ந்து தோன்றினார். அதன்பிறகு, 2003 ஆம் ஆண்டில் சுதாகர் மிஸ்ராவின், ஹஜாரான் குவாஷிஹேன் ஐஸி படத்தின் மூலம் திரையுலக்கு அறிமுகமானார். அவரின் நடிப்பு மற்றும் கதாபாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது.[8] வாஷிங்டன் போஸ்ட்டின் விமர்சனத்தில் அவருடைய ஆழமான கண்ணியத்தை பாராட்டினர்.[9] பிறகு சித்ரங்காதா 2005 திரைப்படமான கல்: நேற்று மற்றும் நாளை என்ற படத்தில் தோன்றினார்.
2005 முதல் 2008 வரை அவர் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.[10][11] 2008 இல் இயக்குனர் ஓனரின் காதல்-நகைச்சுவை திரைப்படமான, சாரி பாய்! படத்தில் சஞ்சய் சூரியுடன் நடித்தார்.[12] மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் வார இறுதியில் அதன் வெளியீடு வர்தக ரீதியாக தோல்வியை ஏற்படுத்தியது.[13][14]
வர்த்தக சினிமா (2011-தற்போது வரை)
ஜான் ஆபிரகாம் , தீபிகா படுகோனே , சித்ரங்காதா சிங் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் தங்களது தேசி பாய்ஸ் விளம்பரங்களில், 2011
இவர் ரோஹித் தவானின் தேசி பாய்ஸில் நடித்தார், அங்கு அவர் அக்ஷய் குமாருடன் ஒரு பொருளியல் ஆசிரியராக நடித்தார். தேசீ பாய்ஸ் திரைப்படத்தில் ஜோன் ஆபிரகாமும் தீபிகா படுகோனும் நடித்தார். சுதிர் மிஸ்ராவின் யே சாலி ஜிந்தகி (2011) படத்தில், பணம் மற்றும் புகழ் பெற்ற பாடகராவதற்கு தில்லியிலிருந்து மும்பை செல்லும் பெண்ணாக நடித்திருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
சித்ரங்காதா சிங் குழிப்பந்தாட்டக்காரர் ஜோதி ராந்தாவை திருமணம் செய்து கொண்டார். சித்ரங்காதாவும் அவரது கணவரும் 2013 ஆம் ஆண்டில் பிரிந்து பின்னர் ஏப்ரல் 2014 இல் முறையாக விவாகரத்து பெற்றனர்.[15] தம்பதியருக்கு ஜோராவார் என்ற மகன் உண்டு. அவர்களது மகன் சித்ரங்காதாவுடன் வளர்கிறார்.
இடைவெளிக்குப் பின் மீண்டும் திரைக்கு வந்துள்ள சித்ராங்கதா சிங், சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையாவார். இவரது அதிர்ஷ்டம் "சாகிப், பீவி அவுர் கேங்ஸ்டார் -3' என்ற படத்தில் சஞ்சய் தத்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியில் இருக்கிறார் சித்ராங்கதா சிங், அதுமட்டுமல்ல பெரிதும் பேசப்படும் பிரபல ஹாக்கி வீரர் சந்தீப் சிங் பற்றிய வரலாற்று படமான "சூர்மா'வை தயாரித்து வரும் சோனி மோஷன் பிக்சர்ஸ் தலைவர் ஸ்நேகா ரஜனியுடன், இணை தயாரிப்பாளராகவும் கூட்டு சேர்ந்துள்ளார் சித்ராங்கதா சிங்.
No comments:
Post a Comment