Saturday 14 September 2019

U.R.JEEVARATNAM ,LEGEND SINGER/ACTRESS BORN SEPTEMBER 14,1927

U.R.JEEVARATNAM ,LEGEND SINGER/ACTRESS
BORN SEPTEMBER 14,1927

யூ.ஆர்.ஜீவரத்தினம் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஈரோடு அருகில் உள்ள ஊஞ்சலூரில் பிறந்தார்

யூ. ஆர். ஜீவரத்தினம் (U. R. Jeevarathinam, 1927 செப்டம்பர் 14[1] – 2000, சூலை 26) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார். தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]

தமிழ்நாடு ஈரோடில் சுப்பிரமணியம், குஞ்சம்மாள் ஆகியோருக்குப் பிறந்த ஜீவரத்தினம், அவரது 9வது வயதிலேயே சென்னையில் கிருஷ்ணையா நாடகக் கம்பனியில் சேர்ந்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஜீவரத்தினம் கைலாச பாகவதர், குன்னக்குடி வெங்கட்ராமையர் போன்றோரிடம் பல ஆண்டுகள் முறையாக இசைப் பயிற்சி பெற்றார்.

1937 ஆம் ஆண்டில் வெளிவந்த மாடன் தியேட்டர்சின் சதி அகல்யா என்ற படத்தில் தேவலோகப் பெண்ணாகத் தோன்றினார். தொடர்ந்து பத்ம ஜோதி (1937), தாயுமானவர் (1938), சந்தனத்தேவன் (1939), ராக யோகம், சதி மகானந்தா, உத்தம புத்திரன், சத்தியவாணி, பரசுராமர் (1940) போன்ற படங்களில் நடித்தார். பக்த கௌரி திரைப்படத்தில் இவர் பாடி நடித்த தெருவில் வாராண்டி வேலன்.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கண்ணகி (1942) படத்தில் கௌந்தியடிகள் வேடத்தில் நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில் இவர் பாடிய மாநில மீதில் ஜீவகள் வாழும் வாழ்விது நாடகமாகும், பூதலம் புகழும் ஜோதி ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இத்திரைப்படத்தில் மாதவியாக நடித்த எம். எஸ். சரோஜாவுக்கு ஜீவரத்தினம் பின்னணி பாடியிருந்தார்.

திருவாரூரில் கண்ணகி படத்தின் பொன்விழா கொண்டாடிய போது சுவாமி தினகர் ஜீவரத்தினத்துக்கு இசைக்குயில் என்ற பட்டம் அளித்தார்.

தொடர்ந்து இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவின் முதல் திரைப்படமான பூம்பாவை (1944), ஜெகதல பிரதாபன், ராஜராஜேஸ்வரி (1944), என் மகன் (1945), வால்மீகி ஸ்ரீ முருகன் (1946) போன்ற படங்களில் நடித்தார்.

1945 இல் டி. எஸ். வெங்கட்சாமி என்பவரைத் திருமணம் முடித்தார். 70களில் நாடகங்களில் ஜீவரத்தினம் நடித்துப் பாடிக் கொண்டிருந்தார். 1971 ஆம் ஆண்டு கணவர் இறந்ததும் ஜீவரத்தினம் ஒருவரே குடும்பத்தை சுமக்க வேண்டியிருந்தது. டி. ஆர். மகாலிங்கம், திருச்சி லோகநாதன் போன்றோர்களுடன் ஜீவரத்தினம் பாடி பல நாடகங்களில் நடித்தார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@

மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் சுந்தரத்திடம் ஒரு குழந்தையை அறிமுகப்படுத்தி வைக்கின்றனர். அந்தக் குழந்தைக்கு எதாவது வாய்ப்புகள் தரும்படி கேட்கின்றனர். பாடச் சொல்லிக் கேட்கிறார் சுந்தரம். அக்குழந்தை உச்சஸ்தாயில் பாடுவது மேற்கத்திய கிளாசிக்கல் வாய்ப்பாட்டு வடிவமான ஓபராவைக் (Opera)கேட்பதுபோல் இருக்கிறது.இவ்வளவு சிறப்புமிக்க அந்தப் பெண் குழந்தைக்கு அப்போது வயது 9தான். சுந்தரம் அக்குழந்தையின் பாட்டை வெகுவாகப் பாராட்டுகிறார். அப்பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே மாடர்ன் தியேட்டர்ஸில் 5ஆண்டுகளுக்குப் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன் பிறகு எடுக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களிலெல்லாம் அந்தக் குழந்தையின் பங்களிப்பு இல்லாமல் இருந்ததில்லை. அவர்தான் யூ.ஆர்.ஜீவரத்தினம்.

யூ.ஆர்.ஜீவரத்தினம் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஈரோடு அருகில் உள்ள ஊஞ்சலூரில் பிறந்தார். இவருடைய தந்தை சுப்ரமண்யம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். தாயின் பெயர் குஞ்சம்மாள். சிறுவயதிலேயே ஜீவரத்தினம் நாடகம் மற்றும் வாய்ப்பாட்டில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கிறார். இவருடைய ஆற்றலை மேலும் வளர்த்தெடுக்கச் சரியான வாய்ப்பு மெட்றாஸில் கிடைக்கும் என்பதால் 9ஆம் வயதிலே ஜீவரத்தினம் வாய்ப்பு தேடி மெட்றாஸ் வந்தார். நடிகை அங்கமுத்துவின் சிபாரிசுவின் பேரில் கிருஷ்ணய்யா நாடகக் கம்பெனியில் 6மாதகாலம் இருந்தார். அதன் பிறகு அவருடைய திரைப்பட ஆர்வத்தின் காரணமாக சேலம் வந்து மாடர்ன் தியேட்டர் சுந்தரத்தைச் சந்தித்துள்ளார்.

1937ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘சதி அகல்யா’மூலம்தான் ஜீவரத்தினத்தின் திரைப்பட வாழ்க்கை தொடங்குகிறது. இந்தப் படத்தில் அவர் தன் முதல் பாடலைப் பாடினார். 1941இல் எடுக்கப்பட்ட ‘பக்த கெளரி’ படத்தில் தலைப்பு வேடம் ஏற்று நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய ‘தெருவில் வாரான்டி, வேலன்…’ என்னும் பாடல் மெட்றாஸ் மாகாணத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் கொண்டாடப்பட்டது. ஒருபக்கம் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்தாலும் அவர் சி.எஸ்.ஜெயராமன், குன்னக்குடி வெங்கட்ராம அய்யர் போன்றோர்களிடம் சாஸ்திரிய சங்கீதம் கற்பதைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் ஜூபீட்டர் ஃபிம்ஸின் படமான கண்ணகியில் கெளதி அடிகளார் வேடம் ஏற்று நடித்தார். 1942இல் வெளிவந்த இப்படத்தில் ஜீவரத்தினத்தின் நடிப்பு பாராட்டப் பெற்றது. இதில் நாயகன் – நாயகி வேடம் ஏற்று நடித்த பி.யூ.சின்னப்பா – கண்ணாம்பா இருவர்களையும் ஒப்பிடும்போது ஜீவரத்தினத்திற்கு மிகச் சிறிய வயது. உருவத்திலும் அவர் மிகச் சிறியவராகவே தெரிந்தார். பி.யூ.சின்னப்பாவும் – கண்ணாம்பாவும் இவரைக் குழந்தை என்றே அழைத்துள்ளனர். ஆனால் இப்படத்தில் ஜீவரத்தினம் உச்சஸ்தாயில் பாடும்போது இருவரும், இவரையா நாம் குழந்தை என்றோம்? என வியந்தனர். 1944இல் வெளிவந்த பூம்பாவையில் ஜீவரத்தினத்தின் நடிப்பையும் பாட்டையும் கல்கி தன் விமர்சனத்தில் புகழ்ந்துள்ளார். இதைத் தொடந்து ஜெகதாளப்பிரதாபனில் பி.யூ.சின்னப்பாவுக்கு ஜோடியாகிறார்.

ஜீவரத்தினம் ஜூபீட்டர் ஃபிம்ஸின் மேலாளர் டி.எஸ்.வெங்கடசாமியை மணமுடித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் போன்றவர்களுக்கு முதல் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர்கள் வெங்கடசாமி-ஜீவரத்தினம் தம்பதியினரே. இவர்கள் மெர்குரி ஃபிலிம்ஸ் என்னும் பெயரில் பட நிறுவனத்தைத் தொடங்கிச் சில படங்களைத் தயாரித்தனர். பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்க மேடை நாடகங்களில் நடித்தார். கச்சேரிகளில் பாடினார்.

நடிப்பதை நிறுத்திக்கொண்டாலும் ஜீவரத்தினம் தன் குரல்களால் வெகுகாலம் தமிழ் சினிமாவில் நினைவுகூரத்தக்கவராக இருந்தார். அவர் 2000ஆம் ஆண்டு ஜூலை 26இல் மரணமடைந்தார். ‘தமிழுக்கு உயிர் கொடுப்போம்! தயங்காதே தோழா!’ என்னும் பாடல் வரிகள் மூலம் தமிழகம் தாண்டி இலங்கையில் உள்ள தமிழர்களின் நினைவிலும் நீங்காத இடம் பிடித்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம்.

நடித்த திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]

சதி அகல்யா

பத்மஜோதி

தாயுமானவர்

சந்தனத்தேவன்

ராஜயோகம்

சதி மகானந்தா

உத்தம புத்திரன்

சத்தியவாணி

பரசுராமர்

பக்த கௌரி

கண்ணகி

பூம்பாவை

ஜகதலப் பிரதாபன்

ராஜ ராஜேஸ்வரி

என் மகன்

வால்மீகி

ஸ்ரீ முருகன்

அபிமன்யூ

ஸ்ரீ ஆண்டாள்

போன மச்சான் திரும்பி வந்தான் (1954)

வாழ்வினிலே ஒரு நாள் (1956)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் பள்ளியில் பயின்ற தோழி கோவையில் உள்ளார். அவர் தனது பழைய நினைவுகளை கண்ணீர் மல்க கூறினார்.

மறைந்த முன்னாள் நடிகையும், பாடகியுமான யூ.ஆர்.ஜீவரத்தினம் அவர்களின் மூத்த மகள் அனுராதா. தற்போது 70 வயதாகும் அனுராதா ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்று கோவை இடிகரையில் வசித்து வருகிறார்.

இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான பள்ளி வாழ்க்கை குறித்து கூறியதாவது :-

‘நாங்கள் பிரசண்டேசன் கான்வெண்ட் சர்ச் பார்க் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். நல்ல குணம் படைத்தவர் ஜெயலலிதா. படிப்பிலும் அப்படித்தான்.பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளேன். எப்போதும் சைவ உணவு வகைகளையே உண்ணும் பழக்கம் உள்ளவர் அவர்.

10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற அவர் பி.யூ.சி படிப்புக்காக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அவரால் படிப்பை தொடரமுடியவில்லை. அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்த போது நான் என் குடும்பத்தோடு சென்று படங்களை பார்ப்பேன்.

பள்ளியில் என்னுடன் எப்படி பேசி பழகினாரோ படங்களிலும் அவ்வாறே தெரிந்தார். அவரது நடிப்புத்திறமையை பார்த்து வியந்து போவேன். ஜெயலலிதாவின் மறைவுச் செய்தியை அறிந்ததும் மிகவும் உடைந்து போனேன், ஈடுகட்ட முடியாத இழப்பு!’

ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் தனது சோகத்தை கண்ணீரால் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் நம் ‘அம்மா’வின் தோழி, அனுராதா.

பள்ளி நாட்களிலேயே இவருக்கு இசை மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் நாடங்களிலும், திரைப்படங்களிலும் மிகவும் பிரபலமாக இருந்தவர் தமிழ்த் திரையுலகின் முதல் நகைச்சுவை நடிகை அங்கமுத்து. அவர் யு.ஆர்.ஜீவரத்னத்திற்கு நாடகங்களில் நடிப்பதற்கு உதவி செய்தார். அப்போது இவரது வயது 10. இங்கு ஒவ்வொரு நடிகருடைய நடிப்பையும் கவனிக்கலானார் ஜீவரத்னம்.
இந்நிலையில் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் 1937-இல் உதயமானது. இங்கு ஒரு நடிகையாக சேர்ந்தார் ஜீவரத்னம். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “சதி அகல்யா” 1937-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் முதன் முதலாக ஜீவரத்னம் நடித்தார். இதற்குப் பிறகு ஜீவரத்னம் இவரது சொந்த ஊருக்குச் சென்றபோது இவருக்கு அமோக வரவேற்பினை, சிவப்புக் கம்பள விரிப்புடன் மக்கள் இவருக்கு அளித்தனர். அதன் பின்னும் பல படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஜீவரத்னம். எனினும் தனது பதினான்காவது வயதில் “பக்த கௌரி” [1941] என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. குறிப்பாக “தெருவில் வாராண்டி வேலன் தேரில் வாராண்டி” மூலை முடுக்குகளெல்லாம் ஓங்கி ஒலித்து இவரை மிகவும் பிரபலப்படுத்தியது. இப்பாடலை இப்போதும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது.
1942-இல் வெளிவந்த பி.யு.சின்னப்பா நடித்த “கண்ணகி” படத்தில் இவர் ‘கௌந்தியடி”களாக நடித்திருந்தார். இப்படத்திலும் இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் மிகப் பிரபலமானது. பி.யு.சின்னப்பாவில் மற்றொரு வெற்றிப்படமான “ஜெகதலப்பிரதாபன்” படத்தில் 5 கதாநாயகியர்களுள் ஒருவராக இவர் நடித்திருந்தார். மற்றொரு புகழ்பெற்ற கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி நடித்த, இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவின் முதல் திரைப்படமான “பூம்பாவை” படத்தில் அவருடன் கதாநாயகியாக நடித்தார். இப்படங்களுடன் பத்மஜோதி, தாயுமானவர், சந்தனத்தேவன், ராஜயோகம், சதிமகந்தா, பி.யு.சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன், சத்யவாணி, அருந்ததி, ராஜராஜேஸ்வரி, போஜன் போன்ற மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களிலும் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீமுருகன்,வால்மீகி, என் மகன், அபிமன்யு, தேவ கன்யா போன்ற வெளிப் படங்களிலும் நடித்தார்.
திருவாரூரில் கண்ணகி படத்தின் பொன்விழா கொண்டாடிய போது சுவாமி தினகர் யு.ஆர்.ஜீவரத்தினத்துக்கு இசைக்குயில் என்ற பட்டத்தை அளித்தார்.
செண்டரல் ஸ்டூடியோவில் மேலாளராக இருந்த ரி.எஸ்.வெங்கடசாமி என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பின் இவர் சொந்தமாக மெர்க்குரி பிலிம்ஸ் என்ற திரைப்படக் கம்பெனியை உருவாக்கி அதன் மூலம் 1954-ஆம் ஆண்டு ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ என்ற படத்தை முதன்முதலாக தயாரித்தார். இப்படத்தில் ஸ்ரீராம் மற்றும் குசலகுமாரி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் வெற்றிப்படமானது. இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான ‘வாழ்விலே ஒரு நாள்’ படத்தில் சிவாஜிகணேசனும் ஜி.வரலட்சுமியும் இணைந்து நடித்தனர். மூன்றாவதாக எம்.ஜி.ஆரை வைத்து சிரிக்கும் சிலை என்றொரு படத்தைத் தயாரித்தனர். அப்படமும் வளரவில்லை. அத்துடன் ‘அடிச்சது யோகம்’ என்ற படத்தை ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க தயாரானது. இப்படமும் பாதியிலேயே நின்று போனதால் பெரும் இழப்பு ஏற்பட்டது.
ஜீவரத்னத்தின் கணவர் 7.4.1971 அன்று காலமானார். ஜீவரத்னம் 26.7.2000 அன்று காலமானார். இவரது பூத உடல் இவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூரில் தகனம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment