Thursday 5 September 2019

ALEXANDER






அலெக்சாண்டர்


அலெக்சாண்டரின், அரண்மனை வைத்தியனான பிலிப், அவனது ஆரூயிர் நண்பரும் கூட! அமைச்சர்களிடம் விவாதிக்க விரும்பாத விஷயங்களை கூட, பிலிப்புடன் ஆலோசிப்பான், அலெக்சாண்டர். இது, அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. படையெடுப்பின் போது ஒருநாள், அலெக்சாண்டருக்கு கடும் வயிற்று வலி; அதற்குரிய மருந்தை தயாரித்து எடுத்து, அலெக்சாண்டரின் கூடாரத்துக்குள் போனான், பிலிப்.

அவன் கண்களை ஊடுருவிப் பார்த்த அலெக்சாண்டர், 'இந்த மருந்து, என் உயிரை காப்பாற்றுமா?' என்று கேட்டான்.
'ஆம்; அதிலென்ன சந்தேகம்?'
'சந்தேகமில்லை; சந்தோஷம் தான்...' என்று கூறி, பிலிப் கொடுத்த மருந்தை வாங்கி, ஒரே மூச்சில் பருகி, 'நண்பா... இக்கடிதத்தை நான் படித்து விட்டேன்; நீயும் ஒருமுறை படித்துப் பார்...' என்று கொடுத்தான்.
கடிதத்தை வாங்கிய பிலிப், அதைப் படித்தான்...


மன்னர் அலெக்சாண்டருக்கு...
தங்களால், நாடுகளை இழந்த மன்னர்கள் பலர் ஒன்று கூடி, தங்களை கொல்வதற்கு, சதித் திட்டம் தீட்டியுள்ளனர்; அதற்கு உடந்தையாக இருப்பவன், உங்கள் நண்பன் பிலிப். இதற்கென, அவர்களிடம், பெரும் பணம் பெற்றுள்ளான். அவன், தங்களுக்கு தரவிருக்கும் மருந்தில், கொடிய விஷம் கலந்துள்ளான். அவன் மருந்துக்கு இரையாகாமல், உங்கள் வாளுக்கு, அவனை இரையாக்கி விடுங்கள்!
தங்கள் நலம் நாடும் அமைச்சன்,
பார்மீனியோ.
கடிதத்தை படித்து அதிர்ச்சியடைந்து, உடல் நடுங்க, 'மன்னா... இது வீண் பழி; நான் கொடுத்தது மருந்து தான்; விஷமல்ல...' என்றான் பிலிப்.
'அதனால் தான், அதை, நம்பிக்கையுடன் குடித்தேன்...' என்று கூறி, 'இப்போது நீ கொடுத்திருக்கும் மருந்து, என்னை கொன்று விட்டால், உலகத்தின் துரோகிகள் பட்டியலில், உன் பெயர் நிலைத்திருக்கும்;
மாறாக,
என்னை காப்பாற்றி விட்டால், உலகத்தின் நட்பு பட்டியலில், என்னுடைய பெயர் நிலைத்திருக்கும்...' என்று சொன்னான்,

No comments:

Post a Comment