Friday 11 October 2019

MUSIC LEGEND SINGER K.B.SUNDARAMBAL






கந்தர்வ கானக்குயில் இசையரசி கே.பி.சுந்தராம்பாள்

Sathish K.L


நம் தமிழ் கடவுள் முருகன் வரலாறு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது திருவிளையாடல் புராணமும், “பழம் நீயப்பா… ஞானப்பழம் நீயப்பா….” என்ற பாடலும் தான். ஔவையார் காலத்தில் அவரே இவ்வளவு ரம்மியமான குரலில் பாடினாரா என்பது நமக்குத் தெரியாது. மேலும் பக்தி இலக்கிய காலகட்டத்தின் சங்கப் புலவர் ஔவையாரின் முகம் இப்படித்தான் இருக்கும் என்ற அழியா பிம்பத்தை  தமிழக மக்களின் நெஞ்சில் நீக்கமற நிறைத்தவர். ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கே.பி.எஸ் பாடியவை மட்டும் 30. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி நடித்த முதல் நடிகை கே.பி. சுந்தராம்பாள்.

இன்றும் நம் காதுகளில் தேனாய் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த தெளிந்த நீரோடை போன்ற கணீர் கானக்குரலுக்குச் சொந்தக்காரர் கே.பி.சுந்தராம்பாள். நாடகக்கலைஞர், திரைப்படப் பாடகர்,  திரைப்பட நடிகை,  ஆன்மீகவாதி, மற்றும் அரசியல்வாதி என்று பன்முகத்திறன் கொண்ட ஒரு ஆளுமை அவர் என்றால் அது மிகையாகாது. வறுமையின் கோரப்பிடியில் தன் வாழ்வைத் தொடங்கிப் பின்னாளில் ஒரு திரைப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் அன்றைய உச்ச நட்சத்திரங்களைக் காட்டிலும் அதிகம்.



கொடுமுடி பாலம்பாள் என்பவருக்கு மூத்த மகளாய் அக்டோபர் 10, 1908 ஆம் ஆண்டு பிறந்தார் சுந்தராம்பாள். அவருடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி மற்றும் தங்கை. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் அவர் குடும்பம் வறுமையில் வாடியது. பள்ளிப் படிப்பை பாதியில் விடவேண்டிய சூழ்நிலை. தன் தாய்மாமாவின் ஆதரவில் வளர்ந்தார். சிறு வயதிலேயே அலாதியான பாடும் திறன் பெற்றிருந்தார். எனவே அப்போதே அவரைக் கோயில் கூட்டங்களிலும், திருவிழாக்களிலும் பாட வைத்துப்  பெரியோர்கள் கேட்டு மகிழ்வர். அப்போதே சிறுமியான சுந்தராம்பாளுக்கென்று ஒரு ரசிகர் வட்டமே இருந்தது.

அவரது குரலை பற்றி அறிந்த ஆண்டிப்பட்டி ஜமீன்தார் அவரை வரவழைத்துப் பாடச் சொல்லி அகமகிழ்ந்து தங்கச்சங்கிலியும், பட்டாடையுடன் பரிசுப்பொருள்களும் வழங்கி ஊக்குவித்தார். வாய்ப்புகள்  எப்போதும்  திறமைசாலிகளின் கதவைத் தேடி வந்து தட்டியே தீரும். அப்போதைய புகழ்பெற்ற வேலுநாயர் – ராஜாமணியம்மாள் நாடகக்குழு நல்லதங்காள் நாடகம் நடத்த கரூர் வந்திருந்தது. நன்றாகப்  பாடும் திறமையுடைய சிறுமிகளை அவர்கள் தேடும் பொழுது சுந்தராம்பாளை பற்றிக்  கேள்விப்பட்டு அவரை அழைத்துக்கொண்டனர். தனது குரலில் பாடி நடித்து மக்களின் கரவொலியையும், பாராட்டுக்களையும் பெற்றார். நாடகம் முடிந்ததும் குழு அடுத்த இடத்திற்குச் சென்றது. நாட்கள் உருண்டோடின. கலை தாகமும் மீண்டும் மேடையேற வேண்டும் என்ற ஆவலும் சுந்தராம்பாளை வாட்டியது.




அப்போது மெட்ராஸ் பட்டினம் வந்தால் சந்திக்கும்படி நாடகக்  குழுவின் ஆர்மோனிய கலைஞர் கோவிந்தராஜுலு நாயுடு தமக்களித்த முகவரி நினைவுக்கு வந்தது. அடுத்த நாளே மெட்ராஸ் ரயில் நிலையத்தில் வந்திறங்கினார். ஆம்! தன் தாயாரிடம் கூடத் தெரிவிக்காமல் கள்ள ரயில் ஏறினார் சுந்தராம்பாள். நாடகக்  கலைஞராக மேடை ஏறினார். கோவிந்தராஜுலு நாயுடுவின் குழுவில் தொடங்கி, பின்னர் புதுச்சேரி தனுவம்மாள் குழு, கருப்பாயி அம்மாள் குழு என்று மாறி, மாறி தன்னுடைய திறமையை மெய்ப்பிக்க தொடங்கினார்.

‘நல்லதங்காள்’,  ‘வள்ளி திருமணம்’, ‘பாமா விஜயம்’ என நாடகங்கள் அரங்கேறியது. அப்போது பேசும் சினிமா இல்லை. மக்களின் பொழுதுபோக்கு மேடை நாடகங்கள் மட்டுமே. நாடகங்களில் வசனத்தை விடப் பாட்டுகள் அதிகமாக இருந்ததால் இசைக்  கலைஞர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக வழங்கப்பட்டன. இந்தக் கால கட்டத்தில் மேடையில் கே.பி. சுந்தராம்பாளின் பாட்டிற்கு மகுடிக்கு மயங்கும் பாம்பு போல ரசிகர்கள் மயங்கிக் கிடந்தனர். அவர் மேடையில் தோன்றிய உடனேயே இசை வெள்ளம் ரசிகர்களை ஆட்கொண்டு மூழ்கடிக்கும். ஒலிபெருக்கி வசதி இல்லாமல் நாடக அரங்கின் கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் மனிதனும் ரசிக்கும்படி பாடலானார் சுந்தராம்பாள். நாடக இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் மெட்டமைக்கும் உச்சஸ்தாயி ராகங்களை அனாயாசமாக பாடி, நடித்து அசத்தினார்.

முழுக்  கலைஞராக தமக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அப்பொழுது அவருக்கு வயது பதினைந்து. “பாலபார்ட்” (குழந்தை நட்சத்திரம்) ஆக இருந்த அவர் விரைவில் “ஸ்திரீ பார்ட்” (கதாநாயகி வேடம்), “ராஜ பார்ட்” (ராஜா வேடம்) என்று வெவ்வேறு வேடங்களில் கண கச்சிதமாக நடித்தார். அவரது புகழ் திக்கெட்டும் பரவியது. தமிழகம் முழுவதும் கே.பி.சுந்தராம்பாள் நாடகம் என்றாலே மக்கள் கூட்டம் அலைமோதியது. நாடக அரங்கில் இடம் கிடைக்காத ரசிகர்கள் வெளியில் நின்று அந்தக்  குரலை கேட்டு மகிழ்ந்தனர்.

வருடம் 1926, சண்முகம் பிள்ளை என்ற நாடக ஏஜென்ட் மூலம் இலங்கை சென்ற அவர் எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் மேடையில் தோன்றினார். கே.பி.சுந்தராம்பாள் குரலுக்கு இணையான ஒரு குரல் கிடைக்காமல் தடுமாறிய நாடக அமைப்பாளர்களின் குறையை எஸ்.ஜி.கிட்டப்பாவின் குரல் தீர்த்தது. இருவருக்குமான உச்சஸ்தாயி குரல் ஒத்துப்போக ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆகச்சிறந்த ஜோடி இது என்று ரசிகர்கள் பேசிக்கொண்டனர். இலங்கை, பர்மா என்று பல இடங்களில் நாடகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் திரும்பி வந்ததும் தமிழகத்திலும் ஒன்றாக நடிக்கத் தொடங்கினர். இருவருக்குமான நட்பு அதிகரித்தது. அவர்களுடைய நட்பு காதலாகிப் பின்  இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர்.



கிட்டப்பாவுடன் கே.பி.எஸ்
படம்: alchetron

எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் காங்கிரஸ் மேடைகளில் பங்கேற்றார் கே.பி.சுந்தராம்பாள். அன்றைய காங்கிரஸ் மேடைகள் தொடங்கும் பொழுதும், முடியும் பொழுதும் அவர் பாட்டுடனே நடந்தது. கே.பி.சுந்தராம்பாள் நாடக நடிப்பு மட்டுமல்லாது, தனி நபர் இசையிலும் அதிகமான கவனம் செலுத்தினார். கிராமாபோன் இசைத்  தட்டுகள் வெளியிடும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரின் பாடல்களை வெளியிட்டது.

வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருந்த அவர் வாழ்வில் பெரும் சோகம் நிகழ்ந்தது. திருமணமான ஆறே ஆண்டுகளில் எஸ்.ஜி.கிட்டப்பா மறைந்தார். ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது மேடையிலே மயங்கி விழுந்து உயிரிழந்தார். அந்த நாளில் இருந்து சந்நியாச வாழ்வைத் தொடங்கினார் கே.பி.சுந்தராம்பாள். வெள்ளை, காவி உடைகளை உடுத்தத் துவங்கிய அவர் அன்றிலிருந்து எவருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என்றும் உறுதி கொண்டார். அவர் நடிப்பதை விட்டு விலகியே இருந்தார்.



படம்: alchetron

அப்பொழுது வருடம் 1931. இந்தியாவில் பேசும் சினிமா உதயமானது. அனைவரும் தங்களுடைய நாடகங்களைத் திரைப்படங்களாகத் தயாரித்துக் கொண்டிருந்தனர். கிஷன் சந்த தாஸ் என்பவர் நந்தனார் நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்க முன் வந்தார். கே.பி.சுந்தராம்பாளை மீண்டும் நடிக்க வைக்க காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியின் உதவியை நாடினார். அவரின் சொல்லை மறுக்க முடியாத கே.பி.சுந்தராம்பாள் மிகப்பெரிய சம்பளம் கேட்டால் இதிலிருந்து விடுபட்டு விடலாம் என்று ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தால் நடித்துக் கொடுக்கிறேன் என்றாராம். அன்றைய நிலையில் ஒரு லட்சம் என்பது இன்றைய கோடிக்குச் சமம். சற்றும் தாமதிக்காமல் தருவதாக ஒப்புக்கொண்டார் தயாரிப்பாளர். ஒரு பெண், பக்தனாக ஆண் வேடமிட்டு நடிப்பதைப் பற்றி சர்ச்சைகள் இருந்தாலும் படம் வெளியாகி சக்கை போடு போட்டது. மாபெரும் வெற்றி.



கே.பி.எஸ் ஆண்வேடமிட்டு நடித்த பக்த நந்தனார்
படம்: alchetron

தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ‘மணிமேகலை’, ‘ஔவையார்’, ‘திருவிளையாடல்’, ‘கந்தன் கருணை’ என்று அனைத்தும் காலத்தால் அழியாத அவர் பெயர் சொல்லும் காதாபாத்திரங்கள். மீண்டும் புகழின் உச்சிக்குச் சென்றார் கே.பி.சுந்தராம்பாள். எவருடனும் ஜோடி சேராமல், ஆண் வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும், பக்திக்  கதைகளிலும் நடித்து இறுதி வரை அந்தக் கொள்கையை கடைப்பிடித்தார். வருடம் 1937, மகாத்மா காந்தி தமிழகம் வந்த பொழுது சத்திய மூர்த்தி அவரை ஈரோட்டில் உள்ள கே.பி.சுந்தராம்பாள் இல்லத்திற்கு அழைத்து வந்தாராம். அங்கு உணவருந்திய காந்தி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கும் படி அழைப்பு விடுக்க உடனடியாக ஒப்புக்கொண்டார். அனைத்து மேடைகளிலும் தேச பக்தி பாடல்கள் பாடத் துவங்கினார். காந்தி இறந்த பொழுது கே.பி.சுந்தராம்பாள் பாடிய பாடல் மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது.

பின்னாளில் காமராஜர் ஆட்சியின் பொது தமிழகமெங்கும் சூறாவளியாகப்  பிரச்சாரம் மேற்கொண்ட அவர் 1958 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்திய சீன யுத்தம் நடந்த பொழுது தன்னுடைய ஊதியத்தைக் கொடுத்து மீண்டும் தமது தேச பக்தியை வெளிப்படுத்தினார். தலைவர்களில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் அவரின் பால் ஒரு தனி அன்பு வைத்திருந்தனர்.

அவர் சொந்தமாக கொடுமுடியில் கட்டிய திரையரங்கின் திறப்பு விழாவிற்கு அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ. ஜெயலலிதா மூவரும் கலந்து கொண்டனர். சம கால கலைஞர்களான தியாகராஜா பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், வைஜெயந்தி மாலா என்று அவர் இல்லத்திற்கு வராத திரைத்துறையினரே இல்லை எனலாம்.



படம்: The Hindu

தமிழ் இசைச்சங்கம் 1966 ஆம் ஆண்டு அவருக்கு இசைப்பேரறிஞர் விருது வழங்கியது. இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை 1970 ஆம் ஆண்டு வழங்கியது. சிறந்த தேசியப் பின்னணி பாடகருக்கான விருதும் பெற்றுள்ளார்.

திரைப்பாடல்கள், பக்திப்பாடல்கள் என்று ஏறத்தாழ 800 பாடல்கள் பாடியுள்ளார். இதில் பாதியளவு தான் இப்பொழுது நம் கைவசம் உள்ளது. தமிழ்நாட்டில் அதிக இசைத்தட்டுகள் விற்ற சாதனையும் இவருடைய பாடல்களே ஆகும். பாகவதர் காலத்தில் “மேயாத மான்”, “ஆரிய மாலா” போன்ற பாடல்கள் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையைப் பாடி கர்நாடக சங்கீத மெட்டுக்கள் வழியாக ரசிகனை அடையப் படாத பாடுபட்டுக்  கொண்டிருந்த பொழுது பாமரன் முதல் அனைத்துத்  தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் இசையைப் புதிய பரிமாணத்திற்குக் கொண்டு சென்றவர் நம் கே.பி.எஸ்.



படம்: alchetron

அக்டோபர்  15 , 1980 இல் அவரது உயிர் பிரிந்தது. பெண்களுக்கான அடிப்படை உரிமைகளே மறுக்கப்பட்டு வந்த காலத்தில்,   இன்றைய ‘சூப்பர் சிங்கர்’ போன்ற வாய்ப்புகள் எதுவுமே இல்லாத காலத்தில் அவர் கொண்டிருந்த  தனித் திறமை மூலமாகக் கடுமையாக உழைத்து  ஒட்டுமொத்த தமிழிசை இரசிகர்களின் மனதையும் கட்டிப் போட்டுக் காலத்தை  வென்ற வித்தகர். அவருடைய பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்ற எனது முயற்சி இந்த நான்கு பக்கக் கட்டுரையில் முடிந்துவிட்டதற்கு முதலில் தமிழிசை இரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் அந்த இசை இராட்சஸியின் பெயரை  நெஞ்சில் நிறுத்திக் கொண்டே இருப்பதோடு, எக்காலத்திலும் போட்டியிட முடியாத தனித்துவமிக்க அவருடைய குரலைக் கேட்டுக்கொண்டே  இருக்கும் என்பதில் ஐயமில்லை



இருபதாம் நூற்றாண்டின் 100 முக்கிய தமிழர்களில் ஒருவராகக் கருதப்படும் இவருக்கு இந்த மாதத்தின் நினைவாஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்.

கே.பி.எஸ். என்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார் கோவை, கொடுமுடியில் 1908 அக்டோபர் 10 அன்று பாலாம்பாளின் புதல்வியாக சுந்தராம்பாள் பிறந்தார். கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். ஏழ்மை குடும்பம். கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்

சிறுமி சுந்தராம்பாளை பெரியவர்கள் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்ததுடன் பூஜை நடைபெறும் நேரங்களில் கோயிலில் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் கோயிலில் பாட, படிப்படியாக கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இவ்வாறு சுந்தரம்பாள் ஒரு பாடுகிற பெண் என்று கொடுமுடிப் பகுதியில் பலருக்குத் தெரிந்தது.

KB Sundarambal
கொடுமுடி சுந்தராம்பாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர். கரூர் இவரது தாயாரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர். சுந்தராம்பாள் கொடுமுடியில்தான் பிறந்தார், வளர்ந்தார். கொடுமுடிக்கும் கரூருக்கும் அதிகத் தூரமில்லை. இருப்பினும் கொடுமுடி ரயிலடியிலேயே சுந்தராம்பாளின் வீடு இருந்ததால் ரயிலில்தான் கரூருக்குப் பயணம் செய்வது வழக்கம்.

ஒருமுறை சுந்தரம்பாள் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சக பயணிகளாக அந்த ரயிலில் வந்த கொடுமுடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுந்தராம்பாளைப் பார்த்ததும் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் பாடத் தொடங்கியதும் அந்தக் குடும்பத்தினருடன் சேர்ந்து, அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் ஆர்வமாகக் கேட்டு மகிழ்ந்தனர்.இந்த ரயில் பெட்டியில் வேலு நாயர் என்பவரும் இருந்தார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், கும்பகோணத்தில் நாடகக் கம்பெனி நடத்திவந்தார். தான் இயக்குகிற நாடகங்களில் குழந்தை வேடங்களில் நடிப்பதற்குப் பொருத்தமான, திறன் வாய்ந்த சிறுவர் சிறுமியரைத் தேடிக் கொண்டிருந்த வேலு நாயருக்கு சுந்தராம்பாளின் பாடும் திறனைத் தெரிந்து கொண்டவுடன், இவரே பொருத்தமாக இருப்பார் என்பதை உணர்ந்தார்.

தனது தாய்மாமா மலைக்கொழுந்துவுடன் ரயிலில் சென்று கொண்டிருந்த சுந்தராம்பாளையும் அவரது மாமாவையும் அணுகி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று, அவர்களை நேராக கும்பகோணம் அழைத்துச் சென்றார் வேலு நாயர்.

K.B.Sundarambal

K.B. Sundarambal before the microphone at the Columbia Studio Hollway’s gardens in October, 1932. Born on October 11, 1908, she was a great stage artist and a singer.

KBS was known throughout South India as the ” Queen of the Indian stage”, and had just completed her second exclusive recording for Columbia. After more than sixty years of service to the entertainment industry she passed away on September 19, 1980.



-Courtesy Wiki

நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண்வேடத்தில் நடித்தார். ‘பசிக்குதே! வயிறு பசிக்குதே’ பாடலை அருமையாகப் பாடி ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.


1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.


ரசிகர்களின் பலத்த ஆதரவை குறுகிய காலத்திலேயே பெற்றார் சுந்தராம்பாள். பாட்டு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என்று இரண்டிலும் ஒன்றைவிட ஒன்று சிறப்பு என்று பார்த்தோரும், கேட்டோரும் பரவசப்படும் அளவுக்கு திறன்களை முழுமையாக வெளிப்படுத்தினார். காலப்போக்கில் கே.பி.சுந்தராம்பாளுக்காகவே நாடகம் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதியது.

மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.

KB Sundarambal as Lord Murugan
KB Sundarambal as Murugan
1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் – கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். கே.பி.எஸ் பாடல் இசைத்தட்டுகள் எங்கும் ஒலிக்கத் தொடங்கின.

1933−ல் டிசம்பர் 2-ல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். பெரும்பாலும் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.



காங்கிரஸ் பிரசாரங்களில் கேபிஎஸ் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். அப்படத்தில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935-ல் இப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் இப்போது இல்லை. அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.

தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. ‘பொறுமை யென்னும் நகையணிந்து’ , ‘கன்னித் தமிழ்நாட்டிலே – வெண்ணிலவே’ போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30. 1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.

KB Sundarambal
மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை] (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.

1980 செப்டம்பர் 19-ல் கேபிஎஸ் மறைந்தார். கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.

நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர். சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார். 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். ‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.



கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அன்றைய காலகட்டத்தில் (1953) 30 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த ‘அவ்வையார்’ படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியவர் கே.பி.சுந்தராம்பாள். ‘அவ்வையார்’ ஒரு அற்புத காவியமாக அமைந்தது. கே.பி.எஸ்ஸின் பாடல்களும் நடிப்பும் ரசிகர் இதயங்களைத் தொட்டன. கறுப்பு_ வெள்ளையில் தயாரான மிகச்சிறந்த படங்களில் அவ்வையாருக்கு நிச்சய இடம் உண்டு. கலைஞர் கருணாநிதி தயாரித்த ‘பூம்புகார்’ (1964) படத்தில் கவுந்தியடிகளாகவும், ஏ.பி.நாகராஜன் தயாரித்த ‘திருவிளையாடல்’ (1965) படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் கே.பி.எஸ். நடித்தார்.

திருவிளையாடலின் மாபெரும் வெற்றிக்கு கே.பி.எஸ். பாடிய பாடல்கள் பெரிய பலமாக இருந்தன. மகாகவி காளிதாஸ் (1966), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), சின்னப்ப தேவரின் துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973), திருமலைத்தெய்வம் (1973) ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார்.

டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர். ராமண்ணா தயாரித்த ‘சக்திலீலை’ படத்தில் நடித்தார். கே.பி.எஸ்ஸின் கடைசி படம் இதுதான்.


1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மருந்து சாப்பிட மறுத்து வந்தார். அவர் மயக்க நிலையில் இருந்தபோது மருந்து செலுத்தப்பட்டது.

செப்டம்பர் 19அன்று அவர் உடல்நிலை மிக மோசம் அடைந்தது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.



டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சுந்தராம்பாளைக் காப்பாற்ற முடியவில்லை. வளர்ப்புமகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி.கனகசபாபதி ஆகியோர் அருகே இருந்தனர்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.

“கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை நடந்த இறுதி ஊர் வலத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. “சிதை”க்கு சுந்தராம்பாளின் தம்பி கே.பி.கனகசபாபதி தீ மூட்டினார்.

குரல்வளத்தாலும், பாடும் திறத்தாலும் நடிப்புத்திறனாலும் ஒரு கலைஞரான கே.பி.சுந்தராம்பாள் சிறுவயதில் பட்ட துன்பங்கள் நிறைய. திருமண வாழ்வில் எதிர்கொண்ட ஏமாற்றங்களும் அதிகம். ஆனாலும் கே.பி.எஸ். கலையின் மேல் கொண்டிருந்த பிடிப்புகளும் அதற்கான சமூக உந்துதல்களும் பெரும் காரணிகளாக முன் நின்றிருக்கின்றன. எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும், ஒரு பெண்ணாக மணவாழ்வில் அவர் எதிர்கொண்ட புறக்கணிப்புகளும் உதாசீனங்களும் நிகழ்கலைகளில் ஈடுபடும் பெண்கலைஞர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தையே சுட்டி நிற்கின்றன. இது கே.பி.எஸ். காலம் தொட்டு இன்று வரை தொடரும்அவலம்தான்.

கே.பி. சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் மட்டுமே அவருடைய அக உலகையும், பெண்மனத்தின் நெகிழ்ச்சியையும் புலப்படுத்தும் ஆதாரமாக உள்ளன. தமிழிசை இயக்கம் தீவிரமாக இருந்த ஒரு காலகட்டத்தில் பாரம்பரிய இசை குறித்தும் கர்நாடக இசை குறித்தும் அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகள் கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை. இசையில் பிராமணிய மதிப்பீடுகளின் மேலாண்மைக்கும், வட நாட்டு மெல்லிசையை அப்படியே எடுத்தாளும் வர்த்தக சினிமாவின் போக்குக்கும் எதிராக அவர் இயக்கம் கொண்டு அதனாலேயே புறக்கணிக்கப்பட நேர்ந்தது கூடுதலான சமூகப் பரிமாணங்கள் கொண்டது.

சுந்தராம்பாள் நாடக மேடைகளிலும் சினிமாப் படங்களிலும் தனியாகவும் பாடிய 200க்கு மேற்பட்ட பாடல்கள் இசைத் தட்டுகளாக வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடலையும் “தனித்திருந்து வாழும் தவமணியே” என்ற பாடலையும் காலத்தால் அழியாவண்ணம் அற்புதமாகப் பாடியுள்ளார், கே.பி.எஸ்.

தேசியவாதியான கே.பி.எஸ். பண்டித நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபோது “பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே” என்ற பாடலையும், கஸ்தூரிபாய் கால மானபோது “உன்னை மறந்திடப்போமா” என்ற பாடலையும், காந்தி மறைந்தபோது “உத்தமராம் காந்தியை” என்ற பாடலையும் தனி இசைத்தட்டாக உள்ளம் உருகப் பாடினார்.

மகாத்மா காந்தியை சுந்தராம்பாள் இரண்டு முறை சந்தித்து இருக்கிறார். 1937ல் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டில் உணவருந்தினார். மகாத்மாவுக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பறிமாறினார் கே.பி.எஸ். “எனக்குச் சாப்பாடு மட்டும்தானா? தட்டு கிடையாதா?” என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்க, விருந்து முடிந்ததும் தங்கத்தட்டை காந்தியிடம் வழங்கினார் கே.பி.எஸ். காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்துவிட்டார்.

1958ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்_சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கி கவுரவித்தது. தருமபுரம் ஆதினம் “ஏழிசை வல்லபி” என்ற பட்டத்தையும், தமிழிசைச் சங்கம் “இசைப் பேரறிஞர்” பட்டத்தையும் வழங்கின.


அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு அதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் இல்லாத ரூ. 1 லட்சம் தந்தார்.







“அவ்வையே நீ கூறும் சமாதானத்தை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அம்மையப்பனிடம் இருந்து ஒரு பழத்தைப்பெற எனக்கு அருகதை இல்லையா? எனக்கு அந்தப்பழம் தரக்கூடாதா?’ என்று முருகன் கேட்ட அடுத்த நொடியே... ‘பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா...” என்று அவ்வையார் பெருங்குரல் எடுத்து பாட...  அந்தப் பாடலை கேட்பவர்கள் தன்னையறியாமல் இருந்த இடத்தையே பழநி மலையாக நினைத்து உருகுவார்கள். கே.பி.சுந்தராம்பாள் பாடுவதை கேட்கும்போது, ஏதோ அந்த அவ்வையாரே வந்து பாடுவதுபோல் இருக்கும். இப்படி குரலில் கம்பீரத்தையும் தெய்வீகத்தையும் ஒருங்கேபெற்ற  கே.பி.சுந்தரம்பாள் இதேநாளில்தான் (அக்டோபர் 10) பிறந்தார். 

அவரைப்பற்றி 5.8.1965 ஆனந்த விகடன் இதழில் வந்த கட்டுரையில் இருந்து...

குழந்தைகளே! ஆற்றுக்குப் போகலாம் வாருங்கள்'' என்று அழைத்தாள் தாயார். தாயைப் பின்தொடர்ந்து சென்ற அந்தக் குழந்தைகள் மூவரும் (இரு பெண்கள், ஒரு சிறுவன்) ''எதற்கம்மா எங்களை ஆற்றுக்குக் கூப்பிடுகிறாய், குளிப்பதற்கா?'' என்று கேட்டபோது, அந்தத் தாய் துக்கம் தாங்காமல் ''என் அருமைச் செல்வங்களே! உங்கள் பசித்த வயிற்றுக்குச் சோறு போட இந்தப் பாழும் ஜன்மத்துக்கு ஒரு வழியும் இல்லை. வறுமையின் கொடுமையை என்னால் தாங்கவும் முடியவில்லை. உங்கள் மூவரையும் ஆற்று வெள்ளத்திலே தள்ளிவிட்டு, நானும் உங்களுடன் உயிரை விட்டுவிடப் போகிறேன்'' என்று கதறிவிட்டாள்.

அதைக் கேட்ட அந்தப் பெண் குழந்தைகளில் ஒருத்தி, அம்மாவைத் தடுத்து, மனம் மாற்றி, வீட்டுக்குத் திருப்பி அழைத்து வந்துவிட்டாள்.
வறுமையின் கொடுமை தாங்காது கொடுமுடியை விட்டுக் கரூருக்குப் புறப்பட்டுச் சென்ற அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யாரோ ஒரு புண்ணியவான் ஏற்றுக்கொண்டார்.

அம்மாவைத் தடுத்து அழைத்து வந்த அந்தச் சிறுமி, ஒரு நாள் கரூர் வீதியில் நின்றுகொண்டு இருந்தபோது, அந்த வழியாகச் சென்ற டெபுடி போலீஸ் சூப்பரின்டென்டெண்ட் ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி அய்யருக்கு என்ன தோன்றியதோ, அந்தச் சிறுமியைப் பார்த்து, ''டிராமாவில் சேர்ந்து நடிக்கிறாயா, கண்ணு?'' என்று கேட்டார். அந்தச் சிறுமி மகிழ்ச்சியோடு தலையை அசைத்ததும், அவளை வேல் நாயர் நாடகக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். எட்டு வயது நிரம்பாத அந்தப் பெண்ணுக்கு அங்கே கிடைத்த வேஷம் என்ன தெரியுமா? நல்லதங்காள் நாடகத்தில் கிணற்றில் தள்ளப்படும் குழந்தைகளிலே ஒருத்தி!

பிற்காலத்தில் 'லட்ச ரூபாய் நட்சத்திரம்' என்று புகழப்பெற்ற திருமதி கே.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கை நாடகம் இப்படித்தான் ஆரம்பமாயிற்று!

கம்பெனி நாடகங்களிலும், ஸ்பெஷல் நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்த இவர், 1927-ம் ஆண்டில் இலங்கை சென்றபோது, அங்கே எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் இரண்டு ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க அழைக்கப்பட்டார்.''என்னுடைய ஸ்வாமியை (கிட்டப்பா) நான் முதன்முதல் சந்தித்தது இலங்கையில்தான். அதற்குப் பிறகு அவருடன் சேர்ந்து வாழும் பேறு எனக்கு ஆறே ஆண்டு காலம்தான் கிட்டியது. 1933-ல் அவர் காலமாகிவிட்டார். அன்று முதல் இன்றுவரை நான் பால் சாப்பிடுவதில்லை. சோடா, கலர் குடிப்பதில்லை. புஷ்டியான ஆகாரங்கள் சாப்பிடுவதில்லை. அமாவாசைதோறும் காவேரி ஸ்நானம் செய்யத் தவறுவதில்லை. இந்த 32 ஆண்டுகளில் ஒரு சில அமாவாசைகளே காவேரி ஸ்நானம் இல்லாமல் விட்டுப் போயிருக்கின்றன'' என்கிறார்.


பல படங்கள், பல பாடல்கள், பல விருதுகளைப்பெற்ற கே.பி.சுந்தராம்பாள், 1980ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி காலமானார். 






நடிப்பால் புகழ் பெற்றதைவிட, குரலால் புகழ் பெற்றவர் கே.பி.சுந்தராம்பாள். died sept 24,1980

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் நம் மனதில் நிற்பவர் சிவாஜி கணேசன், அதுபோல ஒளவையார் என்றால் நம் மனதில் நிற்பவர் கே.பி.சுந்தராம்பாள். தமிழ் சினிமாவில் நடிப்பால் புகழ் பெற்றதைவிட, குரலால் புகழ் பெற்றவர் கே.பி.சுந்தராம்பாள். கோயம்புத்தூர் மாவட்டம்(இப்போதைய ஈரோடு மாவட்டம்) கொடுமுடியில் 11.10.1908 இல் பாலாம்பாளின் புதல்வியாக பிறந்தார் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (கொ.பா.சுந்தராம்பாள் ஓ.ட.சுந்தராம்பாள்). சுந்தராம்பாள் தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். அப்பொழுது இவர் குடும்பம் வறுமையில் தவித்தது. அதனால் இவரால் நான்காம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள். சுந்தராம்பாளையும் அவரது தம்பிகள் மூவரையும் தங்கை ஒருவரையும் அவரது தாயார் பாலாம்பாளையும், சுந்தராம்பாளின் தாய்மாமன் மலைக்கொழுந்து கவுண்டர் ஆதரித்து வந்தார். சுந்தராம்பாள் நாடக உலகில் புகழ்பெற்று நடித்துக் கொண்டிருந்த போது, இந்த தாய்மாமன்தான் சுந்தராம்பாளுக்கு உதவியாளராக இருந்தார். சுந்தராம்பாளுடன் அவரது பாட்டி செளந்தராம்பாளும் வசித்ததுடன், சுந்தராம்பாள் நாடகத்திற்காக வெளியூர் செல்லும் போது அவருடன் துணையாக செல்வார். ஐந்து வயதிலேயே இவருடைய குரலும் பாடக்கூடிய திறமையும் இவரின் ஊரில் பரவியிருந்தது. அதனால் ஊர் மக்கள் கோவில் வைபவங்களில் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்பளித்தனர். இவரின் பத்தாவது வயதில் வேலு நாயர் நாடக கம்பெனியில் நடித்தார். கே.பி.எஸ். நாடகத்தில் ஆண்வேடங்களில் (ராஜபார்ட்) நடிக்கும் போது பல பிரபல நாடக நடிகைகள் இவருக்கு ஜோடியாக (ஸ்திரீ பார்ட்டில்) நடிப்பார்கள். அப்படி நடித்தவர்களில் ஒருவர்தான் தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகியான டி.பி.ராஜலக்ஷ்மி. சுந்தராம்பாள் பின்பு நாடகங்களில் பெண் வேடங்களிலேயே நடித்தபோது, இவருடன் நடித்த நடிகர்கள் இவருடைய நடிப்புக்கும் குறிப்பாக குரலுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் இரண்டு மூன்று நாட்களிலேயே சொல்லாமல் கொள்ளாமல் ஒடிவிடுவார்களாம். இவருக்கு ஈடுகோடுக்கும்படி கிட்டினார் கிட்டப்பா. சுந்தராம்பாள் கிட்டப்பா ஜோடி இலங்கையில் நடந்த நாடகங்களில் பிரபலமானார்கள். நாடகத்தில் இணைந்த சுந்தராம்பாளை, கிட்டப்பா தனது வாழ்க்கையிலும் இணைத்துக் கொண்டார், இளையதாரமாக. 1927இல் இருவரும் மாயவரத்தில் மாலை மாற்றி கலப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். 1928 இல் இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே இறந்து விட்டது. 1934 இல் கிட்டப்பா இறந்து விட்டார். கிட்டப்பாவை இவர் மணந்து 7 ஆண்டுகளில் இறந்தாலும், கிட்டப்பாவுடன் கே.பி.எஸ். வாழ்ந்தது 3 ஆண்டுகள்தான். 27 வயதில் விதவையான இந்த காவிய காதலி தன்வாழ்நாள் முழுதும் ஒரு தூய துறவிபோல் வாழ்ந்து வந்தார். சினிமா நாடகங்களில் நடித்ததுடன் கோவில்களில் பாடினார், தேசத்திற்காக பாடினார், இசைத் தட்டில் பாடினார். கே.பி.எஸ். ஆல் கட்டப்பட்டு எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்ட கே.பி.எஸ். திரையரங்கம் இன்றும் இவரின் உறவினர்களால் கொடுமுடியில் நிர்வகித்து வரப்படுகிறது. கே.பி.எஸ். போலவே டி.ஆர்.ராஜகுமாரி, சிவாஜி, நாகேஷ் ஆகியோரும் திரையரங்க உரிமையாளர்கள் என்பதை இங்கு நினைவு கொள்வோம். துணைவன் படத்தில் பாடியதற்காக 1969 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகி விருதை மத்திய அரசு இவருக்கு அளித்தது. ஏழிசை வல்லபி என்று போற்றப்பட்டவர் இவர். தமிழக அரசின் மேல் சபையில் எம்.எல்.சி. பதவியும் வகித்தார். தீரர் சத்தியமூர்த்தியை கே.பி.எஸ். தன் உடன்பிறவா அண்ணாராக மதித்துவந்தார். தீரர் வாடகை வீட்டிலிருந்த நிலையைக் கண்டு வருந்தினார் கே.பி.எஸ். அதனால் சென்னை தியாகராய நகர் இந்தி பிரச்சார சபாவுக்கு முன்புறம் இருந்த தனது நாலரை கிரவுண்ட் மனையை தீரர் பெயரில் எழுதி வைத்தார் கே.பி.எஸ். ஒளவையார் படம் பார்த்தவுடன் சுந்தராம்பாளை சந்தித்துப் பாராட்டினார் இந்திப் பாடகி லதா மங்கேஷ்கர். கே.பி.சுந்தராம்பாள் நடித்த படங்கள் கே.பி.சுந்தராம்பாள் நடித்த 13 படங்களில் ஞாயிறும் திங்களும் என்ற படம் மட்டும் திரைக்கு வரவில்லை. இந்த ஒரு படம் போக 12 படங்களில் இவர் நடித்துள்ளார். 1935 இல் நந்தனார் படத்தில் நடித்த பின்பு 5 ஆண்டுகள் கழித்து, பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை என்ற படத்தில் நடித்தார். அடுத்து 13 ஆண்டுகள் இடைவெளி விட்டு ஒளவையார் படத்தில் நடித்தார். அடுத்தும் 10 ஆண்டுகள் கழித்து பூம்புகார் படத்தில் நடித்தார். இவர் நடித்த படங்களில் ஒளவையார், திருவிளையாடல் ஆகிய 2 படங்களும் 175 தினங்களுக்கு திரையிடப்பட்டு வெற்றிப் படங்களாயின. கந்தன் கருணை, துணைவன் ஆகிய இரு படங்களும் 100 தினங்களுக்கு திரையிடப்பட்டு வெற்றிப் படங்களாயின. இவர் நடித்த 12 படங்களில் திருவிளையாடல், கந்தன் கருணை, திருமலை தெய்வம், சக்தி லீலை, காரைக்காலம்மையார் ஆகிய 5 படங்கள் வண்ணப் படங்கள். துணைவன் படத்தின் கடைசிக் காட்சிகள் வண்ணத்தில் உள்ளது. மீதி நந்தனார், பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை, ஒளவையார், பூம்புகார், மகாகவி காளிதாஸ், உயிர்மேல் ஆசை - ஆகிய 6 படங்களும் கருப்பு வெள்ளை படங்கள். துணைவன், உயிர்மேல் ஆசை ஆகிய இரு படங்களும் சமூக கதையைக் கொண்ட படங்கள். மற்ற 10 படங்களும் காவிய புராண பக்திப் படங்களாகும். ஒளவையார், திருவிளையாடல், கந்தன் கருணை ஆகிய 3 படங்களில் ஒளவையாராக நடித்துள்ளார். பக்த நந்தனார், பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை, காரைக்காலம்மையார் - ஆகிய படங்களில் முறையே படத்தின் தலைப்பு பாத்திரங்களான நந்தனார், மணிமேகலை, காரைக்காலம்மையார் ஆகிய வேடங்களில் நடித்துள்ளார். பூம்புகார் படத்தில் கெளந்தியடிகள் வேடத்திலும், மகாகவி காளிதாஸ் படத்தில் மாற்று ரூபங்கொண்ட காளிதேவியாகவும், துணைவன் படத்தில் முருக பக்தையாகவும், உயிர்மேல் ஆசை படத்தில் தாயாகவும் - இவர் நடித்துள்ளார். 1933 இல் ஒரு நந்தனார் படமும், 1942 இல் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார் படமும் திரைக்கு வந்தன. 1935 இல் கே.பி.சுந்தராம்பாள் நடித்த பக்த நந்தனார் படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் இவர் நந்தனாராக ஆண் வேடத்தில் நடித்தது விமர்சனத்திற்குள்ளானது. இவரைப் போலவே குசேலா படத்தில் எஸ்.டி.சுப்புலக்ஷ்மி கிருஷ்ணன் வேடத்திலும், சாவித்திரி படத்தில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி நாரதராகவும் ஆண் வேடங்களில் நடித்தனர். பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை படத்தில், பால வயதிலேயே சந்யாசினி ஆகிவிட்ட மணிமேகலை பாத்திரத்தில் நடித்தார் கே.பி.ஏஸ். நாயகன் உதயணனாக நடித்தவர் கொத்தமங்களம் சீனு. நாயகனின் தோழன் சொக்கனாக நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. வீரப்பா அறிமுகமானது இந்தப்படத்தின் மூலமாகத்தான். வீரப்பாவும் கே.பி.எஸ்ஸூம் (அப்பொழுதைய) ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோவில் எடுக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையைக் கொண்ட ஞாயிறும் திங்களும் படம் திரைக்கு வராத படப்பட்டியலில் இணைந்து விட்டது. முழுவதும் முடிந்த நிலையில், இப்படத்தின் சில இறுதிக் காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவில்லை. தேவிகா ஹாக்கி விளையாட்டு வீராங்கனையாக நடித்திருப்பார். இப்படத்தின் கதை தினமணிக் கதிர் இதழில் பிரசுரமாகியுள்ளது. ஞாயிறும் திங்களும் சேர்ந்தால் அமாவாசைதான் வரும். பெளர்ணமி போல் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டிய இப்படம், அமாவாசை போலாகிவிட்டது. நாயகனை (சிவாஜியை) காதலிக்கும் நாயகி (தேவிகா) ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனை. கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக நாயகி டோக்கியோ செல்கிறாள். அது சமயம் நாயகியின் பணக்கார தாய் (கே.பி.சுந்தராம்பாள்) ஏழை நாயகனை மகனாக ஸ்வீகாரம் எடுக்கிறாள். நாயகனுக்கும் தன்னை தத்து எடுப்பது நாயகியின் தாய் எனத் தெரியாது. டோக்கியோவிலிருந்து திரும்பிய நாயகி அனைத்தும் அறிந்து வேதனைப் படுகிறாள். வாழ்வை வெறுத்த நாயகி கிருத்துவ மதத் தொண்டுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறாள். இரு மலர்கள் படத்தில் பத்மினியை காதலித்த சிவாஜி விதி வசத்தால் கே.ஆர்.விஜயாவை மணப்பது போலவே, இந்தப் படத்திலும் தேவிகாவை காதலித்த சிவாஜி கே.ஆர். விஜயாவை மணக்கிறார். நாயகனின் தந்தையாக வி.கே.ராமசாமியும் நாயகனின் தங்கையை மணப்பவராக முத்துராமனும் நடித்தனர். பக்தி, சோகம், தத்துவம் அறிவுரை என்ற எல்லைகளுக்குள்ளேயே இவர் பாடிய பாடகள் அமைந்துள்ளன. இவர் பாடிய 58 பாடல்களில் (ஒரு பாடல் தவிர) அனைத்து பாடல்களையும் இவர் தனித்தே பாடியுள்ளது ஒரு சிறப்பம்சம். கே.பி.சுந்தராம்பாளின் புகழ்பெற்ற பாடல்களில் சில பொறுமையெனும் நகையணிந்து - ஒளவையார் முத்தமிழ் தெய்வமே வா- ஒளவையார் வள்ளுவர் தந்த குறள்- ஒளவையார் (ஒருவனுக்கு ஒருத்தி) வாழ்க்கை எனும் ஓடம் - பூம்புகார் (பவளமணி மாளிகையில்) தப்பித்து வந்தானம்மா -பூம்புகார் பழம் நீயப்பா தமிழ்ஞான -திருவிளையாடல் சென்றுவா மகனே -மகாகவி காளிதாஸ் கேளு பாப்பா கேளு பாப்பா - உயிர்மேல் ஆசை என்றும் புதியது - கந்தன் கருணை கூப்பிட்ட குரலுக்கு யார்வந்தது - துணைவன் (ஓடுங்கால் ஓடி) தக தகவென - காரைக்காலம்மையார் ஏழு மலையிருக்க நமக்கென்ன - திருமலை தெய்வம் இவர் இரு முதல்வர்களுடன் கலைப் பணியாற்றியுள்ளார். மு. கருணாநிதி வசனம் எழுதிய பூம்புகார் படத்தில் கே.பி.எஸ். நடித்துள்ளார். ஜெயலலிதாவுடன் கந்தன் கருணை, சக்தி லீலை ஆகிய இரு படங்களில் கே.பி.எஸ். நடித்துள்ளார். தமிழ்த் திரையின் பிரபலமான நான்கு வேந்தர்களாளில் எம்.ஜி.ஆர். தவிர, மற்ற மூன்று நாயகர்களான சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோருடன் இவர் நடித்துள்ளார். கே.பி.எஸ். பட இயக்குநர்கள் ஏ.பி.நாகராஜன் - திருவிளையாடல், கந்தன் கருணை, காரைக்காலம்மையார், திருமலை தெய்வம் கொத்தமங்கலம் சுப்பு -ஒளவையார் பொம்மன் இரானி -பாலசந்யாசினி (அல்லது) மணிமேகலை ப.நீலகண்டன் - பூம்புகார் எம்.ஏ.திருமுகம் - துணைவன் ஆர்.ஆர்.சந்திரன் - மகாகவி காளிதாஸ் ஜம்பு -உயிர்மேல் ஆசை எந்த பாடகருடனும் சேர்ந்து பாடாமல் தனித்து பாடியவர்கள் கே.பி.சுந்தராம்பாள், டி.கே.பட்டம்மாள் ஆகிய இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கே.பி.எஸ். 24.09.1980 இல் முருகனடி சேர்ந்தார்.
Image may contain: 1 person, closeup
.












.






No comments:

Post a Comment