ACTOR KANNAN DIED 2005,OCTOBER 17
actor
K.Kannan
”கவர்ச்சி வில்லன்” கண்ணன்– நாலும் தெரிந்தவன், உழைக்கும் கரங்கள், உயிரா மானமா, நீ, சக்தி லீலை, கடல் மீன்கள், மீனவ நண்பன், தேடி வந்த லெட்சுமி, கியாஸ் லைட் மங்கம்மா, ராஜநாகம், இதயக்கனி, அருணோதயம், என்ன தான் முடிவு, பிராயச்சித்தம், பாக்தாத் திருடன், நல்ல பெண்மணி உட்பட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர்.
இறுதிக்காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். இவர் அதிமுக-வில் உறுப்பினராகவும் மேடைப்பேச்சாளராகவும் இருந்தார். அருப்புக்கோட்டையில் மேடையில் உரையாற்றிகொண்டிருந்த போது மயங்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிட்சைப் பலனின்றி 17.10.2005 அன்று இவர் தனது 70-ஆவது வயதில் காலமானார்.
இவர் நடித்த மேலும் சில படங்கள்:
மங்கையர் திலகம் [1955], செங்கமலத்தீவு [1962], பணமா பாசமா [1968], மாங்குடி மைனர் [1978], மக்கள் என் பக்கம் [1987], கண் கண்ட தெய்வம் [1967], சமயபுரத்தாளே சாட்சி [1983], நான் மகான் அல்ல [1984], பானை பிடித்தவள் பாக்கியசாலி [1958],சங்கே முழங்கு [1972], ஞானக்குழந்தை [1979], துணிவே தோழன் [1980], தனிக்காட்டு ராஜா [1983], அக்கா [1974], பட்டணத்து ராஜாக்கள் [1982], நாளை நமதே [1975], நீதியின் மறுபக்கம் [1985]





Comments
Post a Comment