Wednesday 30 October 2019

V.SHANTARAM ,ACTOR,DIRECTOR AND PIONEER OF INDIAN CINEMA BORN NOVEMBER 18,1901 - OCTOBER 30,1990







V.SHANTARAM ,ACTOR,DIRECTOR AND 
PIONEER OF INDIAN CINEMA BORN 
NOVEMBER 18,1901 - OCTOBER 30,1990





வி. சாந்தாராம் (V. Shantaram / Shantaram Rajaram Vankudre / சாந்தாராம் ராஜாராம் வணகுத்ரே நவம்பர் 18, 1901 – அக்டோபர் 30, 1990) இந்தியத் திரைப்பட்ட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமாவார்[2]. 'ஜனக் ஜனக் பாயல் பாஜே' என்ற இந்தியாவின் முதல் டெக்னிக் கலர் படத்தை இயக்கியவர் இவர்.

பிறப்பு மற்றும் திருமணம்
மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் 1901-ல் பிறந்தார். இவரின் முதல் மனைவி நடிகை ஜெயஸ்ரீயை மணந்தார். பின் அவருடன் மனக்கசப்பு ஏற்படவே அவர்களின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. பின் ஜனக் ஜனக் பாயல் பாஜே திரைப்படத்தின் கதாநாயகியான சந்தியாவை மறுமணம் செய்துகொண்டார்.

இவரது மகள் ராஜ்யஸ்ரீ ஆவார். இவரும் மிக பெரிய நடிகையாவார். காதல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்.

வெற்றிப் படங்கள்
கோட்னீஸ் என்ற படம் இவருக்கு பேரும் புகழும் சம்பாதித்து கொடுத்தது. இதில் இவர் கதாநாயகனாகவும் நடித்தார். பின் சாந்தாராமுக்கு அகில இந்திய அளவில் புகழை சேர்த்த படங்கள் பர்சாயின், ஆத்மி, சகுந்தலா, தஹேஜ், படோசி, சந்திரசேனா, அமிர்தமந்தன் போன்ற படங்களாகும். 'தோ ஆங்கேன் பாரஹாத்' எனும் இந்தி படம் பல விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது. 'தீன் பத்தி சார் ரஸ்தா' என்ற இவரது படம் பெரும் வெற்றி கண்டது.[3]

இறப்பு

அக்டோபர் 30, 1990 இல் மும்பையில் இறந்தார்.


இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட கலைஞன்,வி.சாந்தாராம் . இந்தியாவில் சினிமா எடுக்க ஆரம்பித்த காலத்தில், ஆண்களே பெண் வேடமிட்டு நடித்துவந்தனர். ஆனால் அதை உடைத்து, பெண் கதாபாத்திரங்களில் பெண்களையே நடிக்க வைத்தார். மெளனப்படக் காலத்திலேயே படங்களை இயக்கத் தொடங்கினார். இந்தி, மராத்தி மற்றும் தமிழிலும் படங்களை எடுத்துள்ளார். 1936-ல் இவர் இயக்கிய 'அமர் ஜோதி' என்ற திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சமூகக் கருத்துகளை திரைப்படங்களின் வழியே கூறியவர். பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைக்கும் பெண்களின் வாழ்க்கை, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, வயதானவர்கள் இயம் பெண்களைத் திருமணம் செய்தால் பெண்கள் அவர்களை விவாகரத்துசெய்தல் போன்றவற்றைத் தன் படங்களின் வழியே கூறினார். 'ஜனக் ஜனக் பாயல் பாஜே' என்ற இந்தியாவின் முதல் கலர் படத்தை எடுத்ததும் சாந்தாராம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1957-ல் அவர் இயக்கிய, `தோ ஆன்கி பாரா ஹாத்' என்ற திரைப்படத்துக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் 'வெள்ளிக் கரடி' விருது பெற்றது. இவரது திரைத்துறை சேவையைப் பாராட்டி, இந்திய அரசு பத்ம விபூஷணும், தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கி கெளரவித்துள்ளது. கலை எப்போதும் சமூக அவலங்களிலிருந்து மக்களை மீட்டெடுத்து மேம்படுத்தும். அத்தகைய கலையை மிகுந்த பொறுப்புடன் கையாண்டு மக்களிடம் சேர்த்த மகத்தான கலைஞர் வி.சாந்தாராம்.

‘‘படங்களை இயக்குவதற்கு என் மானசீக குருவாகத் திகழ்ந்தவர் வி.சாந்தாராம்’’ என்று புகழாரம் சூட்டிய எம்.ஜி.ஆர்., அவர் காலில் விழுந்து வணங்கினார் என்றால், சாந்தாராம் எப்படிப்பட்ட மாமனிதராக இருக்க வேண்டும்!

தமிழ் நாட்டில் டைரக்ஷனில் புதுமையைப் புகுத்திய ஸ்ரீதர், கே.பாலசந்தர் உள்பட பல டைரக்டர்களும், வடநாட்டில் உள்ள பல பிரபல டைரக்டர்களும் கூட, சாந்தாராமை தங்கள் வழி காட்டியாகக் கொண்டிருந்தனர்.

சாந்தாராம், ஒரு பிறவி மேதை. ஊமைப்பட காலத்திலேயே சினிமா துறையில் நுழைந்தார். 1920–ம் ஆண்டில் இருந்து 70 ஆண்டுகாலம் கொடிகட்டிப் பறந்தார். இந்தியப் படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.

சரித்திர நாயகர்

சாந்தாராம் வாழ்க்கை ஒரு ‘‘சரித்திரம்’’ என்றும், ‘‘சகாப்தம்’’ என்றும் சொல்லலாம்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் ஓர், எளிய குடும்பத்தில் 1901–ம் ஆண்டு நவம்பர் 18–ந் தேதி சாந்தாராம் பிறந்தார். தந்தை பெயர் வன்குந்தரே. தந்தை சமண (ஜெயின்) மதத்தை சேர்ந்தவர். தாய் இந்து.

சாந்தாராம் இளைஞராக இருந்தபோது 1918–ம் ஆண்டு கர்நாடகாவிலுள்ள ஊப்ளியில் ஒரு சிறிய தொழிற்சாலையில் அடித்தளப் பணியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்பு, நல்ல வேலை தேடி மும்பை பயணமானார். ஒருவழியாக வடஇந்தியாவில் செயல்பட்டு வந்த பாலகந்தர்வ நாடகக் கம்பெனியில், நாடக நடிகராக சேர்ந்தார். நாடக அனுபவத்தைக் கொண்டு 1920–ம் ஆண்டில், பாபுராவ் மகாராஷ்டிரா பிலிம் கம்பெனியில் பல ஊமைப் படங்களில் நடித்தார். பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடிப்பில் தன்னைப் பக்குவப் படுத்திக் கொண்டார்.

பிறகு படிப்படியாக உயர்ந்து, கதாநாயகன் அந்தஸ்தை பெற்றார். 1925–ம் ஆண்டில் மகாராஷ்டிரா பிலிம் கம்பெனி தயாரித்த ‘சவுகரிபாஸ்’ என்ற கலைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்தார். ஒரு ஏழை இளைஞன் வட்டிக்காரனிடம் சிக்கித் தவிப்பதே, இப்படத்தின் கதை. ‘சவுகரிபாஸ்’ தான் இந்தியாவின் முதல் கலைப்படமாகக் கருதப்படுகிறது. மேலும் இது இந்தியாவின் முதல் ‘நியோ– ரியலிஸம்’ (இயற்கை நடிப்பைக் கொண்ட) படமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே திரைப்படங்களில் ‘நியோ– ரியலிஸ’த்தை புகுத்தியவர் என்ற பெருமைக்குரியவராகிறார்.

இதன்பின்பு மகாராஷ்டிரா பிலிம் கம்பெனியிலிருந்து விலகி தாம்லே, பதேலால் என்ற திறமைமிக்க தன் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து 1929–ம் ஆண்டில் கோலாப்பூரில் ‘‘பிரபாத் பிலிம் கம்பெனி’’ என்ற புதிய திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினார்.

மராத்தி, இந்தி மொழிகளில் பிரபாத் கம்பெனி, திரைப்படங்களை எடுக்க ஆரம்பித்தது. பின்னர் தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை புனாவுக்கு மாற்றி அங்கேயே கட்டிடம் கட்டி பிரபாத் ஸ்டூடியோவை நிர்மாணித்தனர். பிரபாத் ஸ்டூடியோஸ் அரங்கங்களில் பல்வேறு படப்பிடிப்புக்கள் தொடங்கின.

புனா பிலிம் இன்ஸ்டிடியூட் எனப்படும் புனா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிலையம் இன்று அங்குதான் இயங்கிவருகிறது என்பது ஒரு சிறப்புச் செய்தி.

தமிழ்ப்படம்

இந்தியில் பேசும் படங்கள் வரத் தொடங்கிய 1931–ம் ஆண்டிலேயே, முதல் தமிழ்ப்படம் (காளிதாஸ்) வெளிவந்தது. தமிழ்ப்படங்களும் அகில இந்திய கவனத்தைக் கவர்ந்தன.

எனவே, தமிழ்ப்படத் தயாரிப்பிலும் பிரபாத் கம்பெனி ஈடுபட்டது. 1934–ம் ஆண்டு தொடக்கத்தில் பிரபாத் படக் கம்பெனி தயாரித்த தமிழ்ப் படத்தின் பெயர் ‘‘சீதா கல்யாணம்’’.

பிற்காலத்தில் சினிமா நடிகராகவும், டைரக்டராகவும், வீணை வித்வானாகவும் புகழ்பெற்ற எஸ்.பாலசந்தரின் குடும்பமே இதில் நடித்தது.


பாலசந்தரின் தந்தை பெயர் சுந்தரம் அய்யர். இவர் புகழ்பெற்ற வக்கீல். ஆயினும் பொழுது போக்காக சினிமாவில் நடித்து வந்தார். அவர் ‘‘சீதா கல்யாண’’த்தில், தசரத சக்கரவர்த்தியாக நடித்தார். அவருடைய மூத்தமகன் எஸ்.ராஜம் ராமராகவும், மகள் ஜெயலட்சுமி சீதையாகவும் நடித்தனர். (பிற்காலத்தில் பட்சிராஜா தயாரித்து எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘‘சிவகவி’’யில், ஜெயலட்சுமி பாகவதரின் மனைவியாகவும், ராஜம் வேடன் வேடத்தில் முருகனாகவும், சுந்தரம் அய்யர் குருகுல ஆசிரியராகவும் நடித்தனர்).

‘‘சீதா கல்யாணம்’’ படம் தயாரான போது எஸ்.பாலசந்தர் சின்னப் பையன். எனவே, ராஜசபையில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக நடித்து, சாந்தாராமின் பாராட்டைப் பெற்று, தபேலா ஒன்றை அவரிடம் பரிசாகப் பெற்றார்.

இந்தப் படத்தை சாந்தாராம் டைரக்ட் செய்யவில்லை. தயாரிப்பை மட்டும் கவனித்தார். படத்தை பாபுராவ் பண்டர்கர் டைரக்ட் செய்தார். வசனம் எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர். பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களுக்கு ஏ.என். கல்யாணசுந்தரம் இசை அமைத்தார். 24–2–1934–ல் வெளிவந்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது. பிரபாத் கம்பெனி வேறு சில படங்களையும் தயாரித்தது.

பிரபாத் பிலிம் கம்பெனியில் சாந்தாராமைப் பொருத்தமட்டில் நிலை என்ன? சாந்தாராம் மகாராஷ்டிரா பிலிம் கம்பெனியில் இருந்தபோது ‘நேதாஜு பால்கர்’ என்ற ஊமைப்படத்தை இயக்கிய முன் அனுபவம் இருந்தது. அதைக்கொண்டு 1934–ம் ஆண்டு ‘அம்ரித் மந்தன்’ என்ற திரைப்  படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

இந்த வெற்றியின் உந்துதலால் 1925–ம் ஆண்டில் தான் கதாநாயகனாக நடித்த ஊமைப்படமான ‘சவுகாரி பாஸ்’ படத்தையே பேசும்படமாக 1936–ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டார். ஆனால் இப்படத்தில் அவர் நடிக்கவில்லை. இயக்குனராக மட்டும் பணியாற்றினார்.

அதே ஆண்டில் ‘அமர்ஜோதி’ என்ற படத்தையும் இயக்கினார். இப்படம் மகத்தான வெற்றிபெற்றது. இதில் நடித்த துர்கா கோட்டே, சாந்தே ஆப்தே, சந்திரமோகன் ஆகியோர் பெரும் புகழ்பெற்றனர்.

சாந்தாராமின் திரைப்படமான ‘துனியா நமானே’ பிரபாத் ஸ்டூடியோவின் புகழ்க்கொடியை உயர்த்திப் பிடித்தது. 1930–களில் சமூக வழக்கப்படி பெண்கள் வீட்டுக்குள் அடைந்தபடியே வாழவேண்டும் என்பது வழக்கு. இப்படத்தில் மனைவியை இழந்த ஒருவர், வளர்ந்த பிள்ளைகளுக்குத் தந்தையான முதியவர், ஒரு இளம் பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்கிறார். வெகுண்ட அந்த இளம்பெண் தன் வயோதிக கணவனோடு வாழ விரும்பவில்லை. ‘‘எந்தக் கஷ்டத்தையும் தாங்கத் தயார். ஆனால் ஒருக்காலும் அநியாயத்திற்கு உடன்படமாட்டேன்’’ என்று சூளுரைக்கிறாள்.

தன் தவறை உணர்ந்த கிழவன், தற்கொலை செய்து கொள்கிறான்.

மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கிப்போன சமூகம், விதவை விவாகரத்தை அனுமதிக்காத காலம் அது. இளம் பெண் வயோதிகனுடன் வாழ்வதைவிட விதவையாக வாழ்வது மேல் என்ற கருத்துடன் படம் முடிகிறது.

கண் மூடித்தனமாக சம்பிரதாயங்களை திணிக்கும் மூடர்களை படம் சாடியது. சாந்தாராமின் இயக்கம் படம் முழுவதும் பளிச்சிட்டது.

1939–ம் ஆண்டில் ‘ஆத்மி’, ‘படோசி’ போன்ற கிளாசிக் திரைப்படங்கள் பிரபாத் டாக்கீஸ் தயாரிப்பாக வெளிவந்தன. பின்னர் புனாவில் பிரபாத் பிலிம் ஸ்டூடியோவை மூடிவிட்டு, 1939–ம் ஆண்டு சாந்தாராம் மும்பை நகரில் ‘ராஜ்கமல் கலாமந்திர்’ என்ற பெயரில் ஒரு ஸ்டூடியோவையும், ‘சாந்தாராம் புரடெக்ஷன்ஸ்’ என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி செயல்பட ஆரம்பித்தார்.

ராஜ்கமல் ஸ்டூடியோவில் அவர் முதலாவதாக இயக்கிய படம் ‘‘சகுந்தலா’’. இதில் ஜெயஸ்ரீ கதாநாயகியாகவும், சந்திரமோகன் கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். படம் 1943–ல் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.

டாக்டர் கோட்னீஸ்

1946–ம் ஆண்டு சாந்தாராம் கதாநாயகனாக நடித்து இயக்கிய படம் ‘‘டாக்டர் கோட்னீஸ் அமர் கஹானி’’. இது, உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

சீனாவுக்கும், ஜப்பானுக்கும் நடந்த போரின் போது, காயமுற்ற சீனர்களுக்கு சிகிச்சை செய்ய இந்தியாவில் இருந்து பல டாக்டர்கள் சென்றனர். அவர்களில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கோட்னீஸ் என்ற இளம் டாக்டரும் ஒருவர்.

அவருக்கு உதவியாக கிங்யாங் என்ற சீன நர்ஸ் (ஜெயஸ்ரீ) பணி புரிகிறாள். இருவருடைய நட்பு, காதலாக மலர்கிறது. திருமணம் செய்து கொள்கிறார்கள்.

போர் முடிவில், சீனப் படைகள் தப்பி ஓடி, ஒரு பள்ளத்தாக்கில் தங்குகின்றனர். அங்கு, இனம் தெரியாத தொற்று நோய் பரவுகிறது. டாக்டர் கோட்னீஸ் சிரமப்பட்டு அந்த நோய்க்கு மருந்து தயாரித்து, பலரை குணப்படுத்துகிறார். ஆனால், இறுதியில் அந்த தொற்று நோய் கோட்னீசையும் தாக்குகிறது. சிகிச்சை பலன் இன்றி, மரணம் நெருங்கும் தருணத்தில், தன் கர்ப்பிணி மனைவியை அழைத்து, இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் தன் தாய் பற்றியும், குடும்பம் பற்றியும் கூறுகிறார்.

‘‘நீ நம் குழந்தையுடன் இந்தியாவுக்கு செல். நம் கிராமத்துக்கு போ. ரெயில் நிலையத்திற்கு வெளியே ஒரு மாட்டு வண்டியுடன் பெரியவர் ஒருவர் இருப்பார். அவரிடம் என் பெயரைச் சொன்னால், நம் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கு என் தாயாரைப் பார். அவர் உன்னையும், நம் குழந்தையையும் ஏற்றுக் கொள்வார்’’ என்று கூறியபடி உயிர் துறப்பார்.

இந்த இறுதிக் காட்சியை மவுனமாகவே படமாக்கி இருப்பார். சாந்தாராம். பார்ப்பவர்கள் கண்கலங்கி விடுவார்கள்.

இந்தப்படம் இந்தியாவிலும், சீனாவிலும் படமாக்கப்பட்டது. இந்தியில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் படத்தை வெளியிட்டார், சாந்தாராம்.

நம் நாடு

சாந்தாராமின் பார்வை மீண்டும் தமிழ்நாட்டை நோக்கித் திரும்பியது. 1949–ல் ‘அப்னா தேஷ்’ என்ற படத்தை இந்தியில் தயாரித்து இயக்கினார், சாந்தாராம். கள்ளமார்க்கெட்டைக் கண்டித்தும், தேச பக்தியை தூண்டும் விதத்திலும் தயாரிக்கப்பட்ட இப்படத்தில், புதுமுகம் புஷ்பா ஹன்ஸ் கதாநாயகியாகவும், சதீஷ் கதாநாயகனாகவும் நடித்தனர்.

இந்தப்படத்தை ‘‘நம் நாடு’’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து தமிழில் வெளியிட்டார். படத்தில் எம்.எல்.வசந்தகுமாரி பின்னணியில் பாடியிருந்தார். ‘‘நமது நாடு, நமது நாடு நம் நாடே’’, ‘‘ஜெய்ஹிந்த் என்று சொல்வோமே’’ என்ற பாடல்கள் இனிமையாக ஒலித்தன. இந்தப்படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது.

1950–ம் ஆண்டில் சாந்தாராம் இயக்கத்தில் வந்த ‘‘தஹேஜ்’’ (வரதட்சணை) என்ற படம் மகத்தானது. ஜெயஸ்ரீ–கரன்திவான் இணைந்து நடித்த இந்தப்படத்தில், ஜெயஸ்ரீயின் தந்தையாக பழம்பெரும் நடிகர் பிருத்விராஜ்  கபூர் (ராஜ்கபூரின் தந்தை) நடித்திருந்தார்.

மகளை வாழவைக்க முடியாமலும், வரதட்சணை கொடுக்க முடியாமலும், கவுரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் தத்தளிக்கும் மனக் கொந்தளிப்பை, தன் பண்பட்ட நடிப்பால் அற்புதமாக சித்தரித்திருந்தார்.


உயிருக்குப் போராடும் கணவனைப் பார்க்கத் துடிக்கும் மகள் ஜெயஸ்ரீயை, ஜமீன் வழக்கப்படி பல்லக்கில் தான் தூக்கிச் செல்லவேண்டும். வீட்டில் இருப்பதோ, ஒரே வேலையாள். ஜெயஸ்ரீ பல்லக்கில் ஏறியதும், முன்னால் வேலைக்காரனும், பின்னால் பிருதிவிராஜ் கபூரும் பல்லக்கை தூக்கிச் செல்கின்றனர். பல்லக்கை தூக்கி வருபவர், வயது முதிர்ந்த தன் தந்தை என்பதை அறியாத ஜெயஸ்ரீ, விரைந்து செல்லுமாறு அழுகிறாள். பிருதிவிராஜ் கபூர், வேகமாக கிளம்பி பிறகு தள்ளாடுகிறார். மகளின் கண்ணீரால் தூண்டப்பட்டு, காலணிகள் கழன்று விழ, வெயில் சுட்டெரிக்க, வியர்வை ஆறாகப் பெருக, கண்கள் பஞ்சடைய இதையெல்லாம் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு மகளை கணவன் வீட்டில் கொண்டு போய் சேர்க்கும் காட்சி, காண்போரின் உள்ளத்தை உருக்கி, கண்ணீரை வரச் செய்தது.

இதே கதையை, 1958–ம் ஆண்டில் ‘‘பொம்மைக் கல்யாணம்’’ என்ற பெயரில் அருணா பிலிம்சார் தயாரித்தனர். மகளாக ஜமுனாவும், தந்தையாக எஸ்.வி.ரங்காராவும் நடித்தனர்.

இந்தியில் பிருதிவிராஜ் கபூர் நடித்ததற்கு இணையாக எஸ்.வி.ரங்காராவும் சிறப்பாக நடித்தார்.

அமர்பூபலி (1952), பர்சாயின் (1953), தீன் பத்தி சார் ரஸ்தா (1954) என்று வரிசையாக வந்த புதுமையான புரட்சிகரமான படங்கள் சாந்தாராமுக்கு மேலும் புகழ்தேடித் தந்தன.

தீன் பத்தி சார் ரஸ்தா (மூன்று விளக்குகளும், நாற்சந்தியும்) கதை மிகவும் புதுமையானது. ஒரு வீட்டில் நாலைந்து மருமகள்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமொழி பேசுபவர்கள். அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படும். அவர்களை வேலைக்காரி (சந்தியா) சமரசம் செய்து வைப்பாள். காரணம் அவளுக்கு அத்தனை மொழிகளும் தெரியும்!

இந்தப் படத்தில், மும்பையை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் தமிழ்ப்பெண்ணாக நடித்தார். பரத நாட்டியம் ஆடியதுடன் ஒரு தமிழ்ப் பாட்டையும் பாடினார்.

ஜனக் ஜனக் பாயல் பாஜே

1955–ம் ஆண்டு சாந்தாராம் வாழ்க்கையில் மட்டுமல்ல, இந்திய சினிமாப்பட வரலாற்றிலும் முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டுதான், முழுவதும் நடனங்கள் நிறைந்த உன்னதமான கலைப்படைப்பான ‘‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’’ என்ற டெக்னிக் கலர் படத்தை சாந்தாராம் எடுத்தார். சந்தியா கதாநாயகியாகவும், கதக் நடனக் கலைஞர் கோபி கிருஷ்ணா கதாநாயகனாகவும் நடித்தனர்.

கோபி கிருஷ்ணா நடிகர் அல்ல. நடனத்துக்காகவே கதாநாயகன் வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு டைரக்டர் சாந்தாராம் நன்கு பயிற்சி கொடுத்து, சிறப்பாக நடிக்க வைத்தார்.

கதை, நடிப்பு, பாடல்கள், காட்சி, அமைப்பு, கலை அம்சம், டைரக்ஷன் எல்லாவற்றிலும் இப்படம் சிறந்து விளங்கியது. பாராட்டு மழையிலும், வசூல் மழையிலும் சாந்தாராம் நனைந்தார்.

60 வருடத்துக்கு முன் எடுக்கப்பட்ட படம். இன்று பார்த்தாலும், இப்போது எடுக்கப்பட்ட படம் போல் ஜொலிக்கும்.

தோ ஆங் கேன் பாராஹாத்

1957–ம் ஆண்டு சாந்தாராம் கதை எழுதி, கதாநாயகனாக நடித்து, டைரக்ட் செய்த படம், ‘‘தோ ஆங் கேன் பாராஹாத்’’ (இரண்டு கண்களும், 12 கைகளும்). பயங்கரமான 6 கைதிகளை திருத்தி, மனிதர்களாக மாற்றுவதுதான் கதை.

படம் மிகப்பிரமாதமாக அமைந்தது. வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களில் கலந்து கொண்டு, பரிசுகளை வாரிக்குவித்தது.

இந்தப்படத்தின் இறுதிக் காட்சியில், ஒரு கைதியை   கொம்புகளால் குத்திக் கொல்ல ஒரு காளை மாடு சீறி வரும். ஜெயில் அதிகாரியான சாந்தாராம், பாய்ந்து சென்று கைதியைக் காப்பாற்ற காளையின் கொம்புகளைப் பிடிப்பார். காளை மாடு அவரைப் புரட்டி எடுக்கும்.

இந்த சண்டையில், கைதியின் உயிரைக் காக்க தன் உயிரை தியாகம் செய்வார், சாந்தாராம்.

இந்தக் காட்சியைப் படமாக்கும் போது, காளையின் கூரிய கொம்பு, சாந்தாராமின் கண் அருகே பாய்ந்து விட்டது. படுகாயம் அடைந்த சாந்தாராம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பல மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. சாந்தாராம் பார்வையை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கடைசியில், அந்த அபாயத்தில் இருந்து அவர் தப்பினார்.

நவ்ரங்

சாந்தாராமின் மற்றொரு கலைப்படைப்பு ‘‘நவ்ரங்’’. கதாநாயகன் (மகிபால்) ஒரு கவிஞன். அவன் மனைவி ஜமுனா (சந்தியா) ஒரு கர்நாடகம். அவளை ‘‘மோகினி’’ யாக கற்பனை செய்து கொண்டு அற்புத கவிதைகள் எழுதுவான், கவிஞன். ஆனால் தன் கணவன், மோகினி என்ற யாரோ ஒரு பெண்மணியை காதலிப்பதாக நினைப்பாள், ஜமுனா. கடைசியில், ராஜசபையில் கவிஞன் பாடும் பாட்டு மூலம் உண்மையை ஜமுனா உணருவாள்.

மகிபால் தன் மனைவி ஜமுனாவை மோகினியாக உருவகப்படுத்தி கொண்டு பாடும் பாடல்களின் போது, விதம் விதமான நடனங்கள் ரசிகர்களை வசீகரித்தன. சி.ராமச்சந்திராவின் இசை அமைப்பில் பாடல்கள் அற்புதம். கடைசி பாடல் காட்சியின் போது, பிரமாண்டமான ஆலய மணிகள் தொங்க, அவற்றில் பெண்களும், சந்தியாவும் நடனம் ஆடுவார்கள். பிரமாண்டமான கண்கவர் காட்சி.

சகுந்தலா

1943–ம் ஆண்டு கறுப்பு வெள்ளையில் எடுத்த ‘‘சகுந்தலா’’ படத்தை மீண்டும் 1961–ம் ஆண்டில் கலரில் எடுத்தார், சாந்தாராம். படத்தின் பெயர் ‘‘ஸ்திரி’’.

முந்திய படத்தில் ஜெயஸ்ரீ சகுந்தலாவாகவும், சந்திரமோகன் துஷ்யந்தனாகவும் நடித்தனர். ‘‘ஸ்திரி’’யில் சந்தியா சகுந்தலை வேடம் ஏற்றார். துஷ்யந்தனாக சாந்தாராமே நடித்தார். படம், வழக்கம் போல் கலை அழகுடன் விளங்கியது.

மகள், நடிகை ஆனார்

1964–ல்,தன் மகள் ராஜ்ஸ்ரீயை கதாநாயகி யாக அறிமுகப்படுத்தி, ‘‘கீத் கயா பத்ரோனே’’ என்ற படத்தை எடுத்தார். இந்தப் படத்தின் கதாநாயகன் ஜித்தேந்திரா.

இந்தப் படம் மகத்தான வெற்றிபெற்றது. ராஜ்ஸ்ரீயின் அழகும் நடிப்புத் திறமையும், பட அதிபர்களை மிகவும் கவர்ந்தது. ராஜ்ஸ்ரீ பல படங்களுக்கு ஒப்பந்தமானார்.

சாந்தாராம் இன்னொரு படத்தில் தன் மகளை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால், அதற்கு ‘கால்ஷீட்’ கொடுக்க ராஜ்ஸ்ரீக்கு தேதி இல்லை!

இதன்பிறகு சில படங்களை இயக்கிய சாந்தாராம், 1972–ல் ‘‘பிஞ்சரா’’ என்ற படத்தை எடுத்தார். இதில் கதாநாயகியாக சந்தியாதான் நடித்தார்.

73 வயதாகிவிட்டதால், சாந்தாராம் முன்போல் வேகமாக செயல்பட முடியவில்லை. தனக்கு ஓய்வு தேவை என்பதை உணர்ந்தார்.

சுமார் 14 ஆண்டுகள் படம் எடுக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் 1987–ம் ஆண்டில் ‘‘ஜான்ஜார்’’ என்ற படத்தை எடுத்தார். அதுதான் சாந்தாராமின் கடைசி படம்.

சுமார் 70 ஆண்டுகாலம் இந்தியப் பட உலகின் சக்கரவர்த்தி யாகத் திகழ்ந்த சாந்தாராம், 1990–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30–ந் தேதி மும்பையில் மரணம் அடைந்தார்.

(அடுத்த வாரம்:  மாறுபட்ட இரட்டை வேடப் படங்கள்)


குடும்பம்

சாந் தாராமுக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் விமலா. இவர்களுக்கு பிரபாத்குமார் என்ற ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இரண்டாவது மனைவி நடிகை ஜெயஸ்ரீ. (டாக்டர் கோட்னீஸ், பர்சாயின் ஆகிய படங்களில் சாந்தாராமுடன் இணைந்து நடித்தவர்). இவர்களுக்கு ராஜ்ஸ்ரீ உள்பட 2 மகள்கள். ஒரு மகன்.

மூன்றாவது மனைவி சந்தியா. இவருக்கு மதுரா என்ற ஒரு மகள்.


விருதுகள்

சாந் தாராம் பெற்ற விருதுகளும் பரிசுகளும் ஏராளம். திரைப்படத்துறையில் வாழ்நாள் சேவைக்காக வழங்கப்படும் மிகப் பெரிய விருதான ‘‘பால்கே விருது’’ இவருக்கு 1985–ம் ஆண்டு வழங்கப்பட்டது.

மத்திய அரசு ‘‘பத்ம விபூஷண்’’ விருது வழங்கி கவுரவித்தது. பல பல்கலைக்கழகங்கள் ‘‘டாக்டர்’’ பட்டம் வழங்கின.

சாந்தாராம், தன் சுயசரிதையை ‘‘சாந்தாராமா’’ என்ற பெயரில் இந்தியிலும், மராத்தியிலும் எழுதி உள்ளார்.


அமெரிக்காவுக்குப் பறந்த ராஜ்ஸ்ரீ!

சாந்தாராம்–ஜெயஸ்ரீ தம்பதிகளின் மகளான ராஜ்ஸ்ரீ, 1945–ம் ஆண்டு பிறந்தார். குழந்தையாக இருக்கும் போதே, நடனம் பயின்று நன்கு தேர்ச்சி பெற்றார். 18 வயதில் அழகு தேவதையாக காட்சி அளித்தார்.1964–ம் ஆண்டில், ‘‘கீத்கயா பத்ரோனே’’ என்ற படத்தில், ராஜ்ஸ்ரீயை கதாநாயகியாக சாந்தாராம் அறிமுகப்படுத்தினார். படம் பெரும் வெற்றி பெறவே, ஏராளமான படங்கள் ஒப்பந்தம் ஆயின. 18 படங்களில் ராஜ்ஸ்ரீ நடித்தார். ஷம்மி கபூர், தர்மேந்திரா, முதலிய முன்னணி காதநாயகர்களுடன் இணைந்து நடித்தார்.

ராஜ்கபூருடன் ‘‘அரவுண்ட் த வேர்ல்ட்’’ (உலகத்தைச் சுற்றி) என்ற படத்தில் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்த போது, கிரீக்சாப்மேன் என்ற அமெரிக்க வாலிபனுடன் காதல் ஏற்பட்டது.

ராஜ்ஸ்ரீ இந்தியா திரும்பிய பிறகும் காதல் தொடர்ந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜ்ஸ்ரீ–கிரீக் சாப்மேன் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன், இந்து முறைப்படி மும்பையில் நடந்தது.அப்போது சில படங்களில் ராஜ்ஸ்ரீ நடித்துக் கொண்டு இருந்தார். சினிமாவில் தொடர்ந்து நடிக்க அவர் விரும்பவில்லை. எனவே, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கணவருடன் விமானத்தில் பறந்து விட்டார்! ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த படங்கள் அரைகுறையாக நின்று போயின.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறிய ராஜ்ஸ்ரீ, உடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தினார். சில படங்களுக்கு துணை டைரக்டராகவும் பணிபுரிந்தார்.


சமூக சீர்திருத்தக் கருத்துகளை கலைவடிவத்துக்கு மாற்றி எப்படி திரைப்படமாக்குவது என்று இந்திய இயக்குநர்களுக்கு வழிகாட்டிய இந்தி திரைப்பட இயக்குநர் வி.சாந்தாராம் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் பிறந்தவர். இளம் வயதிலேயே சினிமா மீது அளவுகடந்த ஆர்வம் இருந்தது. நடிகனாகும் முயற்சி யிலும் ஈடுபட்டுவந்தார்.


 பாபுராவின் சினிமா கம்பெ னியில் வேலைக்குச் சேர்ந் தார். சினிமா தயாரிப்பு, ஆய்வுக்கூட வேலை, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் போன்ற நுட்பங்களை தெரிந்து கொண்டார். 1929-ல் நண்பர்களுடன் சேர்ந்து ‘பிரபாத் பிலிம் கம்பெனி’ தொடங்கினார்.

 தாதா சாஹேப் பால்கே தயாரித்த ‘ராஜா ஹரிச்சந்திரா’ படத்தின் கதையை 1932-ல் ‘அயோத்யா கா ராஜா’ என்ற பெயரில் இயக்கினார். முதன் முதலில் பெண்களை நடிக்கவைத்தார்.

 மவுனப் படக் காலத்திலேயே 6 படங்களை இயக்கினார். இந்தி, மராத்தி, தமிழில் 1934-ம் ஆண்டுமுதல் படம் எடுக்கத் தொடங்கினார். ‘அம்ரித் மந்தன்’ படம் மூலம் புகழ்பெற்றார்.

 இவரது ‘அமர்ஜோதி’ திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பெண்கள் பிரச்சினைகள் குறித்து ‘துனியா ந மானே’, பாலியல் தொழிலில் இருந்து மீள நினைக்கும் பெண்ணின் வாழ்க்கையை ‘ஆத்மி’ (1939) ஆகிய படங்கள் எடுத்துக்காட்டியது. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை ‘படோஸி’ திரைப்படம் வலியுறுத்தியது. 1941-ல் பிரபாத் ஸ்டுடியோவை விட்டு விலகி ‘ராஜ்கமல் கலா மந்திர்’ என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்மூலம் தயாரிக்கப்பட்ட ‘சகுந்தலை’, வர்த்தக ரீதியில் வெளிநாட்டில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம். இவரது ‘டாக்டர் கோட்னிஸ் கீ அமர் கஹானி’ திரைப்படம் சோஷலிச நாடுகளில் புகழ்பெற்றது.

 1957-ல் இவரது ‘தோ ஆங்க்கே பாரஹ் ஹாத்’ திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வெள்ளிக் கரடி’ விருது பெற்றது. எம்.ஜி.ஆர். இந்த படத்தை தமிழில் ‘பல்லாண்டு வாழ்க’ என்ற பெயரிலும் இவரது ‘அப்னா தேஷ்’ படத்தை ‘நம் நாடு’ என்ற பெயரிலும் எடுத்தார். 1959-ல் இவர் தயாரித்த ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ திரைப்படம், இந்தியாவின் முதல் கலர் படம் அவருக்கு பாராட்டுகளை அள்ளிக் குவித்தது.

 சமூக முற்போக்குச் சிந்தனைகளை கலை வடிவத்துக்கேற்ப மாற்றி எவ்வாறு திரைப்படமாக்குவது என்பதை இந்திய இயக்குநர்களுக்குக் கற்றுக்கொடுத்த மாமேதை சாந்தாராம். வாழ்நாள் சாதனையாளர் விருது, 1985-ல் தாதா சாஹேப் பால்கே விருது, 1992-ல் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.
 நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறன் படைத்த இவர் ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கோலோச்சி வந்தவர். 89-வது வயதில் காலமானார்.






ஒரு சிவாஜி ரசிகர் சொன்னார்,

`எம்.ஜி.ஆரை விட எங்கள் சிவாஜிதான் வசூல் மன்னன். ஒரே நாளில் அவருடைய இரண்டு படங்கள் வந்து இரண்டுமே நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கின்றன. ஆனால் எம்.ஜி.ஆரின் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும். அதனால் எம்.ஜி.ஆரை ஆறு மாதங்களாக திரையில் பார்க்காத ரசிகர்கள் அலைமோதி படத்திற்கு வசூலை குவிக்கும்’ என்றார்.

ஒரு சிவாஜி ரசிகர் என்கிற முறையில் அவருடைய வாதம் சரியாக இருக்கலாம். சிவாஜி ஒரு கலைப் புதையல். ஆனால் எம்.ஜி.ஆரை மக்கள் ஒரு கதாநாயகனாக மட்டும் பார்க்கவில்லை. வீட்டில் உலையை வைத்துவிட்டு எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்கு போனால் அரிசி கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். அதனால்தான் அவருக்கு அரசியலில் அசைக்க முடியாத ஒரு வெற்றி.

சிவாஜியை திரையோடு மட்டும் பார்த்தார்கள். எம்.ஜி.ஆரை சமூகத்தோடும் இணைத்தார்கள். சிவாஜியின் சினிமா சரித்திரத்தில் நீக்க முடியாத படங்கள் 'ராஜா', 'ஞான ஒளி', 'தவப்புதல்வன்', 'நீதி', 'பட்டிக்காடா பட்டணமா', 'வசந்த மாளிகை'.

'ராஜா'வில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி, 'ஞான ஒளி'யில் பாசமுள்ள ஒரு முரட்டுத்தகப்பன், 'தவப்புதல்வ'னில் மாலைக்கண் நோயாளி, 'நீதி'யில் குடியினால் பாதிக்கப்பட்ட ஒரு கொலைகாரன், 'பட்டிக்காடா பட்டணமா'வில் ஒரு பணக்கார கிராமத்தான், 'வசந்த மாளிகை'யில் குடிக்கு அடிமையான ஒரு ஜமீன் காதலன்.

சிவாஜிக்கு தன் இமேஜை பற்றி கவலையேயில்லை. அவருக்குத் தேவை அவர் நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதாபாத்திரங்கள். அது மாதிரி பாத்திரங்களாகவே தேர்வு செய்து நடிப்பார்.  நல்ல நாடகங்களைத் தேடிப் போய் பார்ப்பார். அப்படி அவருக்கு கிடைத்ததுதான் 'ஞான ஒளி'.

'வசந்த மாளிகை'  படத்தின் ஒவ்வொரு பாட்டும் சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் விருந்து. 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் வேடத்தில் பாலாஜி நடித்தார்.

அந்த கதாபாத்திரத்தின் மேல் சிவாஜிக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதற்கு  'சினிமா பைத்தியம்' படத்தில் கிடைத்தது. சினிமா வெறியர்களின் முட்டாள்தனத்தை துகிலுரித்துக் காட்டிய படம். இந்த படத்தை ஏல்.எல்.எஸ்.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து முக்தா சீனிவாசன் இயக்கினார். இதில் சிவாஜிக்கு கவுரவ வேடம். அந்த கதாபாத்திரம்தான் வாஞ்சிநாதன். 'டாக்டர் சிவா'வில் தொழுநோயாளிகளை குணப்படுத்தும் ஒரு டாக்டர் வேடம் சிவாஜிக்கு! இந்த படத்தை ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார். சிவாஜிக்கு ஜோடி மஞ்சுளா. அந்த வருடம் முழுவதும் இந்தப்படத்தில் ஜேசுதாஸும், ஜானகியும் பாடிய 'மலரே குறிஞ்சி மலரே’ பாடல்தான் நம்பர் ஒன்னாக இருந்தது.

கவுரிமனோகரி ராகத்தில் மெட்டமைத்திருந்தார் எம்.எஸ். விஸ்வநாதன்.  ரசிகர்களை சுண்டியிழுத்த பாட்டு இது. தனக்குள் இருக்கும் எல்லா திறமைகளும் திரையில் வெளிப்பட வேண்டும் என்று ஆசைப்படுபவர் சிவாஜி.

`ஜனக் ஜனக் பாயல் பாஜே’ – இது பிரபல இந்தி இயக்குநர் சாந்தாராம் இயக்கிய படம். இது நாட்டியத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். 1955ல் வெளிவந்த படம் இது! இந்த படத்திற்கு வசந்த் தேசாய் இசையமைத்திருந்தார். ஒரு இளவரசனுக்கு ஒரு நாட்டிய தாரகை மேல் ஆசை. அவளுக்கோ நாட்டிய கலைஞன் மேல்தான் ஆசை. அதற்காகவே நாட்டியம் கற்றுக் கொள்வான் இளவரசன். இந்த படத்தில் அகில உலகப் புகழ் பெற்ற நாட்டியக்கலைஞர் கோபிகிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் 1955ல் இந்தி உலகை கலக்கியது.. சிவாஜி, எம்.ஜி.ஆர்., இருவருக்குமே இந்தி இயக்குநர் வி. சாந்தாராம் மீது ஓர் ஈர்ப்பும், மரியாதையும் உண்டு.

அதனாலேயே அவர் இயக்கிய `தோ ஆங்கே பாரா ஹாத்’ படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் 'பல்லாண்டு வாழ்க' படமாக எடுக்க வைத்து நடித்தார்.

சிவாஜி தேர்ந்தெடுத்த சாந்தாராம் கதைதான் ஜனக் ஜனக் பாயல் பாஜே.  சிவாஜி கோபிகிருஷ்ணா வேடத்தில் நடித்தார். நாட்டிய தாரகையாக ஜெயலலிதா நடித்தார். அவரைக் காதலிப்பதற்காகவே நாட்டியம் தெரியாத பணக்காரர் நாட்டியம் கற்றுக் கொண்டு ஜெயலலிதா உடனேயே  நடனப் போட்டியில் இறங்குவார்.

சிவாஜிக்கு நாட்டிய பயிற்சி கொடுப்பதற்காகவே மும்பையில் இருந்து கோபிகிருஷ்ணாவின் சீடர் உதய்சங்கர் சென்னை வந்தார்.

வழக்கம்போல் விஸ்வநாதன் இசையில் பாட்டுக்கள் அத்தனையும் அருமை. படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவீஸிற்காக பி.மாதவன் தயாரித்து இயக்கியிருந்தார். வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார். சிவாஜி ரசிகர்களுக்கு முழு தீனி போடவில்லை என்பதுதான் உண்மை. 'மன்னவன் வந்தானடி', 'வைர நெஞ்சம்' இரண்டுமே சிவாஜிக்கு பொருத்தமில்லாத படங்கள்.

`தெய்வத்தாய்’ படத்திலெல்லாம், சத்யா மூவீஸில் ஆர்.எம். வீரப்பனுக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கள் பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம். இவர்கள் தயாரித்து பி. மாதவன் இயக்கிய மிகப்பெரிய சிவாஜியின் தோல்வி படம் இது. இதிலும் ரசிகர்களை இழுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்தான். வழக்கம்போல் எம்.எஸ். விஸ்வநாதன் இசை.  'வைரநெஞ்சம்' ஸ்ரீதர் இயக்கம். இந்தியில் மிகப்பெரிய வெற்றிப் படம்

`நமக்ஹராம்’.

இந்த படத்தில் தர்மேந்திராவும், ராஜேஷ்கன்னாவும் இணைபிரியா நண்பர்களாக நடித்திருந்தனர். இதன் உரிமையை வாங்கினார் பாலாஜி. சிவாஜி-, ஜெமினி இருவரையும் வைத்து எடுத்த படம் 'உனக்காக நான்'.

சிவாஜியை விட ஜெமினிக்கு ஒப்பனையை மீறிய வயோதிகம் முகத்தில் தெரிய ஆரம்பித்திருந்த நேரம். இதுவும் சிவாஜி ரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றம்தான். அடுத்து சிவாஜி ரசிகர்களுக்கு தீனி போட்ட படம் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் வி.பி. ராஜேந்திரபிரசாத் இயக்கத்தில் வந்த 'உத்தமன்'.

கே.வி. மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் அருமையாக அமைந்த படம் இது. அடுத்தடுத்து வந்த சிவாஜி படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் 'கிரஹப்பிரவேசம்'– இது யோகானந்த இயக்கத்தில் வந்த படம். தம்பிக்காக பாடுபடும் அண்ணனின் கதை இது. இதில் சிவாஜிக்கு ஜோடி கே.ஆர். விஜயா. தம்பியாக சிவகுமார் நடித்தார். இந்த படத்திற்குப்  பிறகு எந்த பெரிய நடிகர்களோடும் நடிப்பதில்லை என்று சிவகுமார் என்ன காரணத்தினாலோ முடிவெடுத்தார். 'சித்ரா பவுர்ணமி' வந்த சுவடு தெரியாமல் போன சிவாஜியின் படம் இது.  இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி ஜெயலலிதா! இந்த படத்தை காஷ்மீரில் போய் எடுத்தார்கள். இந்த படத்திற்கு இயக்கம் பி. மாதவன். இந்த படத்தில் நடிக்க காஷ்மீருக்கு போகக்கூடாது என்று ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆர். நிபந்தனை விதித்ததாக செய்திகள் வந்தன. இந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆர்., ஒரு முடிவு எடுத்தார்.




‘மராட்டிய திரைப்பட மேதை’ வி.சாந்தாராம்!
November 18, 2017 by admin
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், சமூக முற்போக்குச் சிந்தனைகளை கலை வடிவத்துக்கேற்ப மாற்றி எவ்வாறு திரைப்படமாக்குவது என்பதை இந்திய இயக்குநர்களுக்குக் கற்றுக்கொடுத்த மாமேதை என பல துறைகளிலும் தனிச் சாதனைப் ப்டைத்தவர் ‘மராட்டிய திரைப்பட மேதை’ வி.சாந்தாராம்.

மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் இதே நவம்பர் 18ம் தேதி பிறந்தவர். இளம் வயதிலேயே சினிமா மீது அளவுகடந்த ஆர்வம் இருந்தது. நடிகனாகும் முயற்சி யிலும் ஈடுபட்டுவந்தார். ஆனாலும் 1901-ல் கோல்காபூரில் இருப்புப் பாதை பராமரிக்கும் வேலையில் 15 ரூபாய் சம்பாதித்து வந்தார் இவர். இதுபோலவே தன்னுடைய 16-வது வயது வரை பல சில்லறை வேலைகளைச் செய்து வந்தார். எந்த வேலையைச் செய்தாலும் சினிமா பார்ப்பதை மட்டும் அவர் விடவே இல்லை. படங்களைப் பார்த்து அவராகவே நடிக்க ஆரம்பித்தார்.

அப்போது கோல்காபூரில் பாப்பு ராவுவால் ஆரம்பிக்கப்பட்ட மஹாராஷ்டிர சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார். அங்குதான் சினிமா தயாரிப்பு, ஆய்வுக்கூட வேலை, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் முதலிய நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார். தனது நண்பர்களுடன் இணைந்து 1929-ல் ‘பிரபாத் ஃபிலிம் கம்பெனி’யை நிறுவினார். இந்தியாவில் திரைப்பட ஸ்டுடியோக்கள் வட நாட்டில்தான் முதலில் தோன்றின. இந்தியாவின் பிற பகுதியில் இருந்தவர்கள் கூட மஹாராஷ்டிராவிலிருந்த ஸ்டுடியோக்களான கோல்காபூர், புனே, மும்பை ஸ்டுடியோக்களில் தான் தமிழ், தெலுங்கு படங்கள் தயாராயின. அதனால்தான் தொடக்ககாலத் தமிழ்ப் படங்கள் மராட்டியப் பண்பாட்டுடன் வெளிவந்தன.



1913-ம் ஆண்டு தாதா பால்கே, ‘ராஜா ஹரிச்சந்திரா’வை எடுத்திருந்தார். இதே கதையை 1932-ம் ஆண்டு ‘அயோத்தி எச்சே ராஜா’ என்ற பெயரில் இயக்கினார் சாந்தாராம். தொடக்க காலத்தில் பெண் வேடத்திற்கு ஆண்களே நடிப்பார்கள். அதை மாற்றி முதன் முதலில் பெண்களையே நடிக்க வைத்தவர் சாந்தாராம் தான். துர்கா கோட் என்ற நடிகை இவரது நிறைய படங்களில் நடித்தார்.
இப்படி மெளனப்படக் காலத்திலேயே 6 படங்களை இயக்கியவர், 1934-ம் ஆண்டு முதல் இந்தி, மராத்தி மற்றும் தமிழிலும் படமெடுக்கத் தொடங்கினார். அப்போது வெளிவந்த ‘அம்ரித் மந்தன்’ என்ற படம் இந்தியிலும், மராத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

1936-ல் இந்தியிலும், மராத்தியிலும் வெளிவந்த ‘அமர் ஜோதி’, வெனிஸில் நடைபெற்ற சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது. இதேபோல அடுத்த ஆண்டு வெளிவந்த ‘துனியானாமேனே’ என்ற படத்தில் பெண்களின் பிரச்னையை முதன்மையாக எடுத்துக் கொண்டு, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களுடன் காட்சிகளைப் படைத்தார். வயதானவர்கள் இளம் பெண்களை மணந்துகொள்ளும் வழக்கத்தைக் கண்டித்து விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்தார். இந்தப்படத்தின் பிரதிபலிப்பு 1930, 40-களில் தமிழ், தெலுங்கு, வங்கப்படங்களில் காணப்பட்டது.

1939-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘ஆத்மி’ என்கிற படம், பாலியல் தொழிலில் இருந்துகொண்டு மீள நினைக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மிகச்சிறந்த முறையில் எடுத்துக் காட்டியது. 1941-ல் ‘படோசி’ என்கிற படம் வெளிவந்தது. இந்து, முஸ்லிம் உறவின் மேம்பாட்டை வலியுறுத்துவதாக அந்தப் படம் இருந்தது. நண்பர்கள் இருவர் இனக்கலவரத்தில் இறந்து விடுகின்றனர். அதை உருவகப்படுத்தி ஒரு பெரிய அணைக்கட்டு உடைவது போல காட்சிப்படுத்தியிருந்தார்.

1941-ம் ஆண்டு பிரபாத் ஸ்டுடியோவை விட்டு விலகி, ‘ராஜ்கமல் கலா மந்திர்’ என்கிற திரைப்படக் கம்பெனியை ஏற்படுத்தினார். அதன்மூலம் காளிதாசரின் சகுந்தலத்தை திரைப்படமாக்கினார். வெளிநாட்டில் வர்த்தக ரீதியில் திரையிடப்பட்ட முதல் படம் இதுதான்.

இந்திய மருத்துவர் ஒருவர் சீனப்போரில் கலந்துகொண்டு வீரர்களுக்கு முதலுதவி செய்து பெயர்பெற்றார். சீனச்செவிலியை திருமணம் செய்துகொண்டு அங்கேயே இறந்தார். அவர் ஒரு மராட்டியர். அவரது வாழ்க்கையை வைத்து கே.ஏ.அப்பாஸ் ‘திரும்பி வராத ஒருவர்’ என்ற நாவலை எழுதினார். அந்தப் புத்தகத்தைப் படித்த சாந்தாராம், நாவலாசிரியரை திரைக்கதையாக்கித் தரச்சொல்லி, அதனை ‘கோட்நிஸ்கா ககாணி’ என்கிற பெயரில் திரைப்படமாக்கி வெளியிட்டார். சோசலிச நாடுகளில் இந்தப்படம் சிறப்பாக வெளியிடப்பட்டது.

1959-ம் ஆண்டு பாடல், நாட்டியம் இவற்றை வலியுறுத்தி ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ என்கிற படத்தை வெளியிட்டார். இதுதான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப்படம் ஆகும்.

ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்ட 6 சிறைக்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி, அவர்களை உயர்த்திய அதிகாரியின் உண்மைக் கதையை வைத்து ‘தோ ஆன்கி பாரஹாத்’ என்கிற படத்தை எடுத்தார். இதன் சமூக உள்ளடக்கம் கருதி 1957-ம் ஆண்டு வெனிஸ் உலகத்திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி விருதினை பெற்றது. தனது வாழ்வின் இறுதிவரை அவர் சிறந்த இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக விளங்கினார். முன்பு இயக்கிய ‘சகுந்தலா’ திரைப்படத்தை ‘ஸ்த்ரி’ என்ற பெயரில் வண்ணப்படமாகத் தயாரித்தார்.



தமிழ்நாட்டுடன் சாந்தாராமுக்கு நெருக்கமான உறவு இருந்தது. அவர் படம் தயாரித்ததால் மட்டுமல்ல; படத்தயாரிப்பினை எவ்வாறு செய்யவேண்டும், சமூகப்படங்களை எவ்வாறு எடுக்கவேண்டும் என்கிற முறையினைக் காண்பித்தார். சாந்தாராமின் ஆளுமை எம்.ஜி.ஆரைப் பெரிதும் கவர்ந்த்தது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது டெல்லியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சாந்தாராமின் காலில் விழுந்து ஆசி பெற்றார். சாந்தாராமின் ‘தோ ஆன்கி பராஹாத்’ என்ற படத்தை தமிழில் ‘பல்லாண்டு வாழ்க’ என்று 20 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். எடுத்தார். இதே போல சாந்தாராமின் ‘அப்னாதேஸ்’ என்கிற படம் ‘நம் நாடு’ என்ற பெயரில் எம்.ஜி.ஆர்’ நடிப்பில் வெளிவந்தது. சாந்தாராமால் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மராட்டிய நடிகை சாந்தா ஆப்தே. இவர் அந்தக்காலத்திலேயே தமிழக ரசிகர்களுக்கு தமிழில் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவரை நினைவுறுத்தி உள்ளது கூகுள்

No comments:

Post a Comment