திரைப்பட தெய்வங்கள்
திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் விம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து.
மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு (எம்.ஜி.ஆர்) கோயில் கட்டுவதற்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணமாகும்.
ஆம், சென்னையில் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி அதில் தொடர்ந்து பூசை செய்துவரும் காந்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் அந்தளவுக்கு எம்.ஜி.ஆரை தனது தெய்வமாகவே வரித்திருக்கிறார்.எம்.ஜி.ஆர் குடித்த எச்சில் குளிர்பானத்தை தான் பருகியதை இன்றும் காந்தா ஒரு பெரும் பாக்கியமாகக் கூறுகிறார். தனது இந்தப் பக்தியை எவரும் பரிகாசம் செய்வதைக்கூட அவர்
பொருட்படுத்தவில்லை.திரைப்படக் காதாநாயகர்களின் பிம்பங்களை ஆராதிக்கும் இந்த பாங்கு எம்.ஜி.ஆருக்கு மாத்திரமான ஒரு சிறப்பு என்றும் கூறமுடியாது. இன்றும் ஏனைய காதாநாயகர்களுக்கும் இது தொடர்கிறது.எம்ஜியார் 1967 ஜனவரி 12 சுடப்படும் நாளில் காலை பரங்கிமலை சென்றார் .அங்கே ஒரு கிழவி காபி டம்ளர் எம்ஜியாருக்கு தரவே ,கூடியிருந்த வர்கள் காபி சாப்பிடமாட்டார் என்று சொல்ல கிழவி ஓட்டமாய் ஓடி பக்கத்துக்கு கடையில் சோடாவாங்கி வந்தவரை கட்டி அணைத்தார் .அந்த சோடாவில் ஒரு மடக்கு குடித்துவிட்டு பக்கத்தில் இருந்த பெண்மணியிடம் கொடுத்தார் . அந்த பெண்மணி தான் இவர்
இதற்கு இன்னுமொரு உதாரணமாக நடிகர் விஜயகாந்துக்கு கோயில் கட்டியுள்ளார் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தாசப்பட்டியில் இருக்கும் இராஜேந்திரன்.ஒரு நடிகருக்கு ஏன் கோயில் கட்டினீர்கள் என்று எமது செய்தியாளர் கேட்டதற்கு, " உங்களுக்கு வேண்டுமானால் அவர் சாதாரண நடிகர், ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் கடவுள்" என்று பதிலளித்தார் இராஜேந்திரன்.இராஜேந்திரனை பொறுத்தவரை அரிதார ஆளுமைக்குக் முன்னால் அன்னைக்குக்கூட இரண்டாவது இடந்தான்.
No comments:
Post a Comment