Thursday 17 October 2019

SAROJINI VARATHAPPAN, DAUGHTER OF BAGDAVASALAM EXPIRED 2013 OCTOBER 17




SAROJINI VARATHAPPAN, DAUGHTER OF BAGDAVASALAM  EXPIRED 2013 OCTOBER 17




சரோஜினி வரதப்பன்[1], உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 92-வது அகவையில், 2013-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் இறந்தார்.
சரோஜினி வரதப்பன்தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகி. தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மகளாவார்.
இளமைக் காலம்[மூலத்தைத் தொகு]
சரோஜினி செப்டம்பர் 21, 1921-ம் ஆண்டு பக்தவத்சலம், ஞானசுந்தராம்பாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். [2] ஒன்பதாம் வகுப்பு வரை லேடி சிவசாமி பெண்கள் பள்ளியில் படித்த இவர், அதன் பிறகு படிப்பை கைவிட்டார். [2][3] இவர் தனி ஆசிரியர் மூலமாக இந்தியில் விசாரத் பயின்றார்.[2] இவர் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பிலும் காங்கிரசு சேவை தளத்திலும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தார். [2]
சிறிய வயதிலேயே தன்னுடைய உறவினரான வரதப்பன் என்பவரை மணந்தார். [2]
சரோஜினி தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு மைசூர் பல்கலைக்கழகம் வாயிலாக அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பயின்றார்.[2] சென்னைப் பல்கலைக்கழகத்தில் வைஷ்ணவத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். தன்னுடைய 80-வது அகவையில் "சமூக சேவை மற்றும் நாராயணன் இயக்கம்" என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான முன்மொழிவை வைத்தார். [2]
இசை[மூலத்தைத் தொகு]
சரோஜினி, பாரூர் சுந்தரம் ஐயர் என்பவரிடம் இசையை முறையாக பயின்றார். இவர் காங்கிரசு கூட்டங்களில் வாழ்த்துப் பாடல்களை பாடியுள்ளார். இவர் சத்ரிய பாடங்களையும், தமிழ்ப் பாடங்களையும் மைலாப்பூர் கவுரி அம்மாவிடமும், பாரதியார் பாடல்களை கிருஷ்ணா ஐயரிடமும், இந்தி பஜன்களை வீனா விசாலாக்‌ஷியிடமும் பயின்றார். [2]
சமூக சேவை[மூலத்தைத் தொகு]
தன்னுடைய சிறிய வயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய தாயார் ஞானசுந்தராம்பாள் வுமன்ஸ் இந்தியா அசோசியேசன் (Women's India Association (WIA)) என்ற அமைப்பில் இருந்ததால் சரோஜினியும் அவருடன் இணைந்து கொண்டார்.[2] அவ்வமைப்பின் தலைவராக உயர்ந்தார்.[2] சரோஜினியின் தலைமையில், இவ்வமைப்பின் கிளை நான்கிலிருந்து எழுபத்தியாறாக உயர்ந்தது.[2] இவர் மைலாப்பூர் அகாதமியின் தலைவராகவும் இருந்தார். [2]
சரோஜினி, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் 35 வருடத்திற்கு மேலாக இருந்தார்.[2] மாரி சன்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது இவர் இச்சங்கத்தின் தலைவராக நியமிக்கப்படார். [2] அதுவரையில் ஆளுநர்களின் மனைவியரே அப்பதவியை ஏற்றுவந்தனர்;[2] சன்னா ரெட்டியின் மனைவியும் சரோஜினிக்கு ஆதரவு தெரிவித்தார்.[2]
விருதுகள்[மூலத்தைத் தொகு]
சரோஜினிக்கு, 1973-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. [2] 2004-ம் ஆண்டிற்கான ஜானகிதேவி பஜாஜ் விருது,[4] 2009-ம் ஆண்டு, பத்ம பூசன் ஆகியவை இவருடைய சமூக சேவையை பாராட்டி வழங்கப்பட்டது.[5]
இறப்பு[மூலத்தைத் தொகு]
உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 92-வது அகவையில், 2013-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் இறந்தார். [6][

No comments:

Post a Comment