Saturday 12 October 2019

KAMINI ROY ,BENGAL ACTIVIST BORN 1864 OCTOBER 12-1933 SEPTEMBER 27



KAMINI ROY ,BENGAL ACTIVIST 
BORN 1864 OCTOBER 12-1933 SEPTEMBER 27




காமினி ராய் (அக்டோபர் 12, 1864 – செப்டம்பர் 27, 1933) ஒரு முன்னணி வங்காளப் பெண் கவிஞர், சமுதாயப் பணியாளர் மற்றும் பெண்ணியவாதி. இவர் இந்தியாவின் முதல் பெண் முதுகலைச் சிறப்புப் பட்டதாரி ஆவார்.

[வாழ்க்கைக் குறிப்பு
காமினி ராய் கிழக்கு வங்காளத்தில் பேக்கர்குஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா கிராமத்தில் அக்டோபர் 12, 1864ல் பிறந்தார். இப்பொழுது அந்த ஊர் வங்காளதேசத்தில் பாரிசால் மாவட்டத்திலுள்ளது. காமினி கொல்கத்தாவிலுள்ள பெத்தூன் பள்ளியில் படித்தார். 1880ல் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று பெத்தூன் கல்லூரியில் 1883ல் எஃப். ஏ (ஃபர்ஸ்ட் ஆர்ட்ஸ்) பட்டம் பெற்றார். 1886ல் அதே கல்லூரியில் சமசுகிருதத்தில் சிறப்புப் பட்டம் படித்து முடித்தார். இந்தியாவிலேயே சிறப்புப் பட்டம் பெற்ற முதல் பெண் இவர் தான். பெத்தூன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.[1] கடம்பினி கங்கூலி அக்கல்லூரியில் இவருக்கு மூன்றாண்டுகளுக்கு முன் படித்தவர். அபலா போஸ் பெத்தூன் பள்ளியில் இவருடன் படித்தவர்.


காமினி ராய் வங்காளத்தைச் சேர்ந்த மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாந்தி சரண் சென் ஒரு நீதிபதி, பிரம்ம சமாசத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவர் மற்றும் எழுத்தாளர். இவரது சகோதரர் நிசித் சந்திரா சென் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் பின்னர் கொல்கத்தாவின் மேயராகவும் இருந்தவர். இவரது சகோதரி ஜாமினி நேபாள அரச குடும்பத்தின் குடும்ப மருத்துவர். 1894ல் காமினி, கேதார்நாத் ராயை மணந்தார்.[1]

இவருக்கு சிறு வயதிலேயே இலக்கியத்தில் அதிக ஈடுபாடிருந்தது. தனது எட்டு வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைப் புத்தகம் அலோ ஓ சாயா 1889ல் வெளியானது.[1] செப்டம்பர் 27, 1933ல் இவர் காலமானார்.

பெத்தூன் பள்ளியும் கல்லூரியும் காமினி ராயால் பெருமை அடைந்தன. காமினி ராய் (1864 -1933) முதல் பெண் பாடலாசிரியர். 1880லிருந்து கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1889ல் பிரசுரமான இவரது அலோ சாயா, பெண்களின் ஆழமான சுயவெளிப்பாட்டினைக் காட்டும் அரிய உணர்வுகளால் இலக்கிய உலகத்தில் ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியது... கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் எழுத்துலகில் இருந்த காமினி ராய்க்குத் தங்களது சொந்த படைப்புகளால் வங்காளத்தின் சமூக, கலை, இலக்கிய வாழ்வை வளப்படுத்திய புதிய பெண்கள் தலைமுறையைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது[2]
—காளிதாஸ் நாக்
சமுதாயப் பணிகள்
பெண்ணியவாதியாக

பெண்களுக்குக் கல்வி என்பது அறவே மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் காமினி ராய் ஒரு பெண்ணியவாதியாக விளங்கினார். இவருடன் பெத்தூன் பள்ளியில் படித்த அபலா போஸ் காமினி ஒரு பெண்ணியவாதியாவதற்குத் தூண்டுதலாய் இருந்தவர். காமினி ராய், பன்முக முன்னேற்றமும் திறமைகளை வளர்ப்பதும்தான் பெண் கல்வியின் நோக்கமாக அமைய வேண்டுமென கல்கத்தாவிலுள்ள ஒரு பள்ளியில் பேசும்போது கூறினார்.[3]

தி ஃப்ரூட் ஆஃப் தி ட்ரீ ஆஃப் நாலெட்ஜ் என்ற வங்காளக் கட்டுரையில் அவர் கூறியது,

பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் முக்கியக் காரணங்களில் ஒன்று ஆண்களின் அதிகார ஆசைதான்... பெண் விடுதலையை அவர்கள் மிகுந்த சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஏன்? அதே பழைய பயம். எங்கே பெண்களும் தங்களைப் போல் உயர்ந்துவிடுவார்களோ என்ற பயம் தான்.[4]
காமினி ராய், 1921ல் பாங்கிய நாரி சமாஜின் சார்பில் மிருணாளினி சென், குமுதினி மித்ரா (பாசு) ஆகியோருடன் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினார். 1925ல் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. 1926ல் முதல் முறையாக வங்காளப் பெண்கள் வாக்களித்தனர்.[3] 1922-23 இல் பெண் தொழிலாளர் விசாரணை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்.[1]

இலக்கியவாதியாக
பிற எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் ஊக்குவிப்பதில் காமினி ஆர்வம் கொண்டிருந்தார். பாரிசாலில் வாழ்ந்த சுஃபியா கமல் என்ற இளம் பெண் தனது எழுத்துப் பணியைத் தொடர ஊக்கப்படுத்தினார். 1930ல் வங்காள இலக்கிய மாநாட்டிற்கு தலைவராக இருந்தார். 1932-33ல் பாங்கிய சாகித்திய பரிட்சத்தின் துணைத் தலைவராக இருந்தார்.[1]

இவர் 1909ல் தனது கணவரை இழந்தார். கணவரது மரணம் இவரை மிகவும் பாதித்தது. அத்துயரம் இவரது கவிதைகளிலும் பிரதிபலித்தது. ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளிலும் சமசுகிருத இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கொல்கத்தாப் பல்கலைக்கழகம் ஜகத்தாரிணி தங்கப்பதக்கம் வழங்கி இவரைக் கெளரவித்தது.

காமினி ராய் தனது கடைசிகாலத்தில் சில ஆண்டுகள் ஹசாரிபாக் என்ற சிறிய நகரத்தில் வாழ்ந்தார். அங்கு மகேஷ் சந்திர கோஷ், திரேந்திரநாத் செளத்ரி போன்ற அறிஞர்களுடன் இலக்கியம் மற்றும் பிற தலைப்புகளில் கலந்துரையாடுவதில் தனது நேரத்தைக் கழித்தார்.

படைப்புகள்
இவரது இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை:

மகா ஸ்வேதா
புண்டோரிக்
பெளராணிகி
தீப் ஓ தூப்
ஜீவன் பதே
நிர்மால்யா
மால்யா ஓ நிர்மால்யா
அசோக் சங்கீத்
குஞ்சன் (குழந்தைகளுக்கானது)
பாலிக சிக்கார் ஆதர்ஷா ( கட்டுரைப் புத்தகம்)[1]


இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த மகளிர் பலர் உள்ளனர்.  அவர்களை அறிமுகம் செய்யும் தொடர் இது:
இந்தியாவின் முதல் முதுகலை சிறப்புப் பட்டதாரி, வங்காளத்தின் முதல் பெண் கவிஞர், வங்காள இலக்கிய வரலாற்றில் புதிய தடம் பதித்த எழுத்தாளர், 1925-இல் பெண்களின் வாக்குரிமைக்காக போராடி வாக்குரிமை பெற்றவர், பெண் தொழிலாளர் நலனுக்காக பாடுபட்டவர் எனப் பன்முகத் திறம் படைத்த சாதனையாளர் காமினி ராய் (1864-1933). 69 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அவரின் வாழ்க்கையில் சில பக்கங்கள்:

பழைய கிழக்கு வங்காளத்தில் பேக்கர்கோஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா என்ற கிராமத்தில் அக்டோபர் 12, 1864-இல் பிறந்தவர் காமினி ராய். இந்த ஊர் தற்போது வங்காளதேசத்தில் பாரிசால் மாவட்டத்தில் உள்ளது. 

வங்காளத்தைச் சேர்ந்த வசதியான குடும்பத்தில் பிறந்த காமினி ராயின் தந்தை சாந்தி சரண்சென் ஒரு நீதிபதியாக இருந்தார். மேலும் இவர் பிரம்ம சமாஜத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார். இவரின் சகோதரர் நிசித் சந்திராசென் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் பின்னர் கொல்கத்தா நகர மேயராகவும் இருந்தவர். இவரது சகோதரி ஜாமினி நேபாள அரச வம்சத்தின் குடும்ப மருத்துவராக விளங்கியவர்.

சிறுவயதில் காமினி கொல்கத்தாவிலுள்ள பெத்தூன் பள்ளியில் படித்தார். 1880-இல் பெத்தூன் கல்லூரியில் சேர்ந்து 1883-இல் எஃப்.ஏ (ஃபர்ஸ்ட் ஆர்ட்ஸ்) பட்டம் பெற்றார். பின்னர் 1886-இல் அதே கல்லூரியில் சமஸ்கிருதத்தில் சிறப்புப் பட்டம் படித்து முடித்தார். இந்தியாவிலேயே முதுகலை சிறப்புப் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். தான் படித்த பெத்தூன் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான கடம்பினி கங்கூலி, காமினிக்கு மூன்றாண்டுகள் சீனியர். பிரபல சமூக சேவகர் அபலா போஸ் பெத்தூன் பள்ளியில் காமினியுடன் படித்தவர்.
காமினி சிறு வயது முதலே இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைப் புத்தகம் "அலோ ஓ சாயா' 1889-இல் வெளியானது.

காமினியின் இலக்கியத் தாக்கம் குறித்து பிரபல வரலாற்று ஆராய்ச்சியாளர் காளிதாஸ் நாக் கூறுகையில் "பெத்தூன் பள்ளியும் கல்லூரியும் காமினியால் பெருமை பெற்றன. காமினி ராய் (1864 -1933) முதல் பெண் பாடலாசிரியராக விளங்கினார். பெண்களின் ஆழமான சுயவெளிப்பாட்டினைக் காட்டும் அரிய உணர்வுகளால் இவரின் எழுத்து இலக்கிய உலகத்தில் ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் எழுத்துலகில் இருந்த காமினி ராய் ஏராளமான நூல்களை எழுதினார். இவரின் படைப்புகளால் வங்காளத்தின் சமூக, கலை, இலக்கிய வரலாற்றில் பெண்களுக்கான புதிய தடம் உருவானது.

பெண்களுக்குக் கல்வி என்பது அறவே மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் காமினி ராய் ஒரு பெண்ணியவாதியாக விளங்கினார். பன்முக முன்னேற்றமும் திறமைகளை வளர்ப்பதும்தான் பெண் கல்வியின் நோக்கமாக அமைய வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

காமினி எழுதிய "தி ஃப்ரூட் ஆஃப் தி ட்ரீ ஆஃப் நாலெட்ஜ்' என்ற கட்டுரையில், "பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் முக்கியக் காரணங்களில் ஒன்று ஆண்களின் அதிகார ஆசைதான்... பெண் விடுதலையை அவர்கள் மிகுந்த சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஏன் அதே பழைய பயம்...' என கேள்வி எழுப்பியிருக்கிறார். 

1921-இல் காமினி, வங்காள மகளிர் சமாஜின் சார்பில் மிருணாளினி சென், குமுதினி மித்ரா (பாசு) ஆகியோருடன் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினார். 1925-இல் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. 1926-இல் முதல் முறையாக வங்காளப் பெண்கள் வாக்களித்தனர். காமினி 1922-23 -இல் பெண் தொழிலாளர் விசாரணை ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

1930-இல் வங்காள இலக்கிய மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். 1932-33-இல் வங்காள சாகித்ய பரீட்சத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். கொல்கத்தாப் பல்கலைக்கழகம் ஜகத்தாரிணி தங்கப்பதக்கம் வழங்கி இவரைக் கௌரவித்தது.  

1894-இல் காமினி, கேதார்நாத் ராயை மணந்தார். 1909-இல் தனது கணவரை இழந்தார் காமினி. அவரது மரணம் இவரை மிகவும் பாதித்தது. அத்துயரம் இவரது கவிதைகளிலும் பிரதிபலித்தது.  

காமினி ராய் தனது கடைசிகாலத்தில் சில ஆண்டுகள் ஹசாரிபாக் என்ற சிறிய நகரத்தில் வாழ்ந்தார். 

Kamini Roy (12 October 1864 – 27 September 1933)[1] was a leading Bengali poet, social worker and feminist in British India. She was the first woman honours graduate in British India.[2]

Early life

Born on 12 October 1864 in the village of Basanda, then in Bakergunj district of Bengal Presidency and now in Barisal District of Bangladesh, Roy joined Bethune School in 1883. One of the first girls to attend school in British India, she earned a bachelor of arts degree with Sanskrit honours from Bethune College of the University of Calcutta in 1886 and started teaching there in the same year. Kadambini Ganguly, one of the first two women honors graduates ever in the country, was three years senior to her in the same institution.[3]

Kamini hailed from an elite Bengali Baidya family. Her father, Chandi Charan Sen, a judge and a writer, was a leading member of the Brahmo Samaj. She learnt from his collection of books and used his library extensively. She was a mathematical prodigy but later her interest switched to Sanskrit.[4] Nisith Chandra Sen, her brother, was a renowned barrister in the Calcutta High Court, and later the Mayor of Calcutta while sister Jamini was the house physician of the then Nepal Royal family. In 1894 she married Kedarnath Roy.[3]

Writing and feminism
Bethune School and College will take just pride in Kamini Roy (1864–1933), the first woman lyricist who began composing from 1880 and published her Alo Chhaya in 1889 which created a stir in the literary world as much by its rare sensibilities as by the profundity of woman’s self-realisation. Kamini Roy worked with her pen for nearly fifty years and witnessed the emergence of a new generation of womanhood enriching the social, artistic and literary life of Bengal through their original creations.
— Kalidas Nag in Introduction to the Bethune School and College Centenary Volume, 1949
Her writing is simple and elegant. She published her first collection of verses Alo Chhaya in 1889, and two more books after that but then took a break from writing for several years following her marriage and motherhood. She was a feminist at an age when merely getting educated was a taboo for a woman.[citation needed] She picked up the cue for feminism from a fellow student of Bethune School, Abala Bose. Speaking to a girls' school in Calcutta, Roy said that, as Bharati Ray later paraphrased it, "the aim of women's education was to contribute to their all-round development and fulfillment of their potential".[5]

In a Bengali essay titled The Fruit of the Tree of Knowledge she wrote,

The male desire to rule is the primary, if not the only, stumbling block to women's enlightenment ... They are extremely suspicious of women’s emancipation. Why? The same old fear – 'Lest they become like us'.[6]

In 1921, she was one of the leaders, along with Kumudini Mitra (Basu) and Mrinalini Sen, of the Bangiya Nari Samaj, an organization formed to fight for woman's suffrage. The Bengal Legislative Council granted limited suffrage to women in 1925, allowing Bengali women to exercise their right for the first time in the 1926 Indian general election.[5] She was a member of the Female Labour Investigation Commission (1922–23).[3]

Personal life
After graduating with honours distinction from Bethune college in 1886, she received a teaching position from the same college. She took part in the Ilbert Bill agitation. It was during this period which would be productive for her, as she wrote during this time. She quit teaching after 1894. Herein she published for five years. Shortly, she would marry Kedarnath Roy at the age of 30, which was against the norm during that time. It was highly unusual for women to get married in their thirties in colonial Bengal. [7]

She had two children with Kedarnath, after which she retired from her writing profession. When asked why she had stopped writing she reportedly said, “My children are my living poems. [8] Kamini returned to writing poetry after the death of her husband in 1909 and her oldest son.

Honors and laurels
Roy went out of her way to encourage other writers and poets. In 1923, she visited Barisal and encouraged Sufia Kamal, then a young girl, to continue writing. She was president of the Bengali Literary Conference in 1930 and vice-president of the Bangiya Sahitya Parishad in 1932-33.[3]

She was influenced by the poet Rabindranath Tagore and Sanskrit literature. Calcutta University honoured her with the Jagattarini Gold Medal.[3]

In her later life, she lived at Hazaribagh for some years. In that small town, she often had discussions on literary and other topics with such scholars as Mahesh Chandra Ghosh and Dhirendranath Choudhury. She died on 27 September 1933 while staying in Hazaribag

No comments:

Post a Comment