Monday 17 October 2016

KANNADASAN கவிஞர்களுக்கு சாவே இல்லை என்ற கண்ணதாசன் அமெரிக்காவில் இறந்த நாள் 1981 அக்டோபர் 17



KANNADASAN கவிஞர்களுக்கு சாவே இல்லை என்ற கண்ணதாசன் அமெரிக்காவில் 
இறந்த நாள் 1981 அக்டோபர் 17



கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், 
நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். 

சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். 

சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.


கண்ணதாசன்
பிறப்புமுத்தையா
சூன் 241927
சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடுஇந்தியா
இறப்புஅக்டோபர் 171981(அகவை 54)
சிக்காகோஇலினொய்ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர்காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில்கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
நாடு இந்தியா
இனம்தமிழர்
நாட்டுரிமைஇந்தியர்
எழுதிய காலம்1944-1981
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1961 குழந்தைக்காக

சாகித்திய அகதமி விருது
1980 சேரமான் காதலி
துணைவர்(கள்)பொன்னழகி
பார்வதி
வள்ளியம்மை
பிள்ளைகள்15

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். 

சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 

1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

குடும்பம்[தொகு]

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[1] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[2],[3]. 

கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[4]

 ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.[5]



கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு[தொகு]

அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.[6]

மறைவு[தொகு]

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். 

அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்[தொகு]

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[7] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 

1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 
1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

எம்ஜியார் செய்த உதவி 

 கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார். யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவருக்கு வேண்டிய ஒருவர் நம்ம மாதிரி ஆள்களுக்கு உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார். அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார். 

இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள், அய்யய்யோ வேண்டவே, வேண்டாம் அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன். நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல, இவர் சொல்கிறார், மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர், மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர் அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை எனவே எதையும் யோசிக்காமல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம் என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.



இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார். அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார். 

ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க அவர் ரொம்பவும் தாழந்த குரலில் எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன் மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். 

இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல் சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார் என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார்.

 பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில் பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று, மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார். 

தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன். ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம் நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்.



திரைத்துறைக்கான பங்களிப்புகள்[தொகு]
திரையிசைப் பாடல்கள்[தொகு]
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்

கதை எழுதிய திரைப்படங்கள்[தொகு]
ராஜா தேசிங்கு
வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]
நாடோடி மன்னன்
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]
மதுரை வீரன்
இலக்கியப் படைப்புகள்[தொகு]
கவிதை நூல்கள்[தொகு]
காப்பியங்கள்[தொகு]
மாங்கனி
பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
ஆட்டனத்தி ஆதிமந்தி
பாண்டிமாதேவி
இயேசு காவியம்
முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்[தொகு]

கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2.
கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, காவியக்கழகம், சென்னை
கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி
பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்[தொகு]

அம்பிகை அழகுதரிசனம்
தைப்பாவை
ஸ்ரீகிருஷ்ண கவசம்
கிருஷ்ண அந்தாதி
கிருஷ்ண கானம்
கவிதை நாடகம்[தொகு]
கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு[தொகு]
பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
பஜகோவிந்தம்
புதினங்கள்[தொகு]
அவளுக்காக ஒரு பாடல்
அவள் ஒரு இந்துப் பெண்
சிவப்புக்கல் மூக்குத்தி
ரத்த புஷ்பங்கள்
சுவர்ணா சரஸ்வதி
நடந்த கதை
மிசா
சுருதி சேராத ராகங்கள்
முப்பது நாளும் பவுர்ணமி
அரங்கமும் அந்தரங்கமும்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
தெய்வத் திருமணங்கள்
ஆயிரங்கால் மண்டபம்
காதல் கொண்ட தென்னாடு
அதைவிட ரகசியம்
ஒரு கவிஞனின் கதை
சிங்காரி பார்த்த சென்னை
வேலங்காட்டியூர் விழா
விளக்கு மட்டுமா சிவப்பு
வனவாசம்
பிருந்தாவனம்
சிறுகதைகள்[தொகு]
குட்டிக்கதைகள்
வாழ்க்கைச்சரிதம்[தொகு]
எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

கட்டுரைகள்[தொகு]
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
சமயம்[தொகு]
அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
நாடகங்கள்[தொகு]
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை
உரை நூல்கள்[தொகு]
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

பகவத் கீதை

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
திருக்குறள் காமத்துப்பால்
சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
விருதுகள்[தொகு]
சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)





"காலமெனும் ஆழியிலும் 
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!
கண்ணதாசன்,  கம்பனுக்கு எழுதிய கவிதை இது. 




கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும். 
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள்.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது.

சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார்.
ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. 

திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது.

ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.

கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.

பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.

கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது. 

பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது.

ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.

அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை. 
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. 

சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின.
”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது. 

கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.

கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.

“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.

கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை.

ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.

”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.

இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்.

”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.
காலமாகி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!

கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்

* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள்.
* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.
* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான்.
* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார்.
*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

Image may contain: 3 people, people smiling




No comments:

Post a Comment