டி. ஆர். பாப்பா இசை மேதை
காலத்தை வென்ற கலைஞன்
மறைவு 2004 அக்டோபர் 15
டி. ஆர். பாப்பா (T. R. Papa, 1923–2004) என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா தமிழ், தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளில் இசையமைத்துள்ளார். இவர் பிறந்தது திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி
இசை அமைப்பாளர்களில் அதிகமானோர் ஹார்மோனியக் கலைஞர்கள். இதற்கு விதிவிலக்கானவர் டி.ஆர்.பாப்பா, மிகப் பிரபல்யமான வயலின்கலைஞர்களில் டி.ஆர்.பாப்பாவும் ஒருவர்.டி.ஆர்.சிவசங்கரன் என்ற இயற்பெயர்கொண்டவர் டி. ஆர்.பாப்பா. அவரின் தகப்பன் ராதாகிருஷ்ணபிள்ளை ஒரு வயலின் கலைஞர். வருமானம்குறைவான காரணத்தினால் பள்ளிக்கூடத்திற்கு நான்கு ரூபாய் கட்ட முடியாததால் டி.ஆர்.பாப்பாவின்படிப்பு தடைப்பட்டது.
சிறு வயதிலேயே தஞ்சைதிருவையாறு உற்சவத்திற்கு டி.ஆர். பாப்பா சென்றபோது அவரது தகப்பனின் நண்பரான வயலின்வித்துவானான கும்பகோணம் சிவனடிபிள்ளைடி.ஆர்.பாப்பாவைத் தன்னுடன் விடும்படி அவரின் தகப்பனாரிடம் கேட்டார். அவரின் வேண்டு கோளின்படி டி.ஆர். பாப்பாவை வயலின் மேதைகும்பகோணம் சிவனடி வேலுப்பிள்ளையிடம் ஒப்படைத்தார் தகப்பன்.
சிவனடி வேலு சீமந்தினி 1936 பார்வதி கல்யாணம் 1936 ஆகிய படங்களுக்கு பிடில் வாசித்தார் டி.ஆர். பாப்பாவும் அவருடன் செல்வார். 1938 ஆம் ஆண்டு குருகுல வாசத்தை முடித்துக்கொண்டு தனிக்கச்சேரி செய்ய ஆரம்பித்தார்டி.ஆர்.பாப்பா.
நடிகர் செருகளத்தூர் சாமா ,ஷைலக் ,சுபத்ரா, போன்ற படங்களை தயாரித்தார் .இசை காசி அய்யர் .இவர் எஸ் ஜி கிட்டப்பாவின் அண்ணன்.
பாடலின் இணைப்பு இசை, பின்னணி இசை, இவற்றை சொல்ல சொல்ல அதற்குரிய ஸ்வரங்களை எழுதி மற்ற வாத்தியக்காரர்களுக்கு கொடுக்கும் வேலையை செய்தார்
சேலம் மார்டன் ஆட்ஸ் மனோன்மணி படத்தைத்தயாரித்த போது அப்படத்தின் இசையமைப்பில் வயலின் கலைஞராகப் பணியாற்றினார்டி.ஆர்.பாப்பா,
1941 ஜப்பான் குண்டு போடுமோ என்ற அச்சத்தில் சென்னையை விட்டு வெளியேறி கொண்டிருந்த காலம் அது .அப்போது ஜூ பிடரில் கண்ணகி , குபேர குசலா போன்ற படங்களுக்கு இசை எஸ் வி வெங்கடராமன் .
அப்போது அலுவலகப்பையனாக எம்.எஸ். விஸ்வநாதன் வேலை செய் தார். பிரதம இசையமைப்பாளர் இல்லாதபோதுசில பாடல்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பார். அவரின் இசையை அங்குள்ள சிலர்பெரிதாக எடுக்கவில்லை. அப்பொழுதே எம்.எஸ். விஸ்வநாதன் சிறந்த இசை அமைப்பாளராகவருவார் என டி.ஆர்.பாப்பா கணித்தார். அதனைஎம்.எஸ்.விஸ்வநாதன் தொலைக்காட்சிப் பேட்டிஒன்றில் தெரிவித்தார்.
டி.ஆர்.பாப்பாவின் வயலின் இசையை விமர்சகர்கள் அங்கீகரித்தார்கள். கல்கியின் மகள் ஆனந்தி, சதாசிவத்தின் மகள் ராதா ஆகியோரின்நாட்டியங்களின்போது டி.ஆர்.பாப்பா வயலின்வாசித்தார்.
அதற்கு எம் எஸ் சுப்புலக்ஷ்மி பின் பாட்டு பாடினார்
சிட்டால் பிலிம்ஸ் அதிபர் ஜோஸப் தனியத்டி.ஆர்.பாப்பாவுக்கு சினிமாவில் இசையமைக்கசந்தர்ப்பம் கொடுத்தார். ஆத்ம காந்தி என்ற மலையாளப்படத்தின் மூலம் சினிமா இசை அமைப்பாளரான டி.ஆர்.பாப்பா ஜோஸப் தனியத்தின் பலபடங்களுக்கு டி.ஆர்.பாப்பா இசையமைத்தார்.
அவரின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா என்றால் அது மிகையாகாது.உங்கள் படத்தின் இசையமைப்பாளர் கதாநாயகன் யாரென்று ஜோஸப் தனியத்திடம் கேட்டால்கொஞ்சமும் தாமதிக்காது டி.ஆர். பாப்பா என்பார்புதிய கதாநாயகர் பலரை அறிமுகப்படுத்தியவர்களில்ஜோஸப் தனியத்தும் ஒருவர்.
அவர் அறிமுகப்படுத்தியவர்களில் அதி உச்சத்தில் இருந்தவர்களில் தென்னக ஜேம்ஸ் பொண்ட் என அழைக்கப்படும் ஜெய்சங்கரும் ஒருவர்.அறிமுக கதாநாயகனுக்கு 1000 அல்லது 2000ஆயிரம் ரூபõ கொடுக்கும் ஜோஸப் தனியத் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பார். அன்பு படத்தில் ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடியஎன்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்என்ற பாடல் ஒலிப்பதிவு நடைபெற்ற போது கதாநாயகனான நடிகர் திலகம் அங்கே வந்தார்.
நான்பியானோ வாசிக்கும் போது பாடல் ஆரம்பித்தால்நன்றாக இருக்கும் என்றார். அவரின் ஆலோசனைப்படி பியானோ இசையுடன் பாடல் ஆரம்பமாகியது.
கருணாநிதி பற்றி கூறும்போது பாடலை கொடுத்தவுடன் பாடி காட்ட வேண்டும் என்று விரும்பும் கருணாநிதி வார்த்தைகளையும் மெட்டுக்கு தகுந்தாற்போல் மாற்றியும் கொடுப்பார் . நாமும் வார்த்தைகளை சிதைக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்
இவருடைய பல பாடல்கள் பி சுசீலாவின் குரலில் அமரத்துவம் பெற்றுள்ளன அதே சமயத்தில் அன்பு திரைப்படத்தில் பி சுசீலாவின் குரல் தெலுங்கு போல் உச்சரிப்பு இருக்கிறது என்று அவரை நிராகரித்ததும் உண்டு
குறிப்பிடத்தக்க சில பாடல்கள்[மூலத்தைத் தொகு]
சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை
ஆசை பொங்கும் அழகு ரூபம் -அன்பு - எ .எம் .ராஜா-ஜமுனாராணி
வருவேன் நான் உனது வாசலுக்கே -மல்லிகா
ஒண்ணுமே புரியல உலகத்திலே -குமாரராஜா
இரவும் வரும் பகலும் வரும் - இரவும் பகலும்
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
கத்தியை தீட்டாதே - விளக்கேற்றியவள்
குத்தால அருவியிலே -நல்லவன் வாழ்வான்
சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான் - நல்லவன் வாழ்வான்
ஆண்டவன் ஒருவன் -நல்லவன் வாழ்வான்
இருமாங்கனிபோல் இதழ் ஓரம் -வைரம்
முத்தை தரு பத்தி -அருணகிரி நாதர்
ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வையோ -மறுபிறவி
அம்மா என்பது முதல் வார்த்தை - டீச்சரம்மா
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]
மாப்பிள்ளை (1952)
ஆத்மசாந்தி மலையாளம்
அன்பு (1953)
அம்மையப்பன் (1954)
குடும்பவிளக்கு (1956)
ரம்பையின் காதல் (1956)
ராஜா ராணி (1956)
ஆசை (1956)
ரங்கோன் ராதா (1956)
மல்லிகா (1957)
தாய் மகளுக்கு கட்டிய தாலி ( 1959 )
குறவஞ்சி (1960)
விஜயபுரி வீரன் (1960)
நல்லவன் வாழ்வான் (1961)
குமார ராஜா (1961)
எதையும் தாங்கும் இதயம் (1962)
சீமான் பெற்ற செல்வங்கள் (1962)
அருணகிரிநாதர் (1964)
இரவும் பகலும் (1965)
காதல் படுத்தும் பாடு ( 1966)
பந்தயம் ( 1967 )
டீச்சரம்மா ( 1968 )
அவரே என் தெய்வம் (1969)
ஏன் (1970)
அருட்பெருஞ்ஜோதி (1971)
மறுபிறவி ( 1972)
அவசர கல்யாணம் (1972)
வைரம் (1974)
வாயில்லாப்பூச்சி (1976)
விருதுகள்[மூலத்தைத் தொகு]
இசைப்பேரறிஞர் விருது, 1996[1]
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]
No comments:
Post a Comment