Tuesday 18 October 2016

VEERAPPAN சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டு கொலை செய்யப்பட்ட நாள் 2004 அக்டோபர் 18


VEERAPPAN சந்தனக்கடத்தல் வீரப்பன் 
சுட்டு கொலை செய்யப்பட்ட நாள் 
2004 அக்டோபர் 18




வீரப்பன் எனப்படும் கூசு முனுசாமி வீரப்பக்கவுண்டர்[2] (1952 - 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார்.


கூசு முனிசாமி வீரப்பன்

வீரப்பன் நாமதல்லி காடுகளில் தன் கூட்டத்தினருடன்
பிறப்புசனவரி 181952
கோபிநத்தம், கர்நாடகம்[1]
இறப்புஅக்டோபர் 18 2004
மற்ற பெயர்கள்வீரப்பன்
பணியானை வேட்டை
சந்தனமரம் கடத்தல்
வாழ்க்கைத் துணைவீ.முத்துலட்சுமி
பிள்ளைகள்வீ.வித்தியாராணி, வீ.பிரப விஜியாலட்சுமி

பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கர்நாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.

வீரப்பன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும் அவர் கொள்ளை செய்த பொருட்களை யாரிடம் வர்த்தகம் செய்தார்..?


அரசின் கண்களில் படாமல் அரசு அதிகாரிகள் கண்களில் படாமல் எப்படி இவரால் இவ்வளவு பெரும் செயல்களை செய்தார் என்பதற்கும்..!


அவரின் சொத்துக்களை எந்த வங்கியில் சேமித்து வைத்துள்ளார் என்பது போன்ற ஞாயமான கேள்விகளுக்கு இதுவரை ஆதாரங்கள் சமர்ப்பிக்க இயலவில்லை ..!


மேலும் வீரப்பன் தேடுதல் வேட்டை என்கின்ற பெயரில் வீரப்பன் கிராமத்திற்குள் புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காவல் துறை பற்றி அந்த ஊர் மக்கள் செய்த புகார்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் பெண்கள் பாதிக்கப்பட்டதற்கும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தகவல் இல்லை..


மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன...


இவர் 184 பேரை கொன்றதற்காகவும் (அதில் பாதிக்கு மேற்பட்டோர் போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆவர் ), தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார்.

US$2,600,000 (இந்திய மதிப்பு சுமார் 5 கோடி) மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், US$22,000,000 (இந்திய மதிப்பு சுமார் 130 கோடி) மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.[3]


இவர் கொல்லப்படும் வரை இவரை பிடித்து கொடுப்பவர்க்கு 5 கோடி (US$820,000) சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. [4]







ஆரம்ப வாழ்கை[தொகு]

வீரப்பன் 18 ஜனவரி 1952 ம் ஆண்டு கோபிநத்தம் என்னும் கிராமத்தில் வன்னியர் குலத்தில் பிறந்தார். இவருக்கு ஆஸ்த்மா பாதிப்பு இருந்தது. வீரப்பன் மலையூர் மம்மட்டியான் என்ற கைதேர்ந்த கொள்ளையனின் செயல்களால் ஈர்க்கப்பட்டார்.[சான்று தேவை] மம்மட்டியான் இரு கொள்ளை குழுக்களுக்கு நடுவே நடந்த சண்டையில் கொல்லப்பட்டார் .[சான்று தேவை] மம்மட்டியானை கொன்றவரின் சகோதரனை கொன்றதே வீரப்பன் செய்த முதல் கொலையாகும்.[5][6][7]

குடும்பம்[தொகு]
வீரப்பனுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.




குற்றவாளி வாழ்க்கை[தொகு]

தன் கூட்டாளிகளோடு வீரப்பன்
சந்தனமர கடத்தல் செய்த தனது உறனிவர் செவி கவுண்டரிடம் உதவியாளராக சேர்ந்து தனது குற்றவாளி வாழ்க்கையை தொடங்கினார் வீரப்பன்.[8] வீரப்பன்னின் தந்தை மற்றும் உறவினர்கள் கூட அதே காட்டில் சந்தனமர கடத்தலுக்காக புகழ்பெற்றவர்கள். 1972-ஆம் ஆன்று முதன்முறையாக வீரப்பன் கைது செய்யப்பட்டார். [1]

சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார். பிறகு, தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொல்ல ஆரம்பித்தார். பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன். காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் துப்பு கொடுப்பவர்களே வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அடங்குவர்.[9]


1987-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கடத்தி கொன்றார். இந்த கொலை சம்பவம் மூலம் இந்திய அரசின் கவனம் அவர் பக்கம் முதன்முதலாக திரும்பியது.[10] 1991-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண்டில்லாப்பல்லி ஸ்ரீநிவாஸ் எனும் வனத்துறை அதிகாரியை கொன்றார். மற்றும் அதற்க்கு அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் உயர் காவல்த்துறை அதிகாரி ஹரிக்ரிஷ்ணா உட்பட பல காவல்த்துறையினர் சென்ற வழியில் இடைமறித்து தாக்கி கொன்றார்.


வீரப்பன் பொதுமக்களையும் விட்டுவைக்கவில்லை. ஒருமுறை, காவல்த்துறையினரின் வாகனத்தில் பயணித்த தனது கிராமவாசியை கொன்றானர். யாரையேனும் காவல்த்துறை உளவாளி என சந்தேகித்தால் கொன்று விடுவது வீரப்பனுடைய வழக்கம். அரசியல் களேபரங்கள் காரணமாக, வீரப்பன்னால் மாநிலம் விட்டு மாநிலம் தாண்ட முடிந்தது. [11]


தன் கூட்டாளிகளோடு வீரப்பன்

நக்கீரன் ஆசிரியர் பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார். இவருடைய வரலாறு சந்தனக்காடு என்ற தொடராக இயக்குனர் கவுதமன் அவர்களால் இயக்கப்பட்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இந்த தொலைக்காட்சி ஊடகம் வீரப்பன் சார்ந்த வன்னியர் சாதியை முன்னிறுத்தி இயங்க கூடியது 

வீரப்பன் இறப்பு 












வீரப்பன் இறந்தது பற்றி பலர் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தாலும் வீரப்பன் சாகடிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் சட்ட ரீதியில் ஏற்படவில்லை .

அமெரிக்காவில் போன்னி கிலாய்டு க்கு ஏற்பட்ட கதி தான் .


BONNY GLYDE DEATH SCENE FROM FILM 

பயங்கரமான குற்றவாளிகள் குறுக்கு வழியில் கொள்ளப்பட எந்த ஆட்செபமும் இல்லை .எனவே வீரப்பன் கொலையை மறு பரிசீலனை செய்ய மறுத்தது .அதற்கு  தகுந்த சரியான காரணமும் இருந்தது 

No comments:

Post a Comment