Wednesday 4 July 2018

UNITED STATES OF AMERICA GOT FREEDOM FROM ENGLAND 1776 JULY 4










UNITED STATES OF AMERICA GOT 
FREEDOM FROM ENGLAND
1776 JULY 4


அமேரிக்கா எப்படி வல்லரசாகியது -சுதந்திரம் பெற்ற நாள்  1776 ஜூலை 4

அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பது United States of America, USA, US, பொதுவாக யுனைடெட் ஸ்டேட்ஸ் , யு.எஸ். , யு.எஸ்.ஏ, அல்லது அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் ஐக்கிய மாவட்டமும் கொண்ட ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இந்நாடு வட அமெரிக்கக் கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் 48 மாநிலங்களும் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யும் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. அலாஸ்கா, வட அமெரிக்க கண்டத்தின் வடமேற்கே அமைந்துள்ளது, இது கிழக்கில் கனடாவையும் மேற்கில் ரஷ்யாவையும் கொண்டுள்ளது. ஹவாய் மாநிலம் பசிபிக்கின் மையத்தில் அமைந்திருக்கும் ஒரு தீவுக் கூட்டமாகும். அமெரிக்கா கரீபியன் மற்றும் பசிபிக்கிலும் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் தனிமைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.


3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர கிமீ) மற்றும் 306 மில்லியன் மக்களுடன், அமெரிக்கா மொத்த பரப்பளவில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப் பெரிய நாடாகவும், நிலப் பரப்பு மற்றும் மக்கள்தொகையில் மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது. உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும்.[10] அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, 2008 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, கொள்முதல் திறன் ஒப்பீட்டில் இது ஏறக்குறைய 21%).[5]

அட்லாண்டிக் கடல்படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. சூலை 4, 1776 அன்று, விடுதலை பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்க புரட்சி போரில் எதிர்ப்பு அரசாங்கங்கள் இங்கிலாந்தை தோற்கடித்தன. இதுதான் வெற்றிகரமான முதல் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராகும்.[11] தி பிலடெல்பியா கூட்ட வரைவில் நடப்பு அமெரிக்க அரசியல்சட்ட தீர்மானம் செப்டம்பர் 17, 1787 அன்று நிறைவேற்றப்பட்டது; அதனை அடுத்த ஆண்டில் உறுதி செய்து மாநிலங்களை ஒரு வலிமையான நடுவண் அரசாங்கத்தின் கீழான ஒற்றைக் குடியரசாக மாற்றியது. பல அடிப்படை குடிமுறைக்குரிய உரிமைகளை உறுதி செய்யும் பத்து அரசியல்சட்ட திருத்தங்களை அடக்கிய உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது..

19 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸ், எசுப்பானியா, இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா நிலங்களைப் பெற்றது. மேலும் டெக்சஸ் குடியரசையும் மற்றும் ஹவாய் குடியரசையும் இணைத்துக் கொண்டது. விவசாயம் தெற்கிற்க்கும் தொழில்துறை வடக்கிற்கும் இடையில் எழுந்த சண்டைகளும் அடிமை நிறுவனங்களின் விரிவாக்கங்கலும் 1860களில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தன. வடக்கின் வெற்றி நாட்டின் பிரிவினையை தடுத்தது. மேலும் அடிமைமுறை முடிவுக்கு வந்தது. 1870களில், அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது.[12] ஸ்பெயின் - அமெரிக்க போரும் முதலாம் உலகப் போரும் ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்கு பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக இருந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் நிறுவனராக அமெரிக்கா வெளிப்பட்டது. பனிப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றானது. உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில் இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது.[13]

பெயர் வரலாறு[தொகு]

1507 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் வரைபட நிபுணரான மார்டின் வால்ட்ஸ்முல்லர் தான் தயாரித்த உலக வரைபடத்தில், மேற்கத்திய அரைக்கோள நிலப்பகுதிக்கு, இத்தாலிய ஆய்வுப் பயணியும் வரைபட நிபுணருமான அமெரிக்கோ வெஸ்புகியின் பெயரில் அமெரிக்கா]] (America) எனப் பெயரிட்டார்.[14] முன்னர் பிரித்தானிய குடியேற்ற நாடாக இருந்தவை, நாட்டின் புதிய பெயரை சுதந்திரப் பிரகடனத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தின. சூலை 4, 1776 அன்று "ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள்" கைக்கொண்ட "பதின்மூன்று அமெரிக்க ஐக்கிய அரசாங்கங்களின் கருத்தொருமித்த பிரகடனமாக" இது அமைந்தது.[15] தற்போதைய பெயரை நவம்பர் 15, 1777 அன்று இறுதியாக ஏற்றுக்கொண்டது. இரண்டாம் கண்டப் பேரவையில் நிறைவேறிய கூட்டமைப்பு விதிகளில் பின்வருமாறு கூறப்படுகிறது, "இந்த கூட்டமைப்புப் பகுதி இனி 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா' என இருக்கும்".யுனைடெட் ஸ்டேட்ஸ் என்னும் சுருக்க வடிவமும் ஏற்றுக்கொள்ளப்படும். யு.எஸ்., யு.எஸ்.ஏ, அமெரிக்கா ஆகியவை பிற பொது வடிவங்களில் அடக்கம். அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ், தி ஸ்டேட்ஸ் ஆகியவையும் வழக்குப் பெயர்களில் அடக்கம். ஒரு சமயத்தில் அமெரிக்காவிற்கு பிரபல பெயராக இருந்த கொலம்பியா என்பது கிறிஸ்டோபர் கொலம்பசிடம் இருந்து வரப்பெற்றதாகும். இது "டிஸ்டிரிக்ட் ஆஃப் கொலம்பியா" என்னும் பெயரில் தோன்றுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடிமகனைப் பொதுவாக அமெரிக்கர் என்று அழைக்கலாம். ஐக்கிய மாநிலங்கள் என்பது அலுவலக அடைமொழியாக இருந்தாலும் கூட, அமெரிக்கா மற்றும் யு.எஸ். ஆகியவை தான் இந்நாட்டிற்குப் பெரும்பாலும் பயன்படுத்தும் பொதுவான அடைமொழிகளாக இருக்கின்றன.

ஆரம்பத்தில் "யுனைடெட் ஸ்டேட்ஸ்" (United States) என்கிற பதம், பன்மையில் பயன்பட்டது. பின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த சமயத்தில், அதனை ஒருமையாகக் கருதுவது பழக்கத்தில் வந்தது. இப்போது ஒருமை வடிவம் தான் இயல்பானதாக இருக்கிறது, பன்மை வடிவம் "இந்த ஐக்கிய மாநிலங்கள்" என்னும் முதுமொழிகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.[16]

புவியியல்[தொகு]

தொடர்ச்சியான அமெரிக்காவின் புவியமைப்பை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படம்
ஐக்கிய மாநிலங்களின் மொத்த நிலப்பரப்பு சுமார் 1.9 பில்லியன் ஏக்கர்களாகும். மாநிலத் தொகுப்புகளில் இருந்து கனடாவால் பிரிந்திருக்கும் அலாஸ்கா அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலமாகும், இதன் நிலப்பரப்பு 365 மில்லியன் ஏக்கர்கள். வட அமெரிக்காவின் தென்மேற்கில் மத்திய பசிபிக்கில் ஒரு தீவுக் கூட்டத்தை ஆக்கிரமித்திருக்கும் ஹவாய் 4 மில்லியன் ஏக்கர்களுக்கு சற்று அதிகமான பரப்பை கொண்டுள்ளது.[17] ரஷ்யா மற்றும் கனடாவிற்கு பிறகு, மொத்த நிலப்பரப்பில் அமெரிக்கா சீனாவை விட சற்று மேலே அல்லது கீழே என உலகின் மூன்றாவது அல்லது நான்காவது பெரிய நாடாக உள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைச்சிக்கல் பகுதிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதுடன் அமெரிக்காவின் மொத்த பரப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பொறுத்து இவை வேறுபடுகிறது: சி.ஐ.ஏ. வேர்ல்டு ஃபேக்ட்புக் குறிப்பிடுவது3,794,083 sq mi (9,826,630 km2),[1] ஐநா புள்ளிவிவரப் பிரிவு குறிப்பிடுவது 3,717,813 sq mi (9,629,091 km2)[18] அதே போல் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா குறிப்பிடுவது 3,676,486 sq mi (9,522,055 km2).[19] நிலப் பரப்பை மட்டும் அடக்கி பார்த்தால், அமெரிக்கா ரஷ்யா, சீனாவுக்கு அடுத்ததாக கனடாவுக்கு சற்று மேலே மூன்றாவது இடத்தில் உள்ளது.[20]

டெடான் ரேஞ்ச், ராக்கி மலைத்தொடரின் பகுதி
அட்லாண்டிக் கடல் படுகையின் கடற்கரை சமவெளி உள்ளமைந்த பகுதிகளில் இலையுதிர் காடுகள் மற்றும் பீட்மோன்ட்டின் தொடர்ச்சி குன்றுகளுக்கும் வழிவிடுகிறது. கிரேட் லேக்ஸ் மற்றும் மிட்வெஸ்ட் புல்வெளிப் பகுதிகள் இடையான கிழக்கு கடல்படுகையை அபலாசியன் குன்றுகள் பிரிக்கிறது. உலகின் நான்காவது நீளமான நதியான மிசிசிபி-மிசௌரி நதி, முக்கியமாக வடக்கிலிருந்து-தெற்காக நாட்டின் இதயப் பகுதி வழியே பாய்கிறது. பெரும் சமவெளிகளின் தட்டையான, பசும் புல்வெளி மேற்குப் பகுதி வரை நீள்கிறது, தென்கிழக்கில் உயர்ந்த மேட்டுப் பகுதி இதனை குறுக்கிடுகிறது. பெரும் சமவெளிகளின் மேற்கு விளிம்பில், ராக்கி மலைகள் வடக்கில் இருந்து தெற்காக நாடெங்கிலும் நீள்கிறது, கொலராடோவில் 14,000 அடிக்கும் (4,300 மீ) அதிகமான உயரங்களை இது எட்டுகிறது. இன்னும் மேற்கில் ராக்கி கிரேட் பேசின், மோஜாவே ஆகியவை உள்ளன. சியரா நெவெடாவும் கேஸ்கேடு சிகரங்களும் பசிபிக் கடலோர பகுதியை ஒட்டி செல்கின்றன. 20,320 அடி (6,194 மீ) உயரத்தில், அலாஸ்காவின் மெக்கென்லி சிகரம் இந்நாட்டின் மிக உயர்ந்த சிகரம் ஆகும். கொதிக்கும் எரிமலைகள் அலாஸ்காவின் அலெக்சாண்டரிலும் அலெசியன் தீவுகள் முழுமையிலும் இருக்கின்றன, ஹவாயிலும் எரிமலை தீவுகள் உள்ளன. ராக்கி பகுதியில் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவின் கீழ் அமைந்திருக்கும் சூப்பர்வல்கனோ இந்த கண்டத்தின் மிகப்பெரும் எரிமலையாகும்.[21]

வழுக்கைக் கழுகு, 1782 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் தேசியப் பறவையாகும்.

தனது பெரும் பரப்பின் பூகோள பன்முகத் தன்மை காரணமாக, அமெரிக்கா பல்வேறு காலநிலைகளை உள்ளடக்கி கொண்டுள்ளது. 100வது தீர்க்கரேகைக்கு கிழக்கே, காலநிலையானது வடக்கில் ஈரப்பதம் மிகுந்த கரைநிலப்பகுதி நிலையில் தொடங்கி தெற்கில் ஈரப்பதம் மிகுந்த துணை-வெப்பமண்டல பகுதி நிலை வரை மாறுபடுகிறது. புளோரிடாவின் தெற்கு முனை வெப்பமண்டலப் பகுதியாகும், ஹவாயும் இது போலவே. 100வது தீர்க்கரேகைக்கு மேற்கிலான பெரும் சமவெளிகள் பாதிவறண்ட காலநிலை கொண்டிருக்கிறது. மேற்கு மலைகளில் அதிகமானவை ஆல்பைன்கள். கிரேட் பேசினில் காலநிலை வறண்டும், தென்மேற்கில் பாலைவனமாகவும், கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில் மத்தியதரைக்கடல் காலநிலையும், கடலோர ஓரிகான், வாஷிங்டன், தெற்கு அலாஸ்கா ஆகிய பகுதிகளில் கடல்தட்பவெப்பநிலையுடனும் காணப்படுகிறது. அலாஸ்காவின் அநேகப் பகுதிகள் ஆர்க்டிக் துணைப்பகுதி அல்லது துருவப்பகுதியாக இருக்கிறது. அதீத காலநிலை அசாதாரணமானது அல்ல- மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள மாநிலங்கள் சூறாவளிகளுக்கு ஆட்படும், உலகின் கடல்புயல்களில் பல இந்நாட்டிற்குள் நிகழ்கிறது, குறிப்பாக மிட்வெஸ்ட்டின் டொர்னாடோ நீர்ப்பாதை பகுதி.[22]

அமெரிக்க உயிரினச் சூழல் பிரம்மாண்ட பன்முகத்தன்மை கொண்டதாகும்: குழல்வகை தாவரங்களின் சுமார் 17,000 இனங்கள் தொடர்ச்சியான அமெரிக்க நாடுகளிலும் அலாஸ்காவிலும் காணப்படுகிறது, 1,800 க்கும் அதிகமான பூக்கும் தாவர இனங்கள் ஹவாயில் காணப்படுகிறது, இவற்றில் சில நாட்டின் பிற முக்கியப் பகுதிகளிலும் காணப்படுகிறது.[23] 400 பாலூட்டி வகைகள், 750 பறவை இன வகைகள், 500 வகை ஊர்வன, நீர்நில வாழ்வன வகைகளுக்கு தாயகமாக அமெரிக்கா விளங்குகிறது.[24] சுமார் 91,000 பூச்சி இன வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன.[25] அழியும் அச்சுறுத்தலுக்கும் அபாயத்திற்கும் ஆளாகியுள்ள உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் 1973 ஆம் ஆண்டின் அபாயமுற்றுள்ள உயிரினச் சட்டம் பாதுகாக்கிறது, இதனை அமெரிக்க மீன் மற்றும் காட்டு உயிரின சேவை அமைப்பு கண்காணிக்கிறது. மொத்தம் ஐம்பத்தி எட்டு தேசிய பூங்காக்களும், நூற்றுக்கணக்கான பிற ஐக்கிய நிர்வாக பூங்காக்களும், காடுகளும், காட்டின பகுதிகளும் உள்ளன.[26] மொத்தத்தில் நாட்டின் நிலப் பகுதியில் அரசாங்கம் 28.8 சதவீதத்தைக் கொண்டுள்ளது.[27] இவற்றில், சில பகுதிகள் எண்ணெய் தோண்டுவதற்கும், இயற்கை வாயு துளையிடுவதற்கும், மரம் வளர்ப்பதற்கும் அல்லது கால்நடை பண்ணைகளுக்கும் குத்தகைக்கு விடப்படுகிறது; 2.4% ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுகிறது என்றாலும் அநேக பகுதிகள் பாதுகாக்கப்பட்டவை ஆகும்.[27]

வரலாறு[தொகு]

பூர்வீக அமெரிக்கர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும்[தொகு]
அலாஸ்கா பூர்வீக குடிகள் உள்ளிட, பிரதான அமெரிக்காவின் பூர்வீக மக்கள் ஆசியாவில் இருந்து குடியேறியவர்கள். அவர்கள் குறைந்தது 12,000 பேர் 40,000 ஆண்டுகள் முன்னதாக வந்து குடியேறினர்.[28] கொலம்பியருக்கு முந்தைய மிசிசிபி கலாச்சாரத்தினர் போன்ற சிலர் முன்னேறிய விவசாயம், பிரம்மாண்ட கட்டிடக் கலை மற்றும் மாநில அளவிலான சங்கங்களை உருவாக்கினர். ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறத் துவங்கிய பின், பல பூர்வீக அமெரிக்கர்கள் சின்னம்மை போன்ற இறக்குமதியான நோய்த் தொற்றுகளுக்கு பலியானார்கள்.[29]

மேபிளவர் யாத்ரீகர்களை நியூ வேர்ல்டுக்கு 1620 ஆம் ஆண்டில் அனுப்பியது, 1882 ஆம் ஆண்டில் வில்லியம் ஹால்சல் எழுதிய பிளைமவுத் துறைமுகத்தில் மேபிளவர் புத்தகத்தில் விவரித்தபடி
1492 ஆம் ஆண்டில், ஜெனோவாவின் ஆய்வுப் பயணியான கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஸ்பெயின் மன்னரின் ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு கரீபியன் தீவுகளை எட்டினார், அங்கிருந்த பூர்வீக குடிகளுடன் முதல் தொடர்பு கொண்டார். ஏப்ரல் 2, 1513 அன்று ஸ்பெயினின் வெற்றியாளரான ஜூவான் போன்ஸ் டி லியோன் அவர் "லா புளோரிடா" என்றழைத்த ஒரு பகுதியில் காலடி வைத்தார் - இவை யாவும் தற்போதைய அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் முதன் முதலில் காலடி வைத்த பின் நடந்த நிகழ்வுகளின் முதன்மை ஆவணங்கள் ஆகும். பிராந்தியத்தில் ஸ்பெயின் குடியேற்றங்களைத் தொடர்ந்து தற்போதைய நாளின் தென்மேற்கு அமெரிக்க பகுதியினர், இவர்கள் மெக்சிகோ வழியே ஆயிரக்கணக்கில் வந்தனர். பிரான்சின் விலங்குரோம வர்த்தகர்கள் புதிய பிரான்சு சாவடிகளை கிரேட் லேக்ஸ் பகுதியைச் சுற்றி நிறுவினர்; இறுதியில் வட அமெரிக்காவின் உள்பகுதியில் பெரும் பகுதியை மெக்சிகோ வளைகுடா வரைக்கும் பிரான்சு உரிமை கொண்டாடியது. முதல் வெற்றிகர ஆங்கில நாட்டினரின் குடியேற்றங்கள் 1607 ஆம் ஆண்டில் ஜேம்ஸ்டவுனில் வர்ஜினியா குடியேற்ற நாடு மற்றும் 1620 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட யாத்ரீகர் பிளைமவுத் குடியேற்ற நாடு ஆகியவையாகும். மசாசூட்ஸ் விரிகுடா குடியேற்ற நாட்டின் 1628 ஆம் ஆண்டு சட்ட வரைவு தொடர்ச்சியான குடியேற்ற அலையில் விளைந்தது; 1634 ஆம் ஆண்டு வாக்கில் நியூ இங்கிலாந்து பகுதியில் சுமார் 10,000 ப்யூரிடன்கள் குடியேறினர். 1610 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிக்கும் அமெரிக்க புரட்சிக்கும் இடையில், சுமார் 50,000 குற்றவாளிகள் பிரித்தானியாவின் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பினர்.[30] 1614 ஆம் ஆண்டு தொடங்கி, டச்சு நாட்டினர் மன்ஹாட்டன் தீவிலுள்ள நியூ ஆம்ஸ்டர்டாம் உள்பட ஹட்சன் நதியின் கீழ்முகத்துவாரப் பகுதிகளில் குடியேறினர்.

1674 ஆம் ஆண்டில், டச்சு நாட்டினர் தங்களது அமெரிக்க பகுதிகளை இங்கிலாந்தின் வசம் இழந்தனர்; நியூ நெதர்லாந்து மாகாணம் நியூ யார்க் என பெயர் மாற்றம் கண்டது. பல புதிய குடியேற்றவகையினர், குறிப்பாக தெற்கு பகுதிக்கு, ஒப்பந்த அடிப்படையில் அனுப்பிய சேவகர்களாக இருந்தனர்- 1630 மற்றும் 1680 ஆண்டுகளுக்கு இடையே வர்ஜீனியாவில் குடியேறியவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இந்த வகையினரே.[31] அந்த நூற்றாண்டு நிறைவுறும் காலத்திற்குள்ளாக, ஆப்பிரிக்க அடிமைகள் அடிமை தொழிலாளர்களின் முதன்மை மூலமாக ஆகி விட்டிருந்தனர். 1729 ஆம் ஆண்டுகளில் கரோலினாக்கள் பிரிவு மற்றும் 1732 ஆம் ஆண்டுகளில் ஜார்ஜியா குடியேற்ற நாடு அமைப்பு, இவற்றுடன், அமெரிக்கா என்று பின்னாளில் ஆகவிருந்த பதின்மூன்று பிரித்தானிய குடியேற்ற நாடுகளும் நிறுவப்பெற்றன. இந்த குடியேற்ற நாடுகள் அனைத்தும் அநேக சுதந்திர மனிதர்களுக்கு அணுகலுள்ள வகையில் தேர்தல்களை கொண்டிருந்தன, பழைய ஆங்கிலேயர் உரிமைகளுக்கு பணிவும் குடியரசுவாதத்திற்கு சுயாட்சி ஆர்வ ஆதரவு உணர்வுகளும் வளர்ந்தன. அனைத்துமே ஆப்பிரிக்க அடிமை வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்கி வைத்திருந்தன. உயர்ந்த பிறப்பு விகிதங்கள், குறைவான இறப்பு விகிதங்கள் மற்றும் தொடர்ந்த குடியேற்றம் இவற்றின் காரணமாக குடியேற்ற நாடுகளின் மக்கள்தொகை வெகு துரிதமாய் வளர்ந்தது. 1730 முதல் 1740 ஆம் ஆண்டுகளில் பெரும் விழிப்பு என்ற கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் தோன்றி மதம் மற்றும் மத சுதந்திரத்தில் ஆர்வத்திற்கு உரமூட்டியது. பிரான்சு மற்றும் இந்திய போரில், பிரித்தானிய படைகள் கனடாவை பிரான்சு நாட்டினரிடம் இருந்து கைப்பற்றினர், ஆனால் ஃபிராங்கோபோன் மக்கள் அரசியல்ரீதியாக தெற்கத்திய குடியேற்ற நாடுகளிடம் இருந்து தனிமைப்பட்டே இருந்தனர். பூர்வீக அமெரிக்கர்கள் (இவர்கள் "அமெரிக்க இந்தியர்கள்" என்று பொதுவாக அழைக்கப்படுகிறார்கள்) இடம் பெயர்ந்த சூழ் நிலையிலும், இந்த பதின்மூன்று குடியேற்ற நாடுகளும் 1770 ஆம் ஆண்டிலேயே மொத்தம் 2.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்தன, இது பிரித்தானிய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் கறுப்பு அடிமைகளாவர்.[32] பிரித்தானிய வரிவிதிப்புக்கு ஆட்பட்டிருந்த போதிலும் கூட, அமெரிக்க குடியேற்ற நாட்டினருக்கு இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாதிருந்தது.

விடுதலை மற்றும் விரிவாக்கம்[தொகு]

விடுதலைப் பிரகடனம், ஜான் ட்ரம்புல், 1817–18
1760 ஆம் ஆண்டுகளிலான புரட்சிகர காலகட்டம் மற்றும் 1770 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு இட்டுச் சென்றது, இப்போர் 1775 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது. ஜூன் 14, 1775 அன்று, பிலடெல்பியாவில் கூடிய கண்டமாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தை அமைத்தது."அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்" அத்துடன் "குறிப்பிட்ட அந்நியப்படுத்தமுடியாத உரிமைகள்" அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற பிரகடனத்துடன், இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது, இந்த பிரகடன வரைவு ஜூலை 4, 1776 அன்று, தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த தேதியில் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1777 ஆம் ஆண்டில், கூட்டமைப்பு விதிகள் ஒரு பலவீனமான ஐக்கிய அரசாங்கத்தை நிறுவியது, இது 1789 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. பிரான்சின் உதவியோடு அமெரிக்க படைகளால் பிரித்தானிய படைகள் தோல்வியுற்ற பிறகு, கிரேட் பிரிட்டன் அமெரிக்க சுதந்திரத்தையும், மிசிசிபி நதிக்கு மேற்கிலுள்ள அமெரிக்க பிராந்தியம் மீதான அமெரிக்க அரசாங்கங்களின் இறையாண்மையையும் அங்கீகரித்தது. வரி அதிகாரங்களுடன் ஒரு வலிமையான தேசிய அரசாங்கத்தை நிறுவ விரும்பியோர் ஒரு அரசியல்சட்ட சங்கத்தை 1787 ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்தனர். அமெரிக்க அரசியல்சட்டம் 1788 ஆம் ஆண்டில் உறுதிசெய்யப்பட்டது, புதிய குடியரசின் முதல் செனட், பிரதிநிதிகள் அவை, மற்றும் ஜனாதிபதி ஜார்ஜ்-வாஷிங்டன்-1789 ஆம் ஆண்டில் பதவியேற்றுக் கொண்டனர். தனிநபர் சுதந்திரத்தின் மீதான ஐக்கிய கட்டுப்பாடுகளை தடைசெய்வது மற்றும் பல வகையான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கான உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது.

சுதந்திரச் சிலை, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
அடிமை முறையை நோக்கிய மனோநிலை மாறத் துவங்கியது; 1808 ஆம் ஆண்டு வரை மட்டுமே அரசியல்சட்ட ஷரத்து ஆப்பிரிக்க அடிமைகள் வர்த்தகத்தை பாதுகாத்தது. வடக்கு மாநிலங்கள் 1780 முதல் 1804 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அடிமைமுறையை ரத்து செய்தன, இதனையடுத்து தெற்கின் அடிமை மாநிலங்கள் மட்டுமே "விந்தையான ஸ்தாபனத்தின்" பாதுகாவலர்களாக தொடர்ந்தன. சுமார் 1800 ஆம் ஆண்டு வாக்கில் துவங்கிய இரண்டாம் பெரு விழிப்பு, தடைவாதம் உள்ளிட்ட ஏராளமான சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு பின்னாலான சக்தியாக பைபிள் நற்செய்தி பரப்புரைவாதத்தை ஆக்கியது.

மேற்குநோக்கு விரிவடைவதற்கான அமெரிக்கர்களின் ஆர்வம் நெடுந்தொடர்ச்சியான இந்திய போர்கள் மற்றும் இந்தியர் அகற்ற கொள்கையை தூண்டியது, இது பூர்வீக மக்களிடம் இருந்து அவர்கள் நிலத்தை பறிப்பதாக அமைந்தது. 1803 ஆம் ஆண்டுகளில் பிரான்சு உரிமை கொண்டாடிய பிரதேசத்தில் இருந்தான ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் கீழான லூசியானா கொள்முதல் ஏறக்குறைய தேசத்தின் அளவை இருமடங்காக்கியது. பல்வேறு கவலைகளினால் இங்கிலாந்துக்கு எதிராக அறிவித்த 1812 ஆம் ஆண்டு போரானது வெற்றி தோல்வியின்றி முடிந்தது, இது அமெரிக்க தேசியவாதத்தை வலிமைப்படுத்தியது. புளோரிடாவுக்குள் தொடர்ந்து அமெரிக்க ராணுவ ஊடுருவல்கள் நிகழ்ந்ததை அடுத்து அதனையும், பிற வளைகுடா பிராந்தியங்களையும் 1819 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயின் கொடுத்து விட வேண்டியதானது. டெக்சாஸ் குடியரசை 1845 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த சமயத்தில் வெளியாகும் தலைவிதி என்கிற கருத்தாக்கம் பிரபலமானது.[33] 1846 ஆம் ஆண்டில் இங்கிலாந்துடனான ஓரிகான் ஒப்பந்தம், இன்றைய அமெரிக்க வடமேற்கு பகுதியின் அமெரிக்க கட்டுப்பாட்டுக்கு இட்டுச் சென்றது. மெக்சிகோ-அமெரிக்க போரில் அமெரிக்க வெற்றியானது 1848 ஆம் ஆண்டுகளில் கலிபோர்னியா மற்றும் இன்றைய அமெரிக்கவின் அநேக தென்மேற்கு பகுதிகளின் நில அளிப்பில் முடிந்தது. 1848–1849 ஆம் ஆண்டுகளின் கலிபோர்னியா தங்க வேட்டை மேற்கத்திய புலம்பெயர்வை மேலும் தூண்டியது. புதிய ரயில்பாதைகள் குடியேறியவர்களின் இடப்பெயர்வை சுலபமாக்கி பூர்வீக அமெரிக்கர்களுடனான மோதலை அதிகப்படுத்தியது. ஒரு அரை நூற்றாண்டு காலத்தில், ரயில்பாதைகளின் பரவலை எளிதாக்குவதற்காக 40 மில்லியன் அமெரிக்கன் எருமைகளும், அல்லது காளைகள், தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் கொல்லப்பட்டன. சமவெளி இந்தியர்களின் பிரதான ஆதாரமான எருமைகளின் இழப்பு, பல பூர்விக கலாச்சாரங்களுக்கு வாழ்வாதாரத்தின் மீதான அடியாக விழுந்தது.

No comments:

Post a Comment