CHINNI JAYANTH ,THE COMEDIAN,
MIMICK CRY ARTIST BORN 1960 JULY 26
சின்னி ஜெயந்த் (ஆங்கிலம்:Chinni_Jayanth, பிறப்பு: ஜூலை 26, 1960) ஒரு தமிழ் நகைச்சுவை நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பலகுரலில் பேசும் கலைஞர் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர் 300க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார்.
தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதினை 2009 ஆம் ஆண்டு பெற்றார்[1]. இவர் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்[
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் சின்னி ஜெயந்த். இவர் தற்போது இயக்குநர் பிரபு சாலமனின் GOD பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் ' ரூபாய்' படத்தில் கயல் சந்திரன் மற்றும் ஆனந்தியுடன் முக்கியனமான வேடத்தில் சின்னி ஜெயந்த் நடிக்கிறார். சாட்டை படத்தை இயக்கிய பிரபு சாலமனின் உதவி இயக்குநர் அன்பழகன் , இந்தப் படத்தை இயக்குகிறார்.
இன்று நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இவர் பேசுகையில் "இயக்குநர் மகேந்திரனின் 'கை கொடுக்கும் கை ' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனேன். பல படங்களில் நடித்து இருந்தாலும், தற்போது எனக்கு இது இறங்குமுகம். தமிழ் சினிமா என்னை மறந்துவிட்டது. எனக்கு மகேந்திரன் தாய் என்றால், மறு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன் தந்தை போன்றவர் என்றார்.
No comments:
Post a Comment