RIBBON PRABHU ,BRITISH VICEROY
BORN 1827 OCTOBER 24- 1909 JULY 9
· ரிப்பன் பிரபு
காலம் : 1827 அக்டோபர் 24 - 1909 ஜூலை 9
பிரித்தானிய இந்தியாவின் வைசிராயாக 1880-1884 கால கட்டத்தில் பணிபுரிந்தார்
·ரிப்பன் பிரபு தல சுய ஆட்சி முறையைக் (உள்ளூர் மக்களாட்சி முறை) கொண்டு வந்தார்
·“உள்ளாட்சி முறையின் தந்தை’’ எனவும் அழைக்கப்படுகிறார்
இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தார். இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும், நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர்
· மிகச்சிறந்த கவர்னர் ஜெனெரல் எனவும் அழைக்கப்பட்டார்
இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை (1884)
இந்தியாவில் இருவேறு வகையான சட்டத்தை நீக்குவதற்கு ரிப்பன் முயற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்த சட்ட அமைப்பின்படி ஒரு ஐரோப்பியர் குறித்த வழக்கை ஐரோப்பிய நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும். இந்திய நீதிபதி விசாரிக்க முடியாது. நீதிமன்றங்களில் பதவியிலிருந்த இந்திய நீதிபதிகளுக்கு இந்த சட்டப்பாகுபாடு பெருத்த அவமானத்தை அளிப்பதாக இருந்தது. சட்ட உறுப்பினரான சி.பி. இல்பர்ட் 1883ல் நீதித்துறையில் காணப்பட்ட இந்த பாகுபாட்டைப் போக்குவதற்காக ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், ஐரோப்பியர்கள் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். இம்மசோதாவை எதிர்த்துப் போராட பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைத்த அவர்கள் போராட்ட நிதியாக ஒன்றரை லட்ச ரூபாயையும் திரட்டினர். ஆங்கிலேயரை இந்திய நீதிபதிகளின் விசாரணைக்கு உட்படுத்துவதைவிட, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கொண்டு வருவதே மேல் என்று அவர்கள் கூறினர். இங்கிலாந்து பத்திரிக்கைகளும் அவர்களுக்கு ஆதரவு அளித்தன. எனவே இங்கிலாந்திலும் இந்தியாவிலும் இருந்த ஆங்கிலேயரை திருப்திப்படுத்துவதற்காக ரிப்பன் இம்மசோதாவில் திருத்தம் கொண்டு வந்தார்.
இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை இந்திய தேசியம் வளருவதற்கு பெரிதும் உதவியது. இந்திய தேசிய இயக்கத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த சர்ச்சையால் பெரிதும் மனமுடைந்த ரிப்பன் தனது பதவியைத் துறந்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார். இந்த நிகழ்வின் உடனடி விளைவாக, 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
ரிப்பன் பிரபு பற்றிய மதிப்பீடு
இந்தியாவிற்கு இங்கிலாந்து அனுப்பிவைத்த வைஸ்ராக்களிலேயே மிகவும் புகழ்மிக்கவர் ரிப்பன் பிரபு ஆவார். இந்தியர்களின் பிரச்சினைகளை கனிவுடனும், பரிவுடனும் கையாண்ட காரணத்தால் அவரை 'ரிப்பன் தி குட்' (ரிப்பன் எங்கள் அன்பன்) என்று இந்திய மக்கள் போற்றிப் புகழ்ந்தனர். நீதித்துறையில் நிலவிய இனப்பாகுபாட்டை ஒழிக்க முயற்சியெடுத்தது, நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை திரும்பப் பெற்றது, தல சுய ஆட்சியை அறிமுகப்படுத்தியது, மைசூரைத் திரும்பி வழங்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களிடையே அவரது புகழை மேலும் உயர்த்தியது. அவரது செயல்பாடுகளை நன்றியுடன் போற்றிய இந்தியர்கள் ரிப்பன் பதவி விலகியதற்காக மிகவும் வருத்தப்பட்டனர்.
🎩ரிப்பன் பிரபு காலமான நாளின்று🐾
👑இந்திய நிர்வாகத்தில் இந்திய மக்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர் ரிப்பன் பிரபு.
👑தொழிற்சாலைச் சட்டம் (1881), வட்டார மொழிகள் பத்திரிக்கை சட்டம் நீக்கப்படுதல் (1881) ஆகிய சட்டங்களை கொண்டுவந்தார்.
👑இந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக் கெடுக்கும் முறையினை கி.பி.1881-ல் அறிமுகப்படுத்தினார்.
👑 கி.பி.1882-ல் W.W .ஹண்டர் என்பவர் மூலம் கல்விக்குழு அமைத்தார்.
👑உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததால் 'உள்ளாட்சி அரசின் தந்தை' எனப் போற்றப்பட்டார்.
👑1829 இராஜா ராம்மோகன் ராய்-யுடன் இணைந்து சதி முறையை ஒழிக்க பாடுபட்டார்?
👑கி.பி.1883-ல் ஆங்கிலக் குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரணை செய்யும் இல்பர்ட் மசோதாவைக் கொண்டு வந்தார் ரிப்பன் பிரபு. இதனால் தான் சென்னையில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்திற்கு, ரிப்பன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டது. 1880 முதல் 1884 வரை ரிப்பன் பிரபு, வைஸ்ரா# ஆக இருந்தார். ரிப்பனின் ஆட்சிக்காலத்தில் நகராட்சிகளும், மாவட்ட போர்டுகளும் ஏற்படுத்தப்பட்டன. கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை உள்ளாட்சிகள் கவனிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளை ரிப்பன் ஏற்படுத்தினார்.
👑இந்திய மக்கள் தொகைக் கண்க்கெடுப்பு முறைய தொடங்கியவரிவர்தான்.
👑இது தவிர ரிப்பனின் ஆட்சிக் காலத்தில், இந்தியர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப் பட்டன. இதனால் "ரிப்பன் எங்கள் அப்பன்' என்ற ஸ்லோகன் உருவானது.
No comments:
Post a Comment