SURULIRAJAN ,COMEDY ACTOR
BORN 1938 JANUARY 14 -1980 DECEMBER 5
சுருளிராஜன் ஒரு ஒப்பற்ற கலைஞர் .வழக்கமா பொருட்காட்சி ஏப்ரல் மாசம் 18 ஆம் தேதியோட நிறைவு பெறும் .1979 வரை எம்ஆர் ராதா நிறைவு செய்தார் 1980 ஆண்டு ராதா இறந்து போனதால் சுருளி நடித்தார் .அன்றிரவு விருதுநகர் தெப்பக்குளம் கிழக்கு
படித்துறை பெஞ்சில் அமர்ந்து தண்ணியை போட்டு ஒரே கலாட்டா .கூட வந்த அல்லக்கைகள் தான்அ அவரை சமாளித்தார் அடுத்து சில மாதங்களுக்கு பிறகு ஒரு சின்னவீடு செட் பண்ண அடிபோட்டு கிட்டு இருந்தார் .மறுவாரம் இறந்தார் .எம்ஜியார் சிங்கப்பூரி லிருந்து மருந்து இரவோடு இரவாக வரவழைத்தார் .காப்பாற்ற முடியவில்லை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சுருளி ராஜன் (ஆங்கிலம்: Suruli Rajan) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவருக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை[தொகு]
நடிகர் சுருளி ராஜன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும்.[சான்று தேவை] சுருளி அருவியருகே இருந்த இவரது குலதெய்வம் சுருளி வேலப்பரின் பெயர் இவருக்கு இடப்பட்டது. இவரின் தந்தையார் பெயர் பொன்னையாப்பிள்ளை. இவர் அவ்வூரில் உள்ள விவசாயப் பண்ணையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
நடிப்பு[தொகு]
மதுரையில் வேலைபார்த்துக்கொண்டே தன்னார்வ நாடகங்களில் நடித்தார். ஆகையால் 1959ம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார். முதலில் கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்படக்கழகத்தால் எடுக்கப்பட்ட "இரவும் பகலும்" (1965) என்ற திரைப்படத்தில் நடித்தார், அப்போதே "காதல் படுத்தும்பாடு" என்ற படத்திலும் நடித்தார். 1970ல் திருமலை தென்குமரி, 1971ல் "ஆதிபராசக்தி" என்ற படத்தில் சென்னை மீனவர் பேச்சுப்பேசி அனைவரையும் தன் பக்கம் திருப்பினார். 1970ம் ஆண்டுகளில் புகழின் உச்சத்தில் இருந்தார். ம. எ. காஜா வின் "மாந்தோப்புக்கிளியே" என்ற படத்தின் மூலம் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரானார்.[1][2]
ஒளி பிறந்தது, மனிதரில் இத்தனை நிறங்களா, முரட்டுக்காளை, ஹிட்லர் உமாநாத், பாலாபிசேகம், ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
விருது[தொகு]
இவருக்கு 1981-82ம் ஆண்டுக்கான சிறந்த சிரிப்பு நடிகர் பட்டத்தை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.
மரணம்[தொகு]
சிரிப்பு நடிகர் சுருளி ராஜன் தனது புகழின் உச்சியில் இருந்த 1980ம் ஆண்டு 42 வயதில் மரணமடைந்தார்.
முதன்முதலாக தற்கால சமூக அடித்தட்டு, விளிம்புநிலை மக்க ளை தமிழ்சினிமாவில் பிரதிபலி த்தவர் சுருளி ராஜன். கலைவானர் என் எஸ் கே உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் எடுககப்பட்ட பெரும் பாலான திரைப்படங்கள் புராண கதைகளையும், ராஜா ராணி கதை களையுமே களமாகக் கொண்டிருந் தன. எனவே அவருடைய வேடங்கள் அக்களத்தையே சார்ந்து அமைந்தி ருந்தன. மதுரை வீரன் படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி வேடத்தில் நடித்திருந்தார் என் எஸ் கே. அதைத்தவிர சொல்லிக்கொள் ளும் படியான விளிம்புநிலை வேட ங்களில் அவர் நடித்தது குறைவே.
அவருக்கு அடுத்து வந்த ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் சந்திர பாபு. அவரும் இம்மாதிரி கேரக்டர்களில் அதிகம் நடித்ததில்லை. சபாஷ் மீனா படத்தில் ஒரு நாடகத்தில் பார வண்டி இழுக்கும் கூலி யாக நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார். நாகே ஷும் பெரும் பாலும் மத்திய தர வர்க்க ஏழை கதாபாத்திரங்களிலேயே நடித்து அதிலேயே வித்தியாசம் காட்டி வந்தார். வி கே ராமசாமி, கே ஏ தங்கவேலு பெரும்பாலும் பணக்கார கேரக் டர்களிலேயே நடித்து வந்தார்கள். மேலும் அவர் கள் சரீரம் அம்மாதிரி கதாபாத்திரங்களுக்கே மிகப் பொருத்தமாய் இருந்தது.
ஆனால் இவர்கள் யாரையும் நாம் குறை சொல்ல முடியாது. ஏனெ ன்றால் 1975 வரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு மிகக் குறைவு. சுருளிராஜன் 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் படத்தில்
(ஜெய் சங்கரும் இந்தப் படத் தில் தான் அறிமுகம்) சிறு வேடத்தில் அறிமு கமாகியிருந்தாலும் 75 வரை அவரும் மற்ற நகைச்சுவை நடிகர்களைப் போன்றே நடித்துக் கொண்டிருந்தார். 70 களின் மத்தியில் துரை, மகேந்திரன், ருத்ரய்யா, பாரதிராஜா போன்றோ ர் சமகால சமூகத்தை சித்தரிக்கு ம் படங்களை இயக்கத் தொடங்கினர். 1977ல் பெட்டிக்கடை குரு வம்மா, அவரது வேலையாள் என அடித் தட்டு மக்களை சித்தரித்த பதினாறு வயதினிலேவின் வெற்றி எல் லாரையும் சமூக படங்களை இயக்க ஊக்கமளித்தது. அதைத் தொ டர்ந்து சில ஆண்டுகளு க்கு அந்தப் போக்கு தொடர்ந்தது.
இந்தப் போக்கு அதுவரை முதலிடத்துக்கு வரமுடியாமல் தவித் துக் கொண்டிருந்த சுருளிராஜனுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது. 1980 ஆம் ஆண்டில் மட்டும் அவர் கிட்டத்தட்ட 50 படங்க ளில் குண ச்சித்திர / நகைச்சு வை நடிகராக நடித்தார். இதில் பெரும்பாலான வேடங்கள் அடி த்தட்டு, விளிம்புநிலை கதா பாத்திரங்களே. அரவாணி, கழிவு அகற்றும் தொழிலாளி, பிண ஊர்தி ஓட்டுபவர் போன்ற பல கதாபாத்திரங்களுக்கு உயி ர் கொடுத்தார். அவரின் மறைவு க்குப்பின்னால் உச்சத்துக்கு வந்த கவுண்டமணி, பின்னர் வடிவே லு ஆகியோரும் இம்மாதிரி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினர்.
1965 ல் சுருளிராஜன் நடிக்க வந்த போது அவரது வயது 27. ஆனால் அவருக்கு கிடைத்த வேடங்கள் பெரும்பாலும் வயதான வேடங்க ளே. நான், மூன்றெழுத்து போன்ற படங்களில் அவர் தன் வயதுக்கு மீறிய வேடங்களிலேயே நடித்தார். இந்த காலத்தில் அவருக்கு ஆத ரவாய் இருந்தவர் இயக்குனர் டி என் பாலு. அவர் வேலை செய்த எல்லாப் படங்களிலும் இவருக்கு வாய்ப்பளித்தார். சுருளிராஜன் பிரமாதப்படுத்திய சில படங்கள்.
மாந்தோப்பு கிளியே
இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கஞ்சப் பிரபு வேடத்தை அவ ரின் மாஸ்டர் பீஸ் எனலாம். ஜோடியாக காந்திமதி. பனையோலை விசிறி பிய்ந்துவிடும் என அதை நிலையாக வைத்து உடலை விசிறிக்கொள்வதும், விளக்கு இல்லாத நேரத்தில் உடை அழுக்கா கிவிடும் என அவிழ்த்து வைப்பதுமாய் அதகளப் படுத்தியிருப்பார். உச்சமாக ஐந்து கிலோ அரிசிக்காகவும், பணத்துக்காகவும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வார். எம் ஏ காஜா இய க்கிய இந்தப் படத்தில் தான் குடும்ப் கட்டுப்பாடு பற்றிய வசனங்கள் தமிழ்சினிமாவில் முதல் முறையாக பேசப்பட்டன.
ஒளி பிறந்தது
அரசாங்க மருத்துவ மனையையும், அங்கு பணி புரிவோர், அதைச் சுற்றி கடை வைத்துள்ளோர், மார்ச்சுவரி, பிண ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோரை களமாகக் கொண்டு துரை இயக்கிய படம். மறைந்த நடிகர் உதிரிப்பூக்கள் விஜயன், இதில் பிண ஊர்தி ஓட்டுநராக நடித் திருப்பார். சுருளிராஜனுக்கு குதிரை(ஜட்கா) வண்டி ஓட்டும் வேடம். தொடர்ந்து பிணத்தையே ஏற்றிச் சென்றதால் அந்த குதி ரை வெள்ளைத்துணி போர்த்திய பினத்தைப் பார்த்தாலே நின்று விடும். பயணிகளை ஏற்றிச் செல்லும் சுருளிராஜன் இதனால் பாதி க்கப்படுவார். இதை அறிந்த ஒரு கூட்டம் அவரை, குதிரையின் வீக் னெஸ்ஸை வைத்து பிளாக்மெயில் செய்யும். ஒருவழியாக குதி ரையை மாற்றி தப்பிப்பார்.
மனிதரில் இத்தனை நிறங்களா?
கழிவறை சுத்தப் படுத்தும் தொழிலாளி வேடம் சுருளி ராஜனுக்கு. அந்த ஊர் உயர்ஜாதியினர் தாழ்த்தப் பட்ட மக்களை இழிவாக நடத் துவார்கள். அதனால் பொங்கியெழும் தாழ்த்தப் பட்டவர்கள் வே லை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். துணி துவைப்பவரின் தங்கை யை சுருளிராஜன் காதலிப்பார். ஆனால் பெண்ணின் அண்ணனோ இவர் நம்மை விட தாழ்ந்த ஜாதி. அதனால் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்பார். உடனே சுருளிராஜன் மத்த ஜாதிக்காரங்கள் ளாம் சேர்ந்து நம்மை தள்ளி வச்சாங்க. இப்போ நமக்குள்ளேயே என்னை தாழ்ந்தவன்கிறீங்க என்பார். 30 ஆண்டுகள் ஆகியும் இந்த பிரச்சினையும் தீராமல் இருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் அரு ந்ததியர்களும், விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் புதிரை வண்ணார்களும் இந்த பிரச்சினைக்கும் உள்ளாகிறார்கள்.
முரட்டுக்காளை
தன் தந்தையைக் கொன்றதற்க்காக பண்னையார் வம்சத்தையே அழிக்க சபதம் எடுக்கும் கண்க்குப்பிள்ளை வேடம். படத்தை நகர்த்திச் செல்லும் மையப் புள்ளியே கணக்குப்பிள்ளை சுருளி ராஜன் தான். ஜெய்சங்கரிடமும், ரஜினியிடமும் நயவஞ்சகமாகப் பேசி இருவரையும் மோதவிட்டு தன் காரியத்தை சாத்தித்துக் கொள்வார். ஒரு காட்சியில் ரஜினியின் தம்பிகளின் மேல் திரு ட்டுக் குற்றம் சாட்டி கட்டி வைப்பார்கள். இதனால் ரஜினி சண்டை க்கு வருவார். அவர் கைகாலை எடுத்து விட வேண்டும் என பேசிக் கொள்வார்கள். சுருளிராஜன் வெளியே வந்து சொல்வார். உடை யப் போவது யாருடையது என்பதை நானல்லவா முடிவு செய்ய வேண்டும் என்று. கடைசியில் ஜெய்சங்கரை சிறைக்கு அனுப்பி விட்டுத் தான் ஓய்வார்.
ஹிட்லர் உமாநாத்
தன் சுய உழைப்பால் முன்னேறிய வேடம் சிவாஜி கணேசனுக்கு. அதனால் அலுவலகத்தில் கடுமையாக ஹிட்லர் போல நடந்து கொள்வார். அவரை குளிர்விக்க அவரை புகழ்ந்து சுருளிராஜன் பாடும் வில்லுப் பாட்டு மிக பிரபலமான ஒன்று.
பாலாபிசேகம்
ஜெய்ஷங்கர் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அரவாணி வேடம் சுருளிராஜனுக்கு. ரஜினிகாந்துடன் பல படங்களில் தோழனாக, தொழிலாளியாக பல படங்களில் சுருளிராஜன் நடித்துள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்றவற்றில் நல்ல வேடங்கள். ”இப்படி சாப்பிட்டா நல்லா இருக்கும்னு சொல்றான் கந்தசாமி” என நான் போட்ட சவால் படத்தில் அவர் ரஜினியிடம் பேசும் வசனம் பலரால் மிமிக்ரி செய்யப்பட்ட ஒன்று.
அவர் ஏற்று நடித்த வேடங்களுக்கு ஏற்பவே அவரது வசனங்களும் இருக்கும். ஒரு படத்தில் தண்டனையாக அவரை வடைக்கு ஆட்ட ச் சொல்லும் போது உளுந்த வடைக்கா? மசால் வடைக்கா? என்று கேட்பார். அவருடன் வருபவர் எதற்கா இருந்தா என்ன? என்பார். உடனே இவர் சொல்வார். மசால் வடைக்கின்னா ஒன்னு ரெண்டா ஆட்டினா போதும். உளுந்த வடைன்னா மையா ஆட்டனும்ல என் பார்.
சமையல் தொழிலாளியாக, மெக்கானிக்காக எந்த வேடத்தில் நடித்தாலும் அதற்கேற்றார்போல தன் வசன்ங்களை அமைத்துக் கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது.இதற்க்கு முக்கிய காரணம், அவரின் கூர்ந்த கவனிப்பே. பெரிய குள த்தில் 1938ல் பிறந்த அவர் தன் இளம் வயதில் மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்துக் கொ ண்டே, நாடகங்களிலும் நடித்து வந்தார். பின்னர்தான் சென்னைக்கு வந்தார். அந்த அனுபவமும், அங்கே அவர் சந்தித்த பல்வேறு மனி தர்களும் அவரின் பிற்கால வேடங்களுக்கு கச்சாப் பொருளாய் இருந்தன.
தற்போது வடிவேலுவின் முக்கிய பாணியாய் விளங்கு ம் உதார் விடும் சாமான்யன் வேடம், மதுரையில் அவர் பார்த்த பல உதார் பார்ட்டிகளிடம் இருந்து எடுக்கப்பட்டதே. மதுரையில் தெரு வுக்கு நாலு பேர் அப்படி இருப்பார்கள்.
சுருளிராஜனின் குரலும் மிக வித்தியாசமான ஒன்று. அடித்தொண் டையில் உருவாகி கீச்சுக்குரல் போல ஒலிக்கும். எம் ஆர் ராதாவு க்கு பின்னால் வந்த குரல்களில் தனித்தன்மை வாய்ந்த குரல் அது. மிமிக்ரி கலைஞர்களால் அதிகம் உபயோகிக்கப்படும் குரலும்கூட. அவர் ஏற்று நடித்த பாத்திரங்களு க்குமெருகேற்றியது அவர் குர லே.
1980ல் அவர் இறந்தார். 82 ஆம் ஆண்டுவரை அவர் நடித்த படங்கள் வெளிவந்தன. 79 மற்றும் 80 ஆண்டுகளில் மட்டும் அவர் 80 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். இடைவிடா படப்பிடிப்பும், அவரது குடிப்பழக்கமும் அவர் 42 வயதிலேயெ மறையக் காரண மாய் இருந்தன.
10 ஆண்டுகள் போராடி முதல் இடத்துக்கு வந்தார். தன் கேரியரின் உச்சத்தில் இருக்கும் போதே நம்மிடம் இருந்து விடை பெற்றுவிட்டார். சுந்தர் சி நடிக்கும் முரட்டுகாளை ரீமேக்கி ல் சுருளிராஜன் வேடத்தில் விவேக் நடித்து இல்லை கலக்கி இருப்பார்.
No comments:
Post a Comment