DARASINGH ,HINDI ACTOR ,
FIRST POLITICIAN FROM FILM WORLD
BORN 1928 NOVEMBER 19- 2012 JULY 12
தாரா சிங் (பஞ்சாபி: ਦਾਰਾ ਸਿੰਘ; 19 நவம்பர் 1928 – 12 ஜுலை 2012) ஒரு பஞ்சாபி மல்யுத்த வீரராக இருந்து பிறகு நடிகரானவர். 1952-ம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர், இந்தியாவின் ராஜ்ய சபாவிற்கு முதலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஆகஸ்ட் 2003 – ஆகஸ்ட் 2009 வரை பணியாற்றினார்.[1][2]
ஆரம்பக் கால வாழ்க்கையும் தொழிலும்[தொகு]
தாரா சிங், சூரத் சிங் மற்றும் பல்வந்த் கவுர் என்ற் சீக்கியர்களுக்கு[5] மகனாக நவம்பர் 19, 1928-ல் அமிர்தரஸ் மாவட்டத்தில் உள்ள தர்முசக் கிராமத்தில் பிறந்தார்.
பிரபல மல்யுத்த வீரரும் திரைப்பட நடிகரும் இயக்குநருமான தாரா சிங் (Dara Singh) பிறந்த தினம் இன்று (நவம்பர் 19). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
# பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தர்மூசக் என்ற இடத்தில் பிறந்தார் (1928). தாராசிங் ரன்தாவா என்பது இவரது முழு பெயர். தந்தை பெரும்பாலும் வெளியூர்க ளிலேயே இருந்ததால் மூத்த மகனான இவர் வயல்க ளில் வேலை செய்து வந்தார். சிறு வயதிலேயே பயில்வானாக வேண்டும் என்பது இவரது ஆசை
# பாதாம் கொட்டைகளை வெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு, நிறைய பாலையும் குடித்துவிட்டுப் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்வாராம். இதனால் வயதுக்கு மீறிய வளர்ச்சியடைந்தார். 6.2 அடி உயரமும் அதற்கே ற்ப ஆஜானுபாகான தோற்றமும் கொண்டிருந்தார்.
# இவரும் இவரது தம்பியும் ஊர் ஊராகச் சென்று மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்றனர்.
இவரது தம்பி சிவாஜி நடித்த" ராஜா "திரைப்படத்திலும் நடித்துள்ளார்
1947-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு பல போட்டிகளில் வென்றார்.
1954-ல் இந்தியா திரும்பியபின் இந்திய மல்யுத்த சாம்பியனாக உயர்ந்தார்.
# 1959-ல் முன்னாள் உலக சாம்பியனை வென்று காமன்வெல்த் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 1968-ல் அமெரிக்க சாம்பியன் லவ் தேஸை முறியடித்து ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து கனடா, நியுசிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான், இங்கிலாந்து நாட்டு வீரர்களை வென்றார்.
# ஏறக்குறைய உலகின் அனைத்து மல்யுத்த வீரர்களுடனும் மோதி வென்றுள்ளார். உலகிலேயே தனது அனைத்து எதிரி சாம்பியன்களையும் அவர்கள் நாடுகளிலேயே வென்று பட்டங்களை வென்ற ஒரே வீரர் என்ற பெருமை பெற்றார். 55 வயதுவரை 500 தொழில்முறை போட்டிகளில் பங்கேற்றார்.
# அத்தனை போட்டிகளிலும் வெற்றி வாகை சூடினார். 1983-ல் இறுதியாகக் களம் இறங்கிய போட்டியிலும் வென்று வெற்றி வீரனாகவே ஓய்வு பெற்றார். இடையிடையே திரைப்படங்களிலும் நடித்து வந்தார். முதலில் பாலிவுட் திரைப்படங்களில் ஸ்டன்ட் நடிகராக தோன்றினார். 1952-ல் ‘சங்தில்’ என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
# இதில் நடிகை மும்தாஜுடன் இணைந்து நடித்திருந்தார். ரசிகர்களிடையே அமோக ஆதரவு பெற்ற இந்த இணை தொடர்ந்து 16 திரைப்படங்களில் ஜோடி சேர்ந்தது.
‘சிகந்தர்-இ-ஆஸம்’,
‘காகான்,
லுடேரா’,
‘டாகூ மங்கள்சிங்’ மற்றும்
‘இன்சாஃப்’
ஆகிய திரைப்படங்கள் இவரை மிகவும் பிரபலமாக்கின. பல படங்களை இயக்கிய இவர், திரைக்கதைகளையும் எழுதியுள்ளார்.
# மொஹாலி என்ற இடத்தில் தாரா ஸ்டுடியோவைத் தொடங்கி பல படங்களையும் தயாரித்துள்ளார். தனது தாய்மொழியான பஞ்சாபி யில் முதன்முதலாக ‘நானக் துனியா சப் சன்சார்’ என்ற படத்தைத் தயாரித்தார். திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது.
# 50 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்த இவரது திரையுலக வாழ்க்கையில் இந்தியிலும் பஞ்சாபி மொழியிலும் சேர்த்து 110-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2003-ல் ராஜ்ய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2007-ல் வெளிவந்த ‘ஜப் வி மெட்’ திரைப்படம்தான் இவரது கடைசி திரைப்படம்.
# மல்யுத்த வீரராக, சினிமா நடிகராக அவருக்குக் கிடைத்த புகழை விட பன்மடங்குப் புகழையும் பெயரையும் ராமாயணம் தொலைக் காட்சித் தொடரில் இவர் ஏற்ற ஹனுமான் கதாபாத்திரம் இவருக்குப் பெற்றுத் தந்தது. மல்யுத்த வீரர், நடிகர், இயக்குநர் ஆகிய பன்முகத் திறன் கொண்டிருந்த தாராசிங் 2012-ம் ஆண்டில் ஜூலை மாதம் 12-ம் தேதி 83-ம் வயதில் மாரடைப்பால் காலமானார்.
மல்யுத்தம்[தொகு]
இவர், 132 கிலோ எடையும், 6'2" அடி உயரமும் இருந்தார். இவர் ஆரம்பகாலத்தில் கரலாகட்டை என்னும் பெல்வானி வகை மல்யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பல்வேறு அரசர்கள் முன்னிலையிலும், வெளிநாடுகளிலும் மல்யுத்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளார்.
விருதுகளும் அங்கீகாரமும்[தொகு]
1947-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் பங்குபெற்றும், மலேசியாவில் நடைபெற்ற போட்டியிலும் கோப்பையை வென்றுள்ளார்.
1960 ஆம் ஆண்டு உலக மல்யுத்தப் பட்டம்[6]
திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும்[தொகு]
1952-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் (சாங்க்திள்) நடிக்க ஆரம்பித்தார்.[1] 1960 முதல் 69 வரை முன்னனி நடிகராக இருந்த இவர் அதன் பிறகு பிற கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர் சுமார் 140 திரைப்படங்களில் நடித்துள்ளார். 6 தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் இராமாயன் தொடரில் நடித்த அனுமான் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
தாரா படப்பிடிப்பகம்[தொகு]
1978-முதல் பெரிய அளவில் மொஹாலியில் உள்ள தாரா படப்பிடிப்பகத்தின் உரிமையாளரும் இவரே.[7] அனைத்து வசதிகளுமுடைய இப்படப்பிடிப்பகத்தினை சிறிய நகரம் என்றும் கூறுவர்.[8]
மல்யுத்த வீரராக இருந்து பாலிவுட் நடிகரானவர் தாரா சிங்(84). கடந்த 7ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதுடன், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் உடல் நிலை தேறுவது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததையுடுத்து நேற்று மாலை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு இந்தி திரையுலகினர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விலே பார்லேவில் உள்ள மயானத்தில் இன்று மாலை 4.10 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.
அவர் கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த ஜப் வி மெட் படத்தில் கரீனா கபூரின் தாத்தாவாக நடித்தது தான் அவருடைய கடைசி படம். ராமாயணம் தொடரில் ஹனுமானாக நடித்து புகழ் பெற்றவர் தாரா சிங். அவர் கடந்த 1928ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அமிர்தசரசில் உள்ள தர்மூசக் கிராமத்தில் பிறந்தார். அவர் காமன்வெல்த் போட்டிகளில் மல்யுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment