Monday 9 July 2018

ANURADHA SRIRAM , PLAYBACK SINGER BORN 1970 JULY 9





ANURADHA SRIRAM , PLAYBACK SINGER
BORN 1970 JULY 9





அனுராதா ஸ்ரீராம் (பிறப்பு: 9 ஜூலை 1970), தமிழகத்தைச் சார்ந்த இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் 90-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பாடியுள்ளார்.

மீனாட்சி சுந்தரம் -ரேணுகா தேவி தம்பதியின் மகளாகப் பிறந்தார் அனுராதா ஸ்ரீராம். அம்மா பின்னணிப் பாடகியாக இருந்தவர். ‘கந்தன் கருணை’யில் ‘ஆறுமுகமான பொருள்...’ பாடலில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து ஒலிக்கும் குரல் அவருடையதுதான். 6 வயதிலேயே இசைப்பயிற்சியைத் தொடங்கிவிட்டார் அனுராதா. ‘காளி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் இவர்.

2 வயது வரை இந்தியாவின் பல பகுதிகளிலும், அமெரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி, தொலைக்காட்சிகளில் கச்சேரி செய்தார். தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன், டி. பிருந்தா, பண்டிட் மணிக்பா தாகூர்தாஸ் ஆகியோரிடம் சங்கீதம் கற்றவர் இவர். நியூயார்க்கில் பேராசிரியர் ஷிர்லி மீயரிடம் ஓபெரா இசையைக் கற்றார்.சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பின்போது தங்கப்பதக்கம் வாங்கியவர்.

அரசு வழங்கிய படிப்புத்தகுதி உதவியில், அமெரிக்காவிலுள்ள வெஸ்லியன் பல்கலைக் கழகத்தில் இசை குறித்த முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கே இவருக்கு ஆசிரியராக இருந்த ஸ்ரீராம் பரசுராம், பின்னாளில் கணவராக அமைந்தார்.

1997ல் ‘சென்னை கேர்ள்’ இசை ஆல்பத்தை வெளியிட் டார். உலகம் முழுக்க 3 லட்சத்துக்கு மேல் கேசட்டுகள் விற்பனையாகி, இவருக்கு புகழை ஏற்படுத்தித் தந்தது அந்த ஆல்பம். டைட்டில் பாடல் எம்.டி.வி, சோனி மற்றும் வி சேனல்களின் காற்றலைகளில் கலந்தது. அந்தப் பெருமை பெற்ற முதல் தமிழ் இசை ஆல்பம் ‘சென்னை கேர்ள்’. ஏ.ஆர்.ரஹ்மானின் ‘வந்தே மாதரம்’ ஆல்பமும், இவரது ஆல்பமும் சிறந்த பாப் ஆல்பத்துக்கான வீடியோகான் விருதைப் பெற்றன. ஆல்பத்திற்கான பாடல்களை எழுதியதுடன், கணவர் ஸ்ரீராம் பரசுராமுடன் இணைந்து இசையும் அமைத்திருந்தார் அனுராதா ஸ்ரீராம்.

‘இந்திரா’ படத்தில் ‘அச்சம் அச்சம் இல்லை...’ பாடல் மூலம் இவரைப் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். தேவா இசையில் ‘காதல் கோட்டை’ படத்தில் ‘நலம் நலமறிய ஆவல்...’

பாடல் காதல் மெல்லிசையாய் காதுகளைக் கவுரவப்படுத்தியது. ‘மின்சாரக்கனவு’ படத்தின் ‘அன்பென்ற மழையிலே...’ பாடலும் அதே ரகம்தான். ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தின் ‘மல்லிகையே மல்லிகையே...’ பாடலும் முன்குறிப் பிட்ட ரகம் சார்ந்த முத்துப்பாடல். ஜீன்ஸ் படத்தில் ‘அன்பே அன்பே கொல்லாதே...’ என்று ஹரிஹரனுடன் இணைந்து பாடி, ரசிகர்களின் உறக்கத்தைக் கொன்றார்.

தேவா இசையில் ‘வாலி’ படத்தில் இவர் பாடிய ‘நிலவைக் கொண்டு வா...’ பாடல் மெல்லிசையும் துள்ளலும் கைகோர்த்த இசைக்குரல் வடிவமாக அமைந்தது. ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் பாடிய ‘கறுப்பு தான் எனக்குப்பிடிச்ச கலரு...’

பாடல், கறுப்பாக இருப்பதை தாழ்வு மனப்பான்மையோடு உணரும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பாராட்டையும் நன்றியையும் அனுராதாவுக்கு வாங்கிக் கொடுத்தது. ‘குஷி’ படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து பாடிய ‘ஒரு பொண்ணு ஒண்ணு நான் பாத்தேன்...’, இளையராஜா இசையில் ‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் ஜேசுதாசுடன் பாடிய ‘ஒருநாள் ஒரு கனவு...’, ‘ஹரிஹரனுடன் பாடிய ‘ரோஜா பூந்தோட்டம்...’,

‘சொக்கத்தங்கம்’ படத்தில் ‘என்ன நெனச்சே நீ என்ன நெனச்சே...’, ‘கில்லி’யில் ‘அப்படிப்போடு போடு...’, தினா இசையில் ‘திருப்பாச்சி’ படத்தில் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பாடிய ‘அப்பன் பண்ணுன தப்புல...’, இமான் இசையில் ‘கிரி’ படத்தில் ‘டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா...’, பரத்வாஜ் இசையில் ‘ஜெமினி’ படத்தில் ‘ஓ போடு ஓ போடு...’, ‘ஆதி’ படத்தில் ‘ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு...’,

வித்யாசாகர் இசையில் ‘குருவி’ படத்தில் ‘மொழ மொழன்னு எம்மா மொழமொழன்னு...’, மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்தில் ‘காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி...’ என பாட்டு ரசிகர்களின் பாராட்டுப் பெற்ற பல பாடல்களைப் பாடியிருக்கிறார் அனுராதா ஸ்ரீராம்.

1996ல் தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகி விருது, 1999ல் கர்நாடக அரசின் சிறந்த பின்னணிப் பாடகி விருது, 2004ல் மேற்கு வங்க அரசின் சிறந்த பின்னணிப் பாடகி விருது வாங்கிய இவரை தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும் கவுரவப்படுத்தியிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இவரது பாட்டுக்குரல் பதிவாகியுள்ளது. உலகம் முழுக்க 1000க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்திய இவர் கர்நாடக, இந்துஸ்தானி, ஒபெரா மற்றும் ஜாஸ் இசைகளில் தேர்ச்சி பெற்ற இந்தியப்பாடகி என்ற பெருமை பெற்றவர்.

திரைப்படத்துறை[தொகு]
அனுராதா ஸ்ரீராம் தமிழ் திரைப்படத்துறையின் வாயிலாக அறிமுகமானார். இவர் 1995-ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த "மலரோடு மலர் இங்கு" என்ற பாம்பே திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார். இவர் இந்திரா திரைப்படத்தில் இனி அச்சம் அச்சம் இல்லை என்ற பாடலை முதன்முதலில் தனித்துப்பாடினார். அதன்பிற்கு மின்சார கனவு திரைப்படத்தில் அன்பென்ற மழையிலே பாடல், ஜீன்ஸ் திரைப்படத்தில் அன்பே அன்பே பாடல் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

பெற்ற விருதுகள்[தொகு]
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்[தொகு]
சிறந்த பின்னணிப் பாடகி [1] – ஜெமினி
கர்நாடக அரசு திரைப்பட விருதுகள்[தொகு]
சிறந்த பின்னணிப் பாடகி – "Omkara Nadamaya"-Hrudayangali
சிறந்த பின்னணிப் பாடகி – "raja raja kanasina raja"-preethsod tappa மேலும் இரண்டு தெலுங்கு பட விருதுகள் பெற்றார்
பாடியுள்ள பாடல்கள்[தொகு]
அனுராதா திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இவர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார்.[2] இவர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 4000 பாடல்கள் பாடியுள்ளார்.
Image may contain: 1 person










No comments:

Post a Comment