Friday, 2 September 2016

உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் , அழகி மும்தாஜ் பிறந்த தினம் 1593 செப்டம்பர் 1



உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் ,
அழகி மும்தாஜ் பிறந்த தினம் 1593 செப்டம்பர் 1 




மொகலாயர்கள் காலத்தில் புத்தாண்டு திருவிழா நவ்ரோஸ் கொண்டாடப்பட்டு வருகிறது .இதை ஒட்டி சிற்றரசர்கள் புதல்விகள் ,அரசாங்க உயர் பதவியில் உள்ள புதல்விகள் நடத்தும் கண்காட்சி இது 
வேறு யாரும் இங்கே பொருள் விற்க முடியாது .


அரண்மனையை சேர்ந்த ஆடவர்கள்  மட்டுமே இதில் பங்கேற்க முடியும் .அதாவது பெண்கள் மட்டுமே துணி ,கலைப்பொருள்கள் விற்பனை செய்வர் .இங்கிருந்து தான் மன்னர்கள் தங்கள் போகப்பொருளாக பெண்களை எடுத்து கொள்ளுவது உண்டு .


அந்தஸ்தில் உயர்ந்தவர்கள்  மணமுடிக்கப்படுவதுண்டு .இது பாபரின் மகனும் அக்பரின் தந்தையும் ஆன ஹுமாயூனால் முதலில் புத்தாண்டு நவ்ரோஸ் விழாவாக ஒருவாரம் கொண்டாடப்பட்டது .இது பாரசீக மொழியில் குக்ஸ்க்ரூஸ்("Day of Joy") என்று அழைக்கப்பட்டது  

ஷாஜகான் கடை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார் .ஒரு கடையை ஏறிட்டு பார்த்தபோது அவர் கால்கள் நகர மறுத்தன .தன்னை மறந்தார் .ஒரு அழகு தேவதை புன்னகையுடன் வரவேற்றாள் .தன்னுடைய சிற்றன்னை நூர்ஜகானின் அண்ணன் சப்கானின் மகள் அர்ஜுமான்த் பானு போகும் தான் அவர் .    


ஷாஜகான் பார்த்தார் ...பார்த்தார் ...பார்த்துக்கொண்டே இருந்தார் 

-
என்ன இளவரசே !அப்படி பார்க்கிறீர்கள் !

-

வட்ட மதி முகம் .
அழகான வசீகரிக்கும் கண்கள் ,
அழகு நிறைந்த அன்பு பார்வை ,
இதழ்களில் பிரகாசமாய் புன்னகை 
யார் இவள் ?
-
வேண்டுமா இந்த வைரக்கல் ?
உங்களுக்காக விலையை குறைத்து சொல்கிறேன் .
ஒரு லக்ஷம் ரூபாய் தான் 
-நீரோடையாய் சுழட்டி அடித்தாள்   
-
-அப்போதும் மறுமொழி பேசவில்லை ஷாஜகான் 
-
இன்ன இளவரசே பேசாமல் இருக்கிறீர்கள் !
ஓ .பணம் இல்லையா ?
அப்போ வைரம் வேண்டாமா ?
அப்போதும் ஷாஜகான் மறுமொழி பேசாமல் அவளுடைய பேச்சை 
ரசித்து கொண்டே இருந்தார் 
-
ஷாஜகான் இப்போது முகம் மலர்ந்தார் 
அந்த பெண் கேலியாய் அவரை பார்த்தாள் ...சிரித்தாள் ...

அந்த வைரத்தை கையில் வாங்கினார் 

கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலை ,மற்றும் வைரம் பதிக்கப்பட்ட
தங்க சங்கிலியையும் கழற்றி கொடுத்தார்   
-
அவள் திகைத்து நிற்க பெண்கள் ஆரவாரம் விண்ணை பிளந்தது 


இது இன்னொரு கதை -சுவையானது என்பதால் இதையும் குறிப்பிடுகிறேன் 


ஒரு தடவை மன்னன் சாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம் பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள். அவள் அணிந்திருந்த வைரமணிகள் கூட சாஜஹானைக் கவர்ந்தன. மன்னரின் பொழுதுபோக்கு நவரத்தினங்களை எடை போட்டு ஆய்வது.


அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள். அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார். 



  சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள். தான் ஏமாந்ததை சாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல் கொண்டார். அந்த அழகிதான் மும்தாஜ். 


மும்தாஜ் பற்றி சில விஷயங்கள் 


பல குற்றவாளிகள் கடும் தண்டனையில் இருந்து தப்பி இருக்கிறார் 

அரசாட்சி தர்பார் மண்டபத்திற்கு வருவார் .ஷாஜகான் பின்புறத்தில் 
அமர்ந்திருப்பார் .தகுந்த ஆலோசனைகளை அவ்வப்போது மெதுவாய் 

ஷாஜகானுக்கு கேட்கும் படி சொல்லுவார் 


பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக்கியவர் தன் அத்தை நூர்ஜஹான் .

ஷாஜகானை கொலை புரியக்கூட திட்டமிட்டனர் நூர்ஜஹான் .தன்னுடைய குழந்தைகளை பிணையாக பிணைத்து வைத்தவர் நூர்ஜஹான் .இவர்க்கு மரண தண்டனை விதிப்பதற்கு முற்பட்டபோது 
அவரை மன்னிக்கும் படி சொன்னவர் தான் மும்தாஜ் 

அழகு என்றால்  ஆபத்து என்ற நிலையில் இல்லாத நிலையில் அழகு என்றால் கருணை என்று வாழ்நாள் பூராவும் வாழ்ந்து காட்டியவர் மும்தாஜ் ஒருவரே 


இல்லாமலா ...ஷா ஜஹான் இவ்வளவு பெரியமாளிகை கட்டினார்  




 சாஜஹானின் மனைவியன் பெயர்கள் 


முதலாமவர் அக்பர்பாடி மஹால் 
அடுத்தவர் கண்டாரி மஹால் 
மூன்றாமவர்தான் மும்தாஜ் மஹால்.  


   1631ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் திகதி அகமத் நகர், பீஜப்பூர் சுல்தான்களையும் வழிக்குக் கொண்டுவருவதற்காக மத்திய இந்தியாவுக்குப் படையோடு ஷாஜஹான் சென்றிருந்தபோது, மும்தாஜ் பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்த கையோடு மும்தாஜுக்குத் திடீரென்று ஜன்னி பிறந்தது.  


ஷாஜகானுக்கு தகவல் சொல்லப்பட் டது. பதறிப்போய் ஓடிவந்தார் ஷாஜகான். அருமை மனைவியை அழுதபடி வாரி மடியில் இருந்திக்கொண்டார்.     சில நிமிடங்கள் கணவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டிருந்த மும்தாஜின் தலை சாய்ந்தது. 



அன்பு மனைவியின் பிரிவைத் தாக்கமுடியாமல் துவண்டுபோனார் மன்னர். அந்த அன்புக்காக உளிச்சத்தங்களால் அறிவிக்கப்பட்ட வெள்ளை மௌனம்தான் அந்த தாஜ்மஹால். 

    உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப் போல் ஒரு இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப் போவதில்லை. மும்தாஜ் எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் அது.  



வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய அந்த கலை மிகு கட்டிடம் எழுந்த கதை பெருங்கதை. தட்சிணப் பிரதேசம் பர்ஹான்பூர் என்ற ஊரில்தான் முதன் முதலாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது. 

    இதற்குப் பின் ஆறு மாதம் கழித்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆக்ராவில் இப்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் புதைக்கப்பட்டது.    மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து ஷாஜஹான் களத்தில் இறங்கினார். 


 வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால். 

    அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், கொத்தனார்கள் என இருபதாயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு மள மளவென பணிகளைத் தொடங்கினார் ஷாஜஹான். 


 1632- ம் ஆண்டு வேலைத் தொடங்கி 1652 வரை சுமார் 20 ஆண்டு கால உழைப்பின் சின்னம்தான் இந்த தாஜ்மஹால்ஸ. அதற்குப் பிறகு கூட ஒரு ஆண்டுக்கு வெளியேயுள்ள சுற்றுப் புறத்தில் மிக நுண்ணிய வேலைகள் நடந்தன. தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர் உயரத்திற்கு நிற்கும் 4 மினார்களும் (தூண்) லேசாக வெளிப்புறம் சாய்த்து வைத்து கட்டியிரிக்கிரார்கள். காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில் அந்த தூண்கள் விழுந்தால் கூட தாஜ்மஹால் மீது பட்டுவிடக் கூடாதே என்ற காரணுத்துக்காகத்தான். 


 தாஜ்மஹாலின் வெளிப்புறக் கதவுகள், சுவர்களில் பதிக்க இந்தியாவைத் தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என பல இடங்களில் இருந்தும் வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பல விதம் விதமாக வரவழைத்து பயன்படுத்தி அழகு பார்த்தார் ஷாஜஹான். 


 புனித குரானிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்தார். இதற்காக உலகிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் ‘அமானாத்கான்’ பெயர் சிபாரிசுச் செய்யப்பட்டது. 



‘நான் எந்த வேலைச் செய்தாலும் அதில் என் கையெழுத்தைப் போடுவேன் என்று அடம்பிடித்த அவரை ‘சரிஸகையெழுத்து போட்டுக்கொள்ளுங்கள்’ என்று அனுமதிக் கொடுத்து வரவழைத்தார் ஷாஜஹான். இன்றைக்கும் அந்தச் சிற்பியின் கையழுத்தைக் காணலாம். தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத் தவிர வேறு எவரின் பெயரும் கிடையாது. 


 இப்படி அங்குலம் அங்குலமாக பொன் நகையை உருவாக்குவது போல் கட்டினார் ஷாஜஹான். தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு கொஞ்சம் காலம் முஸ்லீம்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். 


பிற்பாடு உலகெங்கிலும் இருந்து பலர் வர வர அந்தத் தடை தானாகவே நீங்கிப் போனது. இத்தகைய அழகான தாஜ்மகால் அதன்பிறகு வந்த ஆங்கிலேயெர்களின் கண்களை பறிக்காமல் இருக்குமா? 



 பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில் பதிக்கப் பட்ட வைர, வைடூரியங்களை சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள். லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர் இடித்து விடலாம் என்று ஐடியா கொடுத்தார். இன்னும் பல ஆங்கிலேய அதிகாரிகள் தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக பெயெர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் செட்டப் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங்கினார். 


 இறைவனின் கருணையால்ஸ இன்றைக்கும் இப்படியொரு அற்புதக் கட்டிடம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு



 கலைஞர்களின்பால் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்த அவர் மற்றவர்களின் யோசனையை தூரத் தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார். அதோடு மட்டுமல்ல.. இப்போது நீங்கள் தாஜ்மஹாலுக்குப் போனால் மும்தாஜ் – ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில் மேலே ஸ ஒரு அழகான பித்தளை விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும். 



 இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி, இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன் பிரபுதான்.  இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கு 1000 யானைகளும், 40000 பணியாளர்களும் வேலை செய்யப்பட்டனர்


மும்தாஜின் கடைசி நாள்: 


மும்தாஜுக்கு மொத்தம் 13 குழந்தைகள் (1613- 1631) க் குள் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இதில் 7 குழந்தைகள் மிக சிறுவயதிலேயே இறந்து போனது. உயிருடன் தாரா, சூசா, அவுரங்கசீப், மூரத் ஆகிய 4 ஆண் குழந்தைகளும் சாகனார, ரோனார, கவுஷனாரா ஆகிய 3 பெண் குழந்தைகளும் இருந்தார்கள். இதில கடைசிப் பெண்ணான கவுஷனாராவைப் பெற்றுடுக்கும்போதுதான் பிரசவ வலி தாள மாட்டாமல் 07-06-1631 ல் மும்தாஜ் இறந்துபோனாள். 



தாஜ்மஹல் முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தம் அன்பு மனைவி மும் தாஸ் நினைவாக எழுப்பிய கல்லறைக் கட்டடமே தாஜ்மஹல். யமுனை நதிக் கரையில் ஆக்ரா கோட்டைக்கருகில் இவ்வெழில் கட்டிடங்களில் எல்லாம் அழகு மிக்கதாகக் கருதப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாகவும் எண் ணப்படுகிறது







தாஜ்மஹல் 95 மீட்டர் சதுரப் பரப் புள்ள மேடை மீது 68 சதுர மீட்டர் கொண்ட கட்டிடமாக உருவாக்கப்பட் டுள்ளது. இம்மேடையின் நான்கு மூலை களில் சற்றே வெளிப்புறமாகச் சாய்ந்த மினராக்கள் நான்கு அமைக்கப்பட்டுள் ளன. தாஜ்மஹலின் வெளிப்புறம் முழு மையும் வெண்ணிறச் சலவைக் கற் களால் பதிக்கப்பட்டுள்ளது. உட்புறத் தில் பல்வேறு நாடுகளிலிருந்து தருவிக் கப்பட்ட பல வண்ணக் கற்கள் பதிக்கப் பட்டுள்ளன. இவை நாற்பது வகைகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 



தாஜ்மஹ லைச் சுற்றிலும் அழகுமிகு பூங்கா வண்ணப் பூக்களோடு காட்சி தருகிறது. நீருற்றுகள் பல அமைந்துள்ளன. தாஜ் மஹலின் முன்புறம் சலவைக் கல்லால் ஆன நீர்த்தடாகமும் நீருற்றுக்களோடு அமைந்துள்ளன. இத் தடாகத்தின் தெளிந்த நீரில் தாஜ்மஹலின் தோற் றம் அழகாகவும் தெளிவாகவும் தெரி வது கண்கொள்ளாக் காட்சியாகும். இதன் இடப்புறத்தில் அழகிய மசூதியும் உண்டு. இதனை உள்நாடு மற்றும் துருக்கி போன்ற வெளிநாட்டுக் கட்டிடக்கலை நிபுணர்களும் பங்கு கொண்டு உருவாக் கினர்.


 இதனைக் கட்டிமுடிக்க இருபதி னாயிரம் ஆட்கள் இருபத்திரண்டு ஆண்டுகள் உழைத்துள்ளனர். அக்கால மதிப்புப்படி சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவாகியுள்ளது. நி லா வெளிச்சத்தில் தாஜ்மஹல் கண்கொள் ளாக் காட்சியாக இருக்கும். 






   

No comments:

Post a Comment