ANIMAL BONES - KEELADI
` உருவத்திலும் அளவிலும் மாறுபட்ட எலும்புகள்..!' - தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகப்படுத்திய கீழடி
பண்டைய தமிழர்களின் வாழ்வில் விலங்குகள் முக்கியப் பங்கு வகித்துள்ளதை இதுபோன்ற சான்றுகள் உறுதிசெய்கின்றன.
கீழடி அகழாய்வில் பெரிய அளவிலான எலும்புகள் கிடைத்துள்ளதால், தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் மத்திய, மாநில தொல்லியல் துறை மூலமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை இப்பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த முறை, கூடுதலாக கீழடி மட்டுமன்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளும் அகழாய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின், குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கின.இதுவரை அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்த மணலூர் பகுதியிலும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மணலூரில் அகழாய்வில் கிடைத்த உலை போன்ற அமைப்பு, தொல்லியல் ஆய்வாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கீழடியில் பெரிய அளவிலான எலும்புகள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே கிடைத்த எலும்புகளைவிட, தற்போது கிடைத்த எலும்புகள் உருவத்திலும் அளவிலும் மாறுபட்டிருப்பதால், தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment