Tuesday 25 January 2022

C.R.PARTEBAN , PLAY AND FILM ACTOR BORN 1929 - JANUARY 25 ,2021

 

C.R.PARTEBAN , PLAY AND FILM ACTOR

 BORN 1929 - JANUARY 25 ,2021


சி. ஆர். பார்த்திபன் (C. R. Parthiban, 1929 – 25 சனவரி 2021) இந்தியத் தமிழ்த் திரைப்பட, மற்றும் நாடக நடிகர் ஆவார்.[1][2] இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்துப் புகழ் பெற்றார்.[3][4] தமிழ், தெலுங்கு, இந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]



வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வேலூரை சொந்த ஊராகக் கொண்ட பார்த்திபன், பள்ளிப் படிப்பின் பின், மேல்படிப்புக்காக 1946 இல் சென்னை வந்து[1] லயோலா கல்லூரியில் படித்து, பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] பள்ளியிலும், கல்லூரியிலும் நாடகங்களில் நடித்தார். பட்டம் பெற்ற பின்னர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். பின்னர் நாடகங்களில் பல வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்திலும் இவர் நடித்துள்ளார்.[2]

முதன் முதலில் ஜெமினி ஸ்டூடியோவில் 'இன்சனியாத்' என்ற இந்தித் திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு 'புதுமைப்பித்தன்' (1957) தமிழ்த் திரைப்படத்தில் டி. ஆர். ராஜகுமாரிக்கு அண்ணனாக, நாடகக் குழுத் தலைவனாக நடித்தார். இரும்புத்திரைவஞ்சிக்கோட்டை வாலிபன்மோட்டார் சுந்தரம் பிள்ளை என ஜெமினியின் பல படங்களில் நடித்தார்.[2]

கிட்டத்தட்ட 120 படங்களில் நடித்திருக்கிறார். 1982 இல் கோழி கூவுது படத்தில் அண்ணே அண்ணே பாடல் காட்சியில் சிறப்பாக நடித்துப் பாராட்டுப் பெற்றார்.[2]



மறைவு[தொகு]

சக்ரவர்த்தி ஆர். பார்த்திபன் 2021 சனவரி 25 இல் தனது 91-வது அகவையில் சென்னையில் காலமானார்.[2]

நடித்த சில திரைப்படங்கள்[தொகு]


பழம்பெரும் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர். அன்று கண்ட முகம், உங்க வீட்டுக் கல்யாணம், தேடி வந்த திருமகள், மல்லிகைப்பூ, கோழி கூவுது, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், மோட்டார் சுந்தரம் பிள்ளை, சுவரில்லாத சித்திரங்கள் போன்ற 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

’வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ’வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் கும்பினி அதிகாரி துரைக்குமிடையே ஏற்படும் சந்திப்பு மிக முக்கியமானது. ‘கிஸ்தி’, திரை, வரி, வட்டி, வானம் பொழிகிறது, பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி” என்று தொடங்கி மாமனா மச்சானா மானங்கெட்டவனே என்பது வரை நீளும் மிகப் பிரபலமான வசனம் இடம்பெறுவது இந்தக் காட்சியில் தான். வார்த்தை வெடிகளோடு நில்லாமல் கைகலப்பிலும் துப்பாக்கிச் சூட்டிலும் விறுவிறுப்பாகச் செல்லும் கட்டம். சிவாஜிகணேசனின் கம்பீரமும் வீராவேசமும் வெளிப்படும் இந்தக் காட்சியில் அவருடன் மோதும் ஜாக்‌ஷன் துரையாக நடித்தவர்தான் சி.ஆர்.பார்த்திபன்.

40 வருடங்கள் திரைத்துறையில் நீடித்தவர் நடித்த மொத்த படங்கள் 120 மட்டுமே.  

திரையுலகத்துடன் தொடர்புடைய 5 முதல்வர்கள் கோலோச்சிய புனித ஜார்ஜ் கோட்டையில், அத்தகைய புள்ளிகள் எட்டியும் பார்க்காத 1952-இல் பார்த்திபன் தற்காலிக குமாஸ்தாவாக பணியாற்றியுள்ளார். அவர் சுமார் ஆறடி உயரம். களையான முகம். வாலிப முறுக்கு. தேர்வாணையத் தேர்வெழுதி, அவர் நிரந்தர ஊழியராகவும் தேர்வு பெற்றார். ஆனால் அவ்வேலையை உதறித்தள்ளினார்.

ஜெமினியின் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கதாநாயகன் ஜெமினிகணேசனை மெச்சி வரவேற்கும் ஒரு நாட்டுப்புறக் கூட்டத்தின் தலைவராக, பார்த்திபன் நடித்தார். ஜெமினி ஸ்டூடியோவில் பி.கண்ணாம்பாவின் கணவர் நாகபூஷணம் எடுத்த ‘நாக பஞ்சமி’ யில் பார்த்திபன் சிவன் வேடமேற்றார். இதுதான் அவர் நடித்து வெளிவந்த முதல் படம்.

பிறகு எம்.ஜி.ஆருடன் அறிமுகம் ஏற்பட்டது. 1957-இல் ‘புதுமைப் பித்தன்’ என்ற படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரியின் அண்ணன் நல்லண்ணனாக நடித்தார்.

கட்டபொம்மன் எடுத்த பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தில் சி.ஆர்.பார்த்திபனுக்கு யாரையும் தெரியாது. ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ கதாபாத்திரங்கள் குறித்தும், விவாதம் நடந்தபோது தன்னுடன் இல்லறமே நல்லறம் படத்தில் ஒரு வாட்டசாட்டமான வாலிபர் நடித்ததாகவும், அவரை ஜாக்‌ஷன் துரை வேடத்தில் போடலாமே என்றும் நடிகை எம்.வி.ராஜம்மா தெரிவித்திருக்கிறார்.

அவர் பெயர்தான் பார்த்திபன். என்னுடன் ‘அன்னையின் ஆணை’ படத்தில் நடித்தார். ஜாக்‌ஷன் துரை வேடத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று சிவாஜிகணேசனும் ஆமோதித்தார். ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெற்றியடைந்து பல நகரங்களில் விழாக்கள் நடந்தன. ஒவ்வொரு மேடையிலும் பார்த்திபனை தன் தம்பி என்றழைத்து, சிவாஜி பாராட்டினார்.

திலீப்குமார் நடித்த இன்சாட் என்ற   படத்தில் ஜெமினியில் மாதச்சம்பளத்தில் நடித்தார். தொடர்ந்து கண்ணாம்பா நடித்த நாகபஞ்சமி, அன்னையின் ஆணை [இப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக], ரி.எம்.சௌந்தரராஜன் கதாநாயகனாக நடித்த ‘அருணகிரி நாதர்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

சினிமா உலகம் தன்னைப் பயன்படுத்திக் கொண்டது போல் அதனுடனான தொடர்பைப் பயன்படுத்தி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வாயிலாகவும் கொஞ்சம் சம்பாதித்தார்.

இவருக்கு வனஜா என்ற மனைவியும் ராமானுஜன் என்ற மகனும் உள்ளனர்.

 தினமலர் பல்சுவை மலரிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

பணமா பாசமா [1968], தெய்வீக உறவு [1968], மனசாட்சி [1969], தங்கைக்காக [1972], சங்கே முழங்கு [1972], சுகமான ராகங்கள் [1985], தேடி வந்த திருமகள் [1966], நல்லவன் வாழ்வான் [1962], பந்தாட்டம் [1974], சக்கரம் [1968]

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் W.C.ஜாக்ஸன் என்ற வெள்ளைக்கார துரையாக பார்த்திபன்


No comments:

Post a Comment